ஒருமுறை அபுதாபியில் தேரோட்டி SORRY காரோட்டிக் கொண்டு போகும் பொழுது ஸிக்னலில் நின்றேன்
எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பும்போது அடுத்த ட்ராக்கில் எனக்கு அருகில் ஒரு
லேண்ட் க்ரோஷர் அதில் பின்புறத்தில் உட்கார்ந்திருந்த ஆண் ஒருவ(ன்)ர்
என்னைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது காரணம் எனது மீசைதான் என்பதை புரிந்து
கொண்டேன், நம் இனிய இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரிய மீசையாக, விதவிதமாக
வைத்திருப்பவர்கள் அதிகம் அது ஒரு விசயமே இல்லைதான் ஆனால் அரபு தேசங்களில்
வைக்ககூடாது பெரும்பாலும் வைக்கவும் மாட்டார்கள் பின்புறத்தில் உட்கார்ந்திருந்தவன்
முன் டிரைவிங் சீட்டில் ஒரு பெண் பக்கத்து சீட்டில் அவளது கணவனாகத்தான் இருக்க வேண்டும்
அதொரு இந்தியக்காரர்கள் மும்பை வகையறா என்று தெரிந்து கொண்டேன் முன்புறத்தில்
உள்ளவர்களிடம் எனது மீசையைபற்றி சொல்லியிருக்க வேண்டும் ஒரு இந்தியன் பக்கத்து
காரைப்பார் என்று முன்புறத்தில் இருந்தவன் என்னைப் பார்த்தான், அவன் எனக்கு நேராக
இருப்பதால் மறைக்கவே அவளும் என்னை எட்டிப்பார்த்தாள் சிரித்தாள், நான் மொத்தமாகவே
அவர்களைப் பார்த்து வழக்கம் போலவே இயல்பான அழகுடன் புன்சிரிப்போடு இருந்தேன். பார்வைகள்
நேருக்கு நேர் நிகழ்ச்சி போல ஒரு நிமிடத்துக்கும் மேல் நீடிக்க அனைவரும் சிரித்து
பேசுகின்றார்கள் என்பது எனக்கு தெரிகிறது இருவரது கார் கண்ணாடிகளும் அடைத்து
இருக்கிறது முக்கிய காரணம் அந்த இரு ஆடவர்களுக்கும் மீசை கிடையாது
மும்பைகாரர்கள்தான் பெரும்பாலும் மீசை வைத்துக் கொள்வதில்லையே... நேருக்கு நேர்
பார்வை நீடிக்க முன்புறத்து ஆண் கைகளை விரித்து என்ன ? என்பது போல் கேட்க, பதிலுக்கு நானும் அதேபோல் கேட்க, அவன்
மீண்டும் கேட்க, நான் மீண்டும் கேட்க, அவன் கோபமாக கேட்க, எனக்கு கோபம் வருமா... வராதா ? பதிலுக்கு நானும் கோபத்துடன் கேட்க இரண்டு நிமிடம் ஓடியதால்
ஸிக்னல் விழுந்து பின்புறத்தில் நிற்பவர்கள் ஹாரன் அடிக்கவே நினைவு வந்து காரை
எடுக்கும் அளவுக்கு பனிப்போர்...
நடந்தது என்ன ? எனது மீசையை
குறித்து பேசியிருக்கின்றார்கள் நமக்குத் தெரியாதா ? வருஷம் பூராம் எவ்வளவு நண்பர்களை
சமாளித்து வருகிறோம் போலீஸ்காரர்கள் உள்பட, இதில் தவறில்லை பார்க்கட்டும்
பேசட்டும் ஆனால் அவன் ஏன் முறைத்தான் ? அவளை நான்
பார்க்கின்றேன் என்பதாலா ? அவர்களது கார்
லெப்ட்டில் வளைய, விடுவேனா ? நமக்குத்தான்
வேலை இல்லையே வம்புச்சண்டை வேண்டாம் வந்த சண்டையை விட்டால் ? நாம் கையாலாகாதவன் ஆகி விடுவோமே நம்பர் பிளேட்டை பார்த்தேன்
துபாய் நம்மதான் உள்ளுர் அபுதாபியாச்சே
அதிராம்பட்டிணம்
ஆளுக தேவகோட்டை வந்து சேட்டை செய்தால் விட்டு விடுவோமா ? அவர்கள் இங்கிலாந்துல
இருந்தாலும் சரி, ஜேம்ஸ் ஊரணியில் நின்றாலும் சரி
பின்புறமே போய் இந்த நாட்டின் முறைப்படி லைட் அடித்து
காண்பித்தேன் தொடர்ந்து அடிக்கவும் அடுத்து வந்த பார்க்கிங்கில் நிறுத்த, நானும்
நிறுத்தி விட்டு இண்டிக்கேட்டரை போட்டு விட்டு கீழே இறங்கிப்போய் தொப்பியை
சரியாக்கிக்கொண்டே...
