தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 11, 2020

நான் தகுதியை மீறியவன்முன்குறிப்புயார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதியதல்ல நடந்த, நடக்கும் யதார்த்தமான உண்மைகளை சாதாரணமாக சொல்லிப் போக நினைக்கும் வழிப்போக்கன் நான் - கில்லர்ஜி

லுவலகங்களின் மலையாளிகள் எப்படி வேலை செய்கின்றார்கள் ? என்பதை பார்ப்போம் அதாவது நான் சொல்ல வருவது ஆபீஸ்பாய்களின் வேலையைப் பற்றி (நம்மூரில் பியூன் என்போம்) பெரும்பாலும் இவர்களின் வேலை காலையில் வந்தவுடன் அனைத்து ஸ்டாப்புகளுக்கும், காஃபி, டீ, மற்றும் அரேபியர்கள் குடிக்கும் காவா, துர்கீஷ் போன்றவைகளை கிட்சனிலிருந்து போட்டுக் கொடுக்க வேண்டும் அடுத்து ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும் பேப்பர்கள், ஃபைல்களை மற்ற ஸ்டாப்புகளுக்கு கொடுக்க வேண்டும் மீதிநேரம் அலுவலக தொலைபேசியில் அறிந்தவர் தெரிந்தவரிடம் கடலை போடுவது, கண்ணாடிச் சுவற்றின் வழியே வெளிப்புற காட்சிகளை வேடிக்கை பார்ப்பது இத்துடன் வேலை முடிந்து விடும் ஏஸியின் உள்ளே வேலை கஷ்டம் இல்லை ஓரளவு நல்ல சம்பளம் இந்த வேலையில் ஏறுவதற்கு கூடுதலான படிப்புத்தகுதி தேவையில்லை படிக்காத பாமரனான நான்கூட ஏறியது இந்த வகைதான் சரி வேறு என்னதான் வேண்டும் ?

மொழிகள்
ஆம் மொழிகளே போதுமானது இந்த வேலைகளில் மலையாளிகள் 85 % இடத்தைப் பிடித்து விடுவார்கள் மீதி 15 % இடத்தை தமிழர்கள் பிடித்துக் கொள்வார்கள் இந்த சதவீதத்தில் இவ்வளவு ஏற்றத்தாழ்வா... என்று கேட்கிறீர்களா ? ஆம் இதற்கு அடிப்படை காரணம் மலையாளிகள் தமிழர்களைப் போல் தமிழ் வாழ்க என்றும், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது போன்ற வெட்டி கோஷங்கள் இடுவதில்லை மலையாளி எனத்தெரிந்ததும் ஆங்கிலம் பேசுவதில்லை குறிப்பாக உதவும் மனப்பான்மையில் தமிழர்கள் போலில்லை.

ஒருவனின் முகத்தை கண்டதுமே...
மலையாளியானோ ?
என்ற கேள்விக்கு எதிர் புறமிருந்து...
அதே
என்ற பதில் வந்தால் போதும் அவனது ஜாதகம் இவனுக்கும், இவனது ஜாதகம் அவனுக்கும் கை மாறிவிடும், வெட்டியாக மலையாளம் வாழ்க என்றோ... மலையாளி என்று சொல்லடா மலையைப் புரட்டிப் போடடா என்ற வெட்டிக் கோஷம் போட மாட்டார்கள் ஆனால் மலையைப் புரட்டி விடுவார்கள், மலையாளத்தை வாழ வைத்துக் கொண்டு இருப்பார்கள், மலையாளி ஒருவன் வேலை தேடி வந்தால் அவனை எந்த வகையிலாவது உள்ளே நுழைத்து விட முயற்சிப்பார்கள் முதலில் மலையாளி ஜாதி, மதம் இரண்டாம் பட்சம் H.R.டிபார்ட்மெண்டுக்கு வரும் ஃபேக்ஸ்களை எடுத்துக் கொடுக்கும் வேலையில் கண்டிப்பாக மலையாளியே இருப்பார்கள் வரும் ரெஸூமில் (Curriculum Vitae) மலையாளி என்றால் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்து விடும் தமிழன் என்றால் குப்பைத் தொட்டிக்குள் சுக்கு நூறாகி விடும் இது பொய்யில்லை கண்ட உண்மை.

ஆம் நான் கேட்டவைகளை விட கண்டவை அதிகம் இவ்வளவும் கடந்து தமிழன் ஏறிவிட்டால் அதற்கு சாமர்த்தியம் வேண்டும் நான் ஏறினேன், சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சார்ஜாவில் தங்கநகை வேலை செய்து கொண்டிருந்த தம்பியை துளியும் அரபு வாடையே தெரியாதவனை எந்த மலையாளிகளும் அறியாத வகையில் உள்வேலை செய்து எனது டிவிஷனிலேயே ஆபீஸ்பாயாக ஏற்றினேன். நான் பொருப்பேற்று பேசப்பழக்கினேன், பேசப்பழகினான், பழகியதுதான் தாமதம் சண்டை போட ஆரம்பித்து விட்டான் ஒரு மனிதன் வேற்று மொழியில் பேசி சண்டை போட பழகி விட்டான் என்றால் 75 % மொழி படித்து விட்டான் என்று பொருள் இவர்களுடன் இலவு கூட்ட என்னால் முடியாதென பத்து வருடங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்து விட்டான். அவனுக்கும் ஒரளவு அரபு படிக்கவும் தெரியும்

சரி சதவீத ஏற்றத்தாழ்வின் காரணம் மலையாளிகள் மொழிகளை சுலபமாக பேசப்பழகி விடுவார்கள் அதனால்தானே தமிழ்த் திரையுலகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் பேச்சாற்றல் பார்த்து உள்ளுக்குள் வியந்திருக்கின்றேன் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டேன் ஆரம்ப காலங்களில் தெரிந்தவன் போல் நடித்து தெரிந்தவனாகவே முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன் இன்றுவரை..... இல்லை இறுதிவரை.... உண்மையில் அவர்களின் மீது பொறாமை கொண்டே நான் மொழிகள் படிக்க கற்றுக் கொண்டேன் ஆம் முதன் முறையாக1996 கோயா என்ற மலையாளி தமிழ் வாரப்பத்திரிக்கை படித்தான் அதைப் பார்த்ததும் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்தது இரண்டு பேருமே அபுதாபி வந்து ஆறு மாதம்தானே ஆகிறது இவன் மட்டும் நமது தமிழை எப்படி படித்தான் ? அப்படியானால் அவனது மலையாளத்தை நாம் படித்து அவனை பழிக்குப்பழி வாங்க வேண்டாமா ?

அன்றே தொடங்கிய முயற்சி விஜயன், கரீம், தங்கச்சன், முஹம்மது போன்ற மலையாளிகளின் உதவியால் மலையாளம் எழுதப்படிக்க கற்று1996 டிசம்பர் மாதமே டைரியை மலையாளத்தில் எழுத தொடங்கி விட்டேன். மலையாளிகள் மொழிகள் படிப்பதின் சூட்சுமமும் எனக்கும் புரிய ஆரம்பித்தது ஆம் துணை மொழியொன்று பழகி விட்டால் அடுத்தடுத்த மொழிகள் சுலபமாக புரியத் தொடங்கி விடுகிறது ஆகவே அதன் காரணமாகவே அரபி படித்தேன், ஹிந்தி ஓரளவு படித்தேன், தெலுங்கு முயன்று கொண்டே இருக்கிறேன் இருப்பினும் நான் ஆரம்ப காலத்தில் இருந்த வேகமும், ஞாபக சக்தியும் இப்பொழுது இல்லை என்பதையும் நான் உணர்கின்றேன் இருப்பினும் முயற்சிப்பேன் காரணம் 2010-ல் ஒரு நண்பரிடம் சைனா மொழியை நான் கண்டிப்பாக படிப்பேன் என்று சொல்லியிருந்தேன் அதற்கான வாய்ப்பும் நேரமும் இன்னும் அமையவே இல்லை.

மலையாளிகள் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் கணித்து விடுவார்கள் நமது சம்பள உயர்வுக்கு வழி என்ன ? வேலை செய்வது இரண்டாம் பட்சம் இதுதான் சம்பளம் என்பது தீர்மானமாக தெரிந்து விட்டால் தன்னை திறமைசாலி என்பதை காட்டிக் கொள்ளமாட்டார்கள் மாறாக முட்டாளாக காண்பித்துக் கொள்வார்கள் அரேபியர்கள் ஏதும் வேலை சொன்னால் தெரிந்தும் எனக்குத் தெரியாதே எனச்சொல்ல வெட்கப்பட மாட்டார்கள் அவனும் உடனே முக் மாபி (மூளை இல்லை) என்று சொல்லி விட்டு போய் விடுவான் இவன்தான் நல்ல சம்பளம் வாங்குகிறானே... தெரியவில்லை என்றால் இவனுக்கு இவ்வளவு சம்பளம் எதற்கு ? என்ற சிந்தை அவனுக்கும் வராது காரணம் அவனுக்கும் மூளை இல்லை. மலையாளிகள் நமக்கு தேவை சம்பளம் அது போதும் என்ற கொள்கையாளர்கள் ஆத்மார்த்தமான வேலைக்கு இடமே இல்லை.

ஆனால் தமிழர்கள் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்ற சித்தாந்தவாதிகள் திறமைசாலி என்ற பெயர் எடுக்க வேண்டும் என்பதால் தெரியாததைக்கூட முயன்று செய்து கொடுத்து விடுவார்கள் அதற்கு அரேபியர்களிடமிருந்து கிடைப்பது இந்தே முக் தமாம் (உனக்கு நல்ல மூளை) இதன் மூலம் பலன் என்ன ? தமிழனை மூளைக்காரன் என்று சொல்லியே வேலை கொடுத்து கொன்று கொண்டிருப்பான், மலையாளியை மூளையில்லை என்று சொல்லியே உட்கார வைத்துக் கொண்டு இருப்பான் ஆனால்  இருவருக்குமே சம்பளம் ஒரே நிலைதான் இதில் அறிவாளி யார் ?

நான் மட்டுமென்ன... தமிழ் ஜாதிதானே... திறமையைக் காண்பிப்போம் என்று எழுதிப் படித்துக் காண்பித்து தகுதிக்கு மீறிய செயல்களை செய்து காண்பித்து Office Boy யாக இருந்த நான் Filing Clerk ஆக்கப்பட்டேன் லாபம் என்ன ? மாடுபோல உழைத்துக் கொண்டு இருந்தேன் பெரிய பொச்ஷிசன் போல் தெரியலாம் சம்பளம் ஒரே நிலை காரணமென்ன ? நான் படிக்காதவன் சான்றிதழ்கள் இல்லை இருப்பினும் அந்நாட்டு அரசின் சட்டப்படி எனது சம்பளம் நியாயமாகலாம், தர்மப்படி அநியாயமே இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எனது மனசாட்சி சொல்வதென்ன ?


எனது படிப்பு (?) தகுதிக்கும் பொருப்பான வேலை, கம்ப்யூட்டர், இண்டர்நெட், டெலிபோன், விசிட்டிங் கார்ட், வாக்கி டாக்கி (135 நபர்களில் எட்டு நபருக்கு மட்டுமே வாக்கி டாக்கி அதில் கில்லர்ஜியும் ஒருவன்) இவ்வளவும் கொடுத்திருக்கின்றார்களே... கம்ப்யூட்டர் கொடுத்ததால்தானே சுயமாக நாமே தட்டச்சு பழகிக் கொண்டோம் தமிழ் உள்பட, முள்மீன் சாப்பிட ஆசை முள் குத்ததானே செய்யும் ? என்னவொன்று மனையாளும் இருந்திருந்தால் வாழ்வு முழுமை பெற்றிருக்கும். இந்தியாவில் எவ்வளவோ பேர் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கின்றார்கள் நமக்கு இது அதிகம்தானே என தினமும் அலுவலகம் புறப்படும் முன் என்னை நானே கண்ணாடியில் கேட்ட பிறகே புறப்படுவேன் இந்தக் கேள்வி எனக்கு ஆத்ம திருப்தியை தந்தது காரணம் படிக்க வில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை என்னும் தீ என்னுள் கனலாய் இன்றுவரை எரிகின்றது...

76 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போதான் கண்ணில பட்டுது.. பதறி அடிச்சு ஒடி வந்தால்.. கொரோனாவையும் பார்க்காமல் ட்றுத் ஓடிவந்திட்டாரே.. இது நீதி நியாயம் இல்லை ஜொள்ளிட்டேன்ன்ன்:))

   நீக்கு
 2. படிப்பிற்கு வயது இல்லை.. நீங்கள் நினைத்தால் ஆன்லைனிலே அதிகம் கற்றுக் கொள்ள முடியும் ஒரு அமெரிக்கர் 50 வயதானவர் பொருளாதார நிலையால் அவரால் படிக்க முடியவில்லை இப்போது அவர் தன் பொருளாதாரத்தை கஷ்டப்பட்டு உயர்த்தி அவர் பொண்ணு படிக்கும் லா காலேஜிலிலே அவரும் ஒரு மாணவராக களாஸ் மேட்டாக இருந்து படித்து கொண்டிருக்கிறார். நானும இந்த வயதில் பலவற்றை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   மனம் இளமையாக இருந்தால் வயதின் முதிர்ச்சியும், எண்ணிக்கையும் விழிகளுக்கு தென்படாது.

   சமீப காலமாக வாழ்க்கைச்சூழலால் மனம் தளர்ச்சியாகி விட்டது அதிலும் தற்போது கொழுந்தியாள் கொரோனா உலகையே கலக்கி கொண்டு இருக்கிறாள்.

   ஆடி போயி ஆவணி வரட்டும் வண்டி டாப் கியரில் போகும்'னு சொல்லுறாக!

   வருகைக்கு நன்றி தமிழரே

   நீக்கு
  2. ஆனா, எந்த வண்டி என ஜொள்ளிட்டினமோ கில்லர்ஜி:)) ஹா ஹா ஹா.. மனதை எப்பவும் சோர விட்டிடாதீங்கோ கில்லர்ஜி, நம் மனதை/நம்மை நாம் தான் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயலோணும், அடுத்தவர்கள் செய்வார்கள் எண்டெல்லாம் நினைச்சே பார்க்க முடியாது...

   கொரோனா கொழுந்தியா என்றால்.. நீங்க அடங்கித்தான் போகோணும் வேறு வழி?:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. கில்லர்ஜி இந்த வயதில் மனம் தளர்ச்சி ஆகிவிட்டது என்று சொல்லாதீங்க நிச்சயம் உங்களால் முடியும் சாதிக்க வயது ஒரு பொருட்டு அல்ல இனிமேல் உங்களிடம் இருந்து மனக்கஷ்டம் போன்ற வார்த்தைகளை இங்கே நான் பார்க்க கூடாது

   நீக்கு
  4. வாங்க அதிரா கொழுந்தியாளிடம் அடங்கிப்போக என்னால் முடியாது.

   தங்களது ஆறுதல் மொழிக்கு நன்றி.

   நீக்கு
  5. நன்றி தமிழரே முயல்கிறேன் மீள் வருகைக்கு மீண்டும் நன்றி.

   நீக்கு
 3. அவர்களின் ஒற்றுமை இங்கில்லை என்பது உண்மை...

  ஆனால் இங்கு 'இது நம்ம ஆளு' என்று உண்டு...

  'பரியேறும் பெருமாள்' படம் பார்த்து விட்டீர்களா...?

  'தீ'யை அணைக்க வேறு சிந்தனைக்கு மாறுங்க ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி
   உண்மைதான் படம் பார்க்கவில்லை.

   தங்களது ஆலோசனையை ஏற்கிறேன் நன்றி.

   நீக்கு
  2. நான் படம் பார்த்திட்டனே:)

   நீக்கு
  3. அடடே வாத்துகால்.

   நீக்கு
 4. கடந்த காலம் திரும்ப வரப்போவதில்லை, அதனால அதை நினைத்து வருந்தி இப்போதைய மகிழ்ச்சியை இழப்பது தப்பு... போனதை நினைக்காமல் இப்போ உள்ள திறமைகளையும் நிலைமையையும் நினைத்து சந்தோசமாக இருக்கோணும்... நமக்கு மேலே இருப்போரைப் பார்க்காமல், நமக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடுவோம்:))...

  நீங்களும் உங்களைப்போல பலரும் திட்டினாலும்:) எந்த சினிமாக் காரரும் அதைக் கேட்ட்டுச் சோர்ந்து போவதில்லையே:)) முடிஞ்சவரை முயற்சித்து முனேறிக் கொண்டே இருக்கிறார்கள்:)) அப்படித்தான் நாமும், எதையும் நினைத்துக் கவலைப்படாலம் முட்டி மோதி முன்னேறிக் கொண்டு போகோணும்:) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உனக்கும் கீழே உள்ளவர் கோடி
   நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு/^

   எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அதிரா சினிமாக்காரனை நான் திட்டுவது பொதுநலமே... தனிப்பட்ட விரோதம் அல்ல!

   நீக்கு
 5. நானும்  மேற்படிப்பு படித்தேன் ஆனால் எதுக்கும் சம்பந்தமில்லாம பேப்பர் கிராஃப்ட் அது இதுன்னு சுற்றி இப்போ மனநலம். .எனது ஹாஸ்பிடலில் மெண்டல் ஹெல்த் நர்சிங் அல்லது occupational தெரபிஅல்லது சைக்காலஜி  படிக்க சொல்ராங்க :) யூனிவெர்சிட்டியில் மகளும் நானும் ஒரே நேரமானு தவிர்த்தேன் ஆனா இப்போ ஆசையா இருக்கு .இங்கே 15 வருடம் இடைவெளி விட்டும் மீண்டும் பல்கலையில் படிக்க பெறுவோர் உண்டு .மனமிருந்தால் மார்க்கமுண்டு .ஒரு கிளீனர் பெண்மணி ( அவர் வேலை தரை துடைப்பது குப்பை எடுத்துப்போடுவது (பிரிட்டிஷ் )ஆர்வ மேலீட்டால் படிச்சு இப்போ நர்ஸ் வார்டன் ஆகியிருக்கார் எங்கள் மனநல வார்டில் .
  தயங்காமல் யோசிக்காமல் ஏதாவது விருப்பமான கோர்ஸ் எடுத்து படிங்க . கணினி அக்கவுன்டிங் டிசைனிங் எவ்வளவோ இருக்கே .மனசுக்கு பிடிச்சதை தள்ளிப்போடாம உடனே செய்யணும்  முக்கியமா படிப்பு விஷயத்தில் .நான் ஆசிரியப்பயிற்சி இந்தியாவில் சேந்தப்போ அப்போ 20 வயதில் என்னுடன் 5  பேர் 57 வயதில் இருந்தவங்க சேர்ந்தாங்க எதற்கும் கவலைப்படலை அந்த ஐந்து பேருமே  85% மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணாங்க :) 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது அனுபவத்தை நீண்ட கருத்துரையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 6. நீங்க படிச்ச மொழிகளில் ஒன்றைக்கூட பல்கலை பட்டதாரிகள் படிக்கலை ...Iam so proud of you

  பதிலளிநீக்கு
 7. உங்கள் முயற்சி, உழைப்பு ஏற்கெனவே அறிந்தது, எப்போதும் வியக்க வைப்பது. உங்கள் அனுபவங்கள் பாடங்கள், சுவாரஸ்யம். ரசித்தேன் பதிவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அவர்களின் வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி

   நீக்கு
 8. தகுதியை மீறியவன் என்று சொல்வது தன்னடக்கம். நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் உங்களைப் படிக்காதவர் என்று சொல்வதை நம்பமுடியாது/

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வேலை செயதவிடத்தில் மனதை பாதித்த நிகழ்வுகளை எண்ணி வருந்த வேண்டாம். இதற்கு முன் பல பதிவுகளில் தங்களது கற்றல் திறமை கண்டு நான் வியந்திருக்கிறேன். உங்களது அலுவலக உழைப்பு, நேர்மை, திறமையான மொழிகள் கற்றல், இவையே உங்களது தாழ்வு மனப்பான்மை என்ற தீ கனல்களை குளிரச் செய்யும் தன்மை கொண்டவை. எனினும் உங்கள் ஆசைக்காக உங்களின் ஆற்றலால் இப்போதும் படித்து பட்டங்கள் வாங்கலாம். அதில் முயற்சி உடையவர் நீங்கள் என்பது சந்தேகமற எங்களுக்குத் தெரியும். எனவே முயற்சி செய்யுங்கள். எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு என்றென்றும் உண்டு.

  என் உறவுகளில் ஒருவர் இன்னமும் மேற்படிப்பு படித்து பட்டங்கள் வாங்கிக் கொண்டேயுள்ளார். அவரைப் பார்த்து எனக்குள்ளும் அவ்வப்போது நீங்கள் சொல்லிய தீ எழும். ஆனால் சூழல்களின் காரணமாக அதைக் குளிரச் செய்ய உங்களுடைய திறமைகள் போன்று என்னிடம் எதுவுமில்லை என்பதே உண்மை. அந்த உண்மையின் தாக்கத்தால் தீ வளையத்திற்குள்தான் நான் என்றுமே நிற்கிறேன். மனம் திறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ

   பதிவை ஆழ்ந்து படித்து கருத்து மழை பொழிந்தமைக்கும், ஆறுதல் மொழிக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. கவலை வேண்டாம் கில்லர்ஜி. படிப்புக்கு வயது என்பதே இல்லை. கொஞ்சம் மனதை ஒருமைப் படுத்திக் கொண்டீர்களானால் நீங்களும் நிறையப் படிக்கலாம். தொழில் துறையில் மாபெரும் வெற்றி பெற்ற திரு டாடா அவர்கள் (இப்போதிருப்பவர் இல்லை. தொழிலை ஆரம்பித்து வைத்த டாடா) பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்பார்கள். இப்படி நிறையப் பேர் உண்டு. வாழ்க்கையில் வெற்றி பெறப் படிப்பு மட்டும் முக்கியம் இல்லை. ஆனால் மனைவி உங்களுடன் இல்லை என்பதில் உங்களுக்கு இருக்கும் வருத்தம்! அதை யாரால் சரி செய்ய முடியும்? அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   இவ்வளவு காலமும் நன்றி கெட்ட உறவுகளுக்காக எனது வாழ்வை இழந்ததை எண்ணி வெட்கமாக இருக்கிறது.

   வீட்டில் மனைவி இல்லாத ஆண்மகன் நடைபிணத்துக்கு சமம்.

   தங்களது ஆறுதல் மொழிக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 11. கற்றுக் கொள்ள வயது தடையல்ல கில்லர்ஜி. உங்களிடம் அசாத்திய திறமை இருக்கிறது.

  கலக்கம் வேண்டாம். நல்லதே நடக்கும். நம்பிக்கை கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   நம்பிக்கையே வாழ்க்கை வாழ்வோம் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 12. நீங்கள் தகுதியை மீறியவர் அல்ல; தகுதியை வென்றெடுத்தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கு நல்வரவு நண்பா!

   நீக்கு
 14. இங்கே சவூதிக்கு போய் வந்தவர் சொல்வார், சில இடங்களில் மலையாளி என்றால் வேலைக்கே எடுக்க மாட்டார்கள் என்று, அவ்வளவு கெட்ட பெயரா?

  மற்றபடி படிக்காததெல்லாம் தற்போது ஒரு குறையே இல்லை. வாழ்க்கையை படித்திருக்கிறீர்கள், மிகப்பெரிய அளவில் பதிவுலக நண்பர்களை பெற்றிருக்கிறீர்கள், அதுபோதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்ரே
   தாங்கள் கேள்விப்பட்டது உண்மையே சௌதியிலாவது வேலை கொடுத்து விடுவார்கள் மதம் காரணமாக

   ஆனால் சிங்கப்பூரில் மலையாளிக்கு அனுமதியே இல்லை காரணம் உழைக்க மாட்டான் என்பதால்
   இதன் காரணமாக மலையாளிகள் தமிழ்நாட்டு முகவரியில் பாஸ்போர்ட்
   எடுப்பார்கள்.

   நீக்கு
 15. தாழ்வு மனப்பான்மையை முதலில் தவிர்த்துவிடுங்கள். அது வளர்ச்சியைக் குறைத்துவிடும். நம் நட்பு வட்டாரத்தில் பலமொழியறிந்த, அனுபவங்கள் பல பெற்ற உங்களை நான் சில வேளைகளில் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் முன்னுதாரணமாக பலவற்றில் இருப்பதை நான் உணர்கிறேன். உங்களுக்கு வருகின்ற பின்னூட்டத்தை வைத்தே நீங்கள் எழுத்தின்மூலமாக எங்களை எந்தஅளவிற்கு கட்டிப்போட்டு வைத்துள்ளீர்கள் என்பது அனைவருக்கும் தெரியுமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே
   தங்களது வருகைக்கும், தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 16. மலையாளிகளுடன் சுமார் நாற்பது ஆண்டு காலமாக பணியாற்றியவன் நான். அவர்கள் எந்த மொழி பேசினாலும் மலையாள வாடை அடிக்காமல் இருக்காது. திறமை இல்லாமலேயே முன்னுக்கு வருவது எப்படி என்பதை அவர்களிடமிருந்து தான் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   தங்களது தெளிவான கணிப்பு கண்டு பிரமித்து நிற்கிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. மலையாளத்தில் 50 வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் நான் மலையாளிகள் பற்றிய கருத்துக்களை ஆமோதிக்கிறேன். அலுவலகம் என்று வரும்போது திறமைகளை விட காகித பட்டங்களுக்கே மதிப்பு அதிகம். அதுவும் அரசு அலுவகங்களில் மிகவும் அதிகம். மலையாளிகளின் ஒற்றுமை வெளிநாட்டில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இங்கு கேரளத்தில் அலுவகங்களில் கிடையாது. "പാറ വൈപ്പു " தான். 
  எனது நண்பர் எழுதிய ஒரு குறள்.
  பல்பொருள் பல்பொருள் ஆய்ந்துமே 
  நல்பொருள் நல்பொருள் கல் 
  என்ற விதமாக இத்தனை மொழிகளை தானே தானே கற்றுள்ளீர்கள். இதைவிட வேறு என்ன திறமை என்ன வேண்டும்.  திறமைகள் பதிவுலகில் போற்றப்படும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா என்னைவிட பல்மடங்கு அனுபவம் வாய்த்தவர் தாங்கள் தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   பாறை வைப்பு ரசித்தேன் ஐயா.

   தொடர்ந்தால் மகிழ்ச்சி

   நீக்கு
 18. சிறப்பு.

  இந்த பதிவை அனுபவம் என்று வகைப்படுத்தியிருக்கலாம்.

  நமது வலைத்திரட்டி: வலை ஓலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இணைப்பிற்கு நன்றி தங்களது கருத்துரைக்கும, நன்றி

   நீக்கு
 19. அயரா உழைப்பின் திருஉருவம் தாங்கள்
  அதனால் அல்லவா பன்மொழி வித்தகராய் இருக்கிறீர்கள்
  தங்களிடம் தாங்களே அறியாமல் ஏதேனும் தாழ்வு மனப்பான்னை ஒளிந்திருப்பின், அதனைக் கண்டெடுத்து தூக்கி தூர எறிந்துவிடுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது ஆலோசனைங்கு நன்றிகள் பல!

   நீக்கு
 20. படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு அதில் நீங்களும் ஒன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் கருத்துரைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 21. கில்லர்ஜி உங்கள் திறமை குறிப்பாக மொழி கற்கும் திறமை அசாத்தியம். இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. படித்தவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலித்தனத்திற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது போல.

  உங்களால் இப்பவும் முடியும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள. அதற்கு வயது முக்கியமில்லை. வீட்டுச் சூழலைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அப்ப மற்றவை எல்லாம் புறம் போகிவிடும்.

  இரு பாடல்கள் எனக்கு மிக மிக பிடித்தவை அதை நினைத்துப் பார்ப்பது அடிக்கடி...புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை....வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற பாடலும் மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா....உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..

  அருமையான வாரிகள் இல்லையா கில்லர்ஜி!!

  அதே! எனவே உங்களைச் சுற்றி யுள்ள நெகட்டிவ் மனிதர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல், கொரொனா கொழுந்தியாள் ஹா ஹ அப்ப அதுக்கு மட்டும் பம்மி இருந்துட்டு...உற்சாகமாக உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வழியில் பயணியுங்கள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அற்புதமான இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது.

   தங்களது விரிவான கருத்துரையை தந்தமைக்கு நன்றி.

   இனி பாசத்துக்கு வேலையில்லாமல் நான், எனது என்று மிச்ச காலத்தையாவது கடக்க தீர்மானித்து விட்டேன்

   கொரோனாவின் தயவால் இனியாவது மகிழ்ச்சி கிட்டும் என்ற நம்பிக்கையோடு ..

   நீக்கு
 22. கில்லர்ஜி...கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் வெளியில் வாழ்ந்திருக்கிறேன். 10% தமிழர்கள் எனக்கு உதவியிருந்தாலே அதிகம் (நானும் அப்படித்தான்..... நம் ஊர்க்காரன் என்ற எண்ணம் உண்டு. உதவவேண்டும் என்று தனிப்பட்ட முறையில்தான் நினைத்துச் செய்வேன். ஆபீஸ் விஷயங்களில் எனக்கு எல்லோரும் ஒன்றுதான். இது பொதுவாக தமிழனின் எண்ணம் என்று நினைக்கிறேன். மலையாளிகள், அவன் 'மலையாளி' என்பதை மட்டும்தான் பார்ப்பார்கள். அதனால் அவங்களிடம் பேசும்போதும், ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும்போதும் - அதாவது எனக்குக் கீழே மேனேஜர் லெவலில் மலையாளி இருப்பான். அவனிடம் ஆபீஸ் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டால், திட்டங்களைப் பகிர்ந்துகொண்டால் உடனே மற்ற மலையாளிகளுக்குத் தெரியப்படுத்திவிடுவான். அதனால் ஜாக்கிரதை உணர்வு).

  தமிழர்களிடம், 'தமிழன்' என்ற புரிதலும், நம்ம ஊர்க்காரன் என்ற எண்ணமும் இருந்தாலும் அதுனால அடுத்த தமிழனுக்கு உபயோகமே கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   தங்களது புரிதலை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

   கொரோனாவுக்கு பிறகாவது மக்கள் மனிதநேயத்தை விரிவுபடுத்தி உதவும் மனப்பான்மையை அழகாக குழந்தைகளுக்கு தெளிவு படுத்தவேண்டும்

   தங்களது விவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 23. கில்லர்ஜி... 'பாசம்' என்பதற்கு எப்போதுமே அர்த்தமில்லை. நாம் 'நம் கடமையை' அதற்கு அதிகமாகவே செய்தோம் என்ற திருப்தியை மட்டும்தான் வளர்த்துக்கணும். அடுத்தவங்களுக்குச் செய்யும்போது எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை இல்லையா? அதனால் நோ ஒர்ரீஸ்...

  60க்கு மேல, நாம பிறருக்கு நன்மை செய்தோம் உபயோகமா இருந்தோம் என்ற திருப்தியே மிச்ச வாழ்க்கையை நமக்கு நிம்மதியாக ஓட்டுவதற்கு உதவும் என்றுதான் பெரியவங்க சொல்றாங்க.

  அந்த அனுபவங்களை (மிடில் ஈஸ்ட்) நீங்க எழுதும்போது எனக்கு பலதும் நினைவுக்கு வருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழப்பழகி கொண்டால் ஏமாற்றமில்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால் நான் அன்பை எதிர்பார்த்து விட்டேன் அது என்னுடைய தவறே...

   தங்களது பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி

   நீக்கு
 24. நிறைய மொழிகளை (அரபி, தகலாக், மலையாளம் போன்றவை) நீங்கள் படித்துத் தெரிந்துகொண்டது பாராட்டத் தக்கது. மொழியின் வேல்யூவை அறிந்தவன் நான் (ஆனா பிற மொழிகளைப் படிக்கவில்லை. அப்படி இருந்தது தவறு என்பதை உணர்ந்தேன்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மொழிகளே என்னை உயர்த்தியது எனது குடும்பத்தை வாழவைத்தது. பாராட்டியமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 25. ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். அனுபவப் படிப்புக்கு முன் அது நிற்க முடியாது. எனவே முறையாக படிக்கவில்லையே என எண்ணவேண்டாம். சான்றிதழ்கள் வேண்டுமென்றால் இப்போது கூட தொலை தூர கல்வியில் பட்டங்கள் பெற்றுவிடலாம். திருமுருக கிருபானந்த வாரியார் பள்ளி சென்று படித்தவர் இல்லை ஆனாலும் அவர் போல் எல்லாவற்றையும் கற்று சொற்பொழிவாற்றியவர் யார்? எனவே படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டாம். அதை விட்டொழியுங்கள்.

  நானும் ஏழு ஆண்டுகள் கேரளாவில் பணியாற்றியிருக்கிறேன். அங்கு எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஆனால் பரவலாக தமிழர்கள் என்றால் அவர்களுக்கு இளக்காரம் தான். நம்மை ‘பாண்டி’ என்றே ஏளனமாக அழைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தான் அரிசி,காய்கறி, பூ, பழம் முதலியன பெறுகிறார்கள் என்பது வேறு கதை.

  நான் முதன் முதல் சேர்ந்தபோது என்னிடம் ‘தமிழர்கள் இங்கு வந்தால் மலையாளம் கற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ் அல்லது ஆங்கிலம் பேசியே நாட்களைக் கடத்திவிடுவார்கள்’ என்று சொன்னார்கள். அதையே நான் சவாலாக எடுத்துக்கொண்டு மூன்றே மாதங்களில் மலையாளத்தை எழுத, படிக்க, பேசக் கற்றுக்கொண்டேன். அதுவும் எனது 50 ஆவது வயதில். எனவே ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள விருப்பமும் உந்துதலும் இருந்தால் போதும்.

  மலையாளிகளின் சக மலையாளிகளுக்கு உதவும் குணம் தமிழர்களுக்கு இல்லை என்பது உண்மை.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான செரிவான கருத்துரைக்கு முதற்கண் நன்றி.

   திருமுருக கிருபானந்த வாரியார் விடயம் எனக்கு புதிதாக இருக்கிறது.

   அவர்கள் சொன்ன தமிழர்கள் மலையாளம் படிக்காமல் காலத்தை ஓட்டி விடுவார்கள் என்பது முற்றிலும் உண்மையான வார்த்தை.

   அதை சவாலாக ஏற்று படித்துக் கொண்ட தங்களுக்கு எனது வாழ்த்துகளும் தங்களுக்கு மலையாளம் படிக்கத் தெரியும் என்பது நான் ஏற்கனவே அறிந்ததே

   அவர்கள் நம்மை பாண்டி என்பதும் உண்மைதான்

   தங்களது விரிவான கருத்துரைக்கு மீண்டும்  நன்றி.

   நீக்கு
 26. வணக்கம்
  நல்ல பதிவு ஜி

  பதிலளிநீக்கு
 27. பட்டம் பெறவில்லை என்று வருத்த படாதீர்கள்.
  பலமொழிகற்ற வித்தகர். இப்போது பட்டம் பெற வேண்டும் என்று விரும்பினால் தொலை தூர கல்வி சேர்ந்து படிக்கலாம். அதைவிட மனதுக்கு பிடித்த ஏதாவது செயல்களை செய்து கொண்டே இருங்கள்.

  நாம் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை குறைவற செய்து விட்டோம்.

  அவர்களை வாழ்த்திக் கொண்டே இருங்கள், வேறு ஒன்றையும் எதிர்ப்பார்க்காதீர்கள்.

  அவர்களுடன் (மகன், மகளிடம்) பேசிக் கொண்டு இருங்கள், பேத்தி பேச ஆரம்பித்து விட்டால் உங்கள் கவலைகள் போயே போய்விடும். உறவுகள், நட்புகளிடம் உரையாடுங்கள்.
  தனித்திருக்கும் போது இன்னும் என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள்.பிடித்த பாடல் கேளுங்கள்,
  மனதுக்கு பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள்.
  மனது வேறு எதையும் நினைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்மால் மாற்ற முடிந்தவைகளை மாற்றலாம் முடியாததை சிந்தித்து என்ன செய்வது?
  கவலை படுவதை விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பிள்ளைகளிடம் இறங்கித்தான் போகிறேன் இருப்பினும் நினைத்துப் பார்க்க இயலாத (ஏ)மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

   இறுதிவரை அன்பைக் கொடுப்போம் வேறு வழி இல்லை.

   தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 28. பாசம் வழுக்கி விழ வைக்கும். அன்பு காட்டுங்கள் ஜி குழந்தைகளிடம்.
  அன்பு கடைசி வரை நீடித்து இருக்கும். அவர்கள் எல்லோரும் அன்பை வெளிகாட்ட தெரியாமல் இருக்கலாம். பல காலம் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வெளி நாட்டில் இருந்து விட்டீர்கள்.
  இப்போது அதை எல்லாம் சேர்த்து வைத்து கொடுத்து பாருங்கள் அன்பை.

  நான் , எனது என்று வாழ முடியாது மனிதன். நாம், குடும்பம் , சமூகம் சேர்ந்துதான் வாழமுடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான், எனது என்று வாய் சொன்னாலும் மனம் இசைவதில்லை பார்க்கலாம் இதில் கொரோனாவும் மனிதர்களை நசுக்குகிறது இறையருளால் எல்லாம் நலமாகட்டும்.

   மன ஆறுதலை தந்தமைக்கு நன்றி சகோ.

   வாழ்க வையகம்.

   நீக்கு
 29. யாரை எங்கே வைப்பது என்று
  யாருக்கும் தெரியலை ... அட!..
  அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
  பேதம் புரியலை....

  இது தான் நிதர்சனம்...
  உள்நாடாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும்!...

  பதிலளிநீக்கு
 30. இதைப் போல பற்பல அனுபவங்கள்....

  என்ன ஒரு வருத்தம்... தங்களைப் போல இன்னும் சில மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியவில்லை...

  கூட இருப்பதெல்லாம் கூமுட்டைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   ஆன்மீகத்தைக் குறித்து தங்களைப் போல் விளக்கம் தர யாரால் இயலும் ?

   வாழ்க நலம்.

   நீக்கு
 31. படித்தேன் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 32. நீங்கள் சொல்வது அரேபிய நாடுகளுக்கு பொருந்தலாம் ... ஆனால் அமெரிக்காவில் நம்ம ஆளுங்கதான் அதிக அளவில் அதிகாரம் செலுத்துவதாக சொல்கிறார்கள் ... உண்மைதானே? அப்புறம் வெறும் ஏட்டுகல்வி படித்தவனைவிட அனுபவ கல்வியை கற்றவனுக்கே "ஆளுமை" அதிகமாம் ... வருந்தற்க !!! ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் அமெரிக்காவில் உழைப்பாளியும், மூளைக்காரனுமே வண்டி ஓட்ட முடியும் இதில் மலையாளிக்கு இடமில்லையே...

   சிங்கப்பூரில் மலையாளிக்கு விசாவே கிடைக்காது

   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 33. என்னுடைய கருத்தும் அதே தான். அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையில் ஒரு சதவீதம் கூட நம்மிடம் கிடையது என்பது தான் நிதர்சனம். என்னுடைய ஒரு வருட மஸ்கட் வாழ்க்கை, இந்த கருத்தை புரிய வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 34. நண்டு மற்றும் தவளை கதையை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். :)
  படிப்புக்கு வயதில்லை நண்பரே. இப்போது கூட முயன்றால் நீங்கள் முனைவர் ஆகலாம்.
  நானும் அடுத்து முதுகலை தமிழும் ஆராய்ச்சி செய்து முனைவர் ஆகா வேண்டுமென முயல எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துகள்.

   விரைவில் முனைவர் பட்டம் பெறுங்கள்.

   நீக்கு
 35. நான் தகுதியை மீறியவன் என்று தலைப்பு போட்டுட்டு முடிவில கண்ணாடியில் என்னை நான் பார்த்துவிட்டு தான் வேலைக்கு போவேன் என்பதில் உங்கள் மூளை நல்லா வேலை செய்வதை இன்று நான் படித்தேன். ஆம், எங்களை நாம் சுய மதிப்பீடு செய்தால் எல்லாம் வெற்றியே! தங்கள் நல்லெண்ணங்களை வரவேற்கின்றேன்.

  பதிலளிநீக்கு