தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 30, 2022

மதுரா நகர்தனில் தமிழ் வாழ்க !

ன்று 29-வது பிறந்தநாள் காணும் அன்பு மகன் தமிழ்வாணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்னைப் பார்க்க விருப்பமில்லை என்பதால் எனது வாழ்த்துகளை சொல்லாமல் இருக்க முடியாது. 

என்னிடம் அலைபேசியில் பேச விருப்பமில்லை,  என்னை நேரில் காணவும் விருப்பமில்லை. நீ மதுரையில் இருந்தாலும் மனைவி மக்களோடு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
 
நிகழ்கால மகன்கள் அப்பாவை புரிந்து கொள்ளும் காலம் அவரது இறந்தகாலம் அதாவது அவர்கள் இறந்து விட்ட காலம். இதுதான் உலக வரலாறு எனது நிகழ் காலத்தை தெரிந்தோ, தெரியாமலோ அன்றே எங்கள் BLOGகில் எழுதி விட்டேன். நானும் சோசியர்தானோ ? இதோ இணைப்பூ – கொஞ்சி மகிழும் காலம் வராதா ?
 
தமிழ் வாணனுக்கு நட்பூக்களின் வாழ்த்துப்பா வேண்டி உங்கள்
கில்லர்ஜி தேவகோட்டை


26 கருத்துகள்:

 1. உங்கள் மகன் தமிழ்வாணனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.  விரைவிலேயே அவர் உங்களை புரிந்து கொண்டு இருவரும் இணைந்திருக்கும் காலம் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 2. அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  //கோமதி அரசு8 பிப்ரவரி, 2017 அன்று முற்பகல் 7:17
  ஒருநாள் மகன் நம்மை புரிந்து கொண்டு நம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று பேரன், பேத்தியை கொஞ்சி மகிழும் காலம் வராதா ? கண்டிப்பாக வரும்... //

  கண்டிப்பாய் வரும் என்று மனம் சொல்கிறது.வரவேண்டும் என்று மனம் விரும்புகிறது.//


  நீங்கள் உங்கள் அன்பு குடும்பத்தோடு இன்பமாய் இணைந்து வாழும் காலம் விரைவில் வர வேண்டும், வரும்.
  நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் இறை அருளால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அன்றைய 2017 எங்கள் பிளாக்கின் கருத்தை எடுத்து மீண்டும் இட்டமைக்கும், தங்களது பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!

   நீக்கு
 3. உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது அம்மாவைப் போல் ஜாடை. உங்களிடம் விரைவில் நெருங்கிப் பழகி உங்களையும் தன்னுடன் வாழ வைத்துக் கொள்ள வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் விட்டுப் பேசினால் ஒரு வேளை புரியுமோ? நேருக்கு நேராகப் பேசிப்பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 4. மன வேதனை அதிகரித்துவிட்டது. என்றாலும் உங்கள் மகன் விரைவில் புரிந்து கொள்வார் என்னும் எதிர்பார்ப்புடன் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்வாணனுக்கு பிறந்தநாள் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
  மேலும் நண்பர் கில்லார்ஜி அவர்களின் அவா பூர்த்தியாகும் விரைவில் என்றும் நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வேண்டுதலுக்கு நன்றி

   நீக்கு
 6. உங்கள் மகன் தமிழ்வாணனுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

  உங்களோடு அவர் சேரும் காலம் விரைவில் வரும் கில்லர்ஜி. பிரார்த்திக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி

   நீக்கு
 7. அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

  சில உறவுகள் பிரியாது ஜி... விரைவில் இணைவீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. உங்க மகன் தமிழ்வாணன் நலமாக இருக்கட்டும். அவருக்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

  கூடியிருக்கவேண்டிய காலம், குடும்பத்தோடு இருக்கும் காலம் எல்லாம் இப்படி உங்கள் மகன் இழக்கிறாரே என்று எனக்கு வருத்தம்தான். பரவாயில்லை. கொஞ்சம் நீங்கள் தளர்வுறுவதற்கு முன்னால் எல்லோரும் சேர்ந்துவிடுங்கள். ஆனால் பேத்தியின் வளர்ச்சியைப் பார்க்கும் காலம் இழக்கிறதே என்று மனது வருத்தம் கொள்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தமிழரே எனது சிந்தை பெயர்த்திகளைத் தவிர வேறொன்றுமே இல்லை.

   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 9. கில்லர்ஜி, உங்கள் மகன் தமிழ்வாணனுக்கு இதயம் கனிந்த பிறந்தநால் நல்வாழ்த்துகள்! அவர் பல்லாண்டு நலமோடு, மகிழ்வோடும் வாழ்ந்திட வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

  நீங்கள் பதிவுகளில் உங்கள் வருத்தத்தைச் சொல்லியிருந்தாலும் சில விஷயங்கள் இப்போதுதான் அறிகிறேன். நீங்கள் உங்கள் மகனோடு சேர்ந்து வாழ்ந்திட இறைவன் நல்லருள் புரிவாராக.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. உங்கள் மகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...... நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நாட்கள் விரைவில் வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு
 11. அன்பின் தேவகோட்டைஜி,
  தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  தங்களை அவர் விரைவிலேயே உணர்வார்.
  நீங்கள் சோர்வடைய வேண்டாம்.

  பழைய பதிவையும் படித்தேன்.
  இத்தனை துயரை இறைவன் கொடுக்க வேண்டியது எப்படி?

  காலம் மாறும் நம்பிக்கையுடன் இருங்கள். எங்கள்
  எல்லோருடைய அன்பும் பாசமும் உங்களுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது ஆசிகளுக்கும், ஆறுதல்களுக்கும் நன்றி

   அந்த பழைய பதிவு எங்கள் பிளாக்குக்கு கே.வா‌.போ.க. நான் எனது பாதை மாறுவதை கண்டதால் கற்பனையில் எழுதியது.

   அதுவே இன்று நிகழ்கிறது அம்மா.

   நீக்கு
 12. மனசு கனமாகி விட்டது. பின்னால் உங்கள் அன்பைப்புரிந்து கொண்டு மகன் உங்களோடு வந்திணைந்தாலும் பிஞ்சுக்குழந்தைகளான உங்கள் பேரக்குழந்தைகளின் அன்பையும் முத்தங்களையும் கொஞ்சலையும் இழந்தது இழந்தது தானே? திரும்பