தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 12, 2019

வந்தாரை வாழவைப்போம்

தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம்
SORRY எல்லாம் நித்தியின் திருவிளையாடலே...
பாதுகாப்பு முக்கியம்தான்
இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே...
நன்றி நண்பர் திரு. பாபு தமிழ்ச்செல்வன்
வண்டியை மேற்கே திருப்புடா...
நன்றியுள்ள எம்ஜிஆர் பக்தர்களே காணுங்கள்
விரைவில் தமிழகத்தில் வரலாம்
ராத்திரி எட்டிப்பார்த்தே தொலைச்சுடுவேன்
இந்த வார்த்தை சரிதானா ? (எனது செல்லின் Whats App)
அத்தியும் ஆளைப் பார்த்துதான் லட்டர் கொடுக்கிறார்
பழைய ரேடியோ இலவச ரிப்பேர் பார்க்கலாம்
ஸ்டூடியோக்காரன் சும்மா இருக்க மாட்டானோ ?
எத்தனுக்கு எத்தன் எடப்பாடியிலும் உண்டு
தேவகோட்டை பனங்கொட்டை மொட்டை மாடியிலேயே முளைக்கும்
ங்கொய்யாலே... கேட்டான்ல... கேட்டான்ல.....
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ...
நாமலும் எவர்சில்வர் கடையை போடலாமோ,,,
தொட்டிலை ஆட்டி விட்டு, பிள்ளையை கிள்ளுவது
அடடே... ஸூப்பர் மஹால்தான்

ChivasRegal சிவசம்போ-
இவங்கே ரம்ஜான் அன்னைக்கு சர்ஜ்ஜில போய் சாமி கும்பிடுவாய்ங்களோ...

57 கருத்துகள்:

  1. தொகுப்பு அட்டகாசம் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நன்றி

      நீக்கு
    2. The best. நாலைந்து படங்களை எடுத்துக் கொண்டேன். அழகு கவிதை அட்டகாசம். நல்லவேளை இதற்கு நீங்கள் பூட்டுப் போடவில்லை. நன்றி.

      நீக்கு
    3. வருக நண்பரே எல்லா படங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  2. அருமையான தொகுப்பு. நன்றி கில்லர்ஜி. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். தமிழ்நாட்டு இளைஞர்களில் நிறையப் பேர் அரசு வேலைகளுக்கு முயற்சி செய்வதில்லை. விபரம் தெரியாமல் ஒதுக்குகின்றனர். ஆனால் நீங்க எடியூரப்பா சொல்லி இருப்பதாகச் சொல்லுவதில் மத்திய அரசு வேலைக்கு அவர் சொல்வது எல்லாம் நடக்காது, என்னதான் பிஜேபி முதல்வராக இருந்தாலும். ஒவ்வொரு துறையிலும் வேலைக்கு ஆள் எடுக்கத் தனியாக விண்ணப்பங்கள் தரவேண்டும். மேலும் அவரவர் மாநில மொழியிலேயே தேர்வு எழுதலாம். மாநிலத்துக்குள்ளேயே வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். இது இப்போ இல்லை. பல்லாண்டுகளாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்குத் தமிழில் தேர்வு எழுதலாம் என்பதே தெரியாதுனு நினைக்கிறேன். பொதுவான ஒரு சில தேர்வுகளைத் தவிர்த்து மற்றவற்றுக்கு மாநில மொழி அனுமதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மத்திய அரசு அலுவலகங்களில் வேலைக்குச் சேரணும் என்றாலும் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெறவேண்டியது மத்திய அளவிலேயே. எங்க பொண்ணு எங்களோடு குஜராத்தில் இருந்தப்போ எல்.ஐ.சி தேர்வில் தேர்ச்சி பெற்றாள். ஆனால் குஜராத்தி மொழி தெரியாது என்பதால் நேர்முகத் தேர்வுக்கு அனுமதி கிட்டவில்லை. எந்த மத்திய அரசு வேலையானாலும் இப்போதெல்லாம் இப்படித்தான். திரு ஜோதிஜி அவர்கள் ஈரோடு, திருப்பூர்ப் பகுதி இளைஞர்களுக்காக மத்திய அரசு இலவசமாகக் கொடுக்கும் பயிற்சி பற்றி முகநூலில் பகிர்ந்திருந்தார். விருதுநகர் வரை விரிவு செய்திருப்பதாகவும் சொன்னார். அதிலும் இளைஞர்கள் அதிக அளவில் பயிற்சிகளுக்குச் சேருவது இல்லை. தங்கும் இடத்த்தில் இருந்து எல்லாமும் இலவசம். ஆனால் வெகு சிலரே இதனால் பயன் அடைகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      விரிவான விளக்கம் தந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. நித்தமும் ஆனந்தம் என்று பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருப்பவர் அவர்...   கேட்கவும் வேண்டுமா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல விளக்கம் ஜி
      திருவண்ணாமலை ராஜசேகரன்
      கைலாசா நித்தியானந்நா

