வியாழன், மார்ச் 11, 2021

யாருக்கு ஆறு ?01. மனிதர்கள் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில்  போடுவார்கள், மிருகங்கள் தனது குட்டிகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை இதில் யாருக்கு ஐந்தறிவு ?


02. மனிதர்கள் நன்றி மறப்பார்கள், நாய்கள் நன்றி மறப்பதில்லை இதில் யாருக்கு ஐந்தறிவு ?


03. மனிதர்களில் பலர் கொடுத்த சத்தியத்தை மீறுவார்கள், யானைகள் அங்குசத்து சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வாழும் இதில் யாருக்கு ஐந்தறிவு ? 


04. மனிதர்களில் பலர் பணத்துக்காக பொய் பேசுவார்கள், மிருகங்கள் இதற்காகத்தான் வாய் திறந்து பேசுவதில்லை இதில் யாருக்கு ஐந்தறிவு ?


05. மனிதர்கள் இரண்டு மணம் செய்தும், மூன்று உறவுகளை சேர்த்து வாழ்வர், மணிப்புறாக்கள் தனது இணை இறந்து விட்டால் வேறு இணை சேர்வதில்லை இதில் யாருக்கு மூன்றறிவு ?


06. மனிதர்கள் புழுக்களை உயிருடன் தின்பார்கள், புழுக்கள் மனிதனை இறந்த பிறகுதான் தின்கின்றன இதில் யாருக்கு ஓரறிவு ?


07. மனிதர்கள் தனது இனத்தை வெட்டி அழிப்பார்கள், மற்ற உயிரினங்கள் தன்னினத்தை அழிப்பதில்லை.


இத்தனை கீழ்த்தரமான எண்ணங்கள் உள்ள மனிதனுக்கு ஆறறிவா ?


 

காணொளி

50 கருத்துகள்:

 1. ஆம்.  அவை இந்தக் கீழ்மை குணங்களை பழகுவதில்லை.  

  பதிலளிநீக்கு
 2. உண்மை தான். ஆனாலும் மனிதர்கள் தானே உயர்ந்தவர்களாக இருக்காங்க. இணையம் சரியில்லையோ என்னமோ காணொளி வரலை. முயற்சி செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதர்களை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதே மனிதன்தானே...

   நீக்கு
 3. காணொளி அற்புதம். இத்தனை திறமைகளை ஒளித்துக்கொண்டு நீங்கள் மனம் வருந்தவே கூடாது. பெருமைப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ முயற்சி செய்து காணொளி கண்டு களித்தமைக்கு நன்றி.


   இனி கவலைகளை ஒழிப்பதே முதல்ப்பணி ஆறுதலுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஒருவேளை கீழ்த்தரமான எண்ணங்கள்தான் ஆறாவது அறிவோ என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இருக்கலாம் ஆறு ஒன்றுக்கு கீழ்தானே வருகிறது.

   நீக்கு
 5. உங்கள் கருத்து மிகச் சரியானதே.

  ஆறறிவு இருந்து என்ன பயன்? இவனின் கீழ்த்தரமான எண்ணங்களால் அடியோடு அழிந்துபோவான்..... வெகு விரைவில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 6. நிலை மாறினால் குணம் மாறுவான்
  பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
  தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
  அது வேதன் விதி என்றோதுவான்
  மனிதன் மாறிவிட்டான்...
  மதத்தில் ஏறிவிட்டான்...

  வந்த நாள் முதல் இந்த நாள் வரை
  வானம் மாறவில்லை...
  வான் மதியும் மீனும் கடல் காற்றும்
  மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
  நதியும் மாறவில்லை...
  மனிதன் மாறிவிட்டான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி காணொளியை ரசித்தமைக்கும், அழகிய பாடலை கருத்துரையாய் தந்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 7. மனிதன் தான் தன்க்கு ஆற்றிவு என்று சொல்லிக் கொள்கிறான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா மனிதன் தன்னைத்தானே பீத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறான்.

   நீக்கு
 8. ஆறறிவு என்று பெருமை பீத்திக் கொண்டாலும், தன்னைப் பற்றி மனிதன் அறிந்தே இருக்கிறான்... எத்தனை புரிந்தாலும் ஒத்துக் கொள்ளும் தன்மை மனிதரிடத்தில் இல்லை!

  காணொளி முன்னரும் பார்த்திருக்கிறேன். மீண்டும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 9. ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் உள்ள வித்தியாசங்களை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!
  காணொளி பிரமிக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 10. நல்ல சிந்தனை சார்.
  இந்த குப்பைத்தொட்டி, பணம், போன்றவற்றை உருவாக்கியதும் இதே ஆரறிவு மனிதனே.
  இது குறித்து சேப்பியன்ஸ் என்ற உலகப் புகழ் நூல் விரிவாக பேசுகிறது.
  அது குறித்து விரைவில் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்லது வாழ்த்துகள் எழுதுங்கள்.

   நீக்கு
 11. நீங்க எழுதியிருக்கிறது சிந்திக்க வைக்குது. ஆனால் மனுஷன் எப்போதும் பெற்றோரை டிபெண்ட் பண்ணியிருக்கான், அப்பன் சொத்தை தனக்கு எழுதிக்கறான், 16 வயசாச்சுன்னா, வீட்டை விட்டுப் போகலாம் என்று மேற்கத்தைய நாடுகள் போல இருந்தால் கொஞ்சம் பெட்டரா இருப்பானோ?

  விலங்குகளுக்கும் மோசமான குணங்கள் உண்டு (கழுதைப்புலி, தான் வேட்டையாடாமல், பிறர் வேட்டையாடியதை, அவர்களைத் துரத்திவிட்டு உண்ணும்... ) இதெல்லாம் நினைச்சு, நம்மைவிட விலங்குகள் பெட்டர் இல்லை என்று ஆறுதல்பட்டுக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது அனுபவத்தில் தோன்றுவது மேற்கத்திய நாடுகள் போல பாசத்துக்கு அடிமையாகாமல் வாழ்வது சரிதான்.

   ஒரு சில விலங்குகளை விலக்களித்து பார்த்தால் மனிதனுக்கு ஆறறிவு என்பது தவறானதே...

   நீக்கு
  2. மேற்கத்திய நாகரிகம்!?...

   யாருடனும் ஆடலாம்.. யாரையும் கூடலாம்.. நேற்றைக்கு அவன் .. இன்றைக்கு இவன்.. நாளைக்கு எவனோ!..

   மிருக வாழ்வின் மறு பதிப்பல்லவோ அது!..

   அவனுடைய நாகரிகமும் வாழ்க்கை நடைமுறையும் சரி என்று இருந்தால் அவன் ஏன் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் அவை தரும் அமைதியையும் தேடி பாரதத்துக்கு வருகிறான்?...

   நீக்கு
  3. இழப்பின் விரக்தி இப்படியும் எண்ண வைக்கிறது ஜி

   நீக்கு
 12. கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலானவற்றிர்க்கு 6 சீட்டுகள்தான் ஒதுக்குவதால், இது என்ன அரசியல் பதிவோ என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. தேர்தல் ஜூரம் எனக்கு வராது நண்பரே...

   நீக்கு
 13. ஆஅவ் !!! காணொளி சூப்பர் எடிட்டிங்கும் சூப்பர் .
  தலைப்பை பார்த்துட்டு ஆறு படம் பார்ட் 2 வரப்போகுதோன்னு நினைச்சிட்டேன் !!!!
  இந்த பாழாய்ப்போன மனுஷங்க மிருகங்களின் எல்லைக்குள் போகாம இருந்தாலே போதுமானது .மனுஷன்கிட்டருந்து அதுங்க துஷ்ட குணத்தை கத்துக்காம இருக்கணும்னு வேண்டிப்போம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஏஞ்சல் காணொளியை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. ஓரறிவு, மூவறிவு, அஞ்சறிவு, ஆறறிவு இத்தனை அறிவெல்லாம் கண்டுபிடித்தது யாரோ..???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனை கண்டு பிடித்தது ஆறறிவு என்று பொய் சொல்லும் மானிடன்தான் நண்பரே...

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  தலைப்பு நன்றாக உள்ளது. அறிவுகளை வகைப்படுத்தி நன்றாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். மனிதனுக்கு தற்பெருமை என்ற ஆறரறிவு சிறு வயதிலிருந்தே உண்டு. காணொளி தேர்வு நன்றாக உள்ளது. அவர்கள் பழகுவது நமக்கு சற்று பயம் ஏற்படுத்தினாலும், அவர்கள் பழகும் பாசம் பிரமிக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் தற்பெருமை மனிதனுக்கு ஆதிமுதலே இருந்து வருகிறது.

   காணொளியை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 16. காணொளி மிக அருமை.
  அன்புக்கு ஏது இனம்?

  மிக நெகிழவான அன்பு. போட்டி போட்டுக் கொண்டு அன்பு செலுத்துகிறது அந்த அன்பான மனிதரிடம்.


  மிருகங்கள் மேல் தான் மனிதனை விட.

  பதிலளிநீக்கு
 17. நாம் தானே நம்மை ஆறறிவு என்று சொல்லிக் கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 18. Election time..so இப்படி 6 பற்றி சொல்லி..பயமுமறுத்தலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேர்தலுக்கும், இந்த பயத்திற்கும் பந்தமெங்கே ?

   பணம் வாங்கிட்டு வழக்கம்போல் திருடுவதற்கு அங்கீகாரம் கொடுக்கப் போறோம். பிச்சை வாங்குபவர்கள்கூட ஐந்து ரூபாய் கேட்கிறார்கள். ஆயிரம் ரூபாய் நாம் ஓட்டுக்கு வாங்கினால் ஒரு தினத்துக்கு 0.50 பைசா வருகிறது அதையும் வெட்கமில்லாமல் வாங்கி கொண்டு அடுத்த ஐந்து வருடம் காத்திருக்கிறோம்.

   நீக்கு
 19. ஆறறிவு உடைய எவரும் தம்மை ஐந்தறிவாகக் குறுக்கிக் கொள்வதில்லை..

  பதிவின் வழியான கேள்விக் கணைகள் நல்லவர்களை நெருங்கா!..

  பதிலளிநீக்கு
 20. காணொளியும் உங்கள் சிந்தனைகளும்
  மிக யோசிக்க வைக்கின்றன.
  மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 21. பட்டினத்தார் பாடலைப் படித்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்திய பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 22. படத்தில் வரும் இந்தி பாட்டு முதலில் வந்ததா இல்லை தமிழ் பாட்டா என்று தெரியவில்லை
  ஓர் ஆயிரம் பார்வையிலே

  பதிலளிநீக்கு
 23. கில்லர்ஜி, ஆரைப்பார்த்துச் சொல்றீங்கள் மனிசருக்கு ஆறவு என:))...

  ஒப்புதல்கள் அருமை, இன்னும் எழுதியிருக்கலாம், பகுதி 2 ஐ எதிர்பார்க்கிறேன்..

  வீடியோ அழகு.. இப்படி நிறைய பாச வீடியோக்கள் பார்த்திருக்கிறேன், ஆனா இப்படித்தான் ஒஸ்ரேலியா ஸூ ல வேலை செய்த ஒருவர் இறந்த கதையும் நிகழ்ந்தது, மிருகங்கள் எப்போ மனம் மாறிக் கொல்லும் எனவும் சொல்ல முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஆம் மிருகத்தின் குணம் சட்டென மாறலாம் மனித மிருகத்தைப்போல...

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...