தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 06, 2019

குயிலகம் (4)



பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்

ஜனனி போயிட்டு வாரேன் சந்தோஷமாக இரு ஏதும் மனசுல போட்டு குழப்பிக்காதே
ஜனனி தலையாட்டினாள்
ஏதாவது பேசு
போயிட்டு வாங்க
பேசச் சொன்னால் போயிட்டு வரச்சொல்றே ?
ஜனனி வாயைப் பொத்திக்கொண்டு விழிகளால் சிரித்தாள்
சரி போயிட்டு வர்றேன்
என்று கை நீட்டினான் ஜனனி சற்றே தயங்க...
பயப்படாதே சும்மா கை கொடு நம்ம கல்யாணம் உறுதி ஆகிடுச்சு அதனாலதான் நான் உன்னை தைரியமா தொடுறேன்
ஜனனி தயக்கத்தோடு சற்றே தூரத்தில் நின்று கொண்டு இருந்த அம்மா, அண்ணன்களை பயத்துடன் பார்த்துக்கொண்டே கை நீட்டினாள்
கையைப் பற்றிய முகிலன் குலுக்கிக் கொண்டே சொன்னான்

கவலைப்படாதே சந்தோஷமாக இரு கடைசிவரை நான் உனக்கு நல்ல கணவனாக இருப்பேன், அதேபோல உங்க அப்பா, அம்மாவுக்கு நானும் ஒரு மகனாக இருப்பேன் போயிட்டு வரவா ?
போயிட்டு வாங்க
வாய் சொன்னாலும் விழிகள் பிரிவை விரும்பாத பாவத்தைக் காட்டியது
கையை விடும்போது கைகளுக்குள் ஏதோ அழுத்தியது யாரும் காணாத வண்ணம் கைக்குள் வாங்கி கொண்டாள் ஜனனி.

உறவினர்கள் பதினாறு பேரும் வேனில் ஏறி உட்கார்ந்தனர் பென்ஸின் பின் ஸீட்டில் மந்திரமூர்த்தியும், மல்லிகாவும் உட்கார டிரைவிங் ஸீட்டில் உட்காரப்போன முகிலனை தடுத்து
முகேஷ் காரை நீ டிரைவ் பண்ணு
என்றாள் மல்லிகா எல்லோருக்கும் மீண்டும் சொல்லி விட்டு கிளம்பினார்கள் வாசலில் வந்து நின்ற ஜனனியிடம் விழிகளால் விடை பெற்று டாடா காண்பித்தான் முகிலன் இதற்காகவே மெதுவாக காரை நகர்த்தினான் முகேஷ் ஜனனியின் முகம் வாடுவதை கவனித்த முகேஷ் சட்டென நிறுத்தி
அண்ணி டாடா
என்றான் ஜனனி மட்டுமல்ல கூடி நின்ற அனைவருமே சிரித்து விட்டனர் ஜனனி டாடா காட்டிக்கொண்டே நின்றாள் பென்ஸின் பின்புறத்தில் குயிலகம் என்று எழுதி இருந்ததை பார்த்தாள் தன்அகம் என்று நினைத்துக் கொண்டாள்

வந்த காரியம் சுபமாய் நிகழ்ந்த மகிழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அரங்கனை தரிசித்து விட்டு கிளம்பினார்கள். திருச்சி காவிரி ஆற்றை கடக்கும்போது காரை ஓட்டிக்கொண்டே முகேஷ் கேட்டான்
ஏண்ணே அண்ணியை ரொம்பவே மிரட்டி வச்சுட்டியே...?
இதெல்லாம் தொடக்கத்திலேயே சரியாக்கி வச்சுக்கிறணும்டா...
இப்படித்தான் பேசுவே நாளைக்கு எப்படியோ ?
டேய் தலையணை மந்திரமெல்லாம் எங்கிட்டே செல்லாது ஏன்னா நான் கமாண்டர் மந்திரமூர்த்தியோட மகன்
அப்ப நான் மட்டுமென்ன மல்லிகாவோட மகனா ?
பின்புறத்திலிருந்து சிரித்துக் கொண்டு வந்தனர் மந்திரமூர்த்தியும், மல்லிகாவும்

அதேநேரம் பூட்டிய அறைக்குள் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஜனனி கை கொடுக்கும்போது யாரும் அறியாமல் முகிலன் கொடுத்துச் சென்ற அதை கையில் வைத்து பார்(படி)த்துக் கொண்டு இருந்தாள். அழகிய விசிட்டிங் கார்டு அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும்...

ம.முகிலன்                                                                                                                  M. Mugilan
மேலாளர்
                                                                                                                        Manager
டி.சி.ஓ.சி. வங்கி
                                                                                                  D.C.O.C. Bank
தியாகிகள் சா
லை                                                                                            Thiyagikal Road
தேவகோட்டை
௬௩௦  ௩௦                                                                   Devakottai 630 302
சிவகங்கை மாவட்டம்
                                                                                 Sivaganga Distric
அலைபேசி :
௨௨௦ ௫௦௮௫௩                                                           Cell : 82207 50853

முகிலன் பெயரை தடவிப் பார்த்தாள் உடல் சற்றே சிலிர்த்தது கீழே
பேனா கொண்டு அழகாக எழுதி இருந்தான் இப்படி Call me from your Mobile

மணமக்கள்
வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்

41 கருத்துகள்:

  1. ஏதோ நல்லவிதமா கதையை முடிச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ இம்முறை நெல்லைத்தமிழன் முந்திட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நீக்கு
  2. என் மாமனார்... திருமணத்துக்கு முன் என் மனைவியாகப் போகிறவளின் கையைத் தொட்டுடாதீங்க, மேல பட்டுடாதீங்க... திருமணம் அன்றுதான் நான் அவள் கையைப் பிடித்து உங்கள்ட ஒப்படைக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

    அதுதானே நம் வழக்கம்? அது உங்கள் கதையில் மிஸ்ஸிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று உங்கள் மாமனார் செய்ததையே இன்று நானும் அப்படி செய்ய மறைமுகமாக செயல் பட்டேன்.

      ஆனால் கதையில் நிகழ்வுகளையே காட்டினேன் காரணம் இது அலைபேசி உலகம்.

      நீக்கு
    2. கில்லர்ஜி ஜமாளிக்கிறார்ர்.. அதுதானே எப்பூடி அதுவும் அப்பா அம்மா அண்ணன்மார் எல்லோர் முன்னிலையிலும் கை குலுக்கலாம் கர்:)).. விசிட்டிங் கார்ட்டை மேசையில வச்சு அல்லது மாமியின் கையில் கொடுத்து சொல்லியிருக்கோணும் உங்கள் மகளை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லுங்கோ என.. இதை நான் விடமாட்டேன்ன்ன்ன் ஹாண்ட் கோர்ட் வரை எடுத்துச் சென்றே தீருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
    3. முகிலன் கை கொடுக்கும்போது ஜனனி அண்ணன்களை கண்டு தயங்ஙினாளே... இதை கவனிக்க வில்லையா ?

      நீக்கு
  3. குயிலகம் தன்அகமாக மாறியது மகிழ்ச்சி.

    படங்கள் மிக அழகு.
    மணமக்கள் வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் நல்லபடியாக முடிந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி! முகிலன் ஜனனியின் கையில் கொடுத்தது மோதிரமோ என நினைத்தேன். இருக்கட்டும் திருமண நாள் அன்று அதை அணிவிக்கத்தானே போகிறார். நல்ல கதையைத் தந்தமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படியான பிள்ளை பெற்றோர்களுக்கு தெரியாமல் மோதிரம் வழங்குமா ?

      பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  5. சில நிகழ்வுகள் புனைவுடன் கதையாகின்றன வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதில் புனைவுகளைவிட உண்மைகளே அதிகம்.

      சமீபத்திய எனது வேதனைகள், அவமானங்களே என்னை இப்படி எதிர்புறமாக சிந்திக்க வைத்தது.

      நீக்கு
  6. என்ன முடிஞ்சிருச்சா? இனிமை தான் கதை சூடு பிடிக்கப் போகுதுன்னு நினைச்சேனே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதற்கு மேலும் கதையை நீட்டிப்பது நன்றாக தெரியவில்லை ஆகவே சுபம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதை சுபமாக முடிந்தது மன மகிழ்ச்சியை தந்தது. உண்மையில் சென்ற பதிவின் வரை திருமணத்திற்கு ஏதோ ஏடாகூடமாக ஏதாவது வில்லங்கம் வந்து விடுமோ என பயமாகவே இருந்தது. இந்த தடவை சுமூகமாக முடிந்தது சந்தோஷமாகவே இருக்கிறது. இனி நல்லபடியாக திருமணம் முடிந்து மணமக்கள் பல்லாண்டு காலம் ஒற்றுமையாக வாழ நானும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    தமிழ் இலக்கங்களில் விசிட்டிங் கார்டில் அலைபேசி எண்களை அச்சடித்த முகிலனின் தமிழார்வத்தையும் பாராட்டுகிறேன்.
    நல்ல கதையை தந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நேற்று என் பதிவுக்கு தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தேன். தங்களுக்கு நேரம் அமையும் போது வந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணத்தில் வில்லங்கத்தார் வராததால் வில்லங்கம் இல்லாமல் திருமணம் சுபமாகியது.

      தமிழார்வத்தை பாராட்டியமைக்கு நன்றி

      நீக்கு
  8. கதை சுபமாக முடிந்தாலும் ஏதோ இடறுகிறது. அது மாமனார், மாமியார் தனியாகப் பேசியதா? அல்லது முன் கூட்டியே முகிலன் வருங்கால மனைவியிடம் பேசியதா? எதுனு புரியலை! என்றாலும் நல்லபடி முடித்ததுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமனார்-மாமியார் கதவை தாழ்போட்டு பேசியதால் கதாசிரியருக்கு விசயம் பிடிபடவில்லை.

      மற்றபடி முகிலன் ஜனனியை சந்திப்பது இதுவே முதல் முறை.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. சுபம், சுகம். தெளிவான, ரசனையான நடை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. அருமை

    இனிமையாய் கதையை நிறைவு செய்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  11. லேட்டாக வருவதில் ஒரு சௌகர்யம்! ஹாஹா... நான்கு பகுதிகளையும் ஒருசேரப் படிக்க முடிந்தது. நல்ல கதை. இப்படி மனம் விட்டுப் பேசிவிட்டால் நலமே...

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மொத்தமாக படித்து கருத்திட்டமைக்கு நன்றி

      நீக்கு
  12. இப்படித்தான் இருக்கவேணும் என்பதுபோல் கதையை நடத்திச்சென்று அழகாக அம்சமாக அன்பாக முடித்து விட்டீர்கள்.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  13. நன்றாக எழுதியிருக்கிறீங்க அண்ணா ஜீ. உண்மையில் அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது கதை. அருமை, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. எதுக்கு இவ்ளோ அவசரப்பட்டு கதையை முடிச்சிட்டீங்க.. படிக்க நன்றாக இருந்தது.. இன்னும் தொடர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலென்ன... அடுத்த சீரியலை தொடங்கிடுவோம்.

      பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  15. விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டபடியால் மறுமொழி எழுதுவதில் தாமதமானது. ஒட்டுமொத்தமாக இப்போதுதான் படித்தேன். செறிவுடன், சிறப்பாக அமைந்திருந்தது. வாழ்த்துகள். அடுத்த சீரியலுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துகள். பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. இனிமையாக முடிவு எதிர்பார்த்த மகிழ்வே. அது சரி கடைசியில் அந்த அலை பேசி எண் இடிக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எண்களில் என்ன பிரச்சனை ?

      நீக்கு
  17. கதை முடிஞ்சிபோச்சா .... கல்யாண சாப்பாடு எப்போ எங்க போடுவாங்கன்னு சொல்லவே இல்ல... நமக்கு சாப்பாடுதான் முக்கியம் ... '' உண்டி சுருக்கேல் ''னு ஔவையாரே சொல்லிருக்காங்கோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனேகமாக உங்களுக்கு அழைப்பிதழ் வரும் நண்பரே... வந்ததும் என்னையும் அழைத்துப் போங்கள்.

      நீக்கு