தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டுணக்கம் வலையுலக உறவுகளே... நான் வலைத்தளம் உருவாக்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றோடு 816 பதிவுகள் எழுதி வெளியிட்டு விட்டேன்.இவைகள் அனைத்தும் படிப்பவர்களுக்கு பொழுது போக்கான விடயங்களையும், எனது எண்ணங்களையும், பொதுநலமான கருத்துக்களையும், சமூக கோமாளிகளின் செயல்களையும், மனதுக்கு இதமான இரட்டை அர்த்தமற்ற நல்ல நகைச்சுவை பதிவுகளையும், எனக்கு தெரியாத அரசியல் அலசல்களையும், கவிதை என்ற பெயரில் என்னாலான வார்த்தை ஜாலங்களையும், குடும்பக்கதைகளையும், திரைப்பட கூத்தாடிகளின் அவலங்களையும், கிரிக்கெட் கிறுக்கர்களின் கிறுக்குத்தனங்களையும், எனது மகிழ்ச்சிகளையும், சோகங்களையும், எனது உறவுகளின் மரணங்களையும், குறிப்பாக என்னவளுக்கு நான் ஆண்டுக்கு இரண்டுமுறை மறைவு நாள், எமது திருமண நாளில் எழுதும் அஞ்சலிக் கவிதைகளையும் உங்களோடு பகிர்ந்து கொண்டு கடந்து வந்து இருக்கிறேன் இதன் மூலம் எனது மனச்சுமையை இறக்கி வைத்த உணர்வை பெற்று இருக்கிறேன் என்பதும் உண்மை.இவைகள் அனைத்தும் தங்களுக்கு பயனுள்ளதா ? என்பதை நானறியேன் இருப்பினும் தொடர்ந்து கருத்துரை என்னும் ஊக்கத்தினை அளித்து வந்ததின் காரணமே எனது இந்தப்பயணம். இந்த தருணத்தில் என்னை இவ்வளவு தூரம் எழுத வைத்தவர் யார் ? என்பதை எனது முதல் பதிவான எழுதுகோல் இதை சொடுக்கி அறிந்து கொள்க அவருக்கு எமது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.


இந்த பத்து ஆண்டுகளில் நான் எழுதியது பத்தாது என்பதே எமது கருத்து காரணம் இன்று வலையுலகம் நலிந்து போய்க் கொண்டு இருக்கிறது என்பது நாமறிந்த விடயமே... முன்பு போல எனது பதிவுகளுக்கு வருகையாளர்கள் குறைந்து விட்டதால் எழுதுவதில் எனக்கு மன அதிருப்தி ஏற்பட்டு விட்டது. முன்பொரு காலத்தில் எனது பதிவுகள் வெளியாகிய ஐந்து மணி நேரத்தில் 2000 பார்வையாளர்களை கண்டது எனது தளம் இன்று தலைகீழாக மாறி விட்டது திரட்டிகள் அனைத்தும் மரணத்தை எய்தியதே காரணம்,


எது எப்படியோ எனது பதிவுகளில் கவிதை என்ற பெயரில் எழுதிய மனம் கெட்டது கேட்டது என்ற கவிதையை மட்டும் இன்றைய தேதிவரை ஒரு லட்சத்து, இருபத்து நான்கு ஆயிரத்து அருநூற்றி பதினெட்டு பார்வையாளர்கள் கண்டு இருக்கின்றார்கள் (124,618) என்பது எனக்கு பெருமையான விடயமாக இருக்கிறது. நான் எவ்வளவோ கவிதைகள் மனம் ஒன்றி எழுதி இருக்கிறேன் அவைகளுக்கு கிடைக்காத அங்கீகாரம் இதற்கு கிடைத்ததின் காரணம் நானறியேன் இக்கவிதைக்கு நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்கள் கருத்துரை தரவில்லை இவரை மட்டும் நான் குறிப்பிட காரணம். இக்கவிதையை படித்து விட்டு சில வரிகளை நண்பர் திருத்தி எழுதி அனுப்பினார், அவரது மனம் புண்படக்கூடாது என்ற பண்பால் மட்டுமல்ல திருத்திய வரிகளும் நன்றாக இருந்தது ஆகவே மாற்றி எழுதினேன் ஆயினும் அவர் கருத்துரை தரவேயில்லை இது வெளியான தேதி 01 செப்டம்பர் 2017 இதைப்போல் வெறும் பத்தொன்பது (19)  பார்வையாளர்கள் மட்டுமே வந்த பதிவும் உண்டு.

இந்த நிலையில் தேவகோட்டை, தேவதை தேவகி என்ற முழுநீள நகைச்சுவை நூலையும் எழுதி இருக்கிறேன். இத்தருணத்தில் இந்நூலுக்கு முகவுரை எழுதிய முனைவர் திரு.பா.ஜம்புலிங்கம் அவர்கள். வாழ்த்துரை எழுதிய திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்கள். அணிந்துரை எழுதிய திரு.வே.துளசிதரன் மற்றும் திருமதி.கீதா ரெங்கன் அவர்கள் முன்னுரை எழுதிய திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன்.


இதை மின் நூலாக்கும் எண்ணத்தோடு புதிய பரிமாணத்தில் நட்பின் இலக்கணத்தை குறித்து எழுதி வைத்து இருக்கும் கதையை மின் நூலாக்கி வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. எனது தளத்துக்கு இன்றைய தேதிவரை வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து நாற்பத்து ஆறாயிரத்து இருநூற்றி அருபத்தேழு  (846,267) இந்த உள்ளங்களுக்கு எமது நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன். எனது மூச்சு உள்ளவரை எனது எண்ணங்களை எமது கற்பனை பிம்பங்கள் திரு.சாம்பசிவம், திரு.சிவாதாமஸ்அலி மற்றும் திரு.Chivas Regal சிவசம்போ அவர்களின் துணையோடு இறுதிவரை எழுதிக் கொண்டு இருப்பேன். எனது எழுத்துப் பயணம் தொடர தங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி உங்கள்....
தேவகோட்டை கில்லர்ஜி
26.04.2020
26 ஏப்ரல் 2010 - 26 ஏப்ரல் 2020

85 கருத்துகள்:

 1. 10 ஆண்டுகள்!
  816 பதிவுகள்!

  விடாமல் இயங்குகிறீர்கள்
  நண்பரே!
  இனியும் எழுதுங்கள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   ரமதான் கரீம்

   நீக்கு
 2. இன்னும் பல நூறு பதிவுகளைத் தந்திடல் வேண்டும்....

  சமூகக் கோமாளிகளை அடித்துத் துவைத்துப் பிழிந்து காயப் போடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே...

  நவரத்தினப் பதிவாளர் என்று வருங்காலம் தங்களை வாழ்த்துவதாக!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு

 3. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் கில்லர் ஜி. இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் மின்நூல் வெற்றியடைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 6. பயனுள்ளவற்றையே எழுதுகிறீர்கள். சந்தேகமே வேண்டாம். சாதனைகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது தொடர் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 7. பத்தாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கில்லர்ஜி. உங்கள் மின் புத்தகம் வெற்றி அடையவும் வாழ்த்துகள். பதிவை முழுமையாகப் படிக்க மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி மீண்டும் வறுக்க, வருக!

   நீக்கு
  2. திரும்பி வந்து படிச்சேன் கில்லர்ஜி. ஆனால் கருத்திடவில்லை. உங்கள் சாதனைகள் தொடர்ந்து வெற்றி பெறட்டும். பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளாகக் கொடுத்து வருவதே ஓர் நிறைவான விஷயம். மீண்டும் வாழ்த்துகள்.

   நீக்கு
  3. மீள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 8. நன்றி ஜி...

  நட்பிற்கு இலக்கணமாக இருக்கும் உங்கள் நட்பு கிடைத்ததில், என்றும் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்...

  மற்ற கருத்துக்களை கடையில் கணினிக்கு சென்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பதிவுலகில் பலருக்கும் பலனாக இருக்கும் தங்களது நட்பூ கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

   தங்களது கருத்துரையை பிறகு தாருங்கள் ஆவலுடன் நானும்...

   நீக்கு
 9. பத்து ஆண்டுகள் - 816 பதிவுகள். மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி.

  பதிவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவு - கவலை வேண்டாம் - முன்பே ஒரு முறை சொன்னது போல, எழுதுவது நமது மனத் திருப்திக்கு மட்டுமே... என்னுடைய பதிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சொன்னால் உங்களுக்கு நம்பிக்கை வரலாம் - அதிக பட்சமாக பத்தாயிரம் பக்கப் பார்வைகள் வந்த பதிவுகள் மூன்றே மூன்று மட்டுமெ! சில ஆயிரங்களில். பெரும்பாலானவை நூற்றுக் கணக்கில் மட்டுமே! ஆனாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். மேலும் பல பதிவுகளை எழுதிட எனது வாழ்த்துகள்.

  உங்கள் மின்நூல் வெற்றி அடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   பதிவுலக பிதாமகன் தங்களுக்கே இப்படி என்றால் ???

   நானெல்லாம் என்ன செய்வது ? என்னால் எழுதாமல் இருக்கமுடியாது ஜி

   இறுதிவரை எழுதுவேன் தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ஜி

   நீக்கு
  2. பதிவுலக பிதாமகன் - ஹாஹா... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கில்லர்ஜி.

   தொடர்ந்து எழுதுங்கள்.

   நீக்கு
 10. வாழ்த்துகள் கில்லர்ஜி... தொடர்ந்து பயணியுங்கள்.

  பதிலளிநீக்கு
 11. வலைதிரட்டி இல்லாத்தால் நிறைய பதிவர்கள் தளத்துக்குச் செல்வதில்லை.

  அதுசரி... கடைசிப் படமும், 2027ல் டைம் மெஷினுல் சென்று எடுத்த செல்ஃபியும் ஒரேமாதிரி இருக்கு. என்றும் பதினாறு.... வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இதையெல்லாம் அலைபேசியில் கேட்டு இருக்கலாம் இப்படி கூட்டத்தில் கட்டிசோற்றை அவிழ்த்து விட்டு என்னை மானபங்கப்படுத்தாதீர்கள்.

   இருந்தாலும் உங்களுக்கு ஞானக்கண் இருக்கிறது உண்மைதான்.

   நீக்கு
 12. மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி. இன்னும் எழுதிக் கொண்டே இருங்கள். உங்கள் மின் நூல் வெற்றியடைய வாழ்த்துகள்.

  மிக்க நன்றி கில்லர்ஜி குறிப்பிட்டமைக்கு.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 13. உங்களை மீண்டும் எழுதத் தூண்டிய எழுதுகோல் அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டாக்டர் திரு.சுந்தர் அவர்களின் சார்பாக நன்றி.

   நீக்கு
 14. பன் மொழி வித்தகர். பன் முக எழுத்தாளர். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை துணுக்குகள் என்று எத்துறையிலும் எழுதி புகழ் பெற்ற தாங்களை 2027 கோவையில் சந்திக்க முயற்சிக்கிறேன். வாழ்க. வளர்க.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நிச்சயமாக கொரோனா ஒழிந்து நாம் சந்திப்போம்.

   நீக்கு
 15. Google Analytics படி சிலவற்றை இங்கே சொல்கிறேன்... சுருக்கமாக G.A. என்று வைத்துக் கொள்வோம்...

  // வருகையாளர்கள் குறைந்து விட்டதால் //

  இது உண்மையாகவும் இருக்கலாம்... ஆனால், G.A. படி பார்த்தோமானால், நம் பதிவிற்கு தொடர்ச்சியாக வரும் வலைப்பதிவர்கள் வருகிறார்கள்... படிக்கிறார்கள்... ஆனால் ஏனோ கருத்துரை இடுவதில்லை... அதே போல் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பக்கப்பார்வைகள் குறித்த எண்ணிக்கைகளும்... இதைப்பற்றி எழுதி வைத்திருந்த தொழினுட்ப பதிவும் என்றோ நீக்கி விட்டேன்... Dashboard-ல் காட்டுவதையே எடுத்துக் கொள்வோம்... ஆனால் உண்மை தகவல்கள் வேறு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 16. திரட்டிகள் குறித்து...

  எனது தளத்தைப் பொறுத்து : திரட்டிகள் எனக்கு தெரிந்ததே நம் மதுரை நண்பர் பிரகாஷ் மூலம்... அவர் தான் இணைக்கச் சொன்னார்... ஆனால், அதற்கு முன் நிறைய கருத்துரைகள் வரும்... அதாவது நிறைய பேர்களிடமிருந்து... அந்த குறிப்பிட்ட த.ம. திரட்டியால், மேலும் கருத்துரைகள் வந்தது உண்மை தான்... ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு (மகுடம்) சென்ற பின், கருத்துரைகள் குறைந்ததும் உண்மை தான்...

  எனக்கு மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உலகெங்கும் நட்பை திரட்டிகள் எனக்கு கொடுத்தன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் திரட்டிகள் பலநாட்டு நட்புகளை எனக்கு கொடுத்து இருக்கிறது உண்மையே...

   நீக்கு
 17. கருத்துரைகள் பற்றி...

  கருத்துரை இல்லாத ஒரு பதிவும் எனது தளத்தில் உள்ளது... அந்தப்பதிவு தான் எனக்கு அவரச நேரத்தில், பல உதவிகள் செய்து கொண்டிருக்கிறது ஜி...

  கருத்துரைப்பெட்டி தொழினுட்பங்களை அதில் தான் சோதனை செய்வேன்... பதிவில் செய்யும் தொழினுட்பங்களையும் சோதனை செய்வது அதில் தான்... இப்படி பல உண்டு...

  அதனால் உங்கள் பணியை, பாணியை தொடர்ந்து உற்சாகத்துடன் செய்யுங்கள் ஜி...

  நட்பின் இலக்கணமாக இருக்கும் நீங்கள், அதைப்பற்றி எழுதுவதை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே அந்தபதிவு உங்களுக்கு பயனளிப்பதில் மகிழ்ச்சி. கொரோனா போகட்டும் ஜி வேலையை தொடங்கி விடலாம்.

   நீக்கு
 18. எழுதுவது ஒன்று நம் கருத்துகளைக் கூற அதாவது நமக்காக இன்னொன்று பிறர் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து எழுதுவது பொதுவாக முகமூடி போட்டு எழுதுவதுதான் வரவேற்பு பெறுகிறது உங்கள்மன்ம் திறந்த எழுத்துகளுக்கு வரவேற்பு உண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கருத்துரை புத்துணர்ச்சி கொடுக்கிறது நன்றி தொடர்ந்து எழுதுவேன்.

   நீக்கு
 19. முத்தான பதிவுகளை இந்த பத்து ஆண்டுகளில் 816 பதிவுகளை பதிவிட்டு எங்களை மகிழ்வித்த தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!விரைவில் ஆயிரமாவது பதிவுகளை எட்ட மனமார்ந்த வாழ்த்துகள்!'பூவைப் பறிக்க கோடரி எதற்கு?' என்ற தங்கள் வலைப்பக்கத்தின் முகப்பு வரிகள் தான் என்னை தங்களின் வலைப்பக்கத்திற்கு இழுத்தது.

  ‘மனம் கெட்டது கேட்டது’ என்ற தங்களின் கவிதைக்கு பின்னூட்டம் தந்ததாக நினைவு. எப்படி விட்டுப் போயிற்று எனத் தெரியவில்லை. கருத்து தந்த நான் எப்படி பின்னூட்டம் தராமல் இருக்கமுடியும்? எப்படியோ விட்டுப்போயிருக்கிறது. மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   தங்களது வருகைக்கும், ஊக்கமான தொடர் கருத்துரைக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 20. 11 ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!
  உங்கள் மன திருப்த்திக்கு எழுதுங்கள்.
  பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
  உங்களை பதிவுகள் எழுத தூண்டிய அபுதாபி நண்பருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
  மின்நூலுக்கு வாழ்த்துக்கள்.

  அட்சய நாளில் 11ம் வருடம், பெருகட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 21. வலைத்திரட்டி: வலை ஓலை

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

  இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

  மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

  தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

  ஒரே பார்வையில் எமது தளங்கள்:
  1. வலை ஓலை
  2. எழுத்தாணி
  3. சொல்

  தங்கள் பதிவு - எமது திரட்டியில்: கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவை தங்களது திரட்டியில் இணைத்தமைக்கு நன்றி.

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  தங்களது பத்தாண்டு சாதனைகளுக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த்துகள். தாங்கள் இதுவரை 816 பதிவுகள் எழுதியிருப்பதை கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களது பதிவுகள் எங்கள் சிந்தனைகளின் தூண்டுகோல். ஆதலால் இன்னமும் பல ஆயிரம் படைப்புகளை தந்து எப்போதும் எங்கள் சிந்தனைகளுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

  தங்களின் மின்னூல் ஆக்கத்திற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  உங்கள் முதல் பதிவில் என் கருத்துரையும் இருக்கக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். 12க்கு பிறகுதான் நானும் வலைத்தளத்தில் கால் பதித்தேன். அன்றிலிருந்து இன்று வரை தங்கள் பதிவுகளை விரும்பி வாசித்து வருகிறேன். கவிதைப் பதிவில், நான் எங்கள் வீட்டு பிரச்சனைகளால் வரவில்லை போலும்...! தாங்கள் வலையுலகில் இன்னமும் நிறைய பதிவுகளை படைத்து சிறந்து விளங்க மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது தொடர் ஆதரவை கொடுத்து வருவமைக்கு முதற்கண் நன்றி.

   பதிவை விரிவாக அலசி கருத்திட்டமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 23. முதலில் தங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுத வேண்டும். அதுவே என் அவா. உங்களைப் போன்ற பதிவர்களை ஊக்குவிக்கவே வலைத் திரட்டியை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் வலைத் திரட்டி என்ற ஒன்று இருப்பதை நினைவுபடுத்தினால்தான் திரட்டிக்கே பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அனைத்து பதிவர்களும் எமது திரட்டியை பயன்படுத்த வேண்டும். எமது திரட்டி பிடிக்கவில்லை அல்லது ஏதேனும் காரணம் இருந்தால் வேறு திரட்டிகள் உருவாக பூரண ஆதரவு தரவும் நான் தயார். அனைவரும் ஒன்றிணைவோம். வலையுலகை மீட்டெடுப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களது சேவை பதிவுலகுக்கு பெரும்பேறு.

   நீக்கு
 24. வாழ்த்துக்கள் ஜீ! தொடர்ந்து எழுத ஆர்வமும்/ஓய்வும் முக்கியம். அது உங்களுக்கு அமைந்தது கொடுப்பனை. உங்களின் பல பதிவுகள் படித்தாளும் .சோம்பலினால் பின்னூட்டம் இடுவதில்லை .ஆனால் வலையை எட்டிப்பார்க்கின்றோம். எழுதுப்பணி தொடரட்டும் சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 25. திரட்டிக்கள் செயல் இழந்ததும் ,வலைப்பதிவர்கள் முகநூலில் சங்கமிப்பதும் வலையை மறக்க வைக்கின்றது. அடிக்கடி எழுத ஆசை பார்ப்போம்!கொர்னா முடிவுக்கு வரட்டும்.

  பதிலளிநீக்கு
 26. வித்தியாசமாகவும் நகைசுவையாகவும், மாறுபட்ட கோணத்தில் எழுதுவதில் வல்லவர். இப்படியான திறமையை மங்கவிடாது தொடர்ந்து எழுதுங்கள். மென்மேலும் தொடர்ந்து எழுதவும், தங்கள் எழுத்து மின்னூலாக விரைவில் வெளிவரவுவேண்டும் என வாழ்த்துகின்றேன்.. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 27. வலைப் பூவில் பத்து ஆண்டுகள் என்பது மிகப் பெரிய சாதனை
  வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 28. 11ம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. ஒரு தசாப்தத்தை கடந்த உமக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

   நீக்கு
  3. வருக தோழர் மிக்க நன்றி.

   நீக்கு
 29. பத்தாண்டுகள் முடிஞ்சு போச்சா கில்லர்ஜி.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  நான் மறந்தே போனேன், 2019 பெப்ரவரியில் என் புளொக்குக்கு 10 ஆண்டு நிறைவு.. அதை எல்லாம் கணக்கெடுக்க மறந்து போய் விடுகிறேன் நான்.

  நேற்றுத்தான் ஆரம்பித்தோம் என்பது போலத்தானே இருக்குது அனைத்தும், ஆனால் எப்படிப் பறக்கிறது.. இந்த இடைவெளியில் பல புளொக்கேர்ஸ் ஐயும் இழந்து விட்டோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் வாழ்த்துகள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துதான் விட்டது.

   நீக்கு
 30. பத்து ஆண்டுகளா கடந்து போனது?
  நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்!
  தங்கள் எழுத்துப் பணி தொடர வேண்டும்!
  தங்கள் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன்.
  வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 31. மிக மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் அண்ணா

  தொடரட்டும் தங்களின் இனிய பணி...💐💐💐💐

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
  2. மிகத் தாமதமாக வந்து வாழ்த்துகிறேன். அன்பு தேவகோட்டை ஜி. தங்களின் அரிய சாதனைக்கு மனமார்ந்த ஆசிகள். பாராட்டுகள்.
   வளமே வாழ வேண்டும்.
   நிறைய எழுத வேண்டும் . அனேகம் நட்புகள் கூடி இருந்து படிக்க வேண்டும். எழுத்து ஒன்றுதான் நமக்கு ஊன்றுகோல்.

   வாழ்க வளமுடன் மா.

   நீக்கு
 32. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

  தாங்கள் எனது தளம் வந்து 11 நாட்களாகிறது.

  பதிலளிநீக்கு
 33. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .

  பதிலளிநீக்கு
 34. வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 35. நாங்கள் எல்லாம் புத்தாண்டு கொண்டாடும் வேளையில் நீங்கள் பத்தாண்டு நிறைவு கொண்டாடுவது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது ... உங்கள் எழுத்தில் ஒரு வசீகரம் தென்படுவது மறுக்கமுடியாத உண்மை ... தொடர்ந்து எழுதுங்கள் ... அந்த புத்தக திருவிழா ஷோரூமில் காணுமிடமெல்லாம் உங்கள் நூல்களே காட்சிதருவது மனமகிழ்வை தருகிறது ... வாழ்த்துக்கள் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது மகிழ்ச்சி கண்டு எமக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 36. 10 ஆண்டுகளும் 800கும் மேற்பட்ட பதிவுகளும் ஒரு பெரும் சாதனை நண்பரே.
  வலை சித்தர் திண்டுக்கல் தனபாலன் சொன்னதையே நானும் கூற விரும்புகிறேன்.
  தங்கள் நட்பு கிடைத்தது எமது நல்லூழ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்கிறேன்

   வருகைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 37. வாழ்த்துக்கள் சகோதரரே! கருத்துரைகள் பெறாததால் அவை நல்ல இடுகைகள் என்பதாக ஆகிவிடாது. உங்கள் எழுத்துப் பயணம் சிறந்து தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது எழுத்துப்பயணத்துக்கு வழிகாட்டியாக வரும் தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 38. ;( மன்னிக்க வேண்டும். நடுவில் ஒரு சொல் தட்டாமல் விடுபட்டுப் போயிருக்கிறது. கருத்துரைகள் பெறாததால் அவை நல்ல இடுகைகள் அல்ல என்பதாக ஆகிவிடாது எனச் சொல்ல வந்தேன். ;(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நானும் இப்பொழுதுதான் கவனித்தேன் பரவாயில்லை மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 39. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!

   நீக்கு