தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 14, 2015

Killergee in AMERICA


அன்பு நெஞ்சங்களே கடந்த சிலிர்க்க வைத்த, ஸ்ரீலங்கா. பதிவில் சொல்லி இருந்தேன் அமெரிக்கா அழைத்து போகிறேன் என்று அதைப் போலவே செய்து விட்டேன் சந்தோஷம்தானே.


AMERICA, LOS ANGELES SPECTER STREET - 11.30 pm நான் மட்டும், கழுத்தில் தொங்கிய CANON CAMERA வில்
(GERMANY போயிருந்தபோது வாங்கி வந்தது) 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்களை, கடைகளை சுட்டுக் கொண்டே வந்தேன்...
(ஏற்கனவே பகலில் எடுத்து விட்டேன்) 
ச்சே.. எவ்வளவு அற்புதமாக இருக்கு, நம்ம தேவகோட்டையே தோற்றுப் போயிரும் போலயே.... ரசித்துக் கொண்டே நடந்தேன் இந்தசிலை நல்லாயிருக்கே நம்மளை PHOTO எடுக்க சொல்லலாம்னா ஒரு தமிழ் ஆளைக்கூட காணோமே, இவங்களை நம்பி CAMERA வை கொடுக்கவும் பயமா இருக்கு... கடைசிவரை என்னை எடுக்கவே இல்லை 
(அதனால்தான் எந்த PHOTO விலும் நான் இல்லை) 
நடந்து கொண்டே வரும்போது ஒருத்தி அருகில் வந்து 
(இவள் உடைதான் போட்டு இருக்கிறாளா) 
PLEASE WELCOME Sirrrrrrr… 
என்றாள், ஒரு மாதிரியாக... கையை பிடித்தவள் இழுத்துக் கொண்டே போனாள்.. பஞ்சு போன்ற கை என்மீது படவும் என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை, சட்டென ஒரு கதவருகே போனவள் கையில் வைத்திருந்த MOBILE போன்ற REMOTE ஒன்றை அமுக்கவும் கதவு திறந்து கொண்டது, சட்டென என்னை உள்ளே தள்ளவும் கதவு மூடிக் கொண்டது அவள் வெளியே போய் விட்டாள், பார்த்தால் எதிரே வண்ணவிளக்கில் QUOINS PAR என்று எழுதியிருந்தது... மெதுவாக நடந்தேன்... மேற்கத்திய இசை வெளியே துளையிட்ட என்காதை உள்ளேயும் நுளைந்து துளைத்தது, செக்கச் சிவந்த இளம்குமரிகள்.
(ஹூம் என்ன சொல்ல, முடியலை) 
ஆடிக் கொண்டிருந்தார்கள், அதில் ஒருத்தி என்னருகே வந்து... 
Hi, Sir How are You Today ? 
கேட்டவள் சட்டென SORRY என்னால எழுத முடியலை..... ம்ம்.... ம்ஹூம் எழுதவும் முடியாது, அடுத்தவள் எனது மொட்டைத் தலையை தடவிக் கொண்டே
I LIKE YOU BLACK MAN 
என்றாள், அடுத்தடுத்து வந்தாள்கள்... வந்தவள்கள்... நான் என்னத்தே எழுத முடியலை, என்னைச்சுற்றி நான்கு பெண்கள், இல்லை.. இல்லை ரம்பா, ஊர்வசி, மேனகா, என்று சொல்வார்களே... என் வாழ்விலுமா இப்படி...

மெய்மறந்து கண்ணை மூடி அப்படியே.............. நின்றவன், தப்பு இப்படியே நிற்பது தப்பு, சந்தோஷத்தில் இதயம் நின்றாலும் நின்று விடும் பிடித்துக் கொள்வோம், கையை இதயத்தின் அருகே கொண்டு போனதும் எங்கே ? எனது MONEY PURSE, அய்யோ.. யேன் CAMERA… CAMERA… CAMERA… வைகாணோம்...

அட்சீ, கஸ்மாலம் கம்னுகெட காலங்காத்தாலே கணாக்கண்டுகினு கேமராவெ காணோம், கேயார் வெசயாவே காணோமுன்னு உட்ஸ்ர எடுத்துக்கினுகீரே கம்னாட்டி, ஒரு ஜோலிக்கி போக, துப்பில்லே... எப்ப பாத்தாலும் வூட்ல தூங்கிகினு... இன்னொருதபா கணாகண்டுகினு பினாத்துனே மூஞ்சிலே சுடு தண்ணிய அட்சுருவேன் கயிதே, எந்ரிச்சி கபாலி கடையிலே சாயி வாங்கிகினு வா போ. 

மனைவி மயிலு, சத்தாய்கவும் சத்தமில்லாமல் எழுந்து தூக்குச் சட்டியை எடுத்துக் கொண்டு சேரிக்குள் இருக்கும், கபாலி டீ கடையை நோக்கி நடையை கட்டினேன்.

காணொளியைப்பற்றிய தங்களது கருத்தை எழுதுவீர்.
Video
(Please ask Audio Voice)


74 கருத்துகள்:

  1. பெயரில்லா3/14/2015 3:41 AM

    முதல் கதையைப் வாசித்து மயங்கிட்டேன் காணொளி
    எப்படிப் பார்ப்பது சேர்!...
    நன்று நன்று...நம்பிட்டேன் அமெரிக்காவில என்று...
    படு கில்லாடி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றி சகோ, காணொளி காணவில்லையா ?

      நீக்கு
  2. நல்ல கனாதான். கொடுத்து வச்சவர் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  3. காணொளி உங்கள் கைவண்ணமா? அட! பாராட்டுகள்.

    சின்னஞ்சிருகதையில் கனவு மயக்கத்தை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மயங்கி ரசித்தமைக்கும், காணொளியை பாராட்டியமைக்கும் நன்றி.

      நீக்கு
  4. என்னாங்க நண்பரே! கடைசியிலே, தமிழ்ப் படம் கணக்கா, கனவு சீன்லே முடிச்சிட்டீங்க? கே.ஆர்.வி ரசிகர் போலிருக்கிறது.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே வீட்டுக்காரி ரைமிங்கா சொன்னதுக்காக என்னை கே.ஆர்.விஜயா ரசிகருனு சொல்லிட்டீங்க, நான் தமிழச்சிக்கே ரசிகர் கிடையாதே.... நான் ரசிகனா இருந்தால் குஷ்புவுக்கு கோயில் கட்டியதை எதிர்ப்பேனா ?

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஹூம், என்ன செய்ய நண்பரே எனக்கு கிடைச்சது இவ்வளவுதான்.

      நீக்கு
  6. ஆகா
    கனவுதானா
    என்ன நண்பரே இது?
    ரசித்தேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி திரில்லாக மாட்டிக்கொண்டார் என்று பார்த்தால், எல்லாம் கனவு தானா..! பரவாயில்லை.
    நல்ல கனவு. நிறைவேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கனவு நிறைவேற வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஹஹஹஹ இத்தான் தெரியுமே! நீங்க ஆரம்பிச்சவுடனேயே தெரிஞ்சு போச்சு இது கனாக் காணும் காலம் னுட்டு.....

    ஆனா கனவு அருமை ஜி! சூப்பரா சொல்லிருக்கீங்க ...ஆனா என்ன....ம்ம்ம்ம் சிலத எடிட் பண்ணி..ஆமா அப்புறம் அதையும் உளறிப்புட்டு அப்புறம் மயிலு வயித்துல அடிச்சுட்டானா? ஹஹஹஹ்

    காணொளி மிக மிக மிக மிக அருமை!!!! உங்கள் திறமை அசாத்தியம் ஜி! சத்தியமாக...

    அடோப் ப்ரிமியரா எடிட்டிங்க்? இல்லை வீடியோ பேடா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க ஆரம்பத்துலயே செரிஞ்சு போச்சா ? இயக்குனரிடம் நம்ம பாட்ஷா பலிக்குமா ? எல்லாவற்றையும் சொல்லிட்டா, அடுத்த பாகத்துக்கு கதை வேண்டாமா ? Nero Vision 5 இதில்தான் எடிட் செய்வேன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருக நண்பரே பாரதியைப் போலவே வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  10. மிக்க சந்தோசம். நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவை சுற்றியதற்க்குத்தானே,,,,

      நீக்கு
  11. அமெரிக்கா போகேக்க நம்ம பதிவர் உறவுகளைச் சந்திக்க முடியவில்லையா?
    முதலாவது படத்தைப் பார்த்ததும் அமெரிக்காவைக் கண்டேன்.
    தங்களைக் காணவில்லையே!
    ஓ! நீங்கள் தான் அந்தப் படத்தை எடுத்தீர்களாக்கும்!
    இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
    சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
    ஆனால், கில்லர்ஜி
    அமெரிக்கப் பெண்களிட்டைத் தப்பியதைப் பாராட்டலாம்
    பயணக் கட்டுரை நன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கனவு காணும்போது அவுங்களெல்லாம் வேலைக்கு போயிட்டாங்க போல, ஆமா நல்லவேனை தப்பிச்சேன்.

      நீக்கு
  12. எப்படியும் ஒரு நாள் அமெரிக்க போவீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாக்கு பலித்தால் சந்தோஷம் ஐயா.

      நீக்கு
  13. கனவுக் காட்சி.....நல்லாவே கதை வந்திருக்கு....நிஜமாக அமெரிக்காவுக்கு விரைவில் போக வாழ்த்துக்கள்.....கனவு பலிக்கட்டும்.....

    காணொளி காட்சி ஜாலம்...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணர் சொன்னால் நடக்காமல் இருக்குமா ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. அடடே கிருஷ்ணர் அவதாரத்தில் வந்து தசாவதாரமா ?

      நீக்கு
  15. என்ன கில்லர்ஜீ, தங்களுடைய எஜமானியம்மா சென்னை வாசியா!! சொல்லவேயில்ல!! குப்பத்துத் தமிழை என்னமா வெளுத்துக் கட்டுறாங்க!!

    உலகிலேயே தரம்வாய்ந்த கேமராக்களை தயாரிப்பது ஜெர்மரிதானாம், கேள்விப் பட்டேன்.

    அண்ணன் அமரிக்காவின் பாலிசி, ஊர்ல இருக்கிறவன் எல்லாம் உழைச்சு கொட்டனும், அதை நான் உட்கார்ந்து சாப்பிடனும்!! சாப்பிட்டு ஜீரணம் ஆகாத சமயத்துக்கு சட்டம்பிள்ளை வேலை செய்யணும்!! எப்பூடி......................!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இனிமேலாவது சேருமிடம் சேரியாய் இருப்பது சரியாகும் என்று நினைக்கிறேன், பழமொழி சரியாகத்தான் இருக்கு.

      நீக்கு
  16. வணக்கம்
    ஜி
    ஆரம்பத்தில் கதை மிக அட்டகாசமாக உள்ளது... இப்படியான சந்தர்ப்பம் வருமா என்ற ஏக்கத்துடன் எத்தனை இளைஞர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் தங்களுக்கு கிடைத்தது பாக்கியம் ..ஆகா...ஆகா...ஆகா...வீடியோவை சொல்ல வேண்டுமா?,..நெற்வேக் வேகம் போதாது பின்பு பார்க்கிறேன்... த.ம12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் உண்மையை சொன்னீங்க நிறைய பேருக்கு இருக்கலாம்தான் தங்களுக்காகவே ஸ்ரீலங்கா பதிவின் இணைப்பு கொடுத்தேன் பார்க்கவும் நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே.!

    தங்களின் கனவினிடையே சென்ற அமெரிக்கா பயணவிபரம் கண்டேன்.இரவில் யாருக்கும் தெரியாமல் சென்று வந்துள்ளீர்கள். நல்லது...கனவு இன்னும் கொஞ்சம் நீடித்திருந்தால் நன்றாக சுற்றிப் பார்த்து இருக்கலாம். என்ன செய்வது?
    சரி. இனி நனவிலாவது சென்று இஸ்டத்துக்கு சுற்றும் காலம் விரைவில் வர வாழ்த்துகிறேன்.. பயணத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, கனவுல சென்று வருவதில் ஒருவசதி செலவு கிடையாது இல்லையா, அதனால்தான் கனவில் போக்கு வரத்து.

      நீக்கு
  18. ரம்பா.. ஊர்வசி.. மேனகா --
    அடடா!.. அந்த இன்னொருத்தங்க பேரு தெர்யறதுக்குள்ள -
    பாழாப் போன கனா முட்ஞ்சு போச்சே!..

    சரி.. அது கிடக்கட்டும்!..

    அங்ஙனயும் சத்தமில்லாம தூக்குச் சட்டி தானோ?.. எண்ட குருவாயூரப்பா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச்சொன்னீங்க ஜி எனக்கும் அந்தக்கவலைதான்.
      எந்தோ, செய்ய சேட்டா கிட்டியது தூக்குச்சட்டியானு.

      நீக்கு
  19. கனவு நனவாகட்டும்.. காணொளி சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  20. அன்பின் ஜி!..
    காணொளி அருமை.. பாராட்டுகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டு பாராட்டியமைக்கு நன்றி ஜி நிறைய வேலை இழுத்து விட்டது.

      நீக்கு
  21. என்ன ஒரு அழகான கனவு சகோ ! நீங்கள் உண்மையிலே அமெரிக்கா செல்வதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அமெரிக்கா சென்றால் உங்கள் பேரன் அபிநவ் வைக்கண்டு வருகிறேன்.

      நீக்கு
  22. மனதின் ஆசைகள் ஆழ்மனதில் இருக்குமாம் , கனவுகளில் தெரிகிறதோ.?வீடியோவைப் பார்க்கும் போது அதற்கும் பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியது. கடைசியில் அது கில்லர்ஜீயின் கை வண்ணம் என்று தெரிந்தது/ கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கனவு மெய்ப்பட வாழ்த்தியமைக்கு நன்றி காணொளியை பாராட்டியமைக்கு கூடுதல் நன்றி .

      நீக்கு
  23. கனவு... கலக்கல்தான் அண்ணா...
    காணொளி அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. சகோ உங்களை பாராட்டாம எப்டி இருக்கிறது எல்லாம் இருப்பவனும் கூட
    1008 குறைகளைக்கூறிக்கொண்டு தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமல்லாமல்
    தனது சுற்றங்களையும் குழப்புகிறார்கள்,அனால் எப்பொழுதுமே தன்னிடம்
    இருப்பதை வைத்து மகிழ்பவன்தான் மனிதன், எநன்தோழிகள் சிலசமயம்
    புலம்பும் பொழுதுகூட நான் சொல்வதுண்டு நம்மிடம் இருப்பதில் எவ்வளவு
    சந்தோசங்கள் இருக்கிறது என்றுநாம் புரிந்துகொண்டால் நம்கவலைகள் நம்மைபார்த்து பயந்தோடும் என்று,கனவும் கர்ப்பணையும் அபாரம் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லதொரு வாழ்வியல் உண்மையை தந்தீர்கள்.

      //இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
      எங்கெங்கோ அலைகின்றான் ஞானத்தங்கமே//

      என்ற பாடல்தான் நினைவு வருகிறது
      சந்தோஷங்களிலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதே...
      --- கீதை

      நீக்கு
  25. அட அமெரிக்காவா போனீங்க கனவுல செம
    வீடியோவில் முடிவு செமையா இருக்கு
    தங்கள் எடிட்டிங் அருமை பாடல் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  26. லாஸ் ஏஞ்சல் போய் தேவதைகளிடம் கேமரா லாஸ் ஆகாமல் தப்பித்ததே,ரொம்ப சந்தோசம் :)
    த .ம .இனி நீங்கள் காட்டிய வழியிலேயே தொடரும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா தங்களது கருத்தே வேற ஸ்டைல்தான் ஜி

      நீக்கு
  27. ஒரு த்ரில்லிங் அனுபவம்....எழுதப்போறீங்கன்னு பார்த்தா....ம்ம்ம்ம்...ஏமாத்திட்டிங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே கோபம் இல்லையே... நிச்சயம் ஒருநாள் அமெரிக்கா போய் வந்து பதிவு போடுவேன்.

