தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 12, 2015

விருதுநகர், வில்லங்கம் விருமாண்டி.


ஏங்க, இந்த ரோடு எதுவரைக்கும் போறது ?
பாகிஸ்தான், பார்டர்வரை போகும்.
அய்யோ, நான் அத கேக்கலீங்க ?
அதைத்தான் கேட்டீங்க.
இல்லேங்க,
இல்லேன்னு நீ எப்படியா ? சொல்லமுடியும்,
நான், சொல்ல வர்றது என்னன்னா ?
நீ என்னய்யா, சொல்றது பாகிஸ்தான் போகாதுன்னு.
எனக்கு, பாகிஸ்தான் வேண்டாங்க,
நீ யாருயா  பாகிஸ்தான் வேண்டாம்னு சொல்ல ?
மொதல்ல, என்னை பேசவிடுங்க
நீ யாருயா என்னைப்பேச,
நான், ஒங்களைப்பேசலீங்க
நான்தானே இருக்கேன் இந்த எடத்துல,
என்னங்க இது, காலங்காத்தாலே வில்லங்கம் ?
ஏய்யா, என்னை பட்டப்பேரை சொல்லி வில்லங்கம் பண்னுறியா ?
அய்யோ உங்கபேரே, எனக்குத் தெரியாதுங்க
தெரியாம, எப்படியா கரைக்டா சொல்லுவே ?  
குத்துமதிப்பா சொன்னேன், ஒங்கபேருன்னு தெரியாது   
அப்படின்னா, என்னைக்குத்திருவியா ?  
நான், எப்ப சொன்னேன் ? 
ஏய்யா, இப்பத்தானே குத்துன்னு சொன்னே அதுக்குள்ளே பொய்சொல்றே ?  
இப்ப, என்னை என்னசெய்ய சொல்றீங்க ? 
சரி, நான் போகவேண்டிய பஸ்ஸூ வந்துருச்சு நீ போயிட்டு நாளைக்கு, இதே எடத்துக்கு வா பேசிக்கலாம்
நாசமாபோச்சு இவங்க, டைம்பாஸுக்கு நாமலா கெடைச்சோம் இந்த பஸ்ஸூவரலைனா ? நாம இந்த எடத்தவிட்டு பாஸாகமாட்டோம் போலயே காலக்கெரகமடி கருமாரி. 
 
 கொசு‘’று.
Video
வாழ்வின் விரக்திகூட ஒரு மனிதனை சாதிக்க வைத்து விடும் என்பற்க்கு இது ஓர் எடுத்துக்காட்டு. நானும்கூட விபரம் தெரி(ளி)ந்த நாள்முதல் விரக்தியோடுதான் வாழ்வைக் கடத்துகிறேன் ஒரு வேளை நானும்கூட நாளை எதையாவது சாதிப்பேனோ ?

74 கருத்துகள்:

 1. சிந்திக்க வைக்கும்
  சிறந்த எண்ணங்களின் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. கலங்கத்தால வில்லங்கம்?
  சேம் பிளட்.
  முத போனி
  மொய் நம்மளது யாவாரம் எப்டி இருக்குனு தனியா சொல்லுங்கஜி
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பே சிவமாய் ஆரம்பித்து வைக்கும்போது நன்றாகத்தான் இருக்கும்.

   நீக்கு
 3. எடக்கு மடக்கு ஏகாம்பரமே
  உனக்கு எதிர்காலம் எதிர்லேயே இருக்குது

  எழுதி வச்சிக்கோ! மீசையிலே முடிஞ்சி வச்சிக்கோ!
  எல்லாம் சுபம் மயம் நண்பா!
  த ம + 1

  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம = 1

  பதிலளிநீக்கு
 4. ஹா....ஹா....ஹா.... ரசித்தேன்.

  சாதிப்பதற்கு விரக்தியை விட நம்பிக்கையே மேல். (மற்றதெல்லாம் ஃபீமேலான்னு கேட்கக் கூடாது!!!)

  பதிலளிநீக்கு
 5. கார், பைக் என அனைத்தும் அட்டகாசம்...! அட...! (மின்) விசிறி...

  விரக்தி இல்லை... வித்தியாசமான வீராப்பு தனக்குள்ளேயே...

  சந்தேகம் இருந்தால் + தொடர்ந்தால் விரக்தி அதிகமாகும் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரக்தியும்கூட என்றுதான் சொன்னேன் ஜி

   நீக்கு
 6. நல்லவேளை.. பஸ் வந்தது!..

  இல்லேன்னா!?...

  எதுக்கும் நீங்க இந்தப் பக்கமா வந்துடுங்க.. ஜி!..

  பதிலளிநீக்கு
 7. ஹா...ஹ..ஹா. விருதுநகர் விருமாண்டி வில்லங்கமான ஆளுதான்...

  பதிலளிநீக்கு
 8. வில்லங்கம் விருமாண்டிக்கு அடுத்து மாயாண்டி நிக்கிறாருன்னு எனக்கு தெரியுது.

  பதிலளிநீக்கு
 9. மரத்தால் செய்யப்பட்ட கார் வெகு அற்புதம்.
  விரக்தியை விட்டொழியுங்கள் வெற்றி நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம“
  ஜி
  கலக்கி விட்டீங்கள்.. அசத்தலான கேள்விகள் வில்லத்தனத்திலும் மிக பெரிய வில்லத்தனம்... பகிர்வுக்கு நன்றி படிச்சி படிச்சி சிரித்தேன் நானும் என் நண்பர்களும்...த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் நண்பர்களுக்கும் நன்றி சொல்லவும் குறிப்பாக உங்களுக்கு நேரே அடுத்த பெட்டில் கிழக்குப்பக்கமாக இருப்பவருக்கு பின்புறத்தில் இருப்பவருக்கு....

   நீக்கு
 11. கையை புடிச்சு இழுத்தியா.?
  என்ன கையை புடிச்சு இழுத்தியா?
  ஹ ஹஹா.........
  அனைத்தும் அருமை தம+1

  பதிலளிநீக்கு
 12. விரக்தியால் மீண்டும் சாதாரண மர வேலைகளுக்கே திரும்பியவரின் சாதனை வியக்க வைக்கிறது. உங்கள்பதிவைப் படிக்கும் போது தொலைக்காட்சியில் வரும் ஒரு நகைச் சுவை காட்சியில் வடிவேலு எண்ணை பற்றி விசாரிப்பதும் அதன் தொடர்ச்சியாக வரும்வாதங்களே நினைவுக்கு வந்தது. படத்தின் பெயரோ மற்ற நடிகரின் பெயரோ நினைவில்லை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 13. தூங்கப்போற நேரத்துல இந்த பதிவை படிச்சுட்டு, மண்டை காய்ஞ்சு போயிட்டேன்.
  இதுக்கு தண்டனையா உங்களுக்கு என்ன செலவு வைக்கலாம்னு யோசிச்சு சொல்றேன்.
  என்னைய இப்படி மண்டை காயவச்சு நீங்க தான் சாதிச்சுட்டீங்களே நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவா சாதனை அப்படிப்பார்த்தால் எனது மண்டையை காய்ச்சுற அரபிக்காரிகளை மண்டையை குழப்பி லீவு போட்டு வீட்டுக்கு போக வைக்கிறேனே தினம், தினம்.
   நாங்களெல்லாம் சாராயமே காய்ச்சுவோம்.

   நீக்கு
 14. இந்த பதிவை படிக்கும் போது நடிகர்.வடிவேல்-நடிகர் பார்த்திபன் நகைச்சுவை தான் ஞாபகம் வருது...

  மின்விசிறி பார்க்கவே வியப்பாக இருக்கு...
  தங்கள் பகிர்வுக்கு நன்றி..

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதா அவர்கள் சொன்னால் சரிதான் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 15. ஹஹஹாஹஹ்ஹ உங்கள் காமெடி அருமை.....வடிவேலு நினைவுக்கு வந்தார் அவரது ஒரு நகைச்சுவைக் காட்சி இப்படித்தான் போகும்....ஹஹஹ

  அட! அப்பர் லக்ஷ்மணன் அவர்கள் "ஹப்பா" என்று வியக்க வைத்துவிட்டார்.தனது லஷியத்தையும் அடைந்துவிட்டார்..... மிக்க மிக்க நன்றி நண்பரே! இப்படிப்பட்ட ஒருவரை இங்கு அறிமுகப் படுத்தியதற்கு!

  விரக்தி என்று சொல்ல முடியாது ஜி! விரக்தி என்றால் மனிதன் தளர்ந்து விடுவான். இது மனதில் தோன்றிய வைராக்கியம். வெற்றி காண வேண்டும். தானும் நிமிர்ந்து நிறக் வேண்டும் எனும் வைராக்கியம். அந்த உந்துதல் தான் அவரை இப்படிப்பட்ட உந்து வண்டிகளை/பொருட்களை உருவாக்க வைத்துள்ளது. பொதுவாகச் சொல்லுவது உண்டு. ஒரு மனிதனின் தோல்வி/கள்தான் அவனது வெற்றிக்கு அடி கோலும் என்று, உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால்....ம்ம்ம்ம் அதிர்ஷ்ட தேவதையும் சிறிது கண் மலர்ந்தால்.......

  மிக அருமையாகச் செய்திருக்கின்றார்.

  (கீதா: அட அவரு இங்கிட்டுதான் இருக்காரு...மௌலிவாக்கத்துல...பார்த்துட்டாப் போச்சு...பார்த்தால் சொன்னாப் போச்சு எங்க கில்லர்ஜி சொல்லி வந்தோம்னு.....)

  மிக்க நன்றி கில்லர் ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அப்பர் லக்ஷ்மணன் பாராட்டுக்குறியவர் விரக்தியும்கூட என்றுதான் சொன்னேன் முயற்சி திருவினையாக்கியது.

   நீக்கு
 16. நீங்களும் கண்டிப்பாகச் சாதிப்பீர்கள் கில்லர் ஜி! விரக்தி எல்லாம் வேண்டாம்.....நம்பிக்கையும் உழைப்பும் போதும்...அது உங்களிடம் நிறையவே இருக்கின்றது.....அப்படியிருக்க சாதிக்க முடியாமல் போகுமா என்ன?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது விரக்தியை விரட்டுவதே எனது பெரிய வேலையாக போய் விட்டது 6தல் தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. விரக்தி ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்கியிருப்பதை காட்டும் காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! வில்லங்கம் விருமாண்டியின் எடக்கு மடக்கு கேள்வி பற்றி சொன்னால் அவர் ஏதேனும் எடக்கு மடக்காக சொல்லிவிடுவாரோ என்பதால் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொள்கிறேன். பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி, பதிவைவிட தங்களது கருத்துரை அருமை நண்பரே ரசித்தேன்.

   நீக்கு
 18. விரக்தியின் வேதனையில் வெற்றி அடைந்த அப்பர் லக்ஷ்மணனை அறிமுகம் செய்த காணொளி நன்று..

  வாழ்க - வளர்க அவரது திறமை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அப்பர் போற்றதலுக்குறியவரே....

   நீக்கு
 19. உந்துசக்தி அளிக்கிற நல்ல வீடியோ, வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 20. சிரிப்புடன் சிந்திக்கும் வில்லங்கம் தான்[[[[[[[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு
 21. நல்ல வேளை பஸ் வந்து விட்டது..இல்லைனா...நாங்க எப்ப சிரிப்பை நிற்பாட்டுவது..

  மரக்கலை கண்டேன்
  மகிழ்ச்சி கொண்டேன்
  வித்தியாசமான முயற்சி
  வெற்றிக் கனிக்கு வழி
  வித்தியாசத்தின் மறுபெயர்
  கில்லர்ஜி...
  சாதிக்காமல் இருப்பாரா...?
  சொல்லுங்கள் ஜி...!!!

  த ம - 12 திங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஸ் வந்ததாலதான் சிரிப்பு நின்றதா ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
   ஆஹா கவிதை போன்ற கருத்து அருமை சகோ நன்றி.

   நீக்கு
 22. பார்த்தீபன்-வடிவேலு காமடி மாதிரி இருக்கு!!

  வீடியோவை ரசித்தேன். பெட்ரோல் டீசல் எஞ்சின்களுக்குப் பதில் சூரிய ஒளியில் இயங்கும் எஞ்சின்களைப் பயன்படுத்தினால் இவருடைய உழைப்பு முழுமை பெரும் என நினைக்கிறேன்.

  மரத்தச்சு செய்வதால் பெண் தரவில்லை வியப்பாக இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கென்று ஒரு ஜாதியே இருக்கிறது, தச்சர் என்பார்கள், அவர்கள் இனத்திலேயே பெண் எடுத்திருக்கலாம், anyway அவருடைய வைராக்கியம், புதுமையான சிந்தனை இவற்றைப் பார்க்கும் போது ராயல் சல்யூட் வைக்கத் தோன்றுகிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இவரது திறமையை அரசாங்கம்தானே ஊக்கு விக்கனும் நாமாவது அவருக்கு ஒரு ராயல் சல்யூட் வைப்போம்.

   நீக்கு
 23. ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள் போலிருக்கிறது. கொஞ்ச நாட்களாகவே எடக்கு மடக்கு, ஏட்டிக்கு போட்டி பதிவாகவே போடுகிறீர்கள். எப்படி இருந்த போதிலும் சுவாரஸ்யம் குறையவில்லை.
  த.ம.13

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே நல்லதொரு தலைப்பு தந்தமைக்கு நன்றி நண்பரே....

   நீக்கு
 24. நீங்க ஆல்ரெடி வலையுலகத்துலஉங்களோட சொல்லாடலால சாதிச்சிட்டுதான் இருக்கிங்க அண்ணா . அதுக்கு இந்த பதிவும் ஒரு உதாரணம் .

  ஆமா . ஏன் உங்க தளம் என்னோட கணினியில லோட் ஆக மாட்டேங்குது . ஒருமணிநேரமா கமெண்ட் போட முயற்சிசெய்து இப்போதான் மாட்டிருக்கு .

  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்றது உண்மையாக இருந்தால் சந்தோஷம்தான்.
   என்னாச்சு இன்னைக்கு வியாழக்கிழமை தெட்சிணா மூர்த்திக்கு விரதம் இருந்தீங்களோ...

   நீக்கு
 25. இது உண்மையாகவே வில்லங்கம் தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க கருத்துரை போட்டதே சந்தோஷம்தான்.

   நீக்கு
 26. வேதனை என்னவென்றால் ,இவ்வளவு சாதனைகள் செய்தும் அப்பர் லட்சுமணனை போன்றவர்கள் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்பதுதான் !ஒருநாள் நிச்சயம் அவர் உழைப்பை உலகமே பாராட்டும் !
  நையாண்டி பதிவுகளைப் படித்தால் விரக்தி உங்களிடம் இருப்பதாகவே தெரியலியே :)
  தம...ஸ்வீட் செவண்டீன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே தாங்கள் சொல்வது 100க்கு100 உண்மையே காரணம் படிக்காதது என்கிறது சமூகம், விரக்திதானே இப்படியெல்லாம் எழுதச்சொல்லுது.

   நீக்கு
 27. துன்பம் வரும் வேளையிலே..கில்லர் ஜி பதிவ படிங்க..................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நல்லவர் வலிப்போக்கன் சொன்னதே.....

   நீக்கு
 28. பதிவின் தலைப்பை பார்த்தவுடனே ஏதோ வில்லங்கம் இருக்கு என்று தெரியும் இறுதியில் ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்திட்டீங்க அருமை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது இதுதானோ..!

  வாழ்த்துக்கள்
  தம 18

  பதிலளிநீக்கு
 29. காலையிலேயேவா....
  ஆகா
  அருமை நண்பரே
  தம 18

  பதிலளிநீக்கு
 30. விருமாண்டி உங்களுக்கு ரொம்ப பிடித்த பெயரா? உங்களுக்கு பொருத்தமான பெயரும்கூட, வீடியோ பதிவு ரொம்ப அருமை. வாழ்த்தப்படவேண்டியவர். எடக்குமுடக்கா பேசினாலும் மனுசன்கிட்ட ஏதோ இருக்குய்யா? சமுக அக்கறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்// அப்படினு தலைப்பு வைத்தேன் அதுக்காக எனக்கு பிடிச்ச பெயரானு கேட்பீங்களோ ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன், பிடித்த பெயர் விடுங்க, பொருத்தமான பெயர் இல்லையா?

   நீக்கு
  3. அப்பாவிக்கு எப்படி ? பொருந்தும் அதுதான் எனது குழப்பம்.

   நீக்கு
 31. உங்க போஸ்ட் என் டாஷ்போர்ட் க்கு வரவில்லை.நானும் சாப்பிடாம இருப்பீங்க ப்ளாக்கில் எழுதாம விடமாட்டீங்களேன்னு எனநினைத்து வந்தேன். சரிதான். சிலது தவறவிட்டாயிற்று ஆனாலும் படித்துவிட்டேன்.
  இதை படித்து கண்ணீர் வரும்வரை சிரித்தாயிற்று. மிக அருமையாக எழுதுறீங்க. நீங்க சாதித்துக்கொண்டேதான் இருக்கிறீங்க. நகைச்சுவை எல்லாருக்கும் வராது அது வரமாவே உங்களுக்கு கிடைச்சிருக்கு. way to go.
  காணொளி மிகமிக அருமை. அழகான படைப்புக்கள்.விசிறி கற்பனைத்திறன் அருமை. நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நானும்கூட நினைத்தேன் எல்லோருடைய பதிவுக்கும் போறீங்களே நமது பதிவு பிடிக்கலை போல என நினைத்தேன் அனைவருடைய டேஷ்போர்டிலும் வந்திருக்கிறதே,,, இனி அந்தப்பிரட்சினை கண்டிப்பாக வராது காரணம் எனது 6அறிவு கொண்டு அதன் சூட்சுமத்தை. தெரிந்து கொண்டேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 32. அப்பாவியா...யாரு..??? தாங்களா.??....எதுக்கும் கில்லர் ஜி கிட்டே கேட்டு உறுதிபடுத்திய பிறகுதான் நம்புவேன்..

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோதரரே!

  நல்ல நகைச் சுவையான பதிவு. எனக்கும் வடிவேலுவின் நகைச்சுவை நினைவுக்கு வந்து போனாலும், அதையும் மிஞ்சும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.
  காணொளி நன்றாக இருந்தது. கற்பனையுடன் திறமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் எனபதற்கு அவர் ஒரு உதாரணம். அவரை அறிமுகபடுத்தியமைக்கு தங்களுக்கு நன்றிகள்.
  பல மொழிகள் கற்று தேர்ந்து அசத்தும் உங்களது சாதனைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூரத்துக்கு ஜூட் விட்டு வந்து கருத்துரை வழங்கியமைக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 34. நல்ல பதிவு - புது புது அர்த்தங்கள் போல ப் புதுப் புது பதிவு உங்கள்து

  பதிலளிநீக்கு
 35. சாதனை மனிதர் அப்பர் வாழ்க!
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு