தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 04, 2019

வீரவனூர், வீணாப்போன வீணா



வீதியில் போகும் வீராயி அத்தை மகளே வீணா.
வீராணம் சந்தையிலே சண்டை போட்டியாமே வீணா...

உன்னைக் கட்டிக்கிட்டு நானென்ன செய்ய வீணா.
என்னோடு மல்லுக்கட்டி சண்டை போடுவியோ வீணா...

கண்ணோடு கண் கலந்து கண்மணியே வீணா.
கண்டபடி கட்டிப்புடிச்சு விளையாடுவோமா வீணா.

கரும்புக் காட்டுக்குள்ளே கட்டழகி வீணா.
கபடி விளையாட போவோமா வீணா.

மாந்தோப்புக்குள்ளே மாங்குயிலே வீணா.
மாங்காகடி கடிச்சு விளையாடுவோமா வீணா.

தேவகோட்டை தேரோட்டம் திருவிழாவுக்கு வீணா.
தேரடி வீதிவரை தேர் இழுக்க போவோமா வீணா.

ஒத்தைக்கல்லு மூக்குத்தி போட்டவளே வீணா.
ஒண்ணும் சொல்லாமல் அலைய விடுறியடி வீணா...

கிறுக்கு புடிச்ச கிருஷ்ணா அலையாதே வீணா... 
கில்லர்ஜி மச்சானுக்குத்தான் இந்த வீணா.


சாம்பசிவம்-
மேலே படத்திலிருப்பது கில்லர்ஜியும், வீணாவுமா... ?

Chivas Regal சிவசம்போ-
நானும்கூட மச்சான் முறைதானே...

சிவாதாமஸ்அலி-
நமக்கு மச்சான்முறை சொன்னால் மதப்பிரச்சனை வருமோ... ?

42 கருத்துகள்:

  1. பருவம் வந்த நேரத்துல கனவுலயும் வீணா...

    பல்லு போன வேளையில கண்டதெல்லாம் வீணா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

      பாருங்க துரை அண்ணாவின் கலாய்த்தல...அது சரி யாருக்குப் பல்லு போன வேளை? கில்லர்ஜிக்கா!!!!!!? தலைக்குக் கேப் போலியா?!!!!!!!!!!...பல்லு போச்சுனா !!!!! அதுக்குத்தான் பல்செட் இருக்குதே. என்ன சொல்றீங்க கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. பருவம் போன நேரத்துல கனவுலயும் வீணா
      பசங்க கல்யாணம் முடிஞ்சபின் கண்டதெல்லாம் வீணா

      நீக்கு
    3. வாங்க ஜி ரசித்தேன் கருத்துரையை...

      பசங்களுக்கு கல்யாணம் ஆனால் கனவு வராதா நண்பரே...?

      நீக்கு
  2. என்ன ராகத்தில் இந்த காதல் பாட்டை இயற்ற போகிறீர்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்பாடிய கிருஷ்ணனையே கேட்டவேண்டும் நண்பரே

      நீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா வீணா இப்படி வீணா நேரத்தைக் கடத்தி வீணா போகாம சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணி.....ஆஹா அதுவும் வீணா!!!!!??!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உண்மையிலேயே வீணாப்போனவள்தானோ... வீணா.

      நீக்கு
  4. கில்லர்ஜி தவிக்கிறாரே பாருங்கள் வீணா..
    அவையெல்லாம் போகலாமா அனைத்தும் வீணா?

    பதிலளிநீக்கு
  5. வீணையைப் போல நீ வீணா
    என்றும் இதயத்தை மீட்டிடு தேனா.

    பதிலளிநீக்கு
  6. அமைதிக்குப் பெயர்தான் சாந்தி பாடல் நினைவிற்கு வந்தது-

    பதிலளிநீக்கு
  7. தேவகோட்டையாருக்கு (கில்லர்ஜிக்கு தான்) தான் இந்த வீணா என்றால் ஏன் வீணா போன வீணா என்ற பேர்?
    கவிதை நன்றாக எழுத வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. //கில்லர்ஜி மச்சானுக்குத்தான் இந்த வீணா//

    உங்க மேல ஆசை வச்ச வீணாவை மோசம் பண்ணிடாதீங்க கில்லர்ஜி! கெட்ட தோசத்துக்கு ஆளாயிடுவீங்க!!

    பதிலளிநீக்கு
  9. எழுதும் திறனை எல்லாம் வீணா
    பக்கம் நிரப்ப பயன்படுவது ஏன் வீணா
    கிடைக்காத கொம்பா[இந்த வீணா
    ஏனோகலக்கம் உங்களுள்ளே வீணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்காத கொம்பா இந்த வீணா
      கலக்கம் உங்களுக்கு வேணாம்

      இது எப்படி இருக்கு?

      நீக்கு
    2. வாங்க ஐயா ஸூப்பர்

      நண்பரின் எசப்பாட்டு ஸூப்பர்

      நீக்கு
  10. வீணா வீணா...
    நல்லாருக்கு அண்ணா...

    பதிலளிநீக்கு
  11. அனைவரையும்கவிதை எழுத வைச்சுட்டீங்க கில்லர்ஜி! அந்த வீணா யாராக இருந்தாலும் வீணாப்போகும் முன்னரே ஒரு வழி கண்டு பிடித்து விடுங்கள். கலக்கம் வேண்டாம் வீணா!

    பதிலளிநீக்கு
  12. கண்டிப்பா மதப் பிரச்சினை வராதுங்கோ...வேணாம் மச்சான் நமீதா..எல்லாத்தையும் மச்சான்னுதான் கூப்பிட்டாங்கோ.....அவுங்களுக்கு ஒரு பிரச்சனையும் வரலிங்க....

    பதிலளிநீக்கு
  13. என்னாச்சு... மனசு 'வீணா'வை வீணாத் தேடி அலையுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானா அலைந்தேன் ? பாடியது கிருஷ்ணன்.

      நீக்கு
    2. ஆங்... பாடியது கிருஷ்ணன் சரி.... ஆனா கடைசி வரி, இந்த 'வீணா' கில்லர்ஜிக்குத்தான்னு எழுதியிருக்கே....

      நீக்கு
    3. வீணா என்மீது வீணா ஆசைப்பட்டால் நானா பொறுப்பு.

      நாளை அனுஷ்காவுக்கு பதில் யார் சொல்வது ?

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அருமை.. படிக்கும் அனைவருக்குள்ளும் ஏதாவது இரண்டு வரி எழுத வைக்கும் கவித் தாகமாய் அமைந்து விட்டது தங்கள் கவிதை. நல்ல யோசித்தல்.

    வீணாவின் கானங்கள் என்றும் வீணாகவே போவதில்லை. விணணின் விண்மீனென இந்த வீணாவும் புகழில் ஜொலிக்கட்டும். வீணாவிற்கான வாழ்த்துகளும் எப்போதும் வீணாவதில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ வீணாவை வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  15. நண்பா,
    தயவுசெய்து உங்கள் பிளக்கர் டெம்ளட்டை மாற்றுங்கள் என்னால் மொபைலில் பார்க்கும் பொழுது மிகவும் கடினமாக உள்ளது.https- க்கு மாற்றவும்.
    https://tamilsearchblog.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. பரவாயில்லை உங்களுக்கு கவிதையும் வருகிறதே?.... சாமியாராகும் ஆசையும் இருப்பதாக முன்பொரு பதிவில் கூறி இருந்தீர்கள் .... !!! இனி உங்கள் காட்டில் அடைமழைதான் போங்க !!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை கவிதை என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பா

      நீக்கு