தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 13, 2020

காதலின் வலிமை


அழுக்கானவளையும், அழகாக காட்டுவது காதல்
கோழையையும், வீரனாக தோற்றுவிக்கும் காதல்
பொல்லாதவனையும், நல்லவனாக காட்டும் காதல்
அம்மை அப்பனையும், அற்பனாக்கி விடும் காதல்

காவல் நிலையத்தையும், கோவிலாக்கும் காதல்
நண்பர்களை கடவுள் போல் காட்டி விடும் காதல்
சிறிய வீட்டை தாஜ்மகால் என்று சொல்லும் காதல்
புளிரசத்தையும், சாம்பாராக காட்டி விடும் காதல்

மூன்று மாதம் கடந்ததும் முற்றலாகும் காதல்
முச்சந்தியில் ஒருநாள் நிறுத்தி வைக்கும் காதல்
கடையில் அரிசி கடன் கேட்க வைத்திடும் காதல்
வீட்டு செலவுக்கு தோடு அடகு வைக்கும் காதல்

உண்டான குழந்தையால் திண்டாட வைக்கும் காதல்
மருத்துவ செலவுக்கு சங்கிலிக்கு சங்கு ஊதும் காதல்
திட்டமிடாத வாழ்க்கையால் திணற வைக்கும் காதல்
தினந்தோறும் பிரச்சனை கசந்து போகும் காதல்

உன்னாலதான் நான் கெட்டேன் உளறி விடும் காதல்
என்னை சோமனூருல கேட்டாக சொல்ல வைக்கும் காதல்
பெற்றோரை நினைத்து இருவரையும் அழ வைத்திடும் காதல்
அப்பாவின் காலில் இருவரையும் விழ வைக்கும் காதல்

பெயரன் விக்னேஷைக் கண்டதும் கலங்க வைக்கும் பாசம்
தனது மகனையும், மருமகளையும் மன்னித்து விடும் பாசம்
மனைவியிடம் பாயாசம் வைக்க சொல்லும் அப்பாவின் பாசம்
குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு போக வைக்கும் பாசம்

சிவாதாமஸ்அலி-
பெரும்பாலான காதலர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது காரணம் இன்றைய காதலின் வலிமை அப்படி கல்யாணத்துக்குப் பிறகு காதலித்தால் நிச்சயம் மாபெரும் வெற்றியே அதாவது மனைவியை.....

26 கருத்துகள்:

  1. படிப்படியாக... அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய காதலின் விளக்கத்தை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறுவது போல் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் முடிந்து மனைவியுடன் தன் வாழ்க்கையையும் காதலித்து, படிப்படியாக முன்னுக்கு வந்து குழந்தைகளுடன், குடும்பத்தையும் விரும்பி, பெற்றவர்களுடன் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக வாழ்ந்திருக்கும் சுவையில் இந்த காதல் மிளிரும். ஆனால். காதல் என்ற பெயரில், தங்கள் சுகங்களை மட்டும் விரும்புகிறவர்களுக்கு இந்த வியாக்கியானங்கள் கசந்து வழியும். என்ன செய்வது? அழகாக கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இன்றைய காதலின் நிலைப்பாட்டை கதை போல சொல்ல முயன்றேன் அது கவிதை வடிவமாக மாறிவிட்டது.

      பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. இதனால்தானோ..எனக்கு அந்தக் காதல் கிட்டவில்லையோ..?? கடைசி வரியில் அப்பா ..வெட்டிக் கொல்வதற்கு பதில் பாயாசத்தில் விசம் வைத்து நாசூக்காக கொன்று விடுவாரே...???

    பதிலளிநீக்கு
  4. என்னதான் நீங்க எழுதினாலும் காதல் வயப்பட்டவங்க காதில் எதுவுமே ஏறாது. எதையும் சொல்லாமல் இருந்தால், பின்னால கண் கெட்டபின்பு, ஏன் நீங்க அப்பவே சொல்லலைன்னுவாங்க. சொன்னால், காதில் வாங்கிக்க மாட்டாங்க.

    கடைசி 4 வரி........ உங்க மனசுல உள்ளது வெளில வந்துடுச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் வயப்படுவது பதின்ம வயதின் குழப்பமான சூழலில்தானே நண்பரே...

      //கடைசி 4 வரி........ உங்க மனசுல உள்ளது வெளில வந்துடுச்சா ?//

      ஹா.. ஹா.. இந்நிலையில் நானில்லையே...

      நீக்கு
  5. கற்பனையில் மிதக்கிறவர்கள் இருக்கும்வரை காதலும் இருக்கும்! சரியா நண்பரே?

    காதல் படுத்தும் பாட்டை உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. காதலை,
    அக்குவேறாக
    ஆணி வேராக
    அறுத்து
    எறிந்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. மிக மிக உண்மையான நிலவரம்.
    எத்தனையோ ஜோடிகள் இப்படித்தான்

    காதல் தோற்று பாசம் வெற்றி பெறுவது அருமை.
    நன்றாக இன்றைய நிலையைப் படம் பிடித்து விட்டீர்கள் அன்பு தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. பெயரன் வந்து அனைத்தையும் 'முடித்து' விட்டானே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி பெயரனுக்கு தாத்தாவை வீழ்த்தும் பலம் உண்டுதானே...

      நீக்கு
  9. கவிதையை ரசித்தேன் ஜி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. உண்மையை புட்டு வைத்து விட்டீர்கள். காதலர் தினத்தன்று மீள் பதிவாக போடுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நிச்சயமாக செய்திடலாம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. முழு உண்மை. ஆனால் இன்றைய பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன. இதில் பெண்களே பெரும்பாலும் விரைவில் விலக முடிவெடுக்கின்றனர். பெற்றோர்களும் காரணம். :( திருமண பந்தத்தின் மதிப்புக் குறைந்து கொண்டே வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      உண்மைதான் திருமண பந்தத்தின் உறவு இழிவாக போய்க்கொண்டு இருக்கிறது. வருகைக்கு நன்றி.

      நீக்கு