      ஓ..... ஐலசா....

      நீக்கு
  5. ரஜினி பற்றிய கேள்வி நச்.   தேவகோட்டைக்கு மேற்க்காக திரும்பவும் - உங்கள் ஊர்ப்பாசம்...ஜானகி எம்ஜிஆர் நினைவு விளம்பரம் நெகிழ்ச்சி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்செல்வன் தமிழன் என்பதை நிரூபித்து விட்டார்.

      எல்லாம் மண்வாசம் ஜி

      இன்று அதிமுகவில் இருப்பவன் எவனும் உண்மையான எம்ஜிஆர் தொண்டன் கிடையாது.
      (எம்ஜிஆர், சந்திரபாபு, எஸ்.ஏ.அசோகன் போன்ற பல பேருடைய வாழ்வை நசுக்கியவன் என்பது வேறு விடயம்)

      நீக்கு
    2. A.P.நாகராஜனை விட்டு விட்டீர்களே...

      படம் தான் எடுத்தேன்...
      பணம் எடுக்க வில்லை.. என்று
      நாகராஜனைச் சொல்ல வைத்து

      நாகராஜன் விஷம் கக்குகிறார்.. என்று எதிர்ப்பு கிளம்ப

      அந்தப் படம் அப்போதே பெட்டிக்குள் சுருண்டு கொள்ள ஏபி. நாகராஜன் பரலோகம் போய்ச் சேர்ந்தார்...

      நீக்கு
    3. ஆஹா மறந்து விட்டேன் ஜி
      கோவையில் லதாவுக்காக ரஜினியை பூசை போட்டதையும் மறந்து விட்டேன்.

      அன்று அடிவாங்கிய ரஜினி இன்று ஓட்டுக்காக எம்ஜிஆர் எனக்கு உதவினார் என்கிறான் தமிழனுக்கு இவைகள் மண்டையில் ஏறாது.

      நீக்கு
  6. ஆடி அமாவாசை ஜெபம் விளம்பரங்கள் நானும் அப்போதே வாட்ஸாப்பில் கண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்மதமும் சம்மதம் என்கின்றார்களோ....

      நீக்கு
    2. ஆடி அமாவாசை எல்லாம் ஒண்ணுமே இல்லை. மொட்டை அடித்தல், காது குத்துத் திருவிழா, அலகு குத்துதல், தேர் இழுத்தல்னு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர். அதிலே இப்போ நாலு நாளா கார்த்திகை தீபம் தான் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. ஸ்ரீரங்கத்தில் சில ஆட்டோக்களின் பின்னால் மாணிக்கவாசகரின் போற்றித் திரு அகவல் சிறிதே பெயர் மாற்றப்பட்டு இடம் பெற்றிருக்கும்.

      நீக்கு
    3. தங்களது மேலதிக தகவலுக்கு நன்றி

      நீக்கு
  7. ஆஹா எத்தனை செய்திகள் ?ஒவ்வொன்றிற்கும் தனியாக கருத்துரை எழுத வேண்டும் போலிருக்கிறது. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. அட்டகாசமான பதிவு...

    அதிலும் அந்தக் கடைசி படம் -
    எதையோ எடுத்து அடித்த மாதிரி இருக்கு!...

    இந்தக் கிழத்தைக் கட்டிப் பிடித்து ஆடினால் ஜென்ம சாபம் தீர்ந்து விடும் என்று இன்னும் நம்பிக் கொண்டு நிற்கிறார்களாம்...

    பொழுது விடிஞ்ச நேரத்துல
    நமக்கெதுக்கு இந்தப் பேச்சு...

    பொழைப்பைப் பார்ப்போம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கூத்தாடிகள் கையில் தமிழகம் போய்க் கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  9. முதுகெலும்பு இல்லாத அடிமை அரசு இருக்கும் வரை... ம்ஹிம்...

    பதிலளிநீக்கு
  10. கில்லர்ஜியை யாரோ துவைத்துக் காயப் போட்டிருக்கிறார்கள். நான் பிறகு வருகிறேன் (துவைத்துக் காயப்போட அல்ல.. பின்னூட்டமிட)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் பார்வை வேறமாதிரி இருக்கிறதே....

      ஆனாலும் ஓர் உண்மை நண்பரே இதையே சாம்பசிவம் மூலம் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.

      நீக்கு
  11. அதிர்ச்சிகளை அள்ளித் தந்த பதிவு.
    திருமதி.ஜானகி ராமச்சந்திரன் நினைவு நாள் நெகிழ்ச்சி.
    திருமதி கீதா சாம்பசிவத்தின் விளக்கம் அருமை.

    வழிகாட்டிகள் என்ன சொல்கின்றன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அம்மா வருகைக்கு நன்றி.
      வழிகாட்டிகளை கண்டு ஊருகளுக்கு செல்ல வேண்டியதுதான்.

      தொடர் பதிவு ஒன்றை அம்மா படிக்கவில்லையே...
      தலைப்பு - "குயிலகம்"

      நீக்கு
  12. நாம் எல்லோரும் இந்தியர்கள். மொழி, இனம், ஜாதி என்று பிரிவினைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசியல்வாதிகளை விட்டுத் தள்ளுங்கள், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவர்களும் வாழ்கிறார்கள். மற்றபடி பதிவு அருமை.  ஆமாம், இப்போதெல்லாம் உங்களை என் தளத்தில் காண முடிவதில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம்
      உங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி. இந்த எண்ணங்கள் எல்லா மனிதர்களுக்கும் தோன்றினால் நலமே...

      நீக்கு
  13. ரஜினி க்கு 70 வயது பிறந்த நாள் என்றார்களே!

    ஜானகி அம்மையார் முன்னால் முதல்வர், முதல்வர் மனைவி என்று யாரும் நினைக்கவில்லையே! மனசு கனத்து போனது

    பாதுகாப்பு முக்கியம் தான் கூறை வேயந்த வீடோ, கடையோ இல்லையா?
    அனைத்தையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. தலைவரே.நாட்டு..நடப்ப...பிச்சு பிச்சு போட்டு கதற விட்டுடிங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் கதற விட்டேனா...?
      அரசியல்வாதிகள் மக்களை கதற விடுவது தெரியவில்லையா ?

      நீக்கு
  15. இத்தனை ஆதங்கங்கள் மனதுக்குகேடு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுநலக் கவலைதான் என்னைக் கொண்டு போகும்போல ஐயா

      நீக்கு
  16. காலையிலேயே கவனித்தேன்..

    ஆடி அமாவாசை ஜெபம் எங்கேன்னு தெரியலையே..ந்னு...

    கூடிய சீக்கிரம் ஏதாவது குளத்தங்கரையில தர்ப்பணம் செஞ்சி பிண்டம் வைக்கிறதுக்கு தர்ப்பையோட கடை போட்டுடுவானுங்க....

    வேளாங்கண்ணிக்குத்தான் ருத்திராட்சம் காவி வேட்டியோட போறங்களே..

    செங்கல்பட்டு அருகில் அச்சிறுபாக்கம் மலையைக் கைப்பற்றி விட்டதாக சொல்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எல்லா கூத்துகளும் தமிழகத்தில்தான் அரங்கேற்றமாகிறது.

      நீக்கு
    2. அச்சிறுபாக்கம், பறங்கிமலை எல்லாம் பழைய கதை! இப்போப் புத்தம்புதுசாத் திருநெல்வேலி சைவ சித்தாந்த மன்றத்தின் விழாவிலே திருவள்ளுவர் சிலுவை அணிந்த வண்ணம் காட்சி அளித்தது தான்! புத்தம்புதியது!

      நீக்கு
    3. திருவள்ளுவரிடம் சிலுவையா ?

      நீக்கு
    4. ஆமாம், அதுவும் சைவ சித்தாந்த மன்றத்தின் நிகழ்வில்!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    படங்களுக்கு அத்தனை விளக்கங்களும் பொருத்தமாய் அருமை. அரசியல், காமெடி என அனைத்தையும் ஓரிரு வரிகளில்... தங்கள் பாணியில் அமர்க்களமாக அமைந்ததை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  18. ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்தின.

    பதிலளிநீக்கு
  19. ''எத்தனுக்கு எத்தன் எடப்பாடியிலும் உண்டு''.... ஹ..ஹாஹா .. நல்ல ஐடியா! இந்த ஹெல்மெட்டுக்கும் இதுமாதிரி எதாவது தீர்வு கண்டுபுடிச்சா நல்லா இருக்கும் ,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையை மொட்டை அடிச்சுட்டு த்ரீடி பெயிண்ட் அடிக்கலாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹெல்மெட் மாதிரி இருக்கும்.

      நீக்கு
  20. அப்பப்பா எவ்வளவு செய்திகள். ஒவ்வொன்றின் மூலாகவும் எங்கள் சிந்தனையை அதிகம் தூண்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. சுவாமி நித்தியானந்தா அவர்கள், இன்னும் நீண்ட காலம் இதே மகிழ்வோடு இருக்கோணும் என வாத்:)துகிறேன்:)).

    பெற்ற தகப்ப்னுக்கு 60 ஆகிட்டுது இனி என்ன வயசுபோயிட்டுது.. என நினைக்கும் நம் நாடு உண்மைதான்..வருந்தத்தக்க செயல்.

    ஆஹா கில்லர்ஜியின் முயற்சியால் தேவகோட்டை:)).. வெளிநாட்டுப் பாதையில் இருக்குதே.. என்ன பிளேனையோ மேற்கை திருப்பச் சொல்றீங்க?:)) நீங்க சொனால் சரியாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்திக்கு வாத்தா ? அவரு உலக மக்களுக்கே தீட்சை கொடுக்கிறாரே...

      நான் என்ன முயற்சி செய்தேன் ? நைஜீரியா போகும்போது வழியில் கண்ட கைகாட்டியை படமெடுத்தேன் அம்புட்டுதேங்...

      நீக்கு
  22. அனைத்தும் சிந்திக்க வைக்கும் படங்கள்.

    ஜானகி அவர்கள் அரசியலில் வர நினைக்கவில்லை. அது ஆர்.எம்.வீயின் அரசியல் விளையாட்டு. பிறகு அவரே வாலை ஆட்டிக்கொண்டு ஜெ.வீட்டு வாசலில் நின்றது வரலாறு.

    புதுவகை பிளேட் அருமை. இப்போல்லாம் மொபைல் இல்லாம, அதுல நோண்டிக்கொண்டில்லாமல் யாருமே இல்லை.

    திறப்பு விழா ரிப்பன் கட் பண்ணுவது - அனைவருமே பைத்தியங்கள்தாம்.

    அரசு மது வித்தாங்கன்னா, குடிக்கிறவங்களுக்கு எங்க போச்சு புத்தி? படிச்ச கழுதைகள்தானே. அப்புறம் எதுக்கு குடிச்சுட்டு வாகனம் ஓட்டணும்? அவங்க 'கழுதைகளாக' இருக்கறதுனாலத்தான் போலீஸ் செக் பண்ணுது. நாட்டுல கத்தி விக்கிறாங்க, அதை வச்சு இன்னொருத்தனைக் குத்தினா சும்மா விடுவாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆர்எம்வீயால்தான் ஜானகியக்கா அரசியலுக்கு வந்தாங்க என்பது உண்மையே...

      மொபைல் இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைதான் இன்று...
      எப்படியோ கேடுகெட்ட எண்ணங்கள் உள்ளவர்கள் வாக்கு அளித்தால் கெட்டொழிந்து போகின்றவர்கள்தானே ஆளமுடியும்.
      விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  23. அத்தனையும் அருமை. பதிவை இரசித்தேன்! திரு டிபிஆர்.ஜோசப் அவர்கள் சொல்லியிருப்பது போல் ஒவ்வொரு படத்திற்கும் தனியே கருத்து தரலாம் போல் இருக்கிறது. பல்வேறு சுவையான செய்திகளை தொகுத்துத் தந்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு