தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 26, 2023

கொல்லைக்கு போகும் முல்லையே...

யலுக்கு போகும் வனவள்ளியே
என்னை தள்ளி போவதில்லையே
நானும் வாறேன்டி முல்லையே
 
வேண்டாம் நீயும் தொல்லையே
நானும் போறேன் கொல்லையே
உனக்கு வேலையே இல்லையே
 
எனை விட்டுட்டு போகாதே நீயும்
போனால் எனது மனசும் காயும்
நான் எடுத்துட்டு வரவா பாயும்
 
நீ வந்தால் எம் மனசும் சாயும்
எனக்கு துணை இருக்கு நாயும்
கூடவே வருது எனக்கு பேயும்
 
உனக்கு துணை இந்த மச்சான்
உனது மனசுக்குள்ளே வச்சான்
நான்தான் உன் தங்கர் பச்சான்
 
என்னை மனசுக்குள்ளே நச்சான்
நீயும் மனசை வச்சே தச்சான்
எனக்கு நல்லா வந்து வாச்சான்
 
எனது உசுரு விட்டுப் போகுதே
எனக்கு மனசு காயம் ஆகுதே
உன்னால் நெஞ்சும் நோகுதே
 
கொல்லையில் பயிரும் வாடுதே
அங்கே ஆடும் எனைத் தேடுதே
ஆனால் மனசு உன்னை நாடுதே
 
உனை நினைத்து மனம் பாடுதே
உசுரும் உனக்கு முன்னே ஓடுதே
உள்ளம் உருகி ஊஞ்சல் ஆடுதே
 
மச்சான் உன்னை மறக்கலையே
மறதி என்றும் நினைக்கலையே
வானம் இன்னும் கருக்கலையே
 
பிறகென்ன வாயேன்டி மயிலே
வந்தேன்யா உம்மிடம் குயிலே
தானானே தானானே னன்னே
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
எப்படியோ பாட்டுப்பாடி அலமேலுவை கவுத்தி புட்டானே கருவாயன்.
 
ChavasRegal சிவசம்போ-
கையில தொறட்டி வச்சு இருக்காளே நாம ஏதாவது எடக்கு மடக்கா சொன்னா இழுத்துருவாளோ....

Share this post with your FRIENDS…

59 கருத்துகள்:

  1. காதல் கவிதை நல்லாத் தீட்டியிருக்கீங்க. ஆனால் பதிவின் தலைப்புக்கு, நெல்லை பகுதியின் அர்த்தமே வேறாயிற்றே. அதுதான் கொஞ்சம் இடிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையில் என்றில்லை, எல்லா இடத்திலும் 'அந்த' அர்த்தம்தான்!

      நீக்கு
    2. ஹா.. ஹா.. ஹா.. நான் அந்த பாதையை மறந்து விட்டேனே தமிழரே.‌.

      நீக்கு
    3. கொல்லைக்கு போற இடத்துலகூட உங்க "லொள்ளு" தாங்க முடியல.... காலங்காத்தால கவிதைய தூக்கிகிட்டு வந்துடுறீங்க... சே... ச்சே... கருமம்...கருமம்...

      - வணக்கம்டா மாப்ள "நெல்லை"யில் இருந்து...

      நீக்கு
    4. வருக நண்பரே
      நானும்கூட நேற்று 'நெல்லை"யில் இருந்துதான்... வந்தேன்.

      (வள்ளியூர் அருகில் சித்தூர்)

      நீக்கு
    5. தஞ்சை ஜில்லாவில் வீட்டின் கொல்லைப் பகுதி மட்டும் கொல்லை என்னாமல் சிறிய தோட்டங்கள் உள்ள வீடுகளையும் கொல்லை என அழைப்பார்கள். என் மாமனாருக்கும் அப்படி ஒரு கொல்லை வீட்டுக்கு எதிரே இருந்தது. காணத்திற்கான தேங்காய்கள், விறகுகள், இன்னும் வண்டிக்கு உரிய சாமான்கள் என இருக்கும். தவிர்த்துத் தோட்டமும் பெரிதாக பல மரங்களையும் உடையதாக இருக்கும். பலன் தரும் மரங்களும் இருக்கும். தரையோடு ஒட்டிய கிணறு உண்டு பாசனத்திற்காக. அதில் அடிக்கடி மலைப்பாம்பு, நல்ல பாம்பு என விழுந்து விடும் என்பதால் பின்னாட்களில் மூடி விட்டார்கள்.

      நீக்கு
    6. தங்களது விளக்கவுரைக்கு நன்றி.

      இனிமேலாவது நெல்லைக்காரர்கள் எசகுபிசகாக நினைக்காது இருக்கட்டும்.

      நீக்கு
    7. ஏங்க.... எங்க பகுதில (நெல்லை), கொல்லைக்கு வருது, கொல்லைக்குப் போயிருக்கான் என்றால் பாத்ரூம் 2 போயிருக்கான்னு அர்த்தம். இது மாதிரித்தான் சமீபத்தில் ஒரு பதிவின் ஆரம்பத்தில், ஜனகருக்கு சுகர் வந்தது என்பதுபோல எழுதியிருந்தார்கள். நான், என்னடா..டயபடீஸ் இராமாயண காலத்திலேயே இருந்ததான்னு யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் பார்த்தால் சுகர் முனிவரைத்தான் அப்படி எழுதியிருக்காங்க.

      நீக்கு
    8. கண்மாய் என்றால் ஊரணி போன்ற ஓர் நீர்த்தேக்கம் இல்லையா ?

      எங்கள் தி கிரேட் தேவகோட்டை ஏரியாவில் கூட (பாத்ரூம் -2க்கு) போவதை கண்மாய்க்கு போறேன் என்று சொல்வோம்.

      அதனால்
      //கண்மாயில் என் கண்மயிலைக்
      கண்டேன்//
      என்று ஹைக்கூ எழுதக்கூடாதா ?
      அதிரடி அதிராதான் உங்களுக்கு பதில் சொல்லணும்.

      சுகர் முனிவர் ஹா.. ஹா..

      நீக்கு
    9. ஹா ஹா ஹா எல்லோருக்கும், பூங்காவிலயும் அருவியிலயும், மலையிலயும் தான் கவிதை அதிகம் வரும், ஆனா கில்லர்ஜிக்கோ கொல்லைக்கு, கண்மாய்க்குப் போவோரைப் பார்க்கும்போதுதான் கவிதையாக் கொட்டுது அதுவும் காதல் கவிதை ஹா ஹா ஹா இனிமேல் கண்மாயிலயும் ஓடிப்போய்க் குதிக்க முடியாமல் பண்ணிட்டீங்களே கில்லர்ஜி:)), அந்தர ஆபத்துக்கு ஓடிப்போய்க் குதிக்கவும் யோசிக்கோணும் போல இருக்கே வைரவா...:)).

      அதுசரி, சுகர் முனிவரோ? எனக்கிது தெரியாமல் போச்சே தெரிஞ்சிருந்தால் ஒரு தலைப்புப் போட்டிருப்பேன்... சுகர் முனிவரை எறுப்பு கடிக்காமல் இருந்தால் சரி ஹா ஹா ஹா.

      நீக்கு
    10. அதிரா கவிதைக்கு பிறப்பிடம் என்று தனியாக இல்லை.

      கவிதை
      காரிலும் வரும்,
      பாரிலும் வரும்.

      நீக்கு
    11. யா யா.. உகண்டாவிலும் வருமாக்கும்... ஹா ஹா ஹா நீங்கள் எழுதுங்கோ கில்லர்ஜி.. அது சரி கொல்லைக்குப்போன முல்லை திரும்பிட்டாவோ?:))

      நீக்கு
    12. கொல்லைக்கு போன முல்லை ஊரணிக்கு போயிட்டு வர்றது வழக்கமாம்...

      நீக்கு
    13. ஹா ஹா ஹா அப்பூடியே அதிராவின் ஆச்சிரமத்துக்கும் வந்து தீட்ஷை எடுத்துக்கொண்டு போகச் சொல்லுங்கோ முல்லையை...:).. ஆர் அகப்பட்டாலும் ஞானியாக்காமல் விடமாட்டேன்ன்ன்ன்:))

      நீக்கு
    14. ஊரணிக்கு போயிட்டு வரும்போதா தீட்சை ?

      இன்னொரு நாள் குளிச்சிட்டு வரட்டும்.

      நீக்கு
  2. உனது மனசுக்குள்ளே வச்சான்......... எதை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதானே நீங்க கேட்ட கேள்வியை நான் படு பயங்கரமாக வழிமொழிகிறேன்:)) நெ தமிழன்.. அதானே எதை ஹா ஹா ஹா?:).. ஆசையை எப்பூடி அங்கின வைக்க முடியும் கில்லர்ஜி?:))

      நீக்கு
    2. எல்லாமே மனசுக்குள்ளேதானே வைக்கிறோம்.

      நீக்கு
  3. போடறாங்கப்பா ஆட்டம் 
    கவிதையிலே ஒரு பாட்டம் 
    நானும் தர்றேன் பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே சூப்பர் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. அடடா கொல்லை என்றதும்:) ஸ்ரீராமுக்கும் ஹைக்கூ வருதே:)) ஆண்டவா ஒருநாள் வராமல் இன்று வந்தால்.. இப்பூடிக் ஹைக்கூக்களைப் பார்க்க வைக்கிறீங்களே தேனாம்பேட்டைத் தெய்வராகவா:))

      நீக்கு
    3. தேனாம்பேட்டை தெய்வராகவா இவரு யாரு ?

      நீக்கு
    4. கொல்லை என்றதால்
      வந்ததொரு தொல்லை
      வேறொரு சொல்லை
      வைத்திருந்தால்
      இந்த
      அரட்டை இல்லை!

      ஹிஹிஹி..

      நீக்கு
    5. // தேனாம்பேட்டை தெய்வராகவா இவரு யாரு ? //

      அதுதானே... யாரு? ஆழ்வார்பேட்டை ஆண்டவன் தெரியும்! இதாரு!

      நீக்கு
    6. அடடே இதற்கும் கவிதையா ? சூப்பர் ஜி

      நீக்கு
    7. ஹா ஹா ஹா இப்போ தேனாம்பேட்டைத் தெய்வராகவா க்கும் கவித:)) எழுதிடப்போறார் ஸ்ரீராம்:))

      நீக்கு
    8. எப்படியோ அதிராவால் ஸ்ரீராம்ஜி பட்டை தீட்டிய வைரமாகட்டும்.

      நீக்கு
    9. எப்படியாவது ஆராவது அதிராவை தேம்ஸ்ல தள்ளோணும் இல்லையேல் இருட்டடி விழோணும் எனத்தானே உப்பூடி எல்லாம் எழுதுறீங்க கில்லர்ஜி:).. ஸ்ரீராம் பார்த்தால் என்ன நினைப்பார் ?????.. தன் இமேஜே டமேஜ் ஆகிட்டுதே என வருந்த மாட்டார்ர்:))? ஹா ஹா ஹா ஹையோ மீ ஓடிடுறேன்:))

      நீக்கு
    10. ஜேம்ஸ் ஊரணியில் விழுவதை பார்த்து மகிழ இன்னும் எத்தனை மாமாங்கமோ ?

      நீக்கு
  4. இரண்டுபேரும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கலாம்.  கிட்டத்தட்ட கடைசியில்தான் தெரிகிறது.  வெவ்வேறு நிறங்களைக் கொடுத்தோ, அவன் அவள் என்று கொடுத்தோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி வழக்கமாக நான் இப்படித்தானே செய்வேன் பிறகு மாற்றுகிறேன்

      நீக்கு
  5. அழகான படத்துடன் அருமையான கவிதை...

    வாழ்க தங்களது கவித்தொண்டு..

    பதிலளிநீக்கு
  6. அருமை
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி, நல்லாருக்கு.

    கடைசி மூன்று வரிகளில் இரண்டு பேருமே பேசிக்கிடுகா....விளங்கணும்லா....ஹாஹாஹா முதல்ல யாரு யார்கிட்ட சொல்றாங்கன்னு புரியலை அப்புறம் புரிஞ்சுச்சு...

    தலைப்பின் பொருள் தெரிந்தது என்றாலும் முதல்ல கொல்லையிலேனதும் சிரித்துவிட்டேன்.....சரிதான்! மச்சானுக்கு ரொம்பத்தான்ன்னு ......ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. படம் ரொம்ப நல்லாருக்கு

    சிவசம்போ சொல்றது போல, கருவாயன் ஒழுங்கா இல்லைனாக்க கொறட்டி வைச்சு ஆப்புதான்!!!

    வயக்காட்டுக் கொல்லையிலே விரைந்தோடி வந்தேன் நானே உனக்காக் காத்திருக்கேன் சின்ன ராசான்னு நான் எப்போதோ எழுதிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது!! பதிவில் பகிர்ந்திருந்தேனா நினைவில்லை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் அங்கிள் எப்பொழுதுமே சரியாகத்தான் சொல்வார்.

      அப்படியா ? மகிழ்ச்சி

      நீக்கு
    2. ஹா ஹா ஹா போனபோஸ்ட்டில் சிறீ சிவசம்போ அங்கிளைக் காணல்லியே என மனமுடைஞ்சு போனேன்:))...

      நீக்கு
  9. கில்லர்ஜி, இந்த மாதிரி சுவாரசியமான சரசசல்லாபக் கவிதை எழுத எனக்கும் ஆசைதான். ஆசையை நிராசை ஆக்கிடுது கிடுகிடுன்னு ஏறுற வயசு!

    ‘விரசம்’ கலக்காமல்தான் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ரசனையான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. கொல்லை எனில் ஒரே மாதிரிப் பொருளே எடுத்துக்கக் கூடாது. கவிதை அருமை கில்லர்ஜி. நல்ல தமிழில் எழுதுவது உங்களுக்குக் கை வந்த கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அதானே நான் தோட்டத்தைதான் மனதில் வைத்து கொல்லை என்று எழுதினேன்.

      தங்களது பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
  11. கொல்லைக்குப் போகும் முல்லையின் கையில கொக்கத்தடி:), சரி போனாப்போகுது எனப் பார்த்தால், கொக்கத்தடி முடிவில கில்லர்ஜியின் தலை:)) ... முல்லை[அந்தக்காவைச் ஜொன்னேன்:)], கொல்லைக்குப் போகும் போக்கே டப்பாயிருக்கே:)) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரெம்ம்ப நல்ல பொண்ணு..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ச்சே நாட்டுல ஒரு கவிதை எழுத விடமாட்றாங்களே...

      சினிமாவுல பெரீய்ய்ய்ய ஆளாகி விடுவேன் என பொறாமை அதிராவுக்கு

      நீக்கு
  12. எதுகை மோனையில் கவிதை சூப்பராக இருக்குது கில்லர்ஜி... ஆனாலும் எங்கயோ இடிக்குதே.. ஏனெனில் "நான் இப்போ வள்ளியூரில்" நிற்கிறேன் என்கிறீங்க:), இப்போ கவிதையில வள்ளியோடு டூயட் பாடுறீங்க:)).. இதை எல்லாம் இங்கின தட்டிக் கேய்க்க ஆருமே இல்லையோ?:))... ஆஆஆஆஆஆ வழி விடுங்கோ வழி விடுங்கோ மீ தேம்ஸ் ஆச்சிரமத்துக்கு ஓடிடுறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ அதிரா நான் நேற்று உண்மையிலேயே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சென்று வந்தேன்.

      எங்கள் குலதெய்வம் (மூலஸ்தலம்) காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு...

      ஊர் பெயரிலும் (வன)வள்ளி வந்ததுதான் உங்களுக்கு பிரச்சனை

      நீக்கு
  13. வயலுக்குப் போகும் வனவள்ளி படம் சூப்பர். கவிதை ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவின் கவிதையையும், அதற்கு வந்த கருத்துரைகளையும் படித்து ரசித்தேன். தங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ஆம்.. கொல்லைக்கு பல அர்த்தங்கள். முதலில் சேர்ந்தாற் போல் படித்ததில் கொஞ்சம் புரியவில்லை. மறுபடியும் கருத்துக்களை படித்து விட்டு பதிவை படித்ததும் புரிந்தது. இருவரின் எண்ணங்களாகிய கவிதை அருமை.

    தனித்தனியாக அதை கலர் அமைத்து தந்திருக்கலாம். உங்களுக்கு தெரியாததா? பதிவுலகில் இந்த கணினி தொழிற் நுட்பங்களில் நீங்களும் அசத்துகிறவர்தானே...! பாராட்டுக்கள்.

    நான் இரண்டு நாட்களாக வலைத்தளங்களுக்கு வர இயலவில்லை. இன்றுதான் வருகிறேன்.அதனால் தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      ஆம் நான் வழக்கமாக இரண்டு நிறங்களில் கவிதை எழுதுவேன் இதில் ஏனோ மறந்து விட்டேன் பிறகு சரி செய்கிறேன்.

      நீக்கு
  15. வள்ளியூர் சென்று குலதெய்வத்தை வழிபட்டு வந்தீர்களா?
    மகிழ்ச்சி.

    கவிதை நன்றாக இருக்கிறது. முல்லை நன்றாக இருக்கிறார். இப்போது கிராமத்து பெண்கள் நைட்டியுடன் கொறட்டியை எடுத்துக் கொண்டு ஆடு, மாடு மேய்த்து செல்கிறார்கள், அல்லது ஆண் மகன் சட்டை அணிந்து செல்கிறார்கள்.

    தொறட்டி கம்பு என்பார்கள். நீங்கள் கொறட்டி என்று சொல்கிறீர்கள். பின் பக்கம் தோட்டத்தை கொல்லபக்கம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      ஆம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்தேன்.

      தொறட்டி என்பதே சரி இதோ சரி செய்கிறேன்.

      நீக்கு