2013
- Emirates Etihad Airways-ல் அதிகமுறை
பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய்
வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து
விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்...
என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே...
ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...
ஹலோ..
ஹலோ யாரு ?
ஹலோ ரூபன் நான் கில்லர்ஜி பேசுறேன்.
ஹாய் மச்சான் ரூபன்தான் கதைக்கிறேன் நல்லா இருக்கீங்களா ?
நான் மலேசியாவில் தான் இருக்கிறேன்.
அப்படியா எப்ப வந்தீங்க ?
நேற்றுதான் வந்தேன்.
இப்போ எங்கே இருக்கீங்க ?
Hotel
Park Renitence 117th Floor Room No: 11706
சரி மச்சான் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே நீங்கள் அங்கேயே
இருங்கள் நான் தெரியாத்தனமாக ஒரு வேலையை தொடங்கிட்டன், முடிச்சிட்டு பின்னேரம் 03.00 மணிக்கு
வந்து உங்களை பார்க்கிறேன்.
மாலை ரூபனின் வருகைக்காக தயாராக இருந்தேன் கீழே
ரிசப்ஷனிலிருந்து 02.50 க்கு போன் வந்தது
Mr. Roopan wants to meet you sir.
OK inform come to my room.
சரியாக 03.00 மணி பெல் அடிக்க கதவைத்திறந்தால்... நண்பர் ரூபன் ஊதா
நிறத்தில் பேண்ட், சற்றே வெளிர் நிறத்தில் டி-ஸர்ட் கையில்
பூங்கொத்து.
ஹாய் மச்சான் நல்லா இருக்கீங்களா ?
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ?
நலமாக இருக்கிறேன், மலேசியா வந்ததற்கு என்ட வாழ்த்துகள்
பூங்கொத்தை வாங்கி கொள்ளுங்கள் மச்சான் மொட்டை உங்களுக்கு அழகாக இருக்கிறது.
ரொம்ப நன்றி.
பெல் அடித்து பேரர் வர
இரண்டு காஃபி ஆர்டர் கொடுத்து விட்டு....
பேந்து சொல்லுங்க மச்சான்
பிரயாணமெல்லாம் எப்படி இருந்தது ?
நல்லபடியா இருந்துச்சு
அப்புறம் ?
மச்சான் இங்கு வந்தும்
லேப்டாப்பில் வலைப்பதிவுதானா ?
நண்பர் வெங்கட் நாகராஜ்
பயணத்தொடர் போட்டு இருக்காரு, ஸூப்பர் அதான் கருத்துரை கொடுத்தேன்.
அப்படியா நானும் இங்கேயே
குடுக்குறன் என்னட்ட டேப்பை, தாங்க மச்சான் துளசிதரன் ஐயா கீதா ரங்கன் ரொம்ப நல்லா
எழுதுறாங்களே....
அந்த வில்லங்க கோஷ்டிகள்
என்ன சாதாரண ஆட்களா ? கடவுளுக்கே FLASH BACK போட்டவர்களாச்சே..
துரை செல்வராஜூ ஐயாவுடைய
பதிவும் அப்படித்தானே ?
குவைத் ஜி அந்த நாட்டுல
இருக்காரு அங்கே இருந்துகிட்டு தெய்வீக விசயங்கள் அத்தனையும் தேடி எடுத்து பதிவு
போடுறாரே... பிரமாதம்.
ஓம் அதுவும் சரிதான் அதுபோல
வே.நடனசபாபதி ஐயாவும் சுவாரஸ்யமாக எழுதுறார் மச்சான் நம்ம ஜம்புலிங்கம் ஐயா
பிரமாதமாக எழுதுகின்றாரே...
அவரு சரித்திர ஆய்வுகள்
பற்றி நிறைய எழுதுறார் எல்லோருக்கும் பயனாக இருக்கிறது அதுபோல நமது இலங்கை தமிழர்
நண்பர் யாழ்பாவணன் காசிராஜலிங்கம் அழகாக தமிழ் வளர்க்கிறார், அப்புறம் கவிஞர் ரமணி
ஐயா மலேசியா வரும்போது சந்திப்பு எப்படி ?
ஓம் மச்சான் சந்தித்தோம்
பதிவில் போட்டு இருந்தேன்தானே இங்கே பாருங்க... கரந்தை ஜெயகுமார் ஐயா இப்பத்தான்
வெளியிட்டு இருக்கிறார், தலைப்பு சூரிய வதனம்.
ஆமா பார்த்தேன் நண்பர்
கரந்தையார் ஆசிரியர் அவருடைய பதிவுகளை அமைதியான சூழலில் படிக்க வேண்டும், அதுபோல
நமது வலிப்போக்கன் வழியில் நடக்கும் விசயங்கள் அனைத்தும் அழகாக எழுதுறார், சகோதரி
கமலா ஹரிகரன் அமைதியாக இருந்தாலும் ஆர்ப்பாட்டமாய் கவிதை எழுதுகிறார்.
ஜியெம்பி ஐயாவும் தொடர்ந்து
எழுதிக்கிட்டுதான் இருக்கிறார்.
ஆமா அவர் வயதில்தான் மூப்பு
எண்ணங்களில் இளைஞர்தான் அதுபோல நண்பர் பசி பரமசிவம் கடவுளுக்கு சுளுக்கு
எடுத்துக்கிட்டே இருக்கிறார்..
சரி மச்சான், காஃபி எடுத்துக்
கொள்ளுங்கள்.
உங்களை சந்திச்சது ரொம்ப
சந்தோஷமா இருக்கு, ரூபன்.
எனக்கும் சந்தோஷம்தான் வலைச்சரத்தில்
உங்களைப்பற்றி சரியாத்தான் எழுதி இருக்காங்க ஈர மனிதர்னு.
வாழ்க்கை வறண்டு போனது அவர்கள்
கண்ணுக்கு தெரியாதுல.. ஆமா, ஏதோ வேலையை தொடங்கி விட்டேன்னு சொன்னீங்களே... பிஸி
இல்லையே ?
அப்படி ஒன்றுமில்லை,
வலைப்பதிவில் சகோதரி அதிரா அவர்களின் கேப்பைகழி அல்வா செய்வது எப்படி ? என்பதை
படிச்சுட்டு செய்து கொண்டிருந்தேன்...
அப்படியா... அவரின் சமையல்
வகை எனக்கு.....ம் பிடிக்கூ.........ம் கொண்டு வந்தீர்களா ?
இல்லை மச்சான்..
ஏன் ?
நமக்குள் பிரச்சனை
வரக்கூடாதுதானே.. அதனால் கொண்டு வரவில்லை.
சரி பரவாயில்லை, அதுதான்
நல்லது
வலைப்பதிவு எப்படி
போய்க்கொண்டு இருக்கிறது. ?.
அதான், தினம் பார்க்கிறீங்களே..
எங்கள் பிளாக் ஸ்ரீராம்ஜி தளம்தான் களைகட்டி இருக்கிறது மற்றபடி சகோ கீதா
சாம்பசிவம் அவர்கள் எழுதுறாங்க அம்பேரிக்கா போனாலும் தொடர்ந்து எழுதுறாங்க...
மதுரைத்தமிழன் வழக்கம் போலவே அரசியல் பதிவு எழுதுகிறார்.
நீங்களும் நன்றாகத்தானே
எழுதுகிறீர்கள், அதிலும் சொக்கன்ஜியும், நீங்களும் கலந்துகொண்ட ஆஸ்திரேலியா பதிவு
நன்றாக கொமெடி செய்திருந்தீர்கள்,
உங்களுடைய கவிதை எல்லாமே
கோபமாத்தான் இருக்கு.
ஓம், உண்மையைத்தானே
எழுதுகிறேன், மச்சான் சே.குமார் உங்களோடுதான் இருக்கிறாரா ?
அபுதாபிதான் வாரம் ஒருமுறை
சந்திப்போம்.
மச்சான் இந்தியா எப்பொழுது
போவீங்கள் ?
அடுத்த மாசம் போறேன்.
நல்லது, எனது அண்ணா தனபாலனை
சந்தித்தால் ? நலம்
விசாரித்ததாக சொல்லுங்கள்.
கண்டிப்பாக நண்பர் தி.த. அவர்களை சந்தித்து சொல்வேன்.
உங்களது ஊரும், அண்ணாவுடைய
ஊரும் பக்கம்தானே ?
தி கிரேட்
தேவகோட்டையிலிருந்து... திண்டுக்கல் 116 K.M
மச்சான், நீங்கள் ஜெர்மனி,
ஃப்ரான்ஸ், சுவிஸ் எல்லாம் போய் வந்ததை வலைப்பதிவில் பார்த்தேன், புகைப்படங்கள்
நன்றாக இருந்தது, ஆஸ்திரேலியா போனீர்கள்தானே... நண்பர் சொக்கன் சுப்பிரமணியனோடு
ஏன் ஊர் சுற்றவில்லை ?
அவரைப்பற்றி பேசாதீங்க...
அவருதான், என்னை கழட்டி விட்டுட்டாரே...
பதிவில் நீங்களும், கழட்டி
விட்டது போலவும் இருந்ததே...
அது.... வந்து... அது....
அது.... டாக்ஸிகாரனோட தப்பு, ஆமா பக்கத்துல டூரிஸ்ட் ப்ளேஸ் ஏதாவது இருக்கா ?
நல்லது இப்பொழுது நாம் வெளியே
போகவேண்டும் தானே ?
ஆமா, எங்கே போகலாம் ?
வெளிக்கிடுங்கள், போவோம்.
ஸூட்கேஷிலிருந்து... கேமராவை எடுத்தேன்.
கேமரா நன்றாக இருக்கிறது எங்கு வாங்கினீர்கள் ?
உகாண்டா போகும்போது வாங்கினேன்.
உகாண்டாவும் போயிருக்கிறீர்களா... வலைப்பதிவில் வரவில்லையே ?
வரும் சமயம் வரும்போது...
இது விலை எவ்வளவு ?
€ 1063.00 (Euro)
மிகவும், நன்றாக இருக்கிறது நமது மலேசிய சந்திப்பை
வலைப்பதிவில் இடுவீர்கள்தானே..
கண்டிப்பாக ரூபன், Visa Copy போதுமா... இல்லை Passport வேணுமா ?
ஓம் கடவுச்சீட்டு இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
Room மை பூட்டி விட்டு, 117th Floor
ரிலிருந்து Lift ல் இரண்டு பேர் மட்டுமே வந்து கொண்டிருந்தோம்.... திடீரென ’’கிணீங்
டிங்’’
என்ற சத்தம் லிப்டின் இரும்பு ரோப் அறுந்துபோய் ....சொய்ய்ய்ய்யங் லிப்ட் வேகமாக
கீ.......ழே..... வந்து கொண்டிருக்க... நானும் ரூபனும் செய்வதறியாது திகைக்க... ’’ட்டொம்ம்ம்ம்’’
‘’அம்மா’’ அலறியடித்து
கட்டிலிலிருந்து எந்திரித்தேன், ’’ச்சே’’ கனவு
.
குறிப்பு – என்னால் எல்லா பதிவர்களையும் இதில் கொண்டு
வரமுடியும் ஆனால் அனுமார் வால் போல் நீண்டு போகிறதே என்று யாரும் படிக்காமல் போய்
விடுவீர்களோ... என்பதால் முடித்துக் கொண்டேன் இடம் பெறாத பதிவர்கள் தயவு செய்து
மன்னிக்கவும் – கில்லர்ஜி
அடிக்குறிப்பு – இந்த பதிவை வெளியிட எனக்கு அனுமதியளித்த
நண்பர் ரூபன் அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாமென அவரிடமே கேட்டேன் நமக்குள் பரிசுகள் எதற்கு மச்சான் ? நன்றி போதுமே...
ஆகவே, அவருக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-கில்லர்ஜி-
ஹாஹாஹா, நல்ல கற்பனை வளம். நல்லா எழுதி இருக்கீங்க. ஆனால் வருஷம் தான் இடிக்குது! 2013 ஆம் வருஷம் நான் இந்தியாவில் தான் இருந்தேன். இஃகி,இஃகி, சரி, சரி லாஜிக் பார்க்கலை. எல்லோரையும் அநேகமாக் கொண்டு வந்துட்டீங்க! இன்னும் சிலர் இருக்காங்க தான்!
பதிலளிநீக்குவருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குரூபன் அவர்களுக்கு விமானத்தையே பரிசாக் கொடுத்திருக்கீங்க போல! இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குஆம் கொடுக்கணும் என்ற பிறகு பெரிதாகவே கொடுப்பது சிறப்பு.
நீக்குதம்பி ரூபன் இங்கு வருவதாக சொல்லி இருக்கிறார்... நாம் சந்திப்போம்...
பதிலளிநீக்கு2013 வலைப்பூவின் வசந்த காலத்தில் கனவு வந்திருந்தால், 10 பதிவுகளாவது எழுத வேண்டும் ஜி...
ஆஹா வரட்டும் ஜி சந்திப்போம்.
நீக்குஆம் அது வசந்தகாலமே...
சுற்றுலா போய் வந்து விட்டீர்கள் செலவு இல்லாமல்.
பதிலளிநீக்குகனவு அருமை.
வருக சகோ வருகைக்கு நன்றி.
நீக்குநீங்கள் சொல்லியிருக்கும் உடைகளின் நிறமும் படத்திலிருக்கும் நண்பர் ரூபனின் உடைகளின் நிறங்களும் பொருந்தவில்லையே ஜி...!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி அது பழைய படமாக இருக்கலாம் நாங்கள்தான் வெளியில் கிளம்பியபோதே லிப்ட் அறுந்து விட்டதே...
நீக்குஒரு வேளை இறுதியில் கனவு என்று சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன். அதே மாதிரி ஆகிவிட்டது . ஆனாலும் சூப்பர்.
பதிலளிநீக்குவாங்க ஐயா முடிவை தீர்மானித்து விட்டீர்களா ?
நீக்குகனவு என முடிப்பீர்கள் என நினைத்தேன். அவ்வாறே ஆனது. இருப்பினும் உரையாடல் அருமையாக ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.
நீக்குமிக அருமையான பதிவு அன்பு தேவகோட்டைஜி.
பதிலளிநீக்குமலேஷியா சென்றீர்கள் தானே. ரூபன் இவர்களை எல்லாம் வலைச்சர காலத்தில் பார்த்தது.
உங்கள் சந்திப்பு அற்புதம்.
அத்தனை வல்லுனர்களையும் கொண்டு வந்து விட்டீர்களே.
அருமை. இவர்கள் எல்லோரின் எழுத்தும் படிக்கப் படிக்க
சுவை அதிகமாகும்.
நேரம் என் கட்டுப்பாட்டில் இல்லை.
எல்லாப் பதிவுகளையும் படிக்க ஆசை இருந்தும் முடியவில்லை.
கற்பனை வளம் கூட வாழ்த்துகள் மா.
நன்றி.
வாங்க அம்மா பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.
நீக்குரூபன் அவர்களுக்கு என் நினைவு இருக்கிறதா என எண்ணினேன் கனவில் அவரும் நீங்களும் பதிவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தது அருமை
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஎல்லாப் பதிவர்களையும் அனேகமா எழுத்தில் கொண்டுவந்துட்டீங்க. வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக தமிழரே வருகைக்கு நன்றி.
நீக்குநல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சு!...
பதிலளிநீக்குஆமாங் ... நல்லாத்தேன் போய்ட்டு இருந்திச்சு!...
பொறவு என்னாத்துக்கு லிப்டு அத்துக்கிட்டு விழுந்திச்சாம்!...
அது அந்த சந்தோசக் களேபரத்துல ஆளுங்க ரெண்டு பேருக்கும் எடை கூடிப் போயி
ஏகத்துக்கும் கனமாயிட்டாகளா.. அந்தக் கனம் தாங்க மாட்டாமத் தான் லிப்ட்டாம் பொட்டி
பப்படாம் பொட்டியாட்டம் ஆயிடிச்சு!...
எப்படியோ பயாஸ்க்கோப் பார்த்த மாதிரி ரசமா இருந்துச்சு..
வாங்க ஜி பயாஸ்கோப் பழைய மேட்டராச்சே... ஹா.. ஹா..
நீக்குஆஹா. ..அருமையான கனவு . ஆ. Lufthansa . பெரிதாக கொடுப்பது என்பது இதுதானோ.!!
பதிலளிநீக்குஎங்கள் பட்ட(ங்களின்)த்து ராணியின் சமையல் சாப்பிட்டால் பிரச்சனை வருமா.?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
வருக சகோ
நீக்குருசி நட்பை கெடுத்து விடக்கூடாதே...
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி, இதை நான் இப்போதுதான் அதுவும் தற்செயலாக பார்த்தேன், அது என்னமோ கடந்த 2 நாட்களாக வலைப்பக்கம் எட்டிப்பார்க்க முடியாமல் போய் விட்டது..
பதிலளிநீக்குஹா ஹா ஹா உண்மை என்றே நம்பி விட்டேன் நான் கர்ர்ர்:)) புது வருடத்தில் ஏமாத்திப்போட்டீங்க இதுக்காக நீனக இப்பவே பிரித்தானியா காண்ட் கோர்ட்டுக்கு வரோணும் .. அதுவும் குலுக்கல் முறை ரிக்கெட்டில் அல்ல:) உங்கள் ஜொந்ந்ந்ந்ந்ந் த செலவில:))
ஹா.. ஹா... ஏமாந்தமைக்கு வாழ்த்துகள்.
நீக்குஇந்த மாதம் உகாண்டா போறேன் வரத்தோது இல்லை
இருவர் சந்தித்து, இப்பூடி ஊர் வம்பு பேசுகிறார்களே என நினைச்சேன் ஹா ஹா ஹா.. அதுவும் என்னாது கேப்பைக் கழியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நில்லுங்கோ அதிராவின் சுவீட்ட் ஒன்று விரைவில் வரப்போகுது:)) அப்போ காதில விரலை வச்சு வியகப் போறீங்க:)).... ஆனாலும் கனவிலயாவது ஒருவர் என் குறிப்பைச் செய்து பார்த்திட்டாரே:)) ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குகாதில் விரல் வைத்தா... ?
நீக்குகனவில் செய்த ரூபனுக்கு நன்றி சொல்வோம்.
காதில் விரலை வைத்தா? வியக்கும்போது மூக்கின்மீது விரல் வைப்பதாகத்தானே எழுதுகிறார்கள்!
நீக்குஇங்கிலாந்தில் இப்படித்தான் போலும்...
நீக்குசொல்ல நினைப்பதைச் சுவை குன்றாமல் சொல்வதில் கில்லர்ஜிக்கு நிகர் கில்லர்ஜிதான்.
பதிலளிநீக்குஎன்னையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.
9 ஆண்டுகள்[2011லிருந்து] அவருக்குச் சுளுக்கு எடுத்த நற்பணிக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக எனக்கு ஓய்வு[வைரஸ் காய்ச்சல்] கொடுத்துவிட்டார் கடவுள். உடல்நலம் தேறி இரு பதிவுகள் எழுதிய நிலையில் உங்களின் இந்தப் பதிவை வாசித்து மகிழ்ந்தேன். நன்றி.
வருக நண்பரே தங்களது உடல் நலம் தேறியதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது பதிவுகளை படித்து விட்டேன் (கருத்துரைதான் எழுத முடியாதே...)
நல்ல கற்பனை! உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களை பாராட்ட புதிய உத்தியை கண்டுபிடித்திருக்கிறீர்கள், நன்று! 2013இல் நான் எ.பி.யில் இணையவில்லை, அதனால் என் பெயர் விடுபட்டு விட்டது அப்படித்தானே? ஹா ஹா!கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல லுஃப்தன்ஸா விமானத்தை நண்பருக்கு பரிசளித்து விட்டீர்கள்! நல்ல டெக்கனிக்! நல்ல வேளை, ஏர் இந்தியாவை கொடுக்கவில்லை. நஷ்டத்தில் ஓடும் கம்பெனியை என் தலையில் கட்டப் பார்க்கிறீர்களா? என்று அவர் கோபித்திருப்பார்.
பதிலளிநீக்குநண்பர் குடும்பத்தோடு போவதற்கு ஏர் இந்தியா சரியாக வராது ஆகவேதான்... வருகைக்கு நன்றி மேடம்
நீக்குரூபன் மட்டுமா இந்தியா வருவார்
பதிலளிநீக்குநானும் வந்து சந்திக்கவுள்ளேன்.
சிறப்பான பதிவு
தொடருங்கள்
வருக நண்பரே வாருங்கள் வரவேற்கிறோம்...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. உங்களுக்கு அழகாய் வந்த கற்பனையோடு உங்களின் அருமையாக எழுதும் திறனும் சேர்ந்து ரசிக்க வைக்கும் பதிவாய் எழுதியுள்ளீர்கள். தாமதமாக இன்று படித்து ரசித்தேன். சற்று உடல் நலம் இல்லாததால், ஒருநாளைப் போல பதிவுகளுக்கு வர இயலாமல் போய் விட்டதில், தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்போது நலம் பெற்று வருகிறேன்.
நான் உண்மையிலேயே சகோதரர் திரு ரூபனுடன் சந்திப்பு என படித்து வந்தேன். ஆனால் அருமையான அத்தனைப் பதிவர்களை குறிப்பிட்டு பேசி வரும் போது, வெறும் கனவாகிய என்னையும் சேர்த்ததில், இதுவும் தங்களுக்கு வந்த ஒரு கனவுதான் என்பது சுலபமாக புரிந்து விட்டது. ஹா.ஹா.ஹா. ஆனாலும் என்னையும் குறிப்பிட்டமைக்கு என மனம் நிறைந்த நன்றிகள். தங்களின் நல்ல கற்பனை வளத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள். படங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது உடல் நலம் கவனித்துக் கொள்ளவும்.
நீக்குபதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
முந்தைய பதிவு "டால்மியாபுரம், டவுட்டு டவுசர்" நகைச்சுவை பதிவு படிக்கவில்லையே...
வணக்கம் சகோதரரே
நீக்குஉடல் நலமின்மை காரணமாகத்தான் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பதிவுலகம் வர இயலவில்லை. தற்சமயம் குணமாகி வருகிறேன்.
டால்மியாபுரம் பாண்டியின் கேள்விகளை ரசித்து இப்போதுதான் கருத்திட்டு விட்டு வருகிறேன். அந்தப் பதிவும் நகைச்சுவையுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள். இனித் தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ படித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குஅதிரா அவர்களின் சமையல் எனக்கு.....ம் பிடிக்கூ....ம் கொண்டு வந்தீர்களா?
பதிலளிநீக்குஇல்லை மச்சான்...
ஏன்?
நமக்குள் பிரச்சனை வரக்கூடாதுதானே .... அதனால் கொண்டுவரவில்லை...
(நிம்மதி பெருமூச்சுடன்) ... சரி பரவாயில்லை .... அதுதான் நல்லது....
... ??? ... கில்லர்ஜி சாரை பாராட்ட வார்ததைகளே இல்லை .... அதிரா அவர்களின் சமையலின் சிறப்பை உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒளிவுமறைவில்லாமல் மனந்திறந்து பாராட்டமுடியாது.
வருக நண்பரே இது என்னை பாராட்டுவது போலில்லையே... ஏதோ போட்டுக் கொடுப்பது போலவே இருக்கிறதே...
நீக்குஆரம்பத்தில் படிக்கும்போது உண்மையில் நீங்கள் மலேசியா போனபோது திரு ரூபன் அவர்களை சந்தித்தது பற்றி எழுதுகிறீர்கள் என நினைத்தேன். பிறகு பதிவர்கள் பெயரையெல்லாம் பார்த்தபின் இது கற்பனை தான் என்பதை புரிந்துகொண்டேன். தங்களின் கனவில் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! தங்களின் கற்பனைக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஒரே பதிவில் பல பதிவர் தளங்களின் விமர்சனம் அருமை .நன்றி
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குஆஹா... நம்ம பெயரும் இங்கே இருக்கிறதே! :) மகிழ்ச்சி கில்லர்ஜி.
பதிலளிநீக்குநல்லதொரு கற்பனை. மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பணிச்சுமை, அவசரப் பயணம் என வலைப்பக்கம் வர இயலா சூழல். இன்று தான் வர முடிந்தது. விடுபட்ட பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
வாங்க ஜி
நீக்குவருகைக்கு மிக்க நன்றி