தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 22, 2021

இன்நன்று நன்றல்ல...

 

01. நாம் பிறருக்கு செய்த உதவியை மறப்பது நன்று.
பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பது நன்றன்று.
 
02. தனது மனைவியை நினைத்திருப்பது நன்று
பிறருடைய மனைவியை நினைப்பது நன்றன்று.
 
03. கவலைகளை மறக்க நினைப்பது நன்று.
கவலையே நினைவாக இருப்பது நன்றன்று
 
04. மனைவியோடு ஆனந்தமாக வாழ்வது நன்று.
ஆனால் ஊதாரித்தனமாக வாழ்வது நன்றன்று.
 
05. கூத்தாடிக்கு ரசிகனாக இருப்பது நன்று.
அவனுக்கு வெறியனாக இருப்பது நன்றன்று.
 
06. பொழுது போக்குக்காக கிரிக்கெட் பார்ப்பது நன்று.
அதையே வேலையாக்கி கிறுக்கனாவது நன்றன்று.
 
07. அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போடுவது நன்று.
அவர்களுக்கு தொண்டனாக இருப்பது நன்றன்று.
 
08. வாழ்க்கை உயர்வுக்காக கடன் வாங்குவது நன்று.
வாழ்வு முழுவதும் கடன் வாங்குவது நன்றன்று.
 
09. நாள்தோறும் இறைவனை வணங்குவது நன்று.
நம்பிக்கை இன்றி வணங்குவது நன்றன்று.
 
10. மாமனார் வீட்டுக்கு போய் வருவது நன்று.
மாமனார் வீட்டிலேயே வாழ்வது நன்றன்று.
 
11. நாம் பிறருக்கு கொடுத்த கடனை மறப்பது நன்று.
பிறரிடம் வாங்கிய கடனை மறப்பது நன்றன்று
 
12. கஷ்டப்படும் சகலைக்கு உதவுவது நன்று.
கொழுந்தியாளுக்காக உதவுவது நன்றன்று.
 
ChavasRegal சிவசம்போ-
மதுவை அருந்துவது நன்று, மதுமிதாவையும் அருந்தச் செய்வது நன்றன்று.
 
சாம்பசிவம்-
ஆமா பிறகு அவள் பாட்டிலை காலி பண்ணிடுவாளே...

46 கருத்துகள்:

 1. ஒன்றும் பதினொன்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறதோ....!  பனிரெண்டு படித்ததும் சிரித்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆம் உதவியும், கடனும் கிட்டத்தட்ட ஒன்றுதானோ ?

   நீக்கு
 2. ஐந்தும் ஆறும்... அப்பாடி..   கொஞ்சம் ரசிக்கலாம் என்று சொல்லி இறங்கி வந்திருக்கிறீர்கள்!  எலலாமே அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் ஏழையும் அந்த வரிசையில் சேர்க்கலாமே... வருகைக்கு நன்றி ஜி.

   நீக்கு
 3. எல்லாமே நன்று!!!! கில்லர்ஜி! நன்றல்ல என்றதும் கூட நன்று!!!

  கிரிக்கெட்டும் நடிகர்களும் கொஞ்சம் பிழைத்தது/தார்கள்!! ஹாஹாஅ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஹா.. ஹா.. எல்லோருமே ஏன் இப்படி நினைக்கிறீர்கள் ?

   நீக்கு
 4. நன்று, நன்றன்று...மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பொருத்தமான சொற்கள் அமைத்து ஒவ்வொரு வரிகளையும் சிந்தித்து நன்றாக எழுதி உள்ளீர்கள். முகப்பு படமும் பதிவுக்கு பொருத்தமாக உள்ளது. உடை நன்றாக இருப்பதையும் இப்படித்தான் கிழித்து அணிகிறார்கள்.

  12 தத்துவங்களும் நன்றாக உள்ளது. அருமை. ரசித்தேன். கடைசியில் புன்னகைக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை இரசித்தமைக்கு நன்றி.

   அந்தப் புகைப்படம்தான் இந்த வார்த்தைகளுக்கு வித்து.

   நீக்கு
 6. நன்று நன்றன்று கவிதை அருமை.
  நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. பதிவு நன்று. நன்றன்று என்று எவரேனும் சொல்ல நினைத்தால் நன்றன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. பதிவு நல்லா இருக்கு. படத்தைப் பார்த்தால்,
  13. யாரேனும் கிழிந்த ஜீன்ஸ் டிரவுசர், மாடர்ன் என்று வாங்கித்தந்தால் உபயோகிப்பது நன்று.
  ஆனால் நாம் வாங்கின ஜீன்ஸ் டிரவுசரை கிழித்து விட்டுக்கொண்டு இதுதான் லேடஸ்ட் மாடல் என்று சொல்வது நன்றன்று

  என்று எழுதியிருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   13. ஹா.. ஹா.. ஸூப்பர் வசனம் தொடர்ந்து எழுதுங்கள்.

   நீக்கு
 9. 3 ஆவது எழுதும்போது என்னை நினைச்சுக் கொண்டீர்களோ! நம்ம நிலைமை அப்படித் தான் இருக்கு! இஃகி,இஃகி,இஃகி! நல்லாத் தான் இருக்கு எல்லா நன்றன்றுகளும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இது இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் இதே நிலைப்பாடுதான் பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 10. கருத்துகள் நன்று. மதுமிதாவை[?] வம்புக்கிழுத்தது நன்றன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அது ChavasRegal சிவசம்போவைத்தான் கேட்கணும்.

   நீக்கு
 11. நல்லதையும் , அல்லதையும் சொல்லியிருக்கீங்க.... பின்பற்றணுமே...

  பதிலளிநீக்கு

 12. //கொளுந்தியாளுக்காக உதவுவது நன்றன்று///

  கில்லர்ஜி ஒழிக கில்லர் ஒழிக கில்லர்ஜி இந்த வரியை வாபஸ் வாங்கும் வரைக்கும் கலைஞர் ஸ்டைல் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ஐயய்யோ கொலைஞர் ஸ்டைலா ? இது சுத்த மோசமாச்சே...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நானும் இதற்கு எதிர்ப்புச் சொல்லுவேன்:)).. கொழுந்தியாளை தன் சகோதரியாக நினைச்சு உதவோணும் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. //சகோதரியாக நினைச்சு//

   இதென்ன புதுக்கூத்து ?

   நீக்கு
 13. அத்தனை நன்றுகளும் நன்று.
  கிழிந்ததைத் தைத்துப் போட்டுக் கொள்பவர்கள் நாம்.
  இவர்கள் இருப்பதைக் கிழித்து
  உடலைக் காண்பிக்கிறார்கள். என்ன ஒரு மன நிலை
  இது:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா இதுவா முற்போக்கு சிந்தனை ?

   நீக்கு
 14. 3,4,5,6 என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பது நனறு.
  ஆனால் அனைத்துமே மக்களுக்குப்
  பொருந்தும் என்பதால்
  எல்லா வாக்கியங்களும் நன்றி அன்பு தேவகோட்டை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 15. எல்லாமே நன்று, நன்று, நன்றுதான். கடைசியில் வைத்தீர்களே ஒரு பஞ்ச்!ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் பல பதிவுகளுக்கு வரவில்லையே...

   நீக்கு
 16. பத்தோடு முடித்திருந்தால் ஒரு வேளை திருக்குறள் மாதிரி இருந்திருக்கலாமோ...
  இருப்பினும் நன்று நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. வருக நண்பரே குறளோடு இதை ஒப்பீடு செய்யலாமா ?

   நீக்கு
 17. ஹா ஹா ஹா அனைத்தும் நன்று..
  ஆனால் கொழுந்தியாளைக் குறை சொல்வது நன்றல்ல:))..

  ஆவ்வ்வ் மீயும் ஜொள்ளிட்டேன் பஞ்ஞ்ஞ்ஞ்:))

  பதிலளிநீக்கு
 18. சிரித்துக் கொண்டே சிந்தித்தேன்...

  எனது பதிவு

  என் அழகான நாட்கள்...!
  https://inaiyaidhazh.blogspot.com/2021/04/en-azhagana-naatkal.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நட்பே தங்களின் முதல் வருகைக்கு வந்தனம்.

   நீக்கு
 19. என்ன கில்லர்ஜி இதெல்லாம்? ம்.. நவீன உலகம் போல...

  நீங்கள் இந்த கேள்விக்கு பதில் தருவதாக சொன்னீர்கள் என்பதை நினைவுபடுத்தி....

  https://newsigaram.blogspot.com/2018/06/FEW-MINS-WITH-SIGARAM-QandA.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி.
   இதோ தளம் வருகிறேன் என்ன விடயம் ?

   நீக்கு
 20. நன்று ! நன்றன்று--super.. நண்பரே!!

  பதிலளிநீக்கு
 21. நல்லா இருக்கு நண்பரே!

  பதிலளிநீக்கு