தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 25, 2019

குயிலகம் (2)


பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
‘’ஜனனி’’

ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...

ஜனனி சிந்தனை கலைந்து நடைமுறைக்கு வந்தாள் வேல் போன்ற விழிகளால் என்ன என்பது போல் பார்த்தாள்
உங்க அப்பா அம்மா உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலையே ?
அவசரமாக தலையை அசைத்தாள் இல்லை என்பது போல்
இந்த கல்யாணத்துல உனக்கு மனப்பூர்வமான சம்மதம்தானே ?

தலையை ஆட்டி அசைத்தாள்.
வாயைத்திறந்து பதில் சொல்லு திக்குவாயா இல்லையானு எனக்கு தெரியணும்ல...
ஜனனிக்கு சிரிப்பு வர, படக்கென்று முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர் மந்திரமூர்த்தியும், மல்லிகாவும் உள்பட
என்ன பதில் சொல்லு ?
ஜனனி முகிலனை நேருக்குநேர் பார்த்து விழிகளால் சிரித்தாள்.
முழு சம்மதம்

சந்தோஷம் சரி இனி பேசவேண்டிய முக்கியமான விசயத்துக்கு வர்றேன் எங்க குடும்பத்துல நான் அம்மா, அப்பா, தம்பி உள்பட நான்கு பேர்தான் இனி உன்னையும் சேர்த்தால் ஐந்து பேர் நான் பேசப்போறது உனக்கு மட்டுமல்ல, இங்குள்ள பலருக்கும் சங்கடமாக இருக்கலாம் இந்த சங்கடங்களை இப்பவே மனம் திறந்து பேசிக்கொண்டால் நாளைக்கு நமக்குள்ள பிரச்சனைகள் வராதுனு நான் தீர்மானமாக நம்புறேன். எங்க அப்பா இராணுவத்துல கமாண்டராக வேலை செய்துட்டு சமீபத்துலதான் ஓய்வு பெற்று இருக்காரு, நான் வங்கில மேலாளராக இருக்கிறேன், எனது தம்பி முகேஷ் கல்லூரி போயிக்கிட்டு இருக்கான் சொந்த வீடு, ஸிட்டிக்குள்ளே ஆறு   கடைகள் கட்டி வாடகை வருது. எங்க அப்பா ரொம்ப காலமாகவே குடும்பத்தை பிரிஞ்சு வாழ்ந்துட்டு இப்பத்தான் வந்து குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து கிட்டு இருக்காரு கடைசிவரை அவரை சந்தோஷமாக வச்சுக்கிறணும் இதுதான் எனது ஆசை, லட்சியம், கனவு எல்லாமே எனக்கு அப்பா, அம்மா தெய்வம் மாதிரி அவங்க இல்லாமல் நான் இந்நிலைக்கு வரவில்லை அதற்காக உன்னையும் நான் தெய்வமாக நினைக்க முடியாது அதே நேரத்துல மனைவிக்கு கொடுக்க வேண்டிய உரிமை, பாசம், அன்பு, எல்லாம் உனக்கு துளியளவும் குறையாது அதை நீ விட்டுக் கொடுக்கவும் கூடாது, விட்டுக் கொடுக்கவும் வேண்டாம்.

எங்க அப்பா இராணுவத்துல இருந்ததால எல்லாமே ரூல்ஸ்படி துல்லியமாக நடக்கணும் இது எங்க அப்பாவுக்கு மட்டுமல்ல குடும்பத்துல எல்லோருமே இப்படித்தான் இனி நீயும் இதைத்தான் கடைப்பிடிக்கணும். எங்க அப்பா வீடு கட்டும்போதே திட்டம் போட்டே மாடி  வச்சு வீடு கட்டிட்டாரு... அதனால நாம கல்யாணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் போயிடலாம்னு நினைக்க வேண்டாம் இனிமேல்தான் நான் சொல்வதை கவனித்து கேட்கணும் நிச்சயமாக நாம தனிக்குடித்தனம் போவதில்லை அப்பா வீட்டுக்குள்ளேயே படி வச்சு மாடியில்  அட்டாச் பாத்ரூம் வச்சு கட்டியது இரண்டு பெட்ரூம்கள் மட்டுமே நமக்கும், இதோ எனது தம்பிக்கும்தான் நாளைக்கு இவனுக்கு திருமணம் செய்யும் போதும் இதையே நான்தான் பேசுவேன் இதற்கு எனது அப்பா, அம்மா, மட்டுமல்ல இவனும் தப்புனு சொல்ல மாட்டாங்க

காரணம் எங்க வீட்ல நாலு பேருமே நாலு பேருக்கும் பயப்படுவோம் இதற்கு பேரு மரியாதை பயம் காரணம் நாங்க எல்லோருமே சரியாக நடந்து கொள்வோம் நியாயமாகத்தான் பேசுவோம் குறிப்பாக பொய் சொல்வது எங்களுக்கு பிடிக்காது எங்க கூட்டத்துல நீயும் ஐக்கியமாகி விட்டால் உனக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கும் உனது உரிமைகளை தைரியமாக எங்கள் வீட்டில் கேட்கலாம் அதற்கு முதலில் அந்த வீட்டை உனது வீடாக நினைக்கணும் உன்னை சொந்த மகளாகவே எங்க அம்மா, அப்பா நினைப்பாங்க, நடத்துவாங்க காரணம் அவங்களுக்கு பெண் குழந்தை இல்லைங்கிற ஏக்கம் நிறைய இருக்கு நீ வந்துதான் அதை பூர்த்தி செய்யணும்.

இன்றைக்கு எப்படி மாமா, அத்தை என்று சொல்லப் போறியோ இந்த வார்த்தை கடைசிவரை மாறக்கூடாது அவங்க தவறு செய்தால் நீ என்னிடம் புகார் சொல்ல வேண்டாம் நீயே கேள்வி கேட்கலாம் அந்த உரிமையை நீ எடுத்துகிறணும் ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு தரம் இழந்து நடக்கவே மாட்டாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னோட செயல்பாடுதான் நமது குயிலகத்தை நிர்வகிக்கும் பொருப்பை உனக்கு தரும் அம்மாவும், அப்பாவும் கோவில், குளம்னு ஊர் சுற்ற கிளம்பிடுவாங்க பெரும்பாலும் வீட்டை நீதான் நிர்வகிக்கிறாப்ல வரும் ஆனால் அதற்கான தகுதியை நீ வளர்த்துக் கொள்ளணும்.

உங்கள் வீட்டில் நீ எப்படி இருந்தியோ எங்களுக்கு தெரியாது ஆனால் நம்ம வீட்டில் கார் இருக்கு, ஏஸி இருக்கு, சகல வசதிகளும் இருக்கு பெரிய வீடுதான் வீட்டுக்கு வேலையாட்கள் வச்சுக்கிற மாட்டோம். இதுவரை அம்மா ஒரே ஆளாக பார்த்துக் கிட்டாங்க இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து செய்யணும் நம்ம வீட்டு குணங்களோடு இணைந்து போகணும் நிச்சயமாக இது உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் காரணம் நாங்கள் மற்ற வீடு மாதிரி டிவியில் சீரியல் பார்த்துக்கிட்டு அழமாட்டோம், ளுக்கொரு பக்கமாக சாய்ந்து கொண்டு மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கமாட்டோம்,

சாயங்காலம் ஆனால் அம்மா ஏதாவது பலகாரம் செய்வாங்க டிவியை ஆஃப் பண்ணிட்டு, மொபைலை தூக்கிப் போட்டுட்டு தின்னுக்கிட்டே அரட்டை அடிப்போம், பாட்டுக்கு பாட்டு போட்டி வைத்து பாடுவோம் ஓடிப்புடிச்சு விளையாடுவோம் நிச்சயமாக உனக்கும் இதில் சேரணும்னு ஆசை வந்துரும் காரணம் நம்ம குயிலகத்தின் ராசி அப்படி. நான் கேட்க வேண்டியதை கேட்டு விட்டேன் இப்ப உனக்கு முழுமையான சம்மதமா ? என்னிடம் ஏதாவது உனக்கு கேள்வி கேட்கணும் என்றால் தாராளமாக கேட்களாம் இப்வே கேட்டு தீர்த்துக் கொண்டால் நாளை பிரச்சனைகள் வராது என்ன சொல்லு ?

ஜனனி முகிலன் பேசுவதையே ரசித்து பார்த்துக் கொண்டு முகத்தில் புன்முறுவலுடன் இருந்தாள் இப்பொழுதே வார்த்தைக்கு வார்த்தை நம்ம வீடு என்று என்னையும் சேர்த்துக் கொண்டாரே...
பதில் சொல்லு ?
மீண்டும் சிரித்தாள்

இப்பொழுது ஜனனியின் அப்பா தேவநாதன் வாய் திறந்தார்
மாப்ளே நாங்க பரம்பரை, பரம்பரையா கூட்டுக் குடும்பம்தான் எங்க மகள் சந்தோஷமாக இருப்பது போல பாதுகாப்பாகவும் இருக்கணும் எங்களுக்கு அதுதான் முக்கியம் எம் மகளுக்கும் கூட்டத்தோடு இருக்கிறதுதான் பிடிக்கும் எங்கள் மருமக்கள் ரெண்டு பேரும் எங்களோடுதான் இருக்காங்க நாங்களும் புள்ளைங்களை அப்படித்தான் வளர்த்து இருக்கோம். இந்தக் காரணத்துக்காகவே உங்களுக்குத்தான் பெண் கொடுக்கணும்னு முடிவு செய்து
விட்டோம்
என்ன ஜனனி சந்தோஷம்தானே ?
ம்... சந்தோஷம்
வெள்ளி மீசை பெருசு கேட்டது...
என்ன பட்டாளத்துக்காரரே மத்த விசயங்களை பேசிடலாமே...?

ஐயா கொஞ்சம் பொருங்க... அம்மா ஜனனியை உள்ளே கூட்டிட்டு போயி நீங்க பேச வேண்டிய விசயங்கள் ஏதாவது இருந்தால் பேசி முடிச்சுட்டு வாங்க அப்பா நீங்களும் போங்க...
.
நாங்க பேசுறதுக்கு இனி என்ன இருக்கு எல்லாவற்றையும் நீயே அழகா பொதுவுல பேசிட்டியே...
இல்லைப்பா அம்மாவுக்கு நிறைய விசயங்கள் இருக்கும் போயிட்டு வாங்க ஜனனி உள்ளே கூட்டிட்டு போ
ஜனனி சிரித்துக் கொண்டே எழுந்தாள் கூடவே மந்திரமூர்த்தியும், மல்லிகாவும் செல்ல...
அம்மா
என்னப்பா ?

இது எனக்கு பார்க்க வந்த இரண்டாவது பெண் ஏற்கனவே பார்த்த இடத்தில் அந்தப்பெண் கூட்டுக்குடும்பம் வேண்டாம்னு ஓபனாக சொன்னதால நான் எந்திரிச்சு வந்துட்டேன் இங்கே ஜனனி அப்படி சொல்லலை குடும்பமும் அப்படி ஆசைப்படலை உங்க இரண்டு பேருக்கு பிடிச்சுப் போச்சு நல்ல விதமாக பேசிட்டு வருவீங்கனு நம்புறேன் காரணம் எனக்கு ஜனனியை ரொம்ப, ரொம்ப பிடிச்சுப் போச்சு.

மல்லிகா மகனின் தலையை தடவி விட்டு உள்ளே சென்றாள் மூவரும் உள்ளே போனதும் கதவை தாழ் போட்ட சப்தம் கேட்டது

காNOளி
தொடரும்...

60 கருத்துகள்:

  1. குடும்பம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றும் இப்படிப்பட்ட குடும்பங்கள் இருக்கிறது ஆனால் இது அபூர்வமாகி விட்டது.

      நீக்கு
  2. வேறு ஆரும் என்னை முந்தியிருந்தால் தேம்ஸ்ல தள்ளிப்போடுவேனாக்கும்:)... கொமெண்ட் போட்டவரை அல்ல:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேம்ஸ் ஊரணியை பட்டா போட்டு விற்றால்தான் சரியா வரும்.

      நீக்கு
    2. என்ன ஜொள்றீங்க கில்லர்ஜி?:) காது கேய்க்கமாட்டேங்குதே:) ஊரணிக்கு அடியில இருந்தோ பேசுறீங்க? ஹையோ ஆரோ தள்ளிவிட்டிட்டினம்போல... நானில்ல நானில்ல:)))

      நீக்கு
    3. என்னது எனக்கு விஸிட் விசா அனுப்ப போறீங்களா ? மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதவை தாழ் போட்ட சப்தம் கேட்டது////
    அது சத்தமாக்கும்:) மீக்கு டமில்ல டி எல்லோ:)... கடசி லைன் தான் கண்ணில் பட்டது மொபைல் என்பதால்:).. பின்பு வாறேன் டோரி:) படிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தம் என்பது பேச்சு வழக்கு
      சப்தம் என்பதே சரி வீரகேசரி எடிட்டருக்கு இதுகூட தெரியாதா ?

      நீக்கு
    2. ஆஆஆ உண்மையாவோ.. டான்ஸ் லதான்.. “சப்தம்” என ஒரு சொல் படிச்சதுண்டு..

      நீக்கு
    3. தமிழில் டீ குடித்த கார்த்திகை பிறைக்கு இதுகூட தெரியாதானு கேட்கணும் :))))))))))))

      நீக்கு
    4. அதானே ஐப்பசி பிறைக்கு தெரியாதா ?

      நீக்கு
  4. அருமை... அருமை...

    அழகாக எழுதியிருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எழுதியிருக்கிறார்கள்//
      ???

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. கற்பனையா படிக்க ரொம்ப நல்லா இருக்கு. இப்படிப்பட்ட குடும்பங்கள் இருக்கணுமே என்றும் இருக்கு. ஆனா இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளவங்கள்லாம் இருக்காங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்டு நண்பரே அரிதாகி விட்டதால் வெளியுலகம் அறியப்படுவதில்லை.

      நீக்கு
  6. டி.வி. சீரியல்களையே பார்க்காத வீட்டில், தியேட்டர் சைஸுக்கு எதுக்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருக்குன்னுதான் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்கு தகுந்த பெட்டி வேண்டுமல்லவா!

      நீக்கு
  7. இப்போல்லாம், திருமணத்துக்கு அப்புறம் என் அப்பா/அம்மா என்னோடதான் இருப்பாங்க என்று 'விஷ' வார்த்தைகளைக் கேட்டாலே பெண்கள், 'எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என்று பட்னு சொல்லிடுதுக. காலம் அப்படி அலங்கோலமாக ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இது "விஷ" வார்த்தை பட்டியலில் சேர்ந்து விட்டதா ?

      நீக்கு
    2. பெண்களுக்கு இது விஷ வார்த்தைகளாகப் போய்விட்டதே கில்லர்ஜி... பெண்கள் முதலில் வைக்கும் கண்டிஷன், கணவன் பெற்றோர் கூட இருக்கக்கூடாது என்பதுதான். காலம் இப்படி மாறிவிட்டதே என்று வருத்தப்படத்தான் முடியும்.

      ஆரம்பத்திலிருந்தே மகனோடு சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இல்லாமல் இருந்தால், பிற்காலத்தில் சேர்வது மிகக் கடினம். பெண்களுக்கு அதனால் (கூட்டுக்குடும்பத்தால்) உள்ள லாபங்கள் மனதில் ஏறாதது வருத்தத்துக்குரியதுதான்.

      நீக்கு
    3. அதாவது பெண் மட்டுமல்ல பெண்ணைப் பெற்றவர்களும் தனிக்குடித்தனம் போவதற்கு விரும்புகின்றனர் அதேநேரம் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது பெருங்கொண்ட உறவுக்கூட்டம் வேண்டும்.

      இப்படி உள்ளவர்கள் தாய்-தந்தையற்ற எத்தனையோ நல்ல உள்ளம் கொண்டவர்களை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்க முன் வருவதில்லையே... ஏன் ?

      நீக்கு
  8. பெரும்பாலான வீடுகளில் மருமகள் தனிக்குடித்தனம் போகலாம் என்று சொல்வதற்கு ஆணின் பெற்றோர் தான் காரணமாக இருப்பார்கள். ஆகவே பெண்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இன்றைய சூழலில் உடனே தனிக்குடித்தனம் வைப்பதே மரியாதை.

      நீக்கு
  9. பெரும்பாலான இடங்களில் மனதில்பட்டதைச் சொல்ல மாட்டார்கள் பழக்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. "குயிலகம்" ஓர் கனவு இல்லமாக இருக்கும் போல! பார்ப்போம். பிள்ளையின் பெற்றோருக்கு என்ன எதிர்பார்ப்பு என்பதைத் தெரிந்து கொண்டு விடுவோம் என்று நினைத்தால் தொடரும் போட்டுட்டீங்க. முடிவு சுபமாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இது கனவு இல்லம் என்பதைவிட கனவுலோகம் என்று சொல்லலாம்.

      நீக்கு
  11. அதே சமயம் இப்போதைய பெண்களிடம் எந்தப் பெற்றோரும் (இருதரப்பிலும்) கூட்டுக்குடும்பமாக வாழலாம்னு சொல்லுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலோர்க்கு ஒரு பெண் அல்லது ஒரு பிள்ளை. இதில் எங்கே கூட்டுக்குடும்பம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எல்லோர் இல்லத்திலும் ஆணோ, பெண்ணோ ஓர் பிள்ளைதான்.

      இதில் தலைசிக்கும், கடைசிக்கும் செய்யக்கூடாது என்ற ஜோசியம் வேறு.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கதையை நன்றாக நகர்த்திச் செல்கிறீர்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது. மாப்பிள்ளை பெண் பிடித்துள்ளது என்று மட்டும் கூறி விட்டு எதுவும் பேசாமல், மனதில் ஒன்று, வெளியில் ஒன்று என அந்தக்காலம் போலில்லாமல், இந்தக்கால பிள்ளையாய் மனம் விட்டு பேசி, ஆனால் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல், கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டுமென்பதை நயத்துடன் எடுத்துச் சொன்ன இடங்களை மிகவும் ரசித்தேன்.

    காணொளி கண்டேன்.இதுதான் குயிலகமா? இல்லை. மாப்பிள்ளை ஆட்சேபித்து கூறிய மாதிரியான வேறு அ(ர)கமா? இங்கு பிறந்த குழந்தை கூட ஃபோனை வைத்துள்ளதே.. ! ஹா. ஹா. ஹா.

    கண்டிப்பாக குயிலகம் பெயருக்கேற்ற மாதிரி இனிமையான இசையில் மெய்மறக்கச் செய்யும் ஒரு புனிதமான கோவிலாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.

    இனி மாப்பிள்ளையின் பெற்றோர் என்ன பேசப் போகிறார்களோ ? (கதவை வேறு தாளிட்டு விட்டு) அந்தப் பெண்ணிற்கு அடிக்கும் இதய திக், திக், எனக்குள்ளும்..! பொறுத்திருந்துதான் ஆக வேண்டும். அடுத்த பதிவும் சுபமாக வருமென காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை முழுமையாக அலசி படித்து கருத்திட்டமைக்கும், காத்திருப்பமைக்கும் நன்றி.

      நீக்கு
  13. ஐடியல் ஹோம் போல ஐடியல் குடும்பம்.  கனவு இல்லம். 

    பதிலளிநீக்கு
  14. ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்றார் பாவேந்தர். அதற்கு எடுத்துக்காட்டான குடும்பத்தை உருவாக்குவது இக்கதையின் நோக்கமோ? தொய்வில்லாத கதை ஓட்டம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  15. கதவைப் பூட்டினாலும்
    கதை தொடரும் போல...
    நகர்த்தும் விதம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  16. மாப்பிள்ளை ரொம்ப ஓவராகப் பேசுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. முதல்நாளே இப்பூடி ஓவர் நல்லபிள்ளையாகப் பேசுவோரையும் நம்ப முடியாது:)).. ஹா ஹா ஹா பார்ப்போம் எப்படி குயிலகத்தில், குயில் கூவப்போகுதோ இல்லையோ என:)..

    கில்லர்ஜி முதல்படம் உங்கட வீடோ? மொட்டைமாடியில கில்லர்ஜியைக் காணமே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மனுஷன் விரிவாக, தெளிவாக பேசினால் ஓவரா ?

      இது எனது வீடு அல்ல! உறவினர் வீடு கொடுமலூர்.

      நீக்கு
  17. அடுத்து ஏதாவது வில்லங்கம்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாரு கண்டா...? தாழ்ப்பாள் போட்டதால் பேசுவதை கேட்க முடிமவில்லை.

      நீக்கு
  18. இதுவல்லவோ குடும்பம். அழகாக எழுதியிருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  19. காணொளி பார்த்து பகீர்ங்குது நண்டு சிண்டெல்லாம் மொபைலை தோண்டி கொண்டிருக்கு :( 
    முகிலன் போட்ட கண்டிஷனலாம் முந்தி அம்மாங்க மணமாகிப்போகும் மகள்களுக்கு சொல்வாங்க :)எங்கம்மா கூட சொன்னாங்க கதவுக்குப்பின்னே என்ன பேச்சோ என்னாச்சோ ..நலமே நடக்கணும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஐடியல் உலகமாகி விட்டதே....

      கதவு தாழ்ப்பாள் போட்டதால் பேசுவதை ஒட்டு கேட்பது நாகரீகம் இல்லையே....

      நீக்கு
  20. முகிலன் வார்த்தைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    அவரின் எதிர்பார்ப்பு படி எல்லாம் சுகமாய் முடிந்தால் நலம்.

    அம்மாவிடம் ஜனனியை பிடித்து விட்டதை சொல்லி விட்டார். அம்மா நல்லபடியாக பேசி முடித்து வைப்பார்களா?
    ஜனனி ஏதாவது சொல்லி விடுவாரா?
    ஆவலை தூண்டுவதை போல் தொடரும் போட்டு விட்டீர்கள்.

    காணொளி அருமை. பாடல் அருமை. காலம் அப்படி இருக்கிறது யாரை குற்றம் சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து பாராட்டியமைக்கும், காணொளியை கண்டமைக்கும் நன்றி

      நீக்கு
  21. முகிலனின் அப்பாதானே இராணுவத்தில் பணிபுரிந்தார். முகிலனின் பேச்சு அவர்தான் அந்தவேலையில் இருப்பது போல இருக்கு.
    கதை சுவாரஸ்யமா செல்கிறது. காணொளி இன்றைய யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக இராணுவவீரர்களின் பிள்ளைகளிடம் இவ்வகையான கட்டுப்பாடுகள், செயல்கள், பேச்சுகள் இருக்கும் காரணம் வளர்ப்பு அப்படி அமைந்து விடும்.

      நீக்கு
  22. கூட்டுக்குடும்பம் என்பது அரிதாகிப்போயுள்ள இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் அருமைகளைத அறிந்த முகிலன் போன்றவர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் ஜனனியிடம் முகிலனின் அப்பாவும் அம்மாவும் முகிலன் சொன்னதையே சிறிது மாற்றி சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். முடிவு சுபமாகவே இருக்கும் என நம்புகிறேன். காத்திருக்கிறேன் முடிவை அறிய. கதையாய் அருமையாக் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கதை ஆழ்ந்து படித்து பாராட்டி தொடர்ந்து வருபவமைக்கு நன்றி.

      நீக்கு
  23. சரி சரி .... கல்யாண இன்விடேஷன் மறக்காம எனக்கு அனுப்பி வச்சுடுங்க.... அவசரத்துல மறந்துடப்போறீங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகிலன் உங்களுடைய நண்பரெனில் நிச்சயம் நிச்சதார்த்தத்திற்கே அழைப்பு வருமே...

      நீக்கு
  24. என்னவொரு அழகான குடும்பம்! அதை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். நல்ல கதை. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், ஆவலுக்கும் நன்றி மேடம்.

      நீக்கு
    2. தங்களின் கற்பனை அருமை.இந்த காலத்தில் ...?

      நீக்கு
    3. வருக நண்பரே மிக்க நன்றி.

      நீக்கு
  25. படிக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு ...என்ன ஒரு தெளிவு ...





    பதிலளிநீக்கு