      நீக்கு
  28. எங்கும் வேகம் எதிலும் வேகம் மொத்தத்தில் வேகமான அமெரிக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அதைவிட வேகமாக கருத்துரை போடுறீங்களே நண்பரே...

      நீக்கு

  29. தரமான பதிவு - ஒவ்வோரு நாளும் புதிதாக

    பதிலளிநீக்கு
  30. அட அமெரிக்கா பயணம் என்று வந்தால் கனவா[[[[[[[[[[[[[[[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவாய் இருந்தாலும் இடங்களை பார்த்து விட்டோமே....

      நீக்கு
  31. நாளைக்கு என்ன லண்டனா சார் ? இப்ப போய் பாருங்க நம்ப கடைய கலக்கிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் மேலே உள்ளவனுக்கே தெரியும் நண்பா, வந்தேன் ஸூப்பர்.

      நீக்கு
  32. திரில்லர் படம் பார்ப்பதுபோல விறுவிறுப்பாக எங்களை அழைத்துக் கொண்டுபோய்.....கடைசியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவுதான் போனாலும் முடிவு வரவேண்டுமே..... வருகைக்கு நன்றி முனைவரே...

      நீக்கு
  33. அன்புள்ள ஜி,

    அமெரிக்க, லாஸ் ஏஞ்சல் இரவுக்காட்சியாக 11.30 எனப் படத்தைக் காட்டி... ஒருத்தி என்னருகே வந்து... எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு கனவுக் காட்சியை எழுதுவதற்குச் சரியான கதாசிரியர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்... தமிழ்த் திரையுலகம் வந்துவிடலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

    எனக்குப் பிடித்த ஒரு பாடல்....

    கனாக் காணும் கண்கள் மெல்ல
    உறங்காதோ பாடல் சொல்ல
    நிலாக் கால மேகம் எல்லாம்
    உலாப் போகும் நேரம் கண்ணே! ....................................................

    "நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
    உன் நிழலையோ பூஜிக்கிறேன்
    அதனால்தான்,
    உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
    என் நெற்றியில் நீறுபோல்,
    திருநீறுபோல் இட்டுக்கொள்கிறேன்"......................................................


    புதிய கவிதை புனையும் குயிலே
    நெஞ்சில் உண்டான காயம் என்ன?
    நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
    கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
    விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
    வருங்காலம் இன்பம் என்று,
    நிகழ்காலம் கூறும் கண்ணே!

    காணொளிக் காட்சி ஒளிமிக்கதாக இருந்தது!
    நன்றி.

    த.ம. 19.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே...
      கவிதை கொண்டு பாராட்டியமைக்கு நன்றிகள் கோடி.

      நீக்கு
  34. கனவு மெய்ப்படவேண்டும்." நீங்க அமெரிக்கா போகும் ஆசையை சொன்னேன். காணொளி பிரமாதமா செய்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்கா போய் வந்தால் பதிவும் வரும், காணொளியை பாராட்டியமைக்கு நன்றி சகோ...

      நீக்கு
  35. கனவு தான் என்று எனக்கு முன்பே தெரியும், தெரியாதா? உண்மை ,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  36. கனவு தான்னு நாங்க நம்பிட்டோம்.

    அப்புறம் நீங்க எடுக்கப்போகிற குறும்படத்துக்கு முன்னோடி தான் அந்த காணொளின்னு தெரிஞ்சு போச்சு.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பித்தானே ஆகனும்... காணொளி கண்டு பாராட்டியமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  37. காணொளியைப் பார்த்தால் எழுதியது கனவாகத் தெரியவில்லையே ஐயா?
    உங்களது வலைப்பக்கம் குடில் இல்லை, மாளிகை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது குடிலுக்கு முதல் வருகை தந்த நண்பரை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறேன்

      நீக்கு