காரில் இருந்தவன் ஒருகணம் என்னை போலீஸ் சிஐடி என நினைத்திருக்க வேண்டும் அவனது
பார்வையிலேயே படித்தேன் காரணம் இந்த மாதிரியான வேலையெல்லாம் அவர்கள்தான்
செய்வார்கள் இருப்பினும் இந்தியனுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது அவனுக்கும்
தெரியும்
ஏன் கோபப்பட்டே ?
நீ ஏன் இவளைப்பார்த்தே ?
நான் நினைத்தபடியே நேராக ‘’அந்த’’
விசயத்திற்கே வந்து விட்டான், முதலில் என்னைப்பார்த்து சிரித்து பேசிக்கொண்டு
இருந்தது நீங்கள் மூன்று பேரும் பிறகுதான் நான் பார்த்தேன் அப்படினா இந்தப்பெண் ஏன்
என்னை எட்டிப் பார்த்தது ? முதலில்
அதைக்கேள்.
நீயேன் பார்த்துக்கிட்டே இருந்தே ?
நான் பட்டென சொன்னேன்
அப்படினா... போலீஸுக்கு கால் பண்ணுவோம் அவர்கள் வந்து
முடிவு பண்ணட்டும்.
பொதுவாக
இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பயம் எனக்கும்தான், காரணம் அங்கு போனால்
முதலில் கம்பெனியில் இருக்கும் பாஸ்போர்ட் அங்கு கை மாறிவிடும் பிறகு கோர்ட்டு, வழக்கு
அப்படி இப்படியென்று நொந்து நூடூல்ஸ் ஆகிவிடுவான் நாட்டில் ஒரு பிரச்சனை வீட்டில்
மரணம் என்றாலும்கூட போகமுடியாது வழக்கு முடியும்வரை
பின்புறத்தில் உள்ளவன் அவனை காருக்கு போகச்சொல்லி விட்டு...
சார் தேவையில்லாமல் ஏன் பிரச்சனை ? நாங்க அவசர வேலையாக போய்க்கிட்டு இருக்கோம் ப்ளீஸ்.
இங்கேபார் இப்போ ஒன்றும் பிரச்சனை கிடையாது எனது
மீசையைப்பற்றி நீங்க பேசி சிரிச்சீங்க அது தப்பு கிடையாது ஆனா இந்தஆளு என்னை
குற்றவாளி போல கேட்டதாலதான் இப்ப பிரச்சனையே
சாரி சார் விளையாட்டுத்தனமா தப்பு நடந்துருச்சு.
ஓகே நானும் சாரி கேட்டுக்கிறேன் உங்க நேரத்தை வீணாக்கியதற்கு
ஓகே பை
என்று அத்துடன் அடக்கி வாசித்து முடித்துக் கொண்டேன்.
அவர்கள் காரை எடுத்துக்கொண்டு போகவும் நானும் அப்பாடா ¾ மணிநேரம் டைம் பாஸாகிடுச்சு என்று
காரை எடுத்தேன்.
குறிப்பு – போலீஸ் ஸ்டேஷன் போவோம்னு சொன்னதுக்கு அவனும்
சம்மதிச்சு கால் பண்ணியிருந்தால் ? அந்தப்பெண் ஒரு சின்னப்பொய் சொன்னால்
போதும் இவன் என்னை.... இப்படி போலீஸ்காரர்
வந்தால் நான் வேற கார் மாற வேண்டியது இருந்திருக்கும் நமக்கு மீசை வேற
இப்படியிருக்கா சொல்லவா வேணும் என்னத்தச் சொல்ல ?
இந்தப்பதிவு வந்துருக்காது அம்புட்டுதான்.
அடிக்குறிப்பு – இங்குள்ள போலீஸ் கார்களில் ஒரு நபரை
பிடித்து உள்ளே உட்கார வைத்து விட்டால் உள்ளிருந்து திறக்க முடியாது வெளியில் இருந்தே
போலீல்காரர்கள் திறப்பார்கள் காரணம் ஒருக்கால் கார் ஓடிக்கொண்டு இருக்கும் போது
கைதி காரைத்திறந்து கொண்டு குதித்து விடலாம் என்பதால் இங்கு கைதிகளின் உயிருக்கு
மிகவும் பாதுகாப்பு நம்மூர் போல் கைதி மரணம் என்ற செய்திகளுக்கு வேலையில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆஜர்!!
பதிலளிநீக்குஅதராம்பட்டினத்துக்காரரான தேம்ஸ் ஊரணியைச் சேர்ந்தவரை வம்புக்கிழுத்த்ருப்பதால் கேஸ் ..ஹா ஹா நீங்க மட்டும்தான் வந்த சண்டைய விடமாட்டீங்களாக்கும்....அதிராவா கொக்கா சரி அவங்க எங்க தேவகோட்டை வந்து வம்புக்கிழுத்தாங்க...என்ன அதிரா புதுசா இருக்கு ஹா ஹா ஹா... சரி சரி அவங்க வந்து உங்களை கேய்வி கேக்கறது எங்கினனு முடிவு எடுக்கட்டும்...அதானே அதிரா....நீங்களும் கில்லர்ஜியோட தேரை லைட் அடிச்சு நிறுத்துங்கோ...
பதிலளிநீக்குகீதா
ஜிநீங்க போலீஸ்கிட்ட போகவே வேண்டாம் உங்க மீசையப் பார்த்தே பயந்துருப்பாய்ங்க!! அதான் அவங்க, "இது போலீஸா இருக்குமோனு உங்கள பாத்து பேசிருப்பாய்ங்க்...நீங்க என்னடானா என்னவோ நினைச்சு அந்தப் பொண்னைப் பார்த்து ஹிஹிஹிஹி...
நீக்குகீதா
வம்பு சண்டையை இழுத்து விடுவதுபோல இருக்கிறதே...
நீக்குபொதுவாக மீசை தலை பற்றி யாராச்சும் கிண்டல் பண்ணா கோபம் வரம் எனக்கும் .மீசைப்பார்த்து சிரிச்சாலும் தப்புதான் .மீசையில்லை என்பதற்காக நாங்க அவர்களை பார்த்து சிரிக்கிறோமா இல்லையே ... அங்குள்ள போலீஸ் கார் சிஸ்டம் ஆச்சர்யம் ..மீசைனதும் எனக்கு அப்பா தான் நினைவுக்கு வருவார் இப்பவும் வந்தார் :) எங்கப்பாவைக்கூட நிறையபேர் போலீஸ்கர்னு நினைச்சி பயந்திருக்காங்க :)
பதிலளிநீக்குஅதிராம்பட்டின பூஸுக்கும் மீசைதான் முக்கியம் :) ரேடார் மாதிரி
வருக கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குஅச்சச்சோ நான் இல்லைப்போல இருக்கே இம்முறை 1ஸ்ட்டூஊ இல்ல:)... இம்முறை 1ச்ட்டா வந்தவரின் காதில நுளம்பு கடிக்க:)... நான் விடிய வந்து அதைப் பார்க்க:)..
பதிலளிநீக்குநல்ல ஆசைதான்.
நீக்கு///
பதிலளிநீக்குஒருமுறை அபுதாபியில் தேரோட்டி SORRY காரோட்டிக் கொண்டு ///
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் ஆரம்பமே கில்லர்ஜிக்கு டங்கு ஸ்லிப் ஆகுதே:)... படிச்சுப் பார்ப்போம் எதுக்கு இப்பூடி ஆரம்பமே ஆகுதென:)
இது டங்கு ஸ்லிப் இல்லை ஃபிங்கர் ஸ்லிப் ஆனது.
நீக்கு///அவன் எனக்கு நேராக இருப்பதால் மறைக்கவே அவளும் என்னை எட்டிப்பார்த்தாள் சிரித்தாள், ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) ...
"ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து? உன் எழில்தனைப் பாடவா தமிழைக்கேட்டு?"
நீக்குஹா ஹா ஹா அவ்ளோ அயகாவா இருந்தா?:)
நீக்குஅவளுக்கும் ஆசைதானோ ???
நீக்கு///
பதிலளிநீக்குஅதிராம்பட்டிணம் ஆளுக தேவகோட்டை வந்து சேட்டை செய்தால் விட்டு விடுவோமா ? அவர்கள் இங்கிலாந்துல இருந்தாலும் சரி, ஜேம்ஸ் ஊரணியில் நின்றாலும் சரி///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) நியூயோர்க் எனில் சண்டை எல்லாம் பிடிக்க மாய்ட்டாங்களே:)...
மீசையைப் பார்த்து சிரிச்சதுக்கே இவ்ளோ சண்டையா:)
சிரிச்சதுக்கு இல்லை முறைத்ததுக்கு...
நீக்குஏன் கோபப்பட்டே ?
பதிலளிநீக்குநீ ஏன் இவளைப்பார்த்தே ?
நான் நினைத்தபடியே நேராக ‘’அந்த’’ விசயத்திற்கே வந்து விட்டான்,///
ஹா ஹா ஹா :).. இருந்தாலும் நீங்க பார்த்திருக்கக்கூடா கில்லர்ஜி:)..
//இருந்தாலும் நீங்க பார்த்திருக்கக்கூடா(து) கில்லர்ஜி...//
நீக்குஅம்புட்டு அழகா அவுக...
அச்சச்சோ மேலே இதைக் குடுட்த்ஹிட்டு வந்தால் இங்கே ஸ்ரீராம் கேட்டிருக்கிறார் ஹா ஹா ஹா:)..
நீக்குநேக்கு ஒரு உண்மை புரிஞ்சுபோச்ச்ச்ச்:)).. கில்லர்ஜி சண்டைப்பிடிக்கப் போகல்ல:)).. அந்தக்காவின் கண் மட்டும்தானே காஅரில தெரிஞ்சது:).. அதுதான் கலைச்சுக் கொண்டு போயிருக்கிறார் ஒருக்கால் முழுசாப் பார்க்கலாமே என ஹையோ ஹையோ:))
பார்த்தவர்களை பார்ப்பது தவறா ?
நீக்கு///குறிப்பு – போலீஸ் ஸ்டேஷன் போவோம்னு சொன்னதுக்கு அவனும் சம்மதிச்சு கால் பண்ணியிருந்தால் ? அந்தப்பெண் ஒரு சின்னப்பொய் சொன்னால் போதும் இவன் என்னை.////
பதிலளிநீக்குஅந்த நியூயோர்க் முனீஸ்வரர்தான் உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்:) இப்பவாவது நம்புவீங்களோ கடவுள் இரு.......:) ஹா ஹா ஹா.
:))))))))))
நீக்குஅபுதாபியில் நியூயார்க் முனீஸ்வரர் எங்கே வந்தார்?!!
அது ஸ்ரீராம்.. தேவக்கோட்டை என்பது நியூயோர்க்காமே:)) அதனாலேயே நியூயோர்க் முனீஸ்வரர்:))
நீக்கும்...ம்... நியூயார்க் முனியா ?
நீக்கு///அடிக்குறிப்பு – இங்குள்ள போலீஸ் கார்களில் ஒரு நபரை பிடித்து உள்ளே உட்கார வைத்து விட்டால் உள்ளிருந்து திறக்க முடியாது வெளியில் இருந்தே போலீல்காரர்கள் திறப்பார்கள்///
பதிலளிநீக்குபொதுவாக எல்லாக் கார்களிலுமே இது இருக்கு கில்லர்ஜி.. சைல்ட் லொக் என.... குழந்தைகள் திறக்காமல் இருக்க என.. வெளியே இருந்து மட்டுமே திறக்கலாம் அல்லது ட்றைவரிடம் கொன்றோல் பட்டின் இருக்கும்.
இது இப்பொழுது சாதாரண நமது கார்களுக்கும் வந்து விட்டது உண்மையே...
நீக்குஅதென்ன? அந்த ஊரில் 'அப்படி' மீசை வைப்பது அவ்வளவு குற்றமா?
பதிலளிநீக்குஆமாம் ஜி குதிரைக்கு தெரியுமா... குருமா வாசனை ?
நீக்குநமக்கும் உள்ளூர பயம் இருந்தாலும் டக்கென துணிந்து போலீஸ் பெயரை உபயோகித்து அவர்களை மடக்கினீர்களே... ரசித்தேன்! தேன்!
பதிலளிநீக்குஆமாம் ஜி பொழுதை போக்கணுமே...
நீக்குஅடைப்புக்குறி போடாமலேயே அந்த எஃபெக்டை எழுத்துகளில் கொண்டுவரும் உங்கள் தனிப்பாணியையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜி இரசிப்புக்கு...
நீக்கும்ம்ம் நல்லவேளையா எல்லாமும் சுமுகமாய் முடிஞ்சதே! அந்த வரைக்கும் நன்றி. ஆனால் அவங்க போலீஸ் வரச் சம்மதிச்சிருந்தால்? !!!!!!!!!!!!
பதிலளிநீக்குஎனக்கு லாடம் கட்டியிருப்பாங்கே...
நீக்குவித்தியாசமான அனுபவம்தான்
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
வருக நண்பரே நன்றி.
நீக்குமீசை சிலருக்கு பயம் கொடுப்பதும், சிலருக்கு
பதிலளிநீக்குபொறமையை கொடுப்பதும் உண்மை என்று தெரிகிறது.
பொறாமை படட்டும் சிரிக்கட்டும். கோபப்படக் காரணம் ???
நீக்குபுடிச்சு உள்ளே வைச்சி நொங்கு எடுக்க
பதிலளிநீக்குஅவனுங்களுக்கும் ஆளு வேணுமில்ல!..
இல்லேன்னா.. எப்படி இஸ்ட்டார் வாங்குறது?..
வந்தாலும் வந்தோம் வெளிநாட்டுக்கு!..
என்னென்ன மாதிரியான பிரச்னைகள்!..
அவ எப்படிப்பட்டவளாக இருந்தாலும் சரி...
சொல்லி விட்டால் போதும்...
போலீஸ் கையில் கிடைத்தவனுக்கு மண்டகப்படி தான்...
இதுல பெரிய அக்கிரமம் என்னான்னா - புலிப்பாணி தவிர்த்த
ஆசியானுக்கு மட்டும் தான் இந்த மண்டகப்படி உபசாரம் எல்லாம்...
ஏன்னா... அவந்தானே புன்னகை மன்னன்!...
ஆமாம் ஜி அன்றைய மண்டகப்படி எனக்கு இல்லை.
நீக்குஹாஹாஹா சூப்பர். ஒருவேளை என்னை சொல்றீங்களோன்னு கெதக்குன்னு இருந்துச்சு. அதான் ப்லாகில் எட்டிப் பார்த்தேன். அப்பாடா தலைப்பு நான் இல்ல
பதிலளிநீக்குவாங்க சகோ அடடே இனிமேல் தலைப்பு வைக்கும்போது பதிவர்கள் பெயரையும் ஞாபகத்தில் வைக்கணும்.
நீக்குஉங்களுக்கு தைரியம்தான். பெரும்பாலும் அரபிகள், பெண் சொல்வதை அப்படியே நம்புவார்கள். மிக அதிக மரியாதையை பெண்களுக்குக் கொடுப்பார்கள்.
பதிலளிநீக்குஆனால் துபாய், பஹ்ரைன், ஓமன் போலீஸ் நிச்சயம் கைதிகளிடம்/சந்தேகத்துக்குரியவர்களிடம் தவறாக - இஷ்டப்படி அடிப்பது, மரியாதைக் குறைவாக நடத்துவது போன்று - நடந்துகொள்ளமாட்டார்கள் என்பது என் அனுபவம்.
கைதிகளையும் மனிதர்களாக பாவிக்கும் அவர்களது சட்டத்துக்கு இராயல் சல்யூட் வைப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பயணம் என்று நினைக்கும் போதே வம்பு முளைத்து விட்டது. ஆனாலும் தைரியந்தான் உங்களுக்கு. விடாமல் துரத்திச்சென்று வம்பை விலை கொடுத்து வாங்கியும், உங்கள் நல்லநேரம் அந்த வம்பு தானாக கழன்று சென்று விட்டது. உங்கள் நல்ல நேரத்திற்கும, காரை லைட் அடித்து நிற்கச்செய்து ஏன்னென்று கேட்கச்சென்ற "தில்"லான தைரியத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வருக சகோ நல்ல நேரம்தான். வருகைக்கு நன்றி
நீக்குபயப்படாமல் பயந்து அவர்களையும் பயமுறுத்திவிட்டீர்கள். வீட்டிற்கு சென்று, "அனுபவம் புதுமை..." என்று பாடிக்கொண்டு இருந்தீர்களா?
பதிலளிநீக்குஆமாம் நண்பரே சரியான பாடலை சொல்லி விட்டீர்கள்.
நீக்குவருகைக்கு நன்றி
சில நேரங்களில் நம் உள்ளுணர்வே நம்மைக் கடத்டிச் செல்லும்
பதிலளிநீக்குஆமாம் ஐயா இயற்கை குணம் மாறாது.
நீக்குமீசைனால இம்சை வர்றதை இன்னிக்குதான் கேள்விப்படுறேன்
பதிலளிநீக்குவாங்க நான் காலம் முழுவதும் இம்சைதான் படுறேன்.
நீக்குமீசை - வடக்கத்தியர்களுக்கு மீசை என்றாலே ஒரு அலர்ஜி! குறிப்பாக நகரவாசிகள்! ராஜஸ்தானில் பெரிய பெரிய மீசை வைத்தவர்கள் உண்டு.
பதிலளிநீக்குநல்ல அனுபவம் தான்!
ஆமாம் ஜி நானும் பார்த்து இருக்கிறேன்.
நீக்குகார் தேரானதை ரசித்தேன். மீசையினால் இவ்வளவு சிக்கலோ?
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் இரசிப்புக்கு நன்றி.
நீக்குவெளிநாட்டில் உங்களுக்கு நடந்த சம்பவமும் விளக்கிய விதமும் சுவையாயிருந்தது. "அப்பாடா ¾ மணிநேரம் டைம் பாஸாகிடுச்சு என்று காரை எடுத்தேன்." இந்த வரி இன்னும் சுவை கூட்டியது.
பதிலளிநீக்குவருக நண்பரே பதிவை இரசித்தமைக்கு நன்றி
நீக்குதங்களுக்கு துணிச்சல் தான்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குபொறாமை கில்லர் ஜி. இது போல மீசை வைக்க முடியலையேன்னு.
பதிலளிநீக்குஎங்க மகன் வண்டி எடுக்கும் போதே
சொல்லிவிடுவான். பக்கத்துல எந்த வண்டியைய்ம் பார்க்காதே.
வம்பு வரும் என்று.அது துபாய்ல 6 வருஷம் முன்னால.
நமக்கோ எல்லாரையும் பார்க்கணும் புர்ஜ் கலீஃபா லைட்ஸ் பார்க்கணும்.
என் வீட்டுக்காரர் , அது மட்டும் நடக்காதுடா பாபு. அக்கம் பக்கம் பார்க்காதேன்னு பாட ஆரம்பிச்சுடுவா உங்க அம்மா ஹாஹா.
நல்ல சுவையான அனுபவம்.
வருக அம்மா தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நீக்குதுணிச்சல்தான் உங்களுக்கு அண்ணா ஜீ. இந்த மீசையை வைத்துக்கொண்டு கோழையாக இருக்ககூடாது. ம்.ஜேம்ஸ் ஊரணியையும் வம்புக்கு இழுத்தாச்சு.
பதிலளிநீக்குஇங்கும் பொலிஸ் எடுத்தவுடன் அடிதடியில் இறங்கமாட்டாங்க.
அப்போ டைம் பாஸுக்காக வம்பிழுத்திருக்கிறீங்க....
ஆமாம் பொழுதுபோக்கு வம்புதான்.
நீக்கு