வியாழன், ஜனவரி 30, 2020

மகா நடி’’கண்


ட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் இந்த நடிகனின் நடிப்பாற்றல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து இருக்கிறது அதாவது இவருக்கு வசனம் கொடுக்கப்படவில்லை. கொடுத்தால் சிறப்பாகவே செய்திருப்பார்.

(இயக்குனர் திரு. சங்கர் அவர்கள் கவனிக்கவும்) இந்த விளம்பரப் படத்தில் வேறொரு விளம்பர நடிகர் வசனம் பேசும்போது அவரது வார்த்தைகளை உள்வாங்கி அதன் அர்த்தம் புரிந்து கீழ்நோக்கி விழிகளை கவிழ்த்தி சிந்தித்து தனது நடிப்பை வெளிப்படுத்தும் அழகே அழகு.   அந்த நடிப்பாற்றலை கீழ்காணும் காணொளியில் கண்டு இரசித்து இந்த மகா நடிகனை வாழ்த்திச் செல்வீரே...


சிவாதாமஸ்அலி-
நாட்டை ஆளணும்னு நினைக்கிறவர் இப்படி டாய்லெட் பிரஸை கையில் எடுக்கிறது நன்னாயில்லை கோடரியை எடுத்து இருக்கலாம்.

சாம்பசிவம்-
நாட்டை சுத்தப்படுத்தும் நோக்கத்தோடு எடுத்து இருக்கலாம் இதை தப்பா நினைத்தால் நெல்லைத்தமிழர் கோவிக்க போறாரு...

Chivas Regal சிவசம்போ-
இருந்தாலும் அப்பாஸ் பொழப்புல மண்ணை அள்ளி போட்டு இருக்ககூடாது.

காணொளி

44 கருத்துகள்:

 1. கில்லர் ஜி வாழ்க...

  இந்த நேரம் இணையத்துக்கு இழுப்பு வந்திருக்கும் நேரம்...

  காலையில் கருத்துரை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இழுப்பு நம்மை இழுத்துக் கொண்டு போகாமல் இருந்தால் சரி...

   நீக்கு
 2. உங்களால் அடையாளம் காணப்பட்ட அவரின் முகபாவனை அற்புதமாக உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் மகா நடிகன் ஆவார். அவருக்கு வாழ்த்துகள். உங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கூர்ந்த பார்வைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 3. நல்ல காண்ஒளி.
  சொல்கிறவர்கள் செய்வதில்லை. சொல்லாதவர்கள் செய்வார்கள்.
  மக நடிகன் தான் அந்தக் கண்தாழ்த்தும் மனிதர். என்னய்யா செய்யப் போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு.:)

  பதிலளிநீக்கு
 4. உண்மையில் அந்த விளம்பரப் படத்தில் அவர் இருக்கிறாரா? அவர் பேசாமலேயே தனது முகபாவம் மூலம் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் என்ற உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். யாருக்குத்தெரியும் இவர் ஒருவேளை பெரிய நடிகராக வரலாம். தங்களின் கணிப்புக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. ஹாஹாஹா சூப்பர் காணொளி :) உண்மையில் அவர் அதான் அந்த கண் :) அப்பன் என்ன நினைத்திருப்பார்னு ஒரு போட்டியே வைக்கலாம் அவ்வளவு வாசகங்கள் வரும் .அப்புறம் இது விளம்பரப்படமா ?? பிக்பாஸ் ப்ரோமோன்னு நினைச்சிட்டேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ பின்னே என்ன ? கமல்ஜி கில்லர்ஜியை கூப்பிடலாமா ?
   எனக்கும் வேலை இருக்கும்ல...

   நீக்கு
 6. நடிப்பின் முதல் படி ஒருவேளை ஏதும் புரியாததால் அப்ப்டி இருந்திருப்பாரோ

  பதிலளிநீக்கு
 7. அந்த நடிகர் நல்ல நடிகர் தான்.
  இது போல கும்பலில் வந்தாலும் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.
  நல்ல எதிர்காலம் அமையட்டும்.
  காணொளியும் பார்த்தேன். இனி தொலைக்காட்சியில் இந்த விளம்பரம் வந்தால் இவரின் முகம் நினைவுக்கு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ என்னால் இவரது நினைவுகள் வரட்டுமே... மகிழ்ச்சி.

   நீக்கு
 8. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் இந்த மகா நடிகருக்கு.

  பதிலளிநீக்கு
 9. ஐயோ ஐயோ! ஒங்க குசும்புக்கு அளவே இல்லையா?

  பதிலளிநீக்கு
 10. "எப்படி இருந்த நான்....

  இப்படி ஆயிட்டேன்..."   வசனம் நினைவுக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
 11. அவர் கண் நடிப்பதால் மகா நடி கண் என்று சொன்னீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. காணொளி கண்டேன். அருமையான விளம்பரம்..( தாங்கள் செய்தது... ஹா ஹா ஹா. ) அவர் உண்மையிலேயே நன்றாகத்தான் நடிக்கிறார். (நீங்கள் அருமையாக கவனித்து தேர்ந்தெடுத்த நடிகரைத்தான் சொல்கிறேன்.ஹா. ஹா. ) ஆனால் இந்தமாதிரி யோசித்து வெளியிடும் உங்களின் திறமைக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன், பாராட்டுக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
  இன்றைக்கு வலைத்தளம் வர தாமதமாகி விட்டது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 13. தலைப்பை பார்த்தும் என்னடா அண்ணா ஜீ க்கு இது ஒத்துக்காத விடயமேன்னு நினைச்சேன். அவர் சொல்வது அந்த நடிகனுக்கு புரியவில்லையோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஓஹோ 'அந்த'நடிகருக்கு புரியவில்லையோ...

   அப்ப யாருக்குத்தான் புரியும் ???

   நீக்கு
 14. எனக்கு வேற வேலை இருக்கு...அசத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 15. டெல்லியில் கெஜரிவால் துடைப்பத்தை சின்னமாக வைத்து வெற்றி பெற்றார். அது போல இவர் பிரஷை கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்று நினைத்தாரோ?
   Jayakumar

  பதிலளிநீக்கு
 16. சில நாட்களாக வலைப்பூ வர இயலவில்லை நண்பரே. வருந்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வருந்த வேண்டாம்.
   நேரம் கிடைக்கும்போது வரவும்.

   நீக்கு
 17. உங்கள் குழந்தைகளை வளர்த்த அண்ணியின் இழப்புக்கு என் வருத்தங்கள்.

  அவர்களுக்கு அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் கண்ட நடிகன் சிறப்பாக நடித்திருக்கிறார்!

  காணொளி - :)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...