தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 01, 2019

குயிலகம் (3)


பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
வெள்ளி மீசை சொன்னது
என்னப்பா இது மாப்ளேதான் பெண்ணுகிட்டே தனியா பேசுவார்னு பார்த்தால் மாமியாரும், மாமனாரும் பேசுறாங்க ஹா... ஹா... ஹா... மாப்ளே நல்லா ஜாலியான ஆளுதான்
மரகதவள்ளி தட்டில் பஜ்ஜியை மீண்டும் எடுத்து வைத்து...
தம்பி சாப்பிடுங்கப்பா
இல்லை போதும் நிறைய சாப்பிட்டாச்சு
தம்பி நீங்களும் சாப்பிடுங்க

முகேஷுக்கும் மீண்டும் பஜ்ஜி வைத்து கொடுத்தாள் ம.வள்ளி
மாப்ளே உங்க தம்பி என்ன படிச்சுக்கிட்டு இருக்காரு ?
எம்.பி.ஏ பைனல் இயர் போயிக்கிட்டு இருக்கான் பிஸினஸ் பண்ணலாம்னு ஐடியாவுல இருக்கான்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியாக கேட்க எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான் முகிலன் இடையிடையே ஜனனியின் தோழிகள் ஜொள்ளு விடுவதையும் கவனித்துக் கொண்டே இருந்தான்

என்னத்தா இது மாமியாளும், மருமகளும் உள்ளே போயி அரைமணி நேரம் ஆச்சு என்னதான் அப்படி
பேசுறாங்க ?
ஏ... கெவி நீ சும்மா இருத்தா.. பேசிட்டுதான் வரட்டுமே என்ன அவசரம் இடையிலே ரெண்டு பலகாரத்தை தின்போமே...
சொல்லிய வெள்ளி செயலில் இறங்கியது கூட்டம் சிரிப்பலைகளில் மிதக்கும் போது...

கதவைத் திறந்து கொண்டு முதலில் வெளியில் வந்தவர் மந்திரமூர்த்தி முகத்தில் பெருமிதம் மீசை மேலும் மேல்நோக்கி இருந்தது, பின்னால் மல்லிகா ஜனனியை அணைத்தபடி அழைத்து வந்தாள் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி உறைந்து இருந்தது.
வெள்ளி மீசை சொன்னது

அடடே மாமியாரும், மருமகளும் ராசி ஆகிட்டாங்க சந்தோஷமய்யா
மந்திரமூர்த்தி மகனிடம் வந்து தம்ஸ்-அப் அடையாளத்தைக் காட்டி முதுகில் தட்டிக் கொடுத்தார்
தேவநாதனும், ம.வள்ளியும் ஒருவரைருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் மகன்களுக்கும், மருமக்கள்மார்களுக்கும் ஒரே மகிழ்ச்சி

ஜனனியை யாரும் உள்ளே போகச் சொல்லவில்லை ஆகவே மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு முகிலனை பார்த்துக்கொண்டு விழிகளால் சிரித்தாள் அச்சிரிப்பில் காதலோடு கலந்த நன்றியும் இருந்தது.

வெள்ளி மீசை மீண்டும் தொடர்ந்தது...
என்ன பட்டாளத்துக்காரரே மத்த விசயங்களை பேசிடுவோம்
மந்திரமூர்த்தி தனது மைத்துனரைப் பார்க்க, அவர் கேட்டார்
பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுறீங்? மாப்பிள்ளைக்கு என்ன செய்றீங்க... மற்றபடி சீர்வரிசை எல்லாம் எப்படி ?
தேவநாதா உன் மகளுக்கு என்ன செய்யப்போறே சபையில சொல்லு ?
தேவநாதன் தனது மகன்களை ஒரு பார்வை பார்த்தார் பிறகு மனைவியை பார்க்க, சொல்லுங்க என்பது போல் ம.வள்ளி ஆட்ட..
.
பெண்ணுக்கு
25 பவுன் நகை போடுறோம், மாப்பிள்ளைக்கு செயின், கைச்செயின், மோதிரம் எல்லாம் சேர்த்து 5 பவுன் போடுறோம் மற்றபடி கட்டில், மெத்தை, பீரோ எல்லாம் சீர் தர்றோம். எம் பசங்க தங்கச்சி மேலே உசிரையே வச்சு இருக்காங்கே கடைசிவரை எல்லாம் செய்வாங்கே...
ம.மூர்த்தி மல்லிகாவை பார்க்க, மல்லி தலையசைக்க
இப்ப நீங்க செய்ய முடிஞ்ச அளவுதான் சொல்லி இருக்கீங்க நாங்க நகையைப்பத்தி இதுக்கு மேலே பேசலை ஆனால் இப்ப சபையில சொன்னது போல நடந்துக்கணும் மத்தபடி இது எங்கள் வீட்டு முதல் கல்யாணம் எங்களுக்கு நிறைய சொந்தபந்தங்கள் இருக்கு அதனால எங்க ஊரு தேவகோட்டையில்தான் கல்யாணம் வைக்கணும்
நல்லது கல்யாணச் செலவுகள் எல்லாம் எப்படி ?
கல்யாணச்செலவுகள் இரண்டு பேருக்கும் பாதி
தேவநாதன் வெள்ளி மீசையை பார்க்க...

பட்டாளத்தாரே உங்க விருப்பப்படி தேவகோட்டையில கல்யாணம் வைக்கிறீங்க... செலவுல பாதினா எப்படி
? இல்லைனா எங்க ஸ்ரீரங்கத்துல வைங்க நாங்க செலவு பண்ணுறோம்
சரி வேண்டாம் விடுங்க நாங்களே செலவைப் பார்த்துக்கிறோம் ஆனா சாப்பாட்டு செலவுல பாதி தந்துடுங்க
நல்லது அப்படியே செய்துருவோம்
வர்ற ஆவணி முதல் முகூர்த்தத்தில் வச்சுக்கிருவோம்
நல்லது வேற ஒன்னுமில்லையே...

மற்றபடி செய்முறைகள் சரியானபடி இருக்கணும் இல்லைனா எங்க ஊர்ல கேலி பண்ணுவாங்க உதாரணத்துக்கு தீபாவளிக்கு மாப்பிள்ளை, பெண்ணுக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்து எப்படி முறைப்படி அழைக்கணுமோ அதை சரியாக செய்யணும் எங்களை பெருமைப் படுத்தணும் என்பதற்காக கடன் வாங்கி பத்தாயிரம் ரூபாய்க்கு ட்ரெஸ் எடுக்ணும்னு அவசியமில்லை உங்களால முடிஞ்சதை ஆயிரம் ரூபாய்க்கு எடுத்தாலும் முறைகளை தவற விடாதீங்க தெரியலையா எங்க தேவகோட்டை வழக்கம் எப்படியோ அதை மனம் விட்டு ஈகோ பார்க்காமல் கேட்டு செய்யுங்க இல்லைனா உறவுக்காரங்க எங்களை கேலி செய்வாங்க

பெண்ணு வீட்டுக்காரங்க எங்கள்ட்ட அடங்கிப் போகணும்னு நாங்க நினைக்கவும் இல்லை நீங்க அப்படி இருக்கணும்னு அவசியமும் இல்லை சின்னச் சின்ன செய்முறைகள்ல நடக்கிற தவறுகள்தான் சம்பந்திகள்குள்ளே மனக்கசப்பை உண்டாக்கி பிள்ளைங்க வாழ்க்கையில் விரிசலை உண்டாக்கி சண்டைகளை உருவாக்கிடும் நீங்க கடைசிவரை எங்கள் வீட்டுக்கு வந்து போகணும் நமக்குள்ளே நாளை பிரச்சனைகள் வரவேகூடாது அதனாலதான் நானும், எம் மகனும் இவ்வளவு ஓஃபனாகவே பேசுறோம். என்ன பெரியவரே நான் சொன்னதெல்லாம் சரிதானே ?

ஐயா பட்டாளத்துக்காரரே நீங்களும் சரி, உங்க மகனும் சரி பேசுற விசயங்கள் கொஞ்சம் சங்கோஜமா இருந்தாலும் நாளைக்கு சங்கடங்கள் வரக்கூடாதுனு தொலைநோக்கு பார்வையா சிந்திச்சு பேசுறீங்க இந்த மாதிரியே எல்லா சம்பந்திகளும் மனம் திறந்து பேசிட்டா பிரச்சனைகளுக்கே வேலையில்லையே தேவகோட்டைக்காரவுங்க சீர்வரிசையை சிறப்பா எதிர்பார்ப்பாங்க நாங்களும் கேள்விப்பட்டு இருக்கோம் எங்களுக்கு தெரியாததை உங்கள்ட்ட கேட்டு செஞ்சுட்டு போறோம் என்னத்தா மரகதவள்ளி கேட்டுக்கிட்டியா ? எந்த விசயமா இருந்தாலும் சரி சம்பந்தியம்மாவுக்கு போனைப்போடு அவுங்கள்ட்டயே கேட்டு முறைகளை சரியா செஞ்சிடு

சரி மாமா அதெல்லாம் ஒரு குறையும் இல்லாமல் செஞ்சிடுவோம்
நல்லது நாங்க புறப்படுறோம் நீங்க மட்டும்தான் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க எல்லாரையும் அழைச்சுக்கிட்டு ஒரு நல்லநாள் பார்த்து தேவகோட்டை வாங்க மிச்ச விசயங்களை பேசிக்கிடலாம்.
நல்லது கண்டிப்பாக வர்றோம்
எல்லோரும் ஒருவருக்கொருவர் கும்பிட்டு சொல்லி விட்டு புறப்பட்டார்கள்

 தொடரும்...

54 கருத்துகள்:

  1. கல்யாணச் செலவு ஆளுக்கு பாதியா? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கே!
    மாப்பிள்ளை ஊரில் வைப்பதால் சாப்பாடு செலவில் பாதியா ?
    எங்கள் பக்கம் நாலு நாள் கல்யாணமும் பெண் வீட்டார் தான் செலவு செய்ய வேண்டும்.
    மாப்பிள்ளை வீட்டில் மறுவீட்டு சாப்பாடு போடுவார்கள் அதோடு சரி.

    செய்முறை தவறுகள் இருகுடும்பத்துக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது என்று பேசிக் கொள்வது அருமை.

    இப்படியே இனிமையாக முடிப்பீர்கள் என்றூ நினைக்கிறேன்.

    மாமியார், மருமகள் நல்லபடியாக பேசி முடித்து விட்டார்கள் சுபம் போடுவீர்கள் என்று எதிப்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ திருமணத்துக்கு பிறகு குற்றம் சுமத்தி சண்டை போடுவதைவிட முன்பே இப்படி வெட்கப்படாமல், சங்கோஜப்படாமல் பேசிக்கொள்வது நல்லது.

      மந்திரமூர்த்தி பெருந்தன்மையானவர் பேரம் பேசுவதில் உடன்பாடு இல்லாதவர்.

      வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
    2. இலங்கைத்திருமணங்கள் இப்பவும் இப்படித்தான், திருமணச் செலவை பாதியாகப் புறிச்சு இருபகுதியினரும் கட்டுவர்.

      நீக்கு
    3. சரிபாதி செலவே முறையானது.

      நீக்கு
  2. தொலைநோக்கு பார்வையா போகுது... தொடரட்டும் ஜி...

    பதிலளிநீக்கு
  3. இப்படி எல்லாம் கேட்டு வாங்கும் பழக்கம் என்று முடியுமோ அன்றுதான் திருமணம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கேட்டது பொது சம்பிரதாயம்.
      அதற்கு பிறகு கூடுதலாக கேட்பது அவமானம்.

      சில குடும்பங்களில் சபையில் அதிகமாக சொல்வார்கள் ஆனால் அதேபோல் நகை போடுவதில்லை.

      இங்கு கேட்டு சபையில் முற்றுப்புள்ளி வைத்ததோடு சரி.

      நான் எனது மகனுக்கு கடைசிவரை வரதட்சிணை பேசாமலேயே சிரித்துக் கொண்டே இருந்து திருமணம் முடித்தேன். வரதட்சிணை பேசினால் எனக்கு மரியாதை குறைந்து விடும் என்று நினைத்தேன்.

      இன்று எனக்கு பெயர் என்ன தெரியுமா ? வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

      "பாம்பு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்" என்று சொன்னால்தான் வாழ முடியும்.

      ஊரோடு ஒத்து வாழ் என்று பெரியோர் சொன்னதில் அர்த்தம் உள்ளது.

      நீக்கு
  4. எனக்கு தெர்ந்த ஒரு கல்யாணத்தில்பெண்ணின் தாயார் எவ்வாவுதான் கேட்பிர்களோ தெரியாது இதற்கு மேல் கேட்டால் என்னைத்தான் தரவேண்டும் என்று சொல்ல விவகாரமாகி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இப்படி சொல்லும் அளவுக்கு மாப்பிள்ளை வீட்டாரின் கெடுபிடிகள் இருந்து இருக்கிறது.

      கல்யாண மேடையில் நகையை சோதித்துப் பார்த்து நிறுத்து பார்த்தவர்களும் உண்டு.

      நீக்கு
    2. கல்யாணம் ஆனப்புறமும் நகையை எடை போட்டுப்பார்த்தவங்க உண்டு. அதெல்லாம் மனதில் விசாலமும் பெருந்தன்மையும் இல்லாதவர்கள் செய்வது!

      நீக்கு
    3. என்னைப் பொருத்தவரை இவர்கள் மனிதப்பிறவிகள் அல்ல!

      நீக்கு


  5. இப்படி எல்லோர் முன்னிலையிலும் என்ன செய்யமுடியும் என்று சொல்வது பின்னர் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்க உதவும் என்பது உண்மை. திருமண செலவைப் பொறுத்தவரை இருவரும் சமமாக பங்கிட்டுக்கொள்வது என்பது சில பகுதிகளில் இருந்தாலும், பெரும்பாலும் திருமண செலவு முழுவதையும் பெண் வீட்டாரே ஏற்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

    எல்லாம் நல்லபடியாக முடிந்து ஊருக்குத் திரும்பினாலும் கதையை முடிக்காதது வேறு ஏதேனும் எதிர்பாராத ஒன்று நடக்க இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. காத்திருக்கிறேன் என்ன நடக்க இருக்கிறது என அறிய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      பெண் வீட்டார் எல்லா செலவுகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது அன்றைய காலம்.

      இன்று பெண் கிடைப்பதே அரிதாகிப் போய் விட்டது. கதை சற்றே நீண்டு விட்டதால் அடுத்த பகுதியில் முடிப்பதாக அமைத்து விட்டேன்.

      நீக்கு
  6. எங்கள் முறைகளில் கல்யாணச்செலவு பெண் வீட்டைச் சேர்ந்ததுதான்.   பாதிப்பாதி என்பது நல்ல ஒப்பந்தம்.   இந்த குறைகளை எல்லாம் இப்போது மாற்றி முடிந்தவரைசிக்க்கணமாகச் செய்தால் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மகள் திருமணத்தை மொத்தம் எனது செலவில்தான் செய்தேன்.

      நீக்கு
    2. என்னைக் கேட்டால் (யார் என்னைக் கேட்கப்போகிறார்கள்? ஹா ஹா), நம்புபவர்கள் முன்னிலையில் (தெய்வமோ, கோவிலோ, ஆசிரமமோ இல்லை சமூகப்பெரியவர்களோ) சாதாரணமாக திருமண நிகழ்வை நடத்திவிட்டு, மணமக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்துக்குப் பணமாகக் கொடுத்துவிடலாம். எதுக்கு திருமணத்துக்கு என்று ஆடம்பரமாக உபயோகமில்லாமல் 10+ லட்சங்களை வீணாக்குவது?

      மற்றபடி வாகனம் வாங்கிக்கொடுப்பது என்பதையெல்லாம் கேள்விப்படும்போது கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கு (ஒரு வாகனம் வாங்கக்கூட மாப்பிள்ளைக்கு வக்கில்லையா என்று)

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் கருத்து அருமை நானும் இதையே செய்தேன் நண்பரே வேறு விதமாக உருப்படியான செயல் அதை இங்கு சொல்ல விரும்பவில்லை.

      நீக்கு
  7. இப்போதெல்லாம் வரதட்சணை பற்றி பேச்சே வருவதில்லை என்பது(ம்) நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரதட்சிணை பேசாததற்கு காரணம் பெண் கிடைப்பதில்லை.

      நீக்கு
    2. அப்படீல்லாம் கிடையாது. 'வரதட்சணை' என்று கேட்க வெட்கமாக இருப்பதுவும், சட்டப்படி தவறு என்ற நிலை இருப்பதுவும்தான். ஆனாலும், 'நீங்க, உங்க மகளுக்கு நிறைவாகத்தான் செய்வீங்க' என்று சொல்லித் தங்கள் எதிர்பார்ப்பைச் சொல்லிவிடுவார்கள்.

      நீக்கு
    3. ஆம் நாசூக்காக பேசி வரதட்சிணை கேட்பவர்களும் உண்டு.

      நீக்கு
  8. இப்படி அவர் அவர் முறைகளை தெளிவாக பேசினாலே பல குழப்பங்களை தவிர்த்து விடலாம் ....

    பதிலளிநீக்கு
  9. படிக்கப் படிக்க மகிழ்வாக இருக்கிறது நண்பரே.
    மனம் ஒத்து அமர்ந்து பேசினால் பிரச்சனைகளுக்கு வழி ஏது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே...
      பலரும் பின்னால்தான் பேசி பிரச்சனையை வளர்க்கிறார்கள்.

      நீக்கு
  10. கதை நல்லவிதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் எல்லாவற்றையும் தெளிவாகப் பேசும்போது கொஞ்சம் ரசக்குறைவாகவோ அநாகரீகமாகவோ தோன்றும். எல்லாம் தெளிவாகப் பேசிவிட்டால் எந்தப் பிரச்சனையும் பின்னால் வராது.

    அரபி திருமணங்களில், இதனை ஒப்பந்தம் போலவே எழுதி இருவீட்டாரும் கையெழுத்திடுவார்கள் (மதத் தலைவர்கள், சாட்சிகள் முன்னிலையில்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      இதில் மாப்பிள்ளையும் சரி, அவருடைய அப்பாவும் சரி பேசிய விசயங்கள் சற்று சங்கோஜமானதே... ஆனால் பின் பிரச்சனைகள் வருவதற்கு சாத்தியங்கள் குறைவு.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக போகிறது. இது வரை ஒரு பிரச்சினையும் இல்லை. சீர் வரிசை விபரங்களுக்கும், மாப்பிள்ளை வீட்டார் ஒத்துப் போய் விட்டனர். இன்னமும் தேவகோட்டைக்கு வந்து தனியாக பேச என்ன இருக்கிறது? ஆனால் இங்கு மணப்பெண்ணும், மாமா, அத்தையும் என்ன பேச்சுக் கொண்டார்களோ? அவர்கள் பேச்சு.சுமுகமாக முடிந்து விட்டது போலும்..! இல்லை, அதனுடைய தொடர்ச்சி தேவகோட்டையில் தொடருமோ? நாமிருவரும் பாதி பாதி கல்யாணச் செலவை ஏற்றுக் கொள்வோம் இரு வீட்டாரும் சமரசமாய் கூறுவது நன்றாக உள்ளது. கதையும் நன்றாக இயல்பாக நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சுபமாக முடிய நானும் பிரார்த்தித்து காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //அதனுடைய தொடர்ச்சி தேவகோட்டையில் தொடருமோ?//

      யாரு கண்டா எல்லாம் எழுதியபடியே நடக்கும்.

      நீக்கு
  12. என்னாதூஊஊஊஊ திருமணம் தேவகோட்டையிலோ?:) அவ்வ்வ்வ் அந்த ஊரணி அம்மன் கோயிலிலோ?:)) அப்படி எனில் நாங்களும் வருவோமே:)).

    கதை ரொம்ப அழகாக, நல்ல மாப்பிள்ளை + பொம்பிளை என போகுது, இடையில ஆரையாவது தொபுக்கடீரெனக் களம் இறக்கி:)) குட்டையைக் குழப்பி விட்டிடாமல் இருக்கும்படி, திரு மேன்மை தங்கிய எழுத்தாளர் கில்லர்ஜி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு கண்டா... இடையில் உங்கள் அங்கிள் சிவசம்போ மாதிரி யாரேனும் வந்தால்...?

      நீக்கு
  13. என் கொமெண்ட் வந்ததோ கில்லர்ஜி? அனுப்பி சில நேரத்தின் பின்பு எரர் காட்டிச்சுது கர்ர்:)

    பதிலளிநீக்கு
  14. எங்க பக்கம் முதலிலேயே பெண் வீட்டின் சார்பில் பெண்ணின் அப்பா யாரையானும் அழைத்துக்கொண்டு சென்று மாப்பிள்ளை வீட்டின் நிலவரங்களைத் தெரிந்து கொண்டு விடுவார்கள். அதன் பின்னர் தான் பெண் பார்க்க அழைப்பதே! பெண் பார்த்துப் பிடித்த பின்னர் சீர் வரிசை பேசும் வழக்கம் இப்போதெல்லாம் இருக்கு. என் கல்யாணம் நடந்த காலத்தில் முதலில் சீர் வரிசை, மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் வரதக்ஷிணை ஆகியவற்றைப் பேசி முடித்து அது அவங்களுக்குச் சரிப்பட்டு வந்தாலே பெண் பார்க்கவே வருவார்கள். அதன் பின்னரும் பெண் பிடிக்காமல் போனது உண்டு. இல்லை எனில் பெண்ணிடம் இல்லாத ஒன்றைக் குறையாகச் சொல்லிக் கொண்டு வர தக்ஷிணையை அதிகம் வாங்கினவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பெண் வீட்டாரிடம் பணிந்து போனால் காரியம் கைகூடும்.

      நீக்கு
  15. அது சரி, மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணிடம் பேசியது என்ன என்பது இன்னமும் ரகசியமாகவே வைச்சிருக்கீங்களே! கல்யாணம் வரை போயாச்சு, ஆனால் இன்னமும் சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியாரும், மருமகளும் ஆயிரம் பேசுவார்கள் நமக்கென்ன ?

      நீக்கு
  16. கலியாணப் பேச்சு
    கலகலப்பாகப் போகிறதே...
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. படம் உங்கள் கோயமுத்தூர் வீடா கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ல! நண்பருடையது இந்த வீட்டைக் குறித்த பதிவு விரைவில் வரும்.

      நீக்கு
  18. எப்போ கெட்டி மேளச் சத்தம் கேட்கும்!?...

    மண்டபம் நிச்சயம் பண்ணியாச்சா?..
    பொண்ணு நிச்சயம் பண்றதை விட கஷ்டமாச்சே அது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஸ்ரீ சக்தி மண்டபம் அட்வான்ஸ் கொடுத்தாச்சாம்.

      நீக்கு
  19. குயில் இரண்டி.ல், ல்லிங் இணைக்கப்படவில்லை கில்லர்ஜி... மேலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினியில் செய்ய வேண்டும் சூழல் சரியில்லை தகவலுக்கு நன்றி

      நீக்கு
  20. மனமொத்த தம்பதிகளை விட மனமொத்த சம்பந்திகளை காண்பதென்னவோ கதைகளில்தான். இப்படி இருக்ககூடாதா என ஆதங்கம்தான். மனம் திறந்த பேச்சு மிக நல்லதுதான் எல்லாவற்றிக்கும். சுவாரஸ்யமா கதை செல்கிறது. குட்டை குழம்பாதவரை.

    பதிலளிநீக்கு
  21. மொத்த செலவையும் ரெண்டு வீட்டுக்காரங்களும் சரிசமமாக பாத்துக்கோங்கப்பா .. மொய் எழுத சொல்லி எங்க தலையில கட்டிடாதீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே 18 வகை கூட்டுகளோடு சாப்பாடு போட்டால் 1001 மொய் செய்யாமலா போவீங்க...?

      நீக்கு
  22. இதுவரை கதையில் சிக்கல் ஏதுமில்லை. ஆனாலும், ‘தொடரும்’ போட்டிருக்கிறீர்கள். இனியும் விறுவிறுப்புக் குறையாமல் கதையைக் கொண்டுசெல்வதில்தான் கில்லர்ஜியின் திறமை வெளிப்பட இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது தொடர் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  23. ￰கல்யாண செலவு பாதி பாதி என்பது இனிமையாக உள்ளது."வானத்தை போல" படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நினைவுக்கு வருகிறார்கள்.இனிமையாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு