தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

என் மொழிகள்


01. சம்பாரித்தவன் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை
வாழ்ந்தவர்கள் எல்லோரும் சம்பாரித்தவர்களும் இல்லை
இந்த இடியாப்ப சிக்கலுக்கு விடை சொல்வது யார் ?
உலக மேலாளன்.

02. பசித்த ஏழையர்களுக்கு பணப் பிரச்சனை
பணம் பெருத்தவர்களுக்கு பணமே பிரச்சனை
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பது எது ?
ஆசையற்ற மனம்.

03. உணவே மருந்தாக இருந்தது பண்டைய காலம்
மருந்தே உணவாக ஆயிற்று இன்றைய காலம்
இந்த இழிநிலைக்கு காரணகர்த்தா யார் ?
பேராசை MONEYதர்கள்.

04. வறுமையான குடும்பத்தில் வாரிசுகள் வரிசையில்
வாரிசில்லாத குடும்பத்தில் வரிசையாக வீடுகள்
இதற்கான விடையை காண வழி ?
மரணம்வரை காத்திரு.

05. பணம் சேர்க்க பட்டினியாய் கிடந்தான்
பணம் சேர்த்த பிறகு பசி கேட்டான்
பசிக்கு மருந்து கொடுத்தது மருத்துவனா ?
இல்லை இறைவன்.

06. வறுமை ஒழித்து வளமை கேட்டான் கடவுளிடம்
வரம் தருவதற்கு உண்டியலை காட்டினார் கடவுள்
இந்த இருவருக்கும் இடைத்தரகர்கள் யார் ?
கோவில் நிர்வாகிகள்.

07. முழுவதும் காட்டிய நடிகையை தீண்டவில்லை
புகழுக்குப் பின்னே மூடித்தான் நடிப்பேன் என்றாள்
பணத்தைக் கொட்டுவது நேரமா ?
ரசிகன் என்ற அறியாமைகளால்.

08. எனக்கு நீதி கிடைக்கவில்லை எனில் நாடு கடப்பேன் என்றவர்
இப்பொழுது இந்த நாட்டையே ஆள்வேன் என்பது அழகோவியம்
ஒருக்கால் இவர் நாடு துறந்தால் போகுமிடம் ?
கைலாசம்.

09. காதலித்தபோது மதம் கண்ணுக்கு தெரியவில்லை
மகனை பள்ளியில் சேர்க்கும்போது மதம் புத்தியை காட்டியது
காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையா ?
திருமணத்துக்கு மதம் உண்டு.

10. எப்படியும் வாழலாம் வழியை தேர்ந்தெடுத்தான் மனிதன்
இப்படித்தான் வாழவேண்டும் என்பதே உன்விதி என்றான் இறைவன்
விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுவா ?
இல்லை இதுவே விதியாகும்.

11. போலீஸ்க்காரர் வீட்டில் திருடியது தவறு என்றார் நீதிபதி
போலீஸ்க்காரரே திருடும்போது திருடன் திருடுவது தவறில்லை
என்று திருடன் பதில் சொன்னது காலத்தின் கோலமா ?
இது கலிகாலம்.

12. கஷ்டப்பட்டு, நடித்தான் அறிமுக நாயகன் சம்பளம் தினக்கூலி
இஷ்டப்படி நடித்தான் ஸ்டார் நடிகனாம் சம்பளம் ஸ்விஸ் வங்கியில்
இது திறமையா... அதிர்ஷ்டமா ?
குரு ஒன்பதால் வீட்டில்.

சிவாதாமஸ்அலி-
குரு வீட்டுக்கு வாடகை கொடுத்துட்டாரா ?

Chivas Regal சிவசம்போ-
பொன்மொழியில் நம்ம ஐயிட்டம் வரலையே... ?

64 கருத்துகள்:

  1. காலம் செய்த கோலமடி..
    கடவுள் செய்த குற்ற்மடி...

    பதிலளிநீக்கு
  2. எல்லாருக்கும் ஒவ்வொரு கவலை...
    நம்ம சிவசம்போவுக்கு அவரோட ஐயிட்டம் வராதது ஒரு கவலை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இது சுயநல உலகம்தானே ஜி வருகைக்கு நன்றி.

      நீக்கு

  3. துரை செல்வராஜு சார் அவர்களின் முதல் கமெண்டை பார்த்தவுடன் இது எங்கள் ப்ளாக்கா என்ற சந்தேகம் வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  4. பணம் பெருத்தவர்களுக்கு சரியாக சாப்பிட முடிவதில்லை என்பதுதான் முதல் பிரச்சனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே இதுவும் தலையாய பிரச்சனைதான்.

      நீக்கு
  5. 11 ஆம் பொன் மொழி அருமை

    பதிலளிநீக்கு
  6. நல்ல எழுதியிருக்கீங்க என்பதைவிட நல்லா சிந்திச்சிருக்கீங்க கில்லர்ஜி.

    வரம் தருவதற்கு கடவுளா உண்டியலைக் காண்பித்தார்? இல்லை மனிதனா அதற்கு ஆசைப்பட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழ்ரே இந்த இரவு நேரத்தில் தூங்காமல் என்ன செய்றீங்க

      நீக்கு
    2. கடவுள்தான் காணிக்கை கேட்கிறார் என்பதை உறுதி படுத்தியது மனிதன்தான் நெல்லையாரே...

      நீக்கு
  7. 07 - பொதுவா ஆரம்ப காலத்தில் புகழ் வரணும் என்பதற்கா கொஞ்சம் அப்படி இப்படி நடிப்பது உண்மை. புகழ் பெற்ற பிறகு அடக்கமாக நடிப்பதும் உண்மை.அதற்குக் காரணம் என்னவாயிருக்கும்?

    09- சிந்தனை மிக அருமை. காதலிக்க எதுவும் தேவையில்லை. வாழ்க்கைக்கு சமூகம் சொல்லும் எல்லாமே தேவைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தமிழரே சமூகத்தை விலக்கி விட்டு வாழ்வது நடுத்தர வர்க்கத்தினருக்கு கஷ்டமான காரியமே...

      ரஜினிகாந்தும், லதாவும் வெவ்வேறு ஜாதி அவர்கள் இணைவதில் சமூகத்திற்கு பிரச்சனையில்லை.

      இதேபோல் நமது தெருவில் நடந்து விட்டால் அவர்களை நோகடித்தே சாகடித்து விடுகிறதே சமூகம்.

      நீக்கு
  8. எப்படியோ ரஜினியைச் சீண்டாவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வருவதில்லை ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும், ரஜினிக்கும் கோல்மூட்டி விட்டு நட்பில் விரிசலை உண்டு பண்ணுவதில் உங்களுக்கு சந்தோஷமா ?

      நீக்கு
  9. குரு வாடகைக் கொடுத்தாரா - ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  10. கில்லர்ஜி படத்தில் உளி இருக்கிற இடம் ரொம்ப டேஞ்சாரான இடம் இப்படி கோபமாக் பதிவுகள் எழுதிகிட்டே சுத்தியலை பயன்படுத்த வேண்டாம் ஒன்று கிடைக்க ஒன்றாகிடப் போகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தமிழரே நான் அந்த சிற்பியிடம் ஜொள்ளு விடுகிறேன்.

      நீக்கு
  11. ரசனையான சிந்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    ஆகா.. உங்களின் அருமையான சிந்தனைகளின் விளைவால் வந்த எ(பொன)ன் மொழிகள் ஒவ்வொன்றையும் ரசித்தேன். அதற்குப் பொருத்தமாய் தலைப்பு படம். (தன்னைத்தானே செதுக்கும் மாதிரி) அதையும் ரசித்தேன். 10ஆவது சிந்தனையும், பதிலும் எனக்கு மிகவும் பிடித்தது. மற்றும் அத்தனை சிந்தனை முத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      படமும், பத்தாவது சிந்தனையும் தங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  13. கில்லர்ஜியின் விரக்தி அவர் வரிகளில் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      ஹா.. ஹா.. ஹா.. ஓரளவு கணித்து விட்டீகள்.
      நிறைய பதிவுகளையும் விட்டு விட்டீர்கள்.
      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  14. சில குறள்களும் பாடல்களும் நினைவுக்கு வந்தன ஜி...

    விதியை மதியால் வெல்ல முடியுமா...? அநேகமாக நாளை வெளியிடும் எனது ஆய்வுப் பதிவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தங்களது நாளைய பதிவை ஆவலுடன் நானும்...

      நீக்கு
  15. எல்லாமே நன்றாக சிந்தித்து அருமையாக எழுதியிருக்கிறீங்க AnnaGee.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பதிவை பாராட்டியமைங்கு நன்றிகள் பல!

      நீக்கு
  16. அருமை..

    ஆனாலும் முடிவில் ச்றி சிவசம்போ அங்கிள் சொன்னதுதான் ரொப்பூஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்கள் அங்கிளுக்கு சப்போர்ட்டா ?

      நீக்கு
  17. கில்லர்ஜி எல்லாம் நல்லாருக்கு...5 கொஞ்சம் இடிக்குதே...பசிக்கு மருந்து கொடுத்தது எப்படி இறைவன்? மனுஷனா தேடிக்கிட்ட பிரச்சனை தானே அது...

    இறைவன் கொடுத்த வரம் உண்டியல்?ம்ம்ம்ம் இங்கும் கொஞ்சம்...சரி சரி விடுங்க....

    எண்ணங்கள் சிந்தனைகள் நல்லாருக்கு கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நமக்கு கொடுப்பது எல்லாமே (கிடைப்பது)இறைவன்தானே ?

      நீக்கு
  18. கில்லர்ஜி சிலது சிரித்துவிட்டேன்..

    அது சரி குரு தசைக்கா பணம்? சுக்ர தசை இல்லையோ?!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரு என்பதே மனிதரை குறிக்கிறது.

      மேலும் குரு பார்க்கிறான் என்று சோசியர்கள் சொல்கிறார்களே...

      நீக்கு
  19. நல்ல சிந்தனைப் பதிவு தான். நடுவில் மய்யச் சிந்தனையாளரையும் ஒரு தாக்குத் தாக்கிட்டீங்க. விதியை மதியால் வெல்ல முடியுமா என்னும் கேள்விக்கு அவரவருக்கே கிடைக்கும் பதில் தான் சரியானது. உணவே மருந்தானது அவன் செய்த தவறால் தானே! இறைவன் எங்கே வந்தான்? அவன் விதியை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வந்ததும் தேவகோட்டைக்கும், பரமக்குடிக்கும் பகையை மூட்டி விடுறீங்க!

      பண ஆசையால்தானே பசியை மறந்தான் நமது வாழ்வை எப்படி மாற்ற நினைத்தாலும் இறுதியில் இறைவன் அமைத்ததே நிகழ்கிறது.

      நீக்கு
  20. திறமை உள்ளவனைக் கண்டு கொள்பவர் யாருமில்லையே! முகபாவங்களை மாற்றாமல் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு நடிப்பவன் தான் இப்போது சூப்பர் ஸ்டார். அவருக்குத் தான் படங்கள், கோடிகள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவ்வகையில் பரமக்குடி திறமைசாலிதான்.

      கொரோனாவுக்கு பிறகாவது இவனுகளை மறந்து விட்டு ரசிகர்கள் தங்களது வாழ்வை மட்டும் சிந்திக்கட்டும்.

      நீக்கு
  21. உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளும்போது கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
  22. 'என் மொழிகள்’ அனைத்துமே எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் நன்மொழிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  23. அனைத்தும் நிறைய சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.
    நம்மை நாமே செதுக்கி கொள்வது நல்லதுதான்.
    நமக்குத்தான் தெரியும் நம்மிடம் வேண்டாதவை எது வேண்டியது எது என்று.

    குருபார்வை எல்லோருக்கும் வேண்டியதுதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  24. ரூம் போட்டு யோசிப்பீங்களோ? எப்போதும் முரண்பாடுகள் மட்டும் உங்கள் பதிவுகளில் முன் நிற்கின்றன கில்லெர்ஜீ கொல்லர்ஜீ. Kill = கொல். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ரூமுக்குள்ளிருந்துதான் யோசிக்கிறேன்.

      பெயரை களங்கப்படுத்துவதுபோல் எழுதாதீர்கள் தெய்வகுற்றமானால் நான் பொருப்பல்ல!

      அப்புறம் தெய்வம் காதை குத்திவிடும்.

      நீக்கு
  25. வறுமையான குடும்பத்தில் பிள்ளை செல்வம் ஓடி விளையாட வீடுஇல்லை.
    பணம் படைத்தவ்ன் வீட்டில் வீடு நிறைய, ஒரு வீட்டிலும் ஓடி விளையாட ஆள் இல்லை
    கடவுளின் விளையாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இதுதான் இறைவனின் விளையாட்டு.

      நீக்கு
  26. கேள்வியும் நானே பதிலும் நானே என்று அசராது வினாக்களைத் தொடுத்து பதில்களைத் தந்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  27. அனைத்துமே சிறப்பு. பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  28. வித்தியாசமான ஆக்கமாக உள்ளது உறவே .
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ?
      வருகைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  29. உங்களின் சிந்தனைகள் வடிவம் பெறும்போது இன்னும் சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அனைத்தையும் ரசித்தேன். அருமை. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது பணி சிறப்புற வாழ்த்துகள் எமது...

      நீக்கு
  30. சிறப்பான எண்ணங்களைக் கொட்டி
    சிந்திக்க வைத்துள்ளீர்கள்...
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  31. எனக்கு நீதி கிடைக்கவில்லையெனில் நாடு கடப்பேன் என்றவர் ???? .... ம் ... ம் ... இது யாராக இருக்கும் .... நம்ம நித்தியானந்த சுவமிகளா இருக்குமோ ... அவருதான் ஏற்கனவே "கைலாசம்" நாட்டுக்கு அதிபரா ஆகிட்டாரே !!! வேறு யாராக இருக்கும் ? ம் ... ம் ... ஒருவேளை .../// ??? .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே "அவரேதான்" பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு