தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 02, 2021

சடையங்காடு, சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி


ணக்கம் ஐயா சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி அவர்களே... எங்களது முன்னோடி பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்க வந்து இருக்கும் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் பேட்டியை தொடங்கலாமா ?
தமிழ் வாழ தரணியில் வாழ்வோம் எனக்கு முன்னாடி அமர்ந்திருக்கும் தம்பி முனீஸ் அவர்களுக்கு வணக்கம் நன்று தொடங்கலாம்.

ஐயா இந்த நாடு முன்னேறுவதற்கான சாத்தியங்கள் உண்டா ?
நிச்சயமாக எமது கண்களுக்கு தென்படவில்லை காரணம் குவாட்டருக்கும், சிக்கன் பிரியாணிக்கும் அடிமையாகிப் போனது தமிழக ஆண் வாக்காளர்களின் அதிகமான எண்ணிக்கை. பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக இருந்தாலும் சுயேட்சையாக நிற்கும் காரணத்தால் அவனுக்கு ஓட்டுப் போடாமல் தனது தலைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் நிறுத்தும் ஏதோவொரு மாவட்டத்துக்காரனுக்கு ஓட்டுப் போடும் சுயசிந்தனையற்ற முடுமைகள் ஏராளமாகி விட்டனர் தமிழகத்தில். நியாயவிலைக் கடையில் மது விற்பனைக்கு வரப்போவதாக செய்தி படித்தேன் எங்கு செல்கிறது எமது தமிழகம்.

அப்படியானால் பெண் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது என்று சொல்கின்றீர்களா ?
நிச்சயமாக இல்லை பொழுது புலர்ந்தால் காலைமுதல் மாலைவரை தொலைக்காட்சி நாடகங்களுக்கு அடிமையாகிப் போய் விட்டனர், இதில் வடநாட்டு நாடகங்களையும் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்புவதை காண்பதிலும் ஆர்வம் காட்டுவதுதான் கொடுமை. பொங்கலுக்கு அரசு இலவசமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதை வாங்குவதில் எத்தனை ஆனந்தம் இவர்களது முகத்தில் ஆனால் இது யாருடைய பணம் என்பதை உணர இயலாதவர்களாக இருப்பது எவ்வளவு இழிவு.

அப்படியானால் இளைஞர்களால் இந்த நாடு மாற்றம் காணும் வழி உண்டா ?
இன்றைய இளைஞன் என்ன செய்கின்றான் ? திரைப்பட நடிகனின் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான், முதல்நாளே அவனது படத்தை தியேட்டரில் காண்பதற்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்து பார்க்க துடிக்கின்றான், இந்தியாவும், பாக்கிஸ்தானும் எல்லையில் போரிடும்போது இந்தியாவின் வெற்றியை பெரிதாக கருதாதவன் இந்தியா பாக்கிஸ்தானிடம் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதையே உலக சாதனையாக கொண்டாடி மகிழ்கின்றான் இந்த அறியா மடந்தைகளாலும் பயனில்லை.

இளைஞிகளால்தான் இந்நாட்டை காப்பற்ற முடியும் என்கிறீர்களா ?
அவர்களாலும் முடியாது காரணம் அவர்கள் அலங்காரப் பதுமைகளாக வலம் வந்து தனக்குப் பின்னால் நான்கு ஆடவன்களை வரவைக்க வேண்டும் என்பதே பல பெண்களின் லட்சியமாக இருக்கிறது. இதற்காகவே பியூட்டி பார்லரில் காலம் கடத்துகின்றவர்கள் பலர், நல்ல உடையை கிழித்து வைத்து இதுதான் புதுமை என்கிறான் வியாபாரி இதையும் நம்பி இந்த உடைகளை வாங்கிப் போடுபவர்கள் அனைவருமே பட்டதாரிப் பெண்களே... இந்த முடுதாறுகளா நாட்டைக் காப்பாற்றப் போகின்றனர்.
ஐயா பெண்களின் உடை மாற்றம் தவறு என்று சொல்கின்றீர்களா ?
நிச்சயமாக அப்படி சொல்லவில்லை காலமாற்றம் இதில் சுழல்வதுதான் மனிதஇயல்பு சுடிதார் போடுவது தவறில்லை ஆனால் சால் என்ற ஒன்றை போடாமல் பெண்கள் வெளியில் நடப்பதால்தான் நாணம் என்ற ஒன்று அழிந்து போய்க்கொண்டு இருக்கிறது சிலர் அரசியல்வாதிகள் துண்டு போடுவது போல போட்டு உலாவுகிறார்கள், சிலர் பின்னால் பறக்க விட்டு நடக்கின்றார்கள் இது கழுத்தில் போட்டு இருக்கும் நகைகளைகூட மறைக்க பயன்படுவதில்லை. இன்றைய தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள் தங்களது மகள்களிடம் சால் எப்படி போடுவது ? என்று சொல்லிக் கொடுப்பதைவிட, சால் எதற்காக போடுகிறோம் என்பதை சொல்லிக் கொடுங்கள். சமூகத்தில் காமுகர்கள் பெருகி வருவதை குறைத்திட சற்றே உதவுங்கள்.

எதிர்காலத்தில் கண்ணகி போன்றவர்களை காண இயலுமா ?
நிச்சயமாக முடியாது சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு பெண் அறிவாற்றலான கேள்விகளுக்கு பதில் சொல்லி பரிசு பெறுகிறாள், அவளிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யாரென்று ? பேட்டி காணும் ஒரு நடிகை கேட்கிறாள் அதற்கு தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்கிறாள் உடன் நடிகை உங்கள் அபிமான நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ஏதாவது சொல்லுங்கள் உடன் அப்பெண் கேமராவைப் ஐ லவ் யூ மாமு என்று ப்ளைன் கிஸ் பறக்க விடுகிறாள் பின்புறமுள்ள கணவன் சிரித்துக் கொண்டு இருக்கிறான். சுற்றியுள்ள பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதுதான் இன்றைய கற்பின் நிலைப்பாடு. திருமணத்துக்கு முன் பெண்கள் எப்படியும் வாழலாம் என்று சொன்ன நடிகை குஷ்புவிடம் ஆட்டோகிராப் வாங்க துடிக்கத்தானே செய்கிறது இன்றைய இளைய சமூகம்.

இந்நாடு முன்னேற வேறு வழிகள் இல்லையா ?
உண்டு அது மதங்கள் அனைத்தையும் ஒழித்திட வேண்டும் மதங்களின் போதனைகளை பற்றிக்கொண்டுதான் மனிதன் மனிதனை கொன்று கொண்டு இருக்கிறான் பசுவை கொன்றவனை தூக்கிலிட வேண்டுமென்று கோஷமிடும் மனிதன் ஒருபுறம் மனிதனையே கொல்கின்றானே.... அவனை என்ன செய்ய வேண்டும் ? என்று சிந்திப்பது இல்லை. குற்றம் சுமற்றப்பட்டவன் குற்றவாளியா ? என்பதை சிந்திப்பதை மறந்து விட்டு அவன் நம் மதமா ? என்று பார்ப்பவனே அதிகமாக வாழ்கிறான் இங்கு. இவன் அவனது இறைவனை நம்புகிறான் என்பதுதான் இதில் கேலிக்கூத்தான விடயம். ஆகவே மதங்கள் அழிக்கப்படல் வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளை அழிக்காதவரை இதுவும் நடக்காது.

அரசியல்வாதிகள் இல்லையெனில் நாட்டை நிர்வகிப்பது யார் ?
ஆட்சிகள் கலைக்கப்பட்டபோது... இந்நாட்டில் மக்கள் வாழவில்லையா ? அவரவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லையா ? அதிகாரிகள்தானே நிர்வாகம் பார்த்தனர். இவைகளை இயக்கவும் ஆளுனர் இருந்தார் என்றால் அவர் ஒருவரே தொடர்ந்து இயக்கட்டுமே... கவுன்சிலர்கள் இல்லாதபோது தெருக்களில் மக்கள் நடமாடவில்லையா ? இவர்கள் வந்துதான் தெருக்களை பராமரிக்க வேண்டுமா ? தனி மனிதர்களின் ஆசையால் மக்கள் அவதிப்படுவது ஆண்டாண்டு காலமாக நிகழும் வரலாறு.

எந்த வரலாற்றின் அடிப்படையில் யாரால் மக்கள் அவதிப்பட்டார்கள் ?
முகமது அலி ஜின்னா மதப்பற்று இல்லாதவர் ஆனால் அவரும்கூட தனது பதவி ஆசைக்காக மதத்தையே கையெலெடுத்து ஆட்சி அமைத்தார் இதில் பல லட்சம் இந்து, முஸ்லீம் மக்கள் மடிந்ததுதான் மிச்சம், மரணத்தின் பிடியில் சிக்கிய ஜின்னா கடைசி தருணத்தில் தன்னால் பல லட்சம் மக்கள் இறந்ததை உணர்ந்து வருந்தியது வரலாறு. ஆகவே ஆசைகளை துறந்தவர்களே மக்களை ஆளும் பதவிக்கு வரவேண்டும். இதன் மூலம் நான் புத்த மதத்தை பரப்புவதாக எண்ண வேண்டாம்.

நல்லது ஐயா சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி அவர்களே தங்களது வெட்டி நேரத்தை பேட்டி என்ற பெயரில் எங்களை கட்டிப் போட்டதற்கு நன்றிகள் தங்களது நல்ல எண்ணங்கள் நிறைவேறட்டும்.
நல்லது, நன்றி தமிழ் வாழ தரணியில் வாழ்வோம்.

Chivas Regal சிவசம்போ-
தாய்மார்களுக்குதானே முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் காரணம் அவர்களே வெளியில் நைட்டியில்தான் கடைகளுக்கு சென்று வருகின்றார்கள்.

40 கருத்துகள்:

  1. வழக்கம்போல சுவாரஸ்யமான பதிவு.  அதிலேயே நல்ல கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.  இரண்டு வார்த்தைகள் கற்றுக்கொண்டேன்.  முடுமை, முடுதாறு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஹாஹாஹாஹா, பொங்கலுக்கு அரசு இந்த வருஷம் 2000 ரூ கொடுத்திருக்கு. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் சொன்னார். அதோடு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் செய்திகளில் சொன்னார்கள். நல்ல கருத்துக்களை இந்நாட்களில் கேட்பவர் யார் இருக்காங்க. நீங்க சொல்லுவதை விடாமல் சொல்லுங்கள். ஓரிருவருக்குப் போனாலே போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லதை நானா சொன்னேன் ? சண்முகமாமுண்டிதான் சொல்கிறார்.

      நீக்கு
  3. நல்ல பதிவு. ரசித்துப் படித்துவிட்டு கடந்துவிடுவார்கள்.

    எழுதியவைகள் அவசியமானவை, உண்மையும்கூட

    அது சரி... ஆசைகளைத் துறந்தவனுக்கு அரசியல் எதுக்கு?

    அது சரி.. ஜீன்ஸில் ஏன் கால் பகுதிகள் மட்டும் கிழிசலாக இருக்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்று நன்றாக போய் வர கால்பகுதி மட்டும் கிழ்ந்து இருக்கிறது இல்லைன்னா உடல் உஷ்ணமாகிவிடும்

      நீக்கு
    2. // கால் பகுதி மட்டும்..//

      அதானே!..

      கண்னாடி மாற்றியும் கண் மயங்கி நிற்பவர் சங்கத்தின் சார்பாக வண்மையாக கண்டிக்கப்படுகின்றது...

      நீக்கு
    3. To, நெல்லைத்தமிழர்
      தங்களின் வருகைக்கு நன்றி. அரசியல்வாதிகளுக்கு ஆசை தேவையில்லை தியாகம் செய்வதுதானே அரசியல் வேலை.

      To, மதுரைத்தமிழர்
      தங்களின் கூற்று அருமை.

      To, குவைத்ஜி
      இப்படியொரு சங்கமா ?

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... நல்லவேளை..சங்கத் தலைவர்தான் கண்டிக்கணும்னு காத்திருக்காம, பொருளாளர் நீங்க முந்திக்கிட்டு கண்டிச்சு நம்ம சங்கத்தின் மானத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி.

      நீக்கு
    5. பொருளாளராஆஆஆஆஆ ? பைசா பூராம் இங்குதானா...?

      நீக்கு
  4. இந்திய முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் மூன்னேறும் வேகம்தான் குறைந்திருக்கிறது இதற்கு காரணம் டாஸ்மாக் குடிகாரர்களோ அல்லது சீடி சீரியல் பார்க்கும் பெண்களோ அல்லது இளைஞர் இளைஞி அல்ல இவர்களால் சமுக ஒழுக்கங்கள் வேண்டுமானால் கெட்டூ போய் இருக்கிரது என்று சொல்லாம்.. இந்திய முன்னேற்ற வேகம் குறைந்தற்கு காரணம் நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள் இல்லாததால்தான் இப்படி சொல்லுவதால் உடனே மோடியை மட்டும் குறை சொல்லவில்லை அதற்கு முன்னர் இருந்த தலைவர்களும் தான் காரணம். அவர்கள் ம்ட்டும் உண்மையிலே நாட்டு நலனை கருதுபவர்களாக இருந்திருந்தால் இந்தியா நிச்சய்ம் இப்போது உலகின் வல்லரசு நாடாகி இருக்கும் அப்படி இல்லாததால் கொஞ்சம் கொஞ்ச்மாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரே நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வது முறையல்ல வாக்காளர்களுக்கு தங்களது பவர் தெரியவில்லையே...

      நீக்கு
  5. விவரம் தெரியாதவங்க தான் எதுக்கெடுத்தாலும் அரபு நாடு அரபு நாடு... ன்னு பினாத்திக்கிட்டு இருக்காங்க..

    வரட்டும்... இங்கே வந்து பார்க்கட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி திரைப்படக் கூத்தாடிகளின் ரசிகர்கள் அனைவரும் அரபு நாடு செல்ல வேண்டும்.

      நீக்கு
  6. சில நாட்களுக்கு முன்னால் - கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய காமக் கொடூரனை விடுவிக்கப் பட்டிருக்கின்றான்...

    இத்தகைய தீர்ப்புகளால் நல்லவர்கள் தடுமாறி நிற்கும் போது -

    நான் புரட்டிக் கொண்டு தின்பேன்.. உனக்கென்ன?.. - என்னும் பெண்களைச் சவுக்கால் வெளுக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரியான பெண்கள் பொள்ளாச்சியில் சிக்காமல் அப்பாவி பெண்கள் சிக்கி விட்டார்களே...

      நீக்கு
  7. உங்கள் ஆதங்கத்தினைச் சொன்ன பதிவு. வழமை போல சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் ஜி. பாராட்டுகள்.

    புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஊதுற சங்கை ஊதிக் கொண்டே இருப்போம்.

      நீக்கு
  8. இப்படி சல்லி சல்லியா உண்மைகளை போட்டு உடைச்சிட்டீங்க ஜி...! மை தொகுப்பில் ஒரு புதிய 'முடுமை"...!

    பதிலளிநீக்கு
  9. நாமெங்கே நைட்டியோட வீதிக்கு வருகிறோமெனத் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கினால் என்ன செய்வீர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதாரங்களோடு புகைப்படத்தை காட்டுவோம். வருகைக்கு நன்றி பாவலரே...

      நீக்கு
  10. சண்முகமாமுண்டி அவர்களின் பேட்டியில் கூறியவை அணைத்தும் உண்மையே..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி அவர்களை முன்னோடிப் பத்திரிக்கை நன்றாக பேட்டி எடுத்து இருக்கிறது, அவரும் நன்றாக பதில் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. சமூக ஆர்வலர் பொறுமையாகவும், நல்ல பதில்களாகவும் கூறியிருக்கிறார். முன்னாடி என்ற பத்திரிக்கை பெயரும் நன்றாக உள்ளது. எல்லாம் மாறி வரும் காலத்தின் கோலம். உங்கள் மன ஆதங்கத்தை நாசூக்காக வெளியிட்ட முறை அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முன்னோடி பத்திரிக்கையை பாராட்டியமைக்கும், தங்களின் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  13. //இந்த மாதிரியான பெண்கள் சிக்காமல் பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்கள் சிக்கிவிட்டார்களே//

    பொள்ளாச்சியில் மட்டுமல்ல, வண்கொடுமைக்கு ஆளாகிற பெண்களில் மிகப் பெரும்பாலோர் அப்பாவிகள்தானே?

    கேள்விகள் நன்று; பதில்கள் மிக மிகச் சிறப்பானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்கொடுமை அல்ல; வன்கொடுமை

      நீக்கு
    2. வருக நண்பரே உண்மைதான். தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. என்னதான் கரடியாய்க்கத்தினாலும் விளைவு மாறப்போகிறதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தேவகோட்டையிலிருந்து ஒருவனாவது கத்துகிறானே... என்று சமூகம் நினைக்கட்டுமே..

      நீக்கு
  15. தங்களின் ஆதங்கம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  16. இந்த நாடு முன்னேற தாங்கள் கூறிய கருத்தை மிகவும் ஏற்கிறேன் நண்பரே.
    பணக்கார பெண்ணின் படத்தை பார்க்கும் போது தோணுது.
    அந்த காலத்தில் கிழிந்த உடையை தைத்து அணிந்து கொண்டார்கள்.
    இன்று தைத்த உடையை கிழித்து அணிந்து கொள்கிறார்கள்.

    அப்புறம் சண்முகமாமுண்டி என்பதற்கு பதிலாக "சண்டியர்" பொருத்தமாக ஒருவேளை இருக்குமோ...??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      சண்டியர் ஹா.. ஹா.. இது ரௌடிகள் குத்தகை எடுத்துக் கொண்ட பெயர் அல்லவா

      ஆகவே சற்று பயமாக இருக்கிறதே...

      தங்களின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  17. அருமையான பதிவு. படமே நீங்கள் சொல்ல வந்ததை விளக்கி விட்டது. சூப்பர்! சூப்பர்! நீங்கள் ஒரு ஞானி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு