01. மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல்’வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்கு தூக்குத் தண்டனை தேதியை நிர்ணயித்தாரே நீதிபதி நீலகண்டன் இவருக்கும், சித்ரகுப்தனுக்கும் மின்னஞ்சல் தொடர்பு உண்டோ ?
02. மனித ஜடங்களின் அட்டூழியத்துக்கு சாவுமணி அடிக்க இயற்கை அனுப்பிய எச்சரிக்கைதான் கொரோனா என்பது மெய்யா ? அல்லது தனி மனிதர்களின் வல்லரசு நாடென்ற பேராசையால் உருவாக்கப்பட்டதுதான் செயற்கை தீநுண்மி கொரோனா என்பது பொய்யா ?
03. அறிவு ஞானமுள்ள பல விஞ்ஞானிகள் தனது முயற்சியால் பொருள் ஈட்ட முடியாமல் போவது இறைவன் அவர்களுக்கு அளித்த சதியா ? இல்லை அறிவே இல்லாத படிக்காத பல திரைப்படக் கூத்தாடிகள் பல கோடிகள் சுலபமாக சேர்க்க முடிவது அறியா மடந்தை ரசிகர்களால் வந்த விதியா ?
04. தயாரிப்பு தேதி காலாவதியான கோலாவை குடித்த கலாவதியை பாடாவதி மருத்துவர் நீலாவதியிடம் அழைத்துச் சென்றது மதிகெட்ட கணவன் கலாநிதியின் மதியா ? இல்லை விதியை முடிக்க தீர்மானித்து விட்ட எமனேஸ்வரம் எமனின் சதியா ?
05. ஏமாற்றுவதற்கு அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதால் இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே அறிவாளிகளா ? இல்லை ஏமாறுவதற்கு முட்டாளாக இருப்பதே போதும் என்பதால் ஓட்டு போட்டவர்கள் எல்லோரும் முட்டாள்களா ?
06. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தன்று அவரது ரசிகர்கள் நூறுபேர் தலையை மொட்டை அடித்துக் கொண்டதின் அர்த்தமென்ன? ஆனால் அவரது மகன் பிரபு தந்தை இறந்த அன்றுகூட மொட்டை அடித்தால் படப்பிடிப்புக்கு இடையூராகும் என்பதால் மொட்டை அடிக்காத பாசத்தின் அளவுகோல் என்ன ?
07. தாயின் வயிற்றில் ஜனித்து, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த அருபது வருட காலமும் மகிழ்ச்சியை சந்தோஷத்தை காணாமல் மடிந்து போகும் வாழ்க்கை துரதிஷ்டமா ? இல்லை தாயின் கருவறையிலேயே கள்ளிப்பால், பாதாம்பால், அமலாபால் போன்ற ஏதோவொரு உபயத்தின் உதவியால் கரைந்து போவது அதிர்ஷ்டமா ?
08. யார் யாருக்கோ திருமண பந்தத்தின் முடிச்சைப் போடும் இறைவன் ஏழையாகவும், செல்வந்தராகவும் மாப்பிள்ளையை அமைப்பது மேட்ருமேனியின் சதியா ? இல்லை இதில் நடிகைகள் மட்டும் பெருங்கொண்ட தொழில் அதிபர்களையே மணப்பது அவர்வர்களின் மதியா ?
09. கொரோனா பல நகரங்களை நரகமாக்கியதில் சென்னையை மட்டும் அதிகம் தாக்கியதற்கு காரணம் அரசியல்வாதிகளும், திரைப்படக் கூத்தாடிகளும் அங்கு வசிப்பதே என்று சோலந்தூர் சோசியர் சொல்வது உண்மையா ? இல்லை இத்தோடு திரைப்படத்துறை நாசமாகி மக்களின் வாழ்வு வளமாகும் என்று கில்லர்ஜி நினைப்பது பொய்யாகுமா ?
10. தாலி கட்டும் நேரத்தில் திருமண வீட்டில் நுழைந்து செங்கமலத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காண்பித்து தாலி கட்டி அழைத்துப் போனானே செங்கோடன் அவன் தலையில் அவனே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டதை நினைத்து வருந்துவதா ? இல்லை கலங்கப்பட்டவளை கட்டாமல் தப்பித்தானே கலியமுத்து இவனை நினைத்து மகிழ்வதா ?
ChivasRegal சிவசம்போ-
செங்க’’மலத்தோட போனவன் வாழ்வு மணக்குமா ?
சதியுமல்ல..பொய்யும்மல்ல.... எல்லாம் திமிரு...கொழுப்பு, சுயநலம், பயத்தால் ஒதுங்கும் போக்கு.. செங்க மலத்தோட பொ
பதிலளிநீக்குபோனவனின் வாழ்வு எப்படி மணக்கும்....
வருக நண்பரே உடனடி வருகை தந்து தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
நீக்குஇப்போதைக்கு இது...
பதிலளிநீக்குகொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்...
வாங்க ஜி மீண்டும் வறுக்க, வருக...
நீக்குகேள்விகளை எ பி க்கு அனுப்பி வைத்தாலாவது பதில் கிடைக்கும். நாங்கள் என்ன சொல்லமுடியும்.
பதிலளிநீக்குவாங்க ஐயா அப்படிப் பார்த்தால் எனது பதிவுகள் முக்கால் பாகம் கேள்விக்கணைகளே...
நீக்குவருகைக்கு நன்றி
பதிலளிநீக்குஉங்களின் அனைத்து எண்ணங்களும் அருமை....
தங்களது வருகைக்கு நன்றி தமிழரே
நீக்குஎன்ன என்னவோ சந்தேகம்லாம் எழுப்பறீங்க. இதுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?
பதிலளிநீக்குநீதிபதி எடுக்கும் முடிவு பெரும்பாலும் நிரந்தரமல்ல. இறைவன் எழுதிவைத்த தேதியை தீர்ப்பில் குறிப்பிட்டால்தான் நிரந்தரம்.
நடிகைகள் ஏற்கனவே நொந்து நூலாயிருப்பாங்க. ரிடையர் ஆகும்போதும் அன்னாடங்காய்ச்சியை திருமணம் செய்துகொண்டு அல்லல்படணும்னு நீங்க ஆசைப்படலாமா?
வருக நண்பரே...
நீக்குமனசுல தோன்றியதை நான் யாரிடம் கேட்பது ?
நடிகைகள் அன்றாடங்காய்ச்சி ஒருவனுக்கு வாழ்வு கொடுக்கக்கூடாதா ?
நடிகர் விஜய் படத்தை இப்போது தயாரிப்பவர் லயோலா கல்லூரி மேனேஜ்மென்ட் சம்பந்தப்பட்டவராம். 80. கோடி சம்பளம். அதைக் கொஞ்சம் கொறைச்சுக்கோங்க, நான் அடுத்த படம் தயாரிக்கிறேன் என்று மாறன் பிரதர்ஸ் போட்டி போடறாங்களாம். இதுல நீங்ககனவு காணறீங்களே
பதிலளிநீக்குஏமாளிகள் வாழும்வரை, ஏமாற்றுபவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்வுண்டு.
நீக்குஇந்த திரைப்படம் யாரை நம்பி எடுக்கின்றார்கள் ? உலகமே அறியாத விடயத்தை இந்தப்படம் நமக்கு தரப்போகிறதா ?
அரைத்த மாவைத்தான் நமது தலையில் அரைப்பார்கள். இதை ரசிகன் புரிந்து கொண்டால் இவைகளை தவிடு பொடியாக்கலாம்.
சிவசம்போ :-
பதிலளிநீக்கு1) மூட நம்பிக்கை...
2) இரண்டாவது மெய்யாக இருக்கலாம்...
3) வெறி என்று அறியாத அடிமைகள்...
4) காலாவதி கவனக்குறைவு ...
5) பொய்கள் முதலீடு...
6) எனக்கு தங்கம் மட்டுமே உரிமை...!
7) துரதிஷ்ட அதிர்ஷ்டம் + அதிர்ஷ்ட துரதிஷ்டம்...
8) திருமணம் அல்ல, இணைவது திருபணம்...!
9) 1.1.2020 அன்று அனைத்து தொ(ல்)லைக்காட்சிகளிலும் : "இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்..."
10) காலியாகாத முத்து...!
ஆஹா... வரிசைபடுத்தி சொன்ன பதில்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி.
நீக்குசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ என்ற திரைப்படத்தில் வரும் கேள்விகள் போல் உள்ளது தாங்கள் கேட்டிருப்பது. படத்தில் அந்த கேள்விகளுக்கு பதில் இருந்தாலும் தங்களது கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினம்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. வருக நண்பரே பழைய திரைப்படத்துக்கு கொண்டு போய் விட்டீர்களே...
நீக்குஇருப்பினும் இது பெருமையான விடயமே...
கேள்விக் கணைகள் தொடுத்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள்!
பதிலளிநீக்குபதில் சொல்வது கடினம் தான்! :)
தொடரட்டும் பதிவுகளும் மின்னூல்களும்!
வாங்க ஜி தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
நீக்குநீலகண்டனை அந்தத் தேதி வைக்க வைப்பதே சி.கு தானே?!!
பதிலளிநீக்குஇரண்டும் பாதிப் பாதி என்று வைத்துக் கொள்ளலாமா?!!
அவசியத்தை விடுத்து பொழுது போக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களின் விருப்பம்!
மறுபடியும் இது விதி, சி கு வின் வேலை!
மறுபடியும் பாதிப் பாதி வைத்துக் கொள்ளலாம்!
இனம் தெரியாத பாசம், பிழைப்பு.
விதியைப் பொறுத்தது!
அமைவதும், அமைத்துக் கோல்ப் வதும்.... இதுவும் விதிதான்.
அடுத்த இரண்டையுமே விதியில் சேர்த்து விடலாம்.
வாங்க ஜி ஸூப்பர் விரிவாக அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி.
நீக்குகேள்விகளை எங்கள் ப்ளாக்கிற்கு அனுப்ப சொன்னார் ஜெய்குமார் சார்
பதிலளிநீக்குஸ்ரீராம் வந்து பதில்கள் சொல்லிவிட்டார், தன்பாலன் அவர்களும் சொல்லி விட்டார்கள்.
உங்கள் எண்ணங்களை கேள்வி கணைகளாக தொகுத்து விட்டீர்கள்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குகேள்விக் கணைகளால் ஒரு பதிவு
பதிலளிநீக்குவலைச் சித்தரை வழிமொழிகின்றேன்
நன்றி நண்பரே
வருக நண்பரே தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.
நீக்குஎல்லாமே எல்லாரும் எல்லா நாளும் கேட்க வேண்டிய கேள்விகள்.
பதிலளிநீக்குஇன்னும் கேளுங்கள் கில்லர்ஜி.
வருக நண்பரே கேள்வி கேட்பது எமது இறுதி மூச்சுவரை தொடரும்... வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பத்து கேள்விகள் போல் பார்வைக்கு தோன்றினாலும்,ஒவ்வொன்றும் அர்த்தம் மிகுந்த இருபது கேள்விகள். இதற்கு பதில் சொல்வது அனைவருக்குமே சிரமந்தான்..! ஏனெனில் ஒவ்வொன்றும் நியாயமான கேள்விகள். நியாயத்திற்கு யாராலும் ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்தாது பதில் சொல்லி திருபதிப்படுத்துவது கடினம். ஆனால் எல்லா கேள்விகளும் ரசிக்கும்படி உள்ளன.
இதில் ஏழாவது கேள்வி மிகவும் ரசித்தேன். இதைப்படிக்கும் போது,"என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தை நானே கலைத்திருப்பேனே" என்ற சிந்துபைரவி திரைப்படப்பாடல் நினைவுக்கு வந்தது ஆனால் நம் விதியின் கணக்கை எழுதுபவராகிய சித்திர குப்தரால் கூட இதை மாற்றி எழுத முடியாதே..!
கேள்வியின் நாயகன் என்ற பட்டம் தங்களுக்கு கொடுத்து விடலாம். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவை ஆழ்ந்து படித்து இருபது கேள்விகள் என்று சொன்னமைக்கு நன்றி.
ஆம் சிந்துபைரவி பாடலை அதே வரிகளை கட் செய்து வைத்திருந்த காணொளி தேடும் நிலைக்கு ஆளாகி விட்டது. பிறகு வேண்டாமென்று விட்டு விட்டேன்.
அதேபாடலை நீங்களும் சொன்னது அறிந்து மகிழ்ச்சி.
தூக்குத்தண்டனையை நீதிபதி நிர்ணயித்தாலும் அன்றைய தினம் அவன் தூக்கில் ஏறுவது அவர் கைகளில் இல்லை. இறைவன் அதையும் மாற்றி வைக்கிறான்/வைப்பான்/வைத்திருக்கிறான். அவனுக்கென நிர்ணயித்த தேதியில் தான் அவன் இறக்க வேண்டும். இது ஒன்றே யாராலும் மாற்ற முடியாத ஒன்று. மற்றவைக்கு பதில்கள் ஏற்கெனவே உங்களுக்குக் கிடைத்துவிட்டன.
பதிலளிநீக்குவருக சகோ உங்களது பதில் அருமையாக கோர்வையாக சொன்னீர்கள் நன்றி.
நீக்குஇன்று கொரோனா வராவிட்டால் இவ்வளவு மனிதர்களுக்கு மரணம் வந்து இருக்காதே...
இந்த மரணங்களும் இறைவனால் தீர்மாணிக்கப்பட்டதா ?
எவ்வளவு திருமணங்கள் நடக்காமல் தள்ளிப் போய் விட்டது இதற்கு காரணம் கொரோனாவா ? இறைவனா ?
கேள்விகளை எழுப்புவதிலுப் புதுமைசொல்லடுக்குகள் வர சிரமப்பட வில்லையா
நீக்குவாங்க ஐயா
நீக்குஎனது மூளை இயங்கும்வரை பதிவுகள் வந்து கொண்டே இருக்கும்.
அனைத்தும் அருமையான கேள்விகள். கில்லர்ஜி கேள்விகள் கேட்பது வெகு எளிது. பதில்கள்தான் சிரமம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குகேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா இல்லை நான் கேட்கட்டுமா. எனக்குக் கேள்விகள் கேட்கமட்டும்தான் தெரியும்னு தருமி போல நீங்களே கேட்டுவிட்டீங்க ஹா ஹா ஹா ஆனா நான் என்ன ஹிஹிஹிஹி சரி சரி எனக்குத் தெரிந்தபடி சொல்றேன்..
பதிலளிநீக்கு1. ஆமாங்க மின் அஞ்சல் தொடர்பு உண்டுங்கோ பின்னே சிகு தானே அதையும் டிசைட் செயது என்னன்னா....இப்ப சமீபத்துல கூட நிர்பயா கேஸ் தேதி நீண்டுகிட்டே போச்சுல்லா நீதிபதி டிசைட் செய்ய செய்ய...
2. இரண்டுமேன்னு செல்லலாமோ? அப்படித்தான் தோணுது.
3. இது நாங்க எங்க வீட்டுல அடிக்கடி பேசிக் கொள்ளும் ஒன்று ஹா ஹா ஹா இது கண்டிப்பாக அறிவிலிகளான மக்களினால் எது அவசியம் என்று யோசிக்கத் தெரியாத அறிவிலிகள் மூடர்கள்...
4. இது கண்டிப்பாகக் கவனக் குறைவு 70% போனா போகுது 30% சிகு எடுத்துக்கட்டும். பாவம் அவரும் எம்புட்டுக் கஷ்டப்படுறாரு. இந்தத் தேதி கூடச் சில சமயம் மூளைக் கண்ணை மறைக்குதே அதுக்குத்தான் சிகு/விதி. இதெல்லாம் விடுங்க கடைசில ஒரு கேள்வி கேக்கேன் அதுக்குப் பதில் சொல்றியளா?!
5. வில்லங்கமான அறிவாளித்தனம்னு சொல்லலாமா? தந்திரம். அடுத்தது கண்டிப்பா நீங்க சொல்றதுதான். நாமெல்லாம் முட்டாளுங்க. பின்ன நாம சரியா யோசிச்சுப் போட்டாலும் மெஜாரிட்டினு ஜெயிப்பதால் நாமும் அந்தக் கூட்டத்துக்குள்ளதானே சேர்க்கப்படுகிறோம்?!! இல்ல நீங்க தனியாகத் தெரியப் போறீங்களா?!! ஹா ஹா ஹா
6. கண்மூடித்தனம், டுபாக்கூர்
7. இதுக்கும் சிகு/விதியைக் கூப்பிடணுமோ? கள்ளிப்பால் பாலூத்தல் வந்து என்னால் எதிலும் சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதே போன்ற கேள்விதான் என் கடைசிக் கேள்வி
8. இதுக்கும் பதில் விதி என்று சொல்லி சமாதானம் செய்தாலும் முந்தையதன் இரண்டாவது பகுதியில் சொல்லியிருப்பது
9. சென்னை மட்டுமா? அதிகம் தாக்கியது? மும்பை, தில்லி? அப்படி அதிகம் தாக்கப்பட்ட ஊர்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால்அப்படி என்றால் அங்கு மக்கள் நெருக்கடியால் எனலாம்.
10. இது சிகு/விதியேதான். ஆனா இதுல களங்கப்பட்டவள் என்று எப்படி எந்த விதத்தில் சொல்கிறீர்கள்? களங்கப்பட்டவள் என்பது எத்தனையோ பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள் அவர்களை இந்த லிஸ்டில் சேர்ப்பது நியாயமில்லையே. அப்படியான ஒரு பெண்ணிற்கு செங்கோடன் வாழ்வளித்தால் செங்கோடன் க்ரேட் இல்லையா? செங்கமலத்திற்கு சிகு நல்லது செய்திருக்கிறார் எனலாமே!
சரி இப்ப என் கேள்வி, எதுவுமே தெரியாத கள்ளம்கபடமில்லாத பசுந்தளிரான இந்த உலகை இன்னும் பார்க்கவே தொடங்காத குட்டிப் பெண்குழந்தை பாலியல் பலாத்காரத்தால் சின்னாபின்னப்படுதே? செய்தவன் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறானே?
சித்ரகுப்தன்? விதி?
கீதா
வருக எல்லாக் கேள்விகளுக்கும் விரிவான பதில் தந்தமைக்கு நன்றி.
நீக்குஎல்லாம் சரி கடைசியில் என்னிடமே கேள்வி கேட்டால் ???
எனக்கு கேட்க மட்டும்தானே தெரியும்.
இறைநம்பிக்கை அவ்வப்போது தளர்ந்து விடுவது இவ்வகையான நிகழ்வுகளால்தான். எல்லாம் அவன் செயல் என்கிறார்கள்... இந்த சிசு கொடூரன்களால் சிதைக்கப்பட்டதும் அவன் செயலா ?
இதற்கு விரிவாக பதில் சொல் ஆசைதான் ஆனால் ஒரு பதிவு அளவுக்கு போகும். மேலும் அலைபேசியில் சொல்வது கஷ்டமாக இருக்கிறது.
வருகைக்கு மீண்டும் நன்றி.
இந்த மாதிரி பத்துக்குள் இருபதை வைக்கும் திறமை தங்களுக்கே...
பதிலளிநீக்குஒவ்வொரு கேள்விக்குள்ளும் பதில் இருக்கிறது என்பது தான் அதிசயம்...
வாங்க ஜி
நீக்குஹா.. ஹா.. தங்களது பதிலை எனது தலைக்குள் திணித்து விட்டீர்களே...
அருமையான பதிவு. அர்த்தமுள்ள ஞாயமான கேள்விகள்.
பதிலளிநீக்குவருக அபிநயா நலம்தானே ? வருகைக்கு நன்றி.
நீக்குஇக்கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு, உங்கள் பாணியில் அதிகம் சிந்திக்கவேண்டுமோ என எண்ண உள்ளது.
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே இயன்றவரை சிந்திப்போம் தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஅருமையான எண்ண ஓட்டம் நண்பரே குறிப்பாக 5என்னை மிகவும் கவர்ந்தது
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஉங்கள் கேள்விகள் பராசக்தி கணேச நீதிமன்றம் போய்
நிற்கின்றன.
விவரமான கேள்விகளுக்கு நறுக்கான பதில் தந்த அன்பு தனபாலன், ஸ்ரீராம், கீதா.
இவர்களால் கொஞ்சம் சந்தேகம்
தீர்ந்தது.
முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப் படும் அயொக்கியத்தலைவனை
மீண்டும் தேர்ந்தெடுத்தால் மீண்டும் நாம்
மீண்டும் முட்டாளாவோம்.
வாங்க அம்மா தெளிவான கருத்துரை தந்தீர்கள். ஒரு மனிதன் ஒருமுறை ஏமாந்தால் ஏமாளி, இரண்டு முறை ஏமாந்தால் முட்டாள்.
நீக்குஆனால் நாம் எத்தனை முறை ஏமாறுகிறோம்.
வலைச் சித்தரின் பதில்களை வழிமொழிகிறேன்
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி.
நீக்குஎந்தப் பரிட்சையிலும் இப்படிக் கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டாங்க . நிறைய அவுட் ஆ ஃ ப் போர்ஷன் கேள்விங்க .எப்படி பதில் எழுதறது ?
பதிலளிநீக்குவாங்க கஷ்டமான கேள்விகளா ? அப்படீனாக்கா, அடுத்து கஷ்டமான கேள்விகள்தான் கேட்கணும்.
நீக்கு@அபயா அருணா! நானெல்லாம் சாய்ஸில் விட்டு விடுவேன். :)))))
நீக்குமீள் வருகைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குபெயர்த்திக்கான உங்களது எச்சரிக்கை கண்டு திடுக்கிட்டேன்!
ஆனால், உங்கள் பெயர்த்தி இதையெல்லாம் கண்டு மிரள்வாள் எனத் தோன்றவில்லை!
வருக நண்பரே நீங்கள் எழுதியது பதிவுக்கு பந்தமில்லாதது இதை பிறர் படித்தால் புரிந்து கொள்ள இயலுமா ?
நீக்குநீங்கள் எனது ''தெருக்குரல்'' பற்றி எழுதி இருக்கின்றீர்கள் என்பது எனக்கு மட்டுமே புரியும்.
எனது பெயர்த்திக்கு எச்சரிக்கை கொடுக்க வில்லை அறிக்கை விட்டு இருக்கிறேன் அவ்வளவுதான் இருப்பினும் மிரள்வாள் என்று எதிர்பார்க்ககூடாது என்ற தங்களது தொலைநோக்கு சிந்தனையை இரசித்தேன். ஆம் அடுத்த தலைமுறை எதையுமே சாதாரணமாக கடந்து போவார்கள் நாம்தான் மனதில் சுமைகளை ஏற்றி வாழ பழகிக்கொண்டோம்.
பதிவைக்குறித்து கருத்து சொல்லவில்லையே....