தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 06, 2021

விதியோரம்...

ணக்கம் நண்பர்களே... ‘’நதியோரம் நாணல் ஒன்று நாணம் கண்டு’’ என்ற கவிஞர் வாலியின் எனக்கு பிடித்த சுத்ததன்யாசி ராகத்தில் பாடிய அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

இதோ எனது பாடல்...
 
பெண்
விதியோரம்.......
விதியோரம் காணல் இன்று கனல் கண்டு
வாட்டியும் பாடுது கொல்ல – ஏன்
இந்த அவதியை நான் தள்ள
விதியோரம்.......
 
ஆண்
விதியோரம்.......
விதியோரம் காயும் இரு பானம் நன்று
ஆளிடை என்னையும் மெல்ல – ஏன்
இந்த அவதியை நான் தள்ள...
விதியோரம்.......
 
பெண்
மண்ணிற தேகம் நான் கட்டிலை தொட்டு
நாடுவதென்ன தலையை தேடுவதென்ன
திகில்தானோ... அகில்தானோ...
திகில்தானோ... அகில்தானோ...
வந்தனம் பாடிருக்கு... ஏன் பிந்துற சாடிருக்கு
மான் வேண்டுமா தான் வேண்டுமா
தீ என்னை கால்களில் தள்ள ஏன்
இந்த அவதியை நான் தள்ள...
 
ஆண்
விதியோரம்....... ம்... விதியோரம்...
பெண்
லுலு... லூ... லுலு... லூ... லுலு... லூ...
 
ஆண்
பாயிலையாட்டம் தீ தேவனை ஓட்டும்
கிள்ளுவதென்ன பஞ்சை தள்ளுவதென்ன
கனி தாங்கும் வசம்புள்ளே
கனி தாங்கும் வசம்புள்ளே
பின்னுது தள்ளாட்டம் கள்ள
சித்திரை போராட்டம்
தேர்கோலத்தில் மார்கோலத்தில்
காவலன் காவலில் தள்ள ஏன்
இந்த அவதியை நான் தள்ள...
 
பெண்
விதியோரம்....... ம்... விதியோரம்...
 
ஆண்
காயும் இரு பானம் நன்று
ஆளிடை என்னையும் மெல்ல
பெண்
ஏன் இந்த அவதியை நான் தள்ள
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1979
படம்: அன்னை ஓர் ஆலயம்
பாடலாசிரியர்:  வாலி
இசை இளையராஜா
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசிலா
 
இதோ கவிஞர் வாலியின் பாடல் வரிகள்
 
பெண்
நதியோரம்.........
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
நதியோரம்.........
 
ஆண்
நதியோரம்.........
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
நதியோரம்.........

பெண்
வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ.. துகில்தானோ..
முகில்தானோ.. துகில்தானோ..
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள.. - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

ஆண்
நதியோரம்.... ம் நதியோரம்
பெண்
லுலு... லூ... லுலு... லூ... லுலு... லூ...

ஆண்
தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

பெண்
நதியோரம்.... ம் நதியோரம்
 
ஆண்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
பெண்
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=BxK5EqjGaQ0
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

22 கருத்துகள்:

  1. பாடலின் பொதுவான கருத்தாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை எனினும் ரசித்தேன்.  ஒரிஜினல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜி பாடல் வரிகள் எதிர்புறமாக எழுதி இருக்கிறேன் அதாவது உல்டாவாக (வழக்கமான முறைதானே) அர்த்தம் சொல்வதற்கு இது எனது பாடல் இல்லையே...

      இரண்டு வார்த்தைகளையும் ஒப்பீடு செய்து பாருங்கள் ஜி வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. இருவரும் தள்ளி - தள்ளி விட்டு விளையாட்றாங்களா ஜி...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இருக்கலாம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தாங்கள் புனைந்த பாடல் அருமை. அன்னை ஒரு ஆலயம் படப்பாடலையும் கேட்டுப் பார்த்தேன். அப்படப்பாடலுக்கு பொருத்தமாக தாங்கள் இட்டுக் கட்டியது சிறப்பாக உள்ளது. நடுநடுவில் வரும் வார்த்தைகள் எனக்குத்தான் கொஞ்சம் புரியவில்லையோ எனத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி

      கோரஸ் பாடியவர்களின் வார்த்தைதான்.
      லுலு... லூ... லுலு... லூ... லுலு... லூ...

      நீக்கு
  4. வழக்கம் போல உங்கள் பாடல் புனைதல் நல்லாருக்கு ஜி. ரசித்தேன்.

    ஒரிஜினல் பாடல் நல்ல பாடல் கில்லர்ஜி...

    என்ன பாட்டு என்று சுட்டியில் சென்று கேட்டுவிட்டு வந்தேன். என்ன பாடல் என்று தெரிந்தது.

    அந்த ஆனந்தம் என்பதற்குப் பதிலாக பெற்ற ஆனந்தம்னு வந்தா இன்னும் அர்த்தம் சேருமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாடலை ரசித்தமைக்கு நன்றி.
      பாடல் வரிகள் எல்லாமே எதிர்ப்பதும்தானே (ஆனந்தம் + அவதி) அதே வரிகளை மாற்றுவதே பாடலின் குறிக்கோள்.

      நீக்கு
  5. அட! ராகம் எல்லாம் சொல்லிருக்கீங்களே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சன்னியாசம் போனபோது அறிந்தவை சுத்ததன்யாசி ராகம்.

      நீக்கு
  6. நிஜம்மாவே ஒண்ணும் புரியலை. ஆனால் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. அதே மாதிரி மெட்டுக்குப் பாட்டெழுதணும்னால்! அதுவும் உங்களோட கருத்தைச் சொல்லும் அளவுக்கு! என்னமா யோசிக்கிறீங்க என வியக்க மட்டும் முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் வழக்கம் போல் பாடல் வரிகளை உல்டா செய்து எழுதுகிறேன்.

      பிறகு புரியவில்லை என்றால் ??? மேலும் உண்மையான வரிகளை விட எனது இப்பாடல் வரிகள் சற்று ஆபாசமாக இருப்பதும் உண்மை.

      நீக்கு
  7. உங்கள் திறமைக்கு சொந்தமாக பாடல்கள் எழுதலாம், இயற்கை, மழை, குழந்தையின் சிரிப்பு பற்றி எல்லாம் எழுதுங்கள் ஜி.

    மாற்றி எழுதும் திறமைக்கு மற்றும் ஒரு பாட்டு.

    பாட்டை படித்து விட்டு வாலியின் பாடலையும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      பாடலின் ஒலியை கேட்டுக் கொண்டே எனது வரிகளை படித்து பாருங்கள் பொருத்தமாக வருகிறதா என்று...

      நீக்கு
  8. கில்லர்ஜி உங்கள் திறமைக்கு நீங்கள் திரைப்படத்திற்குப் பாட்டெழுதலாம்.

    துளசிதரன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  9. திறமையானவர் நீங்கள்.

    இந்தப் பாட்டு எதற்கான அர்த்தம் என்று தான் புரியவில்லை.
    நீங்களே நல்ல கவிதை எழுதுங்கள்
    அன்பு தேவகோட்டைஜி.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிமா...

      நீக்கு
  10. நதியோரம் நாணல் - நல்லதொரு பாடல்! மிகவும் பிடித்த பாடலும் கூட. அந்த வரிகளுக்குப் பதிலாக உங்கள் வரிகள் - சிறப்பு. பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு