தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 21, 2015

Mineral Water


டாக்டர், தெனோம் வயித்துவலி உசுரை எடுக்குது.
நேற்று என்ன சாப்பிட்டீங்க... ?

பொரட்டாதான்.
சரி புரோட்டாவுக்கு முன்னால என்ன சாப்பிட்டீங்க... ?

எப்பவும் போல, சாலூனாதேன்.
அப்படியா  சரி புரோட்டாவுக்கும், சலூனாவுக்கும் முன்னால என்ன குடிச்சீங்க... ?

தண்ணீதான்,
எது, அம்மா மினரல் வாட்டரா ?

அப்படீயா  அம்மா சாராயக்கடை யிலேயும் வந்துட்டாங்களா ?
யோவ், நான் என்ன... கேட்கிறேன் நீ என்ன சொல்றே ? நேற்று, பிராந்தி சாப்பிட்டியா ?

ஆமா, டாக்டர்...
உனக்கு எத்தனை தடவை சொல்றது குடிக்க கூடாதுன்னு...

இனிமே, குடிக்க மாட்டேன்.
எல்லா தடவையும் இப்படித்தான் சொல்றே.... உனக்கு குடலே இல்லே, தெரியுமா ?

அப்படியா ... அப்ப நான் அடிக்கிற சரக்கெல்லாம் எங்கே போகுது ?
இப்ப, உனக்கு அதுதான் பிரச்சனையா ?

ஏதாவது மருந்து கொடுங்க, இனிமே குடிக்க மாட்டேன்.
இனி, உனக்கு இங்கிலீஷ் மருந்து சரியா வராது, ஹோமியோபதியிலதான் குணப்படுத்தணும், நானொரு ‘’வேர்’’ எழுதி தர்றேன் தமிழ் மருந்து கடையில் போயிக்கேளு கொஞ்சம் சாஃப்ட்டாத்தான் இருக்கும் சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிடணும்.

சாப்ட்வேர்னா... அதுவும் கம்பூட்டரு சம்மந்தப்பட்ட இங்கிலீஷு மருந்துதானே டாக்டர் ?
யோவ், சாஃப்ட்வேர் இல்லையா, இந்த வேரு சாஃப்டா... என்ன... சொல்றது, ஆங் மெதுவா கடிக்க, நைசா இருக்கும்.

சரி. டாக்டர் ருசியா, இருக்குமா ?
ருசி எப்படியிருக்கும் ... கொஞ்சம் துவர்ப்பா இருக்கும் மூணு மாதத்துக்கு வாங்கி சாப்பிடு.

டாக்டர் தொட்டுக்கிற ஊறுகாய் வச்சுக்கிறலாமா ?   
உன் புத்தி உன்னை விட்டு போகுமா ? எப்படியோ திண்ணுதொலை.

சரி, டாக்டர் பணம்....
ஆளை விடுயா, சாமி பணமே வேண்டாம் உனக்கு வயிற்று வலியை பார்கிறதுக்குள்ளே... எனக்கு நெஞ்சுவலியே வந்துடுச்சு, முதல்ல இடத்தை காலி பண்ணு. 

CHIVAS REGAL சிவசம்போ-
பரவாயில்லையே... இந்த டாக்டருட்ட, நாமலும் போகலாமே... பணமே வேண்டாம்னு சொல்றாரு..

72 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி! வயித்து வலி போயி சிரிப்பு வலி வந்துடுச்சு ஜி! சிரிப்புவலிக்கு ஏதாச்சும் "சாப்ட் "வேர் இருக்கா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா கூகுளில் சர்ஜ் செய்து பாருங்களேன்.

   நீக்கு
 2. சகோ எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ..?சூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை மா3 கவிதைதான் எழுத முடியலை இப்படியாவது....

   நீக்கு
 3. ஆகா
  சிரித்து சிரித்து
  எங்களுக்கும் வயிற்று வலி வந்துவிடும் போலிருக்கிறது
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா...ஹா... நம்ம முயற்சியே அதுதானே நண்பரே...

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே.

  நல்ல நகைச்சுவை.! ரசித்து சிரித்து சிரிப்பில்,எனக்கு வயிற்று வலி வந்து விட்டது. அருமை.! இப்படியெல்லாம் யோசித்து எழுதுவதற்கு வாழ்த்துக்கள்.

  நன்றியுடன,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே.

   என் தளத்தில் புதிய பதிவாக சயனமும் தற்கொலையும்...
   நேரம் கிடைக்கும் போது வந்து கருத்திடுங்கள். நன்றி.

   நன்றியுடன்,
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வந்து மோதிரம் எடுத்துக் கொண்டேன் சகோ.

   நீக்கு
 5. ஹஹஹஹ் அட எங்க தளமும் டாக்டர் இங்கயும் டாக்டர்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு ஒரிஜினல் டார்டர்ஸ் பணம் புடுங்குவாங்க... இங்கு ஃப்ரீ

   நீக்கு
 6. படிச்ச எல்லோருக்கும் வயித்து வலிதான்!

  பதிலளிநீக்கு
 7. பல் சொத்தை வித்தவர் இல்லையில்லை
  பல் செட்டை வித்தவர் (கொஞ்சம் பொறுங்க இப்ப சரியா சொல்வோம்ல)
  பல்சுவை வித்தகர் எனும்
  பட்டத்தை
  பதிவர்கள் சார்பாக தங்களுக்கு தருவதில்
  பன் மடங்கு மகிழ்ச்சி அடைகிறோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா என்னை (அடகு) வச்சு காமெடி, கீமெடி பண்ணலியே...?

   நீக்கு
 8. பணமில்லாத சாஃப்ட்வேரா? ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. நல்ல நகைச்சுவையான பதிவு சகோ. படித்து ரசித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. வழக்கம்போல அருமையான நகைச்சுவை. சாப்ட் வேர், வேர் சாப்ட் ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்ட் of பார்ட் ஆக பிரித்து ரசித்த முனைவருக்கு நன்றி

   நீக்கு
 11. வணக்கம்
  ஜி

  காமெடி வைத்து எங்களை அசத்தி விட்டீர்கள் ஜி சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்று த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. ஹோமியோபதியில் ஏது வேர் ?நெஞ்சு வலியில் மறந்தாச்சா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோமியோபதியில் வேர்தானே ஜி மருத்துவமே... (நறுநட்டி வேர் பிரபலமாயிற்றே)

   நீக்கு
 13. ஆஹா இவ்ளோ நகைச்சுவையா எழுத எப்படி முடியுது....அதிலும் சாஃப்ட்வேர் சூப்பர்...சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 14. ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா
  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
  சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
  சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

  ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா

  லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
  லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரையை பாட்டாகவே பாடிட்டீங்களா ? இடையிலே மானே தேனே இப்படி கொஞ்சம் போட்டுருக்கலாம் ஹா... ஹா...ஹா...

   நீக்கு
 15. அது சரி!..

  நெஞ்சு வலி வந்ததும் - இந்த டாக்டரு எந்த டாக்டரைப் பார்க்கப் போனாருன்னு சொல்லலையே!..

  அந்த டாக்ட்டரைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேங்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அப்படினா... தொடரும் போட வேண்டியதுதான்...

   நீக்கு
 16. குடிக்கிறவங்களுக்கு
  குடல் மட்டுமல்ல
  சிறுநீரகமும் இல்லாமல் போகலாம்
  அம்மா
  குடிபானங்கள் ஆளை முடிக்கலாம்
  அப்பா
  தெருச்சாப்பாடுகள் சுடலைக்கு அனுப்பலாம்
  பிள்ளைகளே
  கொஞ்ச நாளைக்காவது
  நல்லபடி வாழக் கற்றுக்கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் சிறப்பான கருத்துரையை பதிந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. இருந்த வயிற்றுவலி கூடிட்டுது. வரவர அசத்துறீங்க அண்ணா ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வருகை குறைகிறதே... அதுவும் கூடுதல்....

   நீக்கு
 18. நெஞ்சு வலி வந்துடுச்சு நண்பா!
  எங்கேயோ அலைபேசியில் கேட்ட குரலோ?
  பரிவும் பதிவாகும். வாழ்த்துகள்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா நலமா ? உடல் நலத்தை பாருங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. தொடருங்கள் தோழர்

  பதிலளிநீக்கு

 20. நாட்டு நடப்பை நகைச்சுவையோடு கொடுத்தமைக்கு நன்றி! இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாட்டு நடப்பு இப்பொழுது இப்படித்தான்...

   நீக்கு
 21. கலக்கல்...

  சாஃப்ட் வேரு! :) ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 22. நண்பரே நீங்க ரிட்டயர்ட் ஆன பின்னே என்ன பண்ணப்போறீங்கன்னு இப்பவே தெரிஞ்சிடுச்சு. சினிமா காமெடி ஸ்கிரிப்ட் ரைட்டர் தானே!?
  பிரமாதம் போங்கள்!
  த ம 12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அதற்கெல்லாம் ஞானம் வேண்டுமே...
   பதிவுக்கு வருவது நிறைய இடைவெளி விடுகின்றீர்களே தெய்வ குற்றமாகி விடப்போகிறது பார்த்துக் கொள்ளுங்கள் சொல்லுறதை சொல்லிப்புட்டேன்.

   நீக்கு
 23. குடி குடியை கெடுக்கும். நயமான அறிவுரையுடன் கூடிய நல்லதொரு நகைச்சுவைப் பதிவு. பதிவிற்கேற்ற படமும் அருமை.

  சாஃப்ட்டான வேரு - நவீனமான நகைச்சுவை.

  மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கும், ரசிப்பிற்க்கும் நன்றி

   நீக்கு
 24. சிறப்பாக வருகிறது உங்களுக்கு நகைச்சுவை! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ''கொஞ்சம் சிரிங்க பாஸூ'' என்று சொல்லும் தங்களை விடவா ?

   நீக்கு
 25. உங்களுக்கு ,,,,,,,,,
  சகோ, கைவசம் நிறைய தொழில் இருக்கு,,,,
  அருமை,, சிறப்பாக சிந்திக்க வைக்கும் பதிவு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தாமதமேன் பெணால்ட்டி உண்டு.

   நீக்கு
 26. அன்புள்ள ஜி,

  அம்மா தண்ணீ... போலி டாக்டர் காதுல ஸ்டெத் வக்காம டெஸ்ட் பண்ணுவாங்கன்னு படம் பிடிச்சு காண்பிச்சு... சித்த மருத்துவத்தை...தமிழ் மருத்துவத்துவத்தின் மகிமையைச் சொல்லி விட்டீர்கள்.

  த.ம.15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மணவையாரே சரியாக கவனித்து இருக்கின்றீர்களே... ஸூப்பர்

   நீக்கு
 27. ஜி நீங்க பெரிய ஆளு தான்பா wow எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். simply சூப்பர்.

  பதிலளிநீக்கு
 28. குடிகாரன் பு்த்தி ..கிளினிக்கை விட்டு வெளியே வந்தா..போச்சு........

  பதிலளிநீக்கு
 29. When readying, Vadivelu Comedy was running in mind.................

  பதிலளிநீக்கு
 30. இங்கே தொடங்கி அங்கே வரச்சொல்லிங்கன்னு வந்தேன். மினரல் வாட்டர் குடிச்சு வயித்து வலி வந்தால் ஷாப்ட்வேரை சாப்பிட்டால் சுகமாகும் என புரிந்து கொண்டேன். இனி காசு வாங்காத டாகரும் வேண்டாம். காசு வாங்கும் டாக்கரும் வேண்டாம். ஷாப்ட் வேரே போதும் .

  பதிலளிநீக்கு
 31. எதை வாங்க வேண்டும் கில்லர்ஜீ சார்? எதை விற்கப்போகின்றீர்கள்?
  எதையும் விற்பனை செய்வதாக இங்கே எழுதவில்ல்லையே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா,,,,,, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ? நான் அப்பாவினு,,,,,

   நீக்கு