தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 14, 2021

பதினெட்டாம் பலி


விழிகளால் கதை பேசியவளே...
உளிபோல் குத்தி விடுபவளே...
பலியாடாக என்னை ஆக்கியவளே...
 
பழி வாங்கும் திட்டமா குணவதியே...
களிப்புடன் வாழ்வோமா சதியே...
கிலி வேண்டாமடி பொன்மதியே...
 
வழி உண்டு வாழ்வில் கண்ணே...
காளி துணையிருப்பாள் பெண்ணே...
வலி வேண்டாமென்று எண்ணே...
 
அழியாத காவியமாய் நாமே...
தோளில் சுமப்பேன் தினமே...
வாலிபால் போன்ற மனமே...
 
நாழிகை கடப்பாய் என்னை...
நூலிழை இல்லாமல் உன்னை...
மளிகை கடையே திண்ணை...
 
கிழியாத பாராசூட்டில் விண்ணில்...
காலி செய்த மனை தன்னில்...
மாளிகை கட்டுவேன் மண்ணில்...
 
கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

  1. ரசித்தேன்.  ஆனால் நாழிகை நூலிழை மளிகை பாரா என்ன சொல்ல வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வேதம் சாத்தான் ஓதுதாம்" தத்துவம் சொன்னா ரசிக்கணும், இப்படி குறுக்கு கேள்வி கேட்கப்படாது - உலக்கை நாயகன்

      ஹி.. ஹி.. எனக்கும் இரண்டு தினங்களாக இந்த வரிகள் புரியாத புதிர்தான் ஜி - கில்லர்ஜி

      நீக்கு
    2. பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    3. தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  2. அதானே, ஶ்ரீராம் சொன்னாப்போல் அந்தப் பத்தி கொஞ்சம் புரியலை. மற்றபடி வழக்கம் போல் உங்கள் தமிழ் விளையாடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் தந்து சமாளிச்சுட்டேன் ஹையா....

      நீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மனோ வலிமையுடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வல்லமையை இறையருள் உங்களுக்கு அருளப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் உண்டாகுக! வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டில் அனைத்து நலன்களையும் அனைவருக்கும் இறைவன் தந்தருள மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    கவிதை அருமை. லி, ளி, ழி வார்த்தைகள் பக்கபலமாக உடன் வர கவிதை அழகாக வளர்ந்துள்ளது. ரசித்தேன். பொருத்தமான முகப்பு படமும் அருமை. தொடரட்டும் தங்களின் கவிதைகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

      கவிதையை ரசித்தமைக்கு நன்றி. புகைப்படம் நான் உருவாக்கியதே....

      நீக்கு
  5. பாவங்க அந்த பொண்ணு. இப்படி வாங்குறீங்களே.
    வழக்கம் போலவே அருமை நண்பரே.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி.

      நீங்க எந்த பொண்ணை சொல்கிறீர்கள் ? பரவை முனியம்மாவா ?

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி ஜி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  7. கவிதை நன்றாக இருக்கிறது.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  8. 'குரங்கு மனம்'... உவமை பழசோ பழசு. 'வாலிபால் மனம்'... புத்தம் புதுசு.

    அந்த மூனு வரிக்கு[நாழிகை... நூலிழை... மளிகை...] 'அதிரா' உரிய விளக்கம் தருவார்.

    கில்லர்ஜி உட்பட அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே புரியாத வரிகளுக்கு அதிராவின் மதுரத்தமிழில் குழப்பினால் தெளிவாகலாம்.

      தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  9. கிழியாத பாராசூட்டில் மாளிகையா?! கற்பனை அற்புதம்!

    பதிலளிநீக்கு
  10. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கில்லர்ஜி....

    ஆமாம்..கவிதையில் என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      ளி ழி லி இவைகளை வைத்து எழுதிப் பழகினேன்.

      தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  12. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  13. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  14. அட,
    அந்தப் பெண் யார்னு தெரியலையே!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்தப்பெண், அந்தப் பெண்ணுதான்.

      நீக்கு
  15. அப்புறம்.. அந்தப் பொண்ணு என்ன சொன்னதுன்னு தெரிஞ்சா மண்டை குடைகிறது நிற்கும் ...நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே மண்டை காய்ஞ்சு போயித்தானே எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்.

      நீக்கு