தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 26, 2020

நால்வர் அணி


குமரேசா
நீ செய்வது முறையாடா
இசக்கியம்மாளை முடிச்சிட்டும்
மொடிச்சியம்மாள் தேவையாடா
புதியவளை மனதில் நிறுத்துடா
பழையவளையும் திருத்துடா

இசக்கியம்மா
திரும்பிப் பார்ப்பது முறையே
அவைகள் நாம் கடந்து வந்த
வாழ்க்கையின் பாதையை
நீ திரும்பி பார்ப்பது முறையா
இரவு அறையில் விடு அறையை

மொடிச்சியம்மா
திருமணத்துக்கு வந்த மொடிச்சி
புருசன் பார்க்கிறான்டி கிறுக்கச்சி
அவளுக்கு விழுந்துடிச்சு முடிச்சு
இந்த கள்ள குமரேசனை இடிச்சு
நிற்பதை நிறுத்தி விடுடீ அடச்சீ

புவனேசா
புகைப்படம் எடுப்பவனே புவனேசு
உனக்கு மட்டும் இருக்குதே மவுசு
நீ பார்ப்பது ஏண்டா அவளது ப்ளவுசு
சடக்குனு அடிச்சு தொலைடா ப்ளாசு
படத்தை இணையத்தில் போட்டு விளாசு

ChavasRegal சிவசம்போ-
மொடிச்சியம்மாதானே கல்லூரியில் படிக்கிறபோது என்னை நொடிக்க வாச்சா... இன்னைக்கு இந்த நிலைக்கு ஆயிட்டேன்.

சாம்பசிவம்-
இதுதான் படம் பார்த்து கதை சொல்வதா ?

சிவாதாமஸ்அலி-
தமிழ்நாட்டுலயும் பெருகிப் போச்சே... கல்யாணத்துல எல்லாம் நடக்குது.

44 கருத்துகள்:

 1. வண்டவாளம் எல்லாத்தையும் தண்டவாளத்தில் ஏத்தியாச்சா!...

  பதிலளிநீக்கு
 2. அந்த ஒடிச்சியம்மா குறுக்கால வரலையே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி முடிஞ்ச அளவு ஏத்தியாச்சு. ஒடிச்சியம்மா கால் ஒடிஞ்சு கிடக்காளாம்.

   நீக்கு
 3. நம்மூர் வடக்கு மத வெறி 'எம்பி'க்கள் பழக்கம் போல...

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா! எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இந்த மாதிரி படங்களை? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நம்ம புவனேசுதான் புடிச்சு அனுப்புறாரு...

   நீக்கு
 5. படம் பார்த்து நல்லாவே கதை சொல்கிறீர்கள் ஜி

  பதிலளிநீக்கு
 6. அதுக்குத்தான் பின் பக்கமா யாரும் போட்டோ எடுக்கிறதில்லை போல

  பதிலளிநீக்கு
 7. எங்கிருந்து உங்களுக்கென்று படங்கள் கிடைக்கின்றன? ‘இரவு அறையில் விடு அறையை’ என்ற வரியை இரசித்தேன்! கவிதை அருமை! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. எலியை பலியாக்குவது சந்தேகம்... அந்த சந்தேகம் வந்துவிட்டால் சத்தியமும் பலிப்பதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பலியில்லை, இசக்கியம்மாள் புலியாகி விடுவாள்.

   நீக்கு
  2. எலியை புலியாக்குவது சந்தேகம்தான் இசக்கியம்மாள் புலியாவதும் சந்தேகம்தான்.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. பார்க்கலாம் நண்பரே...

   நீக்கு
 9. படம் பாத்து கவிதை ? கதை ?

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  உங்களுக்கென்று இந்த மாதிரி படங்கள் கிடைப்பது வியப்பு. அவற்றிற்கு நீங்கள பொருத்தமாக எழுதி விடுவது அதை விட வியப்பு.

  போட்டோ எடுப்பவர் முந்தி மாதிரி "என்னை நேராக பாருங்கள்" என்று இப்போதெல்லாம் சொல்வதில்லை போலும். அதனால் விளைந்தது ஒரு கவிதை. ரசித்தேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //போட்டோ எடுப்பவர் முந்தி மாதிரி "என்னை நேராக பாருங்கள்"// சொல்வதில்லை.

   ஆம் முன்பு ஃபிலிம் தீர்ந்து விடும் என்ற கவலை இப்பொழுது கார்டுதானே... எத்தனை வேண்டுமானாலும் எடுத்து அழித்துக் கொள்ளலாம்.

   வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

   நீக்கு
 11. நால்வர் அணியோ
  மூவர் முனியோ
  ஆண்கள் அப்படித்தான்
  பெண்கள் இப்படித்தான்
  மேலும் விபரங்களுக்கு
  படைத்தவனை
  தொடர்புகொள்ளவும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே படைத்தவனை தொடர்பு கொள்ளணுமா ?

   ஹா.. ஹா.. ஹா.. அலைபேசி எண் கொடுக்காமல் போய் விட்டீர்களே...

   நீக்கு
 12. இதுபோன்ற படங்கள் தங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கின்றன நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... இணையத்தில் இணை தேடும் காலமிது. நன்றி நண்பரே...

   நீக்கு
 13. நம்ம ஊர் அரசியல்வாதிகளைச் சேர்ந்தவரோ? மனைவி, இணைவி, துணைவி என வைச்சுப்பார் போல! ஆனாலும் உங்களுக்குனு விஷயம் கிடைக்கிறதே! அதைச் சொல்லணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே அடுக்குமொழி ஸூப்பர் நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.

   நீக்கு
  2. ஹாஹாஹா, அடுக்கு மொழி கடன் வாங்கியது! சொந்தம் இல்லை. ஆகவே எனக்குப் பாராட்டெல்லாம் வேண்டாம்.

   நீக்கு
  3. ஓஹோ கடன் வாங்கியதா... பரவாயில்லை உண்மையை சொல்லி விட்டீர்கள்.

   நீக்கு
 14. நானும் இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படியான கற்பனை உங்களுக்கு மட்டுமே தோன்றும்! நல்லா இருக்கு பகிர்வு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. இப்படியும் நடக்குமா! படம் பார்கக நம் கண்கள் கூசும்.அவர் கைகளுக்கு அதுவே சுவாசம். பாராட்டுகள் தேவகோட்டைஜி.

  பதிலளிநீக்கு
 16. கவிதை மனதில் விதையாக விழுந்தது... வாழ்த்துக்கள் !!!
  "புதியவளை மனதில் நிறுத்துடா.
  பழையவளையும் திருத்துடா" .... என்பதற்கு பதிலாக ---
  புதியவளை மனதில் நிறுத்துடா.
  பழையவளை தடுத்து நிறுத்துடா
  என்று இருந்திருந்தால் சொல்லாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும் கவிஞரே !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   'தடுத்து நிறுத்தடா' என்பது தற்காலிகம் 'திருத்தடா'என்பது நிரந்தரம்.

   மேலும் வாக்கியங்களின் நீள அளவுகளையும் நான் கணக்கெடுப்பேன்.

   வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 17. வெண்ணிற ஆடையில் ரொம்பவே அழகா இருக்காங்க இசக்கியம்மா. அப்புறம் ஏன் அந்தப் பரட்டைத் தலைச்சியைத் தொட்டுகிட்டு நிற்கிறான் கோட்டுசூட்டுப் போட்ட கூமுட்டை?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதானே... கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணும்னு சும்மாவா சொன்னாங்க...

   நீக்கு
 18. இதை பின்னாலிருந்து புகைபடமெடுத்த கில்லர்ஜீக்கு வாழ்த்துக்கள்.ஆமாம் எங்கிருந்து கிடைக்கிறது இது போன்ற படங்கள் உமக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குமரேசன் திருமணத்துக்கு போனபோது பின்னாலிருந்து எடுத்ததாக சொல்லி விட்டீர்கள்.

   பிறகு எங்கு கிடைக்கிறது என்று கேட்கலாமா ?

   நீக்கு
 19. கில்லர்ஜி இந்தக் கலியாணம் உகண்டா உச்சிமலைப் பிள்ளையார் கோயில்லயோ நடந்தது?:)...
  இருப்பினும் இவ்ளோதூரம் உங்களுக்கு வயிற்றெரிச்சல் ஆகாது:)...
  சிறீ சிவசம்போ அங்கிளிடம் மோர் இருக்குதாம் வாங்கிக் குடி யுங்கோ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எனக்கு எதற்கு வயிற்றெரிச்சல் வரணும் ? நாங்க அப்படி ஆள் கிடையாது.

   நீக்கு
 20. இந்தப் படத்தைப் பார்த்தேன். நம்பும்படி இல்லை. நடுவுல உள்ளவன் ரெண்டுபேரையும்விட குட்டையா இருக்கான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இசக்கியம்மாளுக்கு இணை சரிதான்.

   மொக்கச்சிதான் வளர்ந்து இருக்கிறாள் என்ன செய்ய முடியும் ?

   நீக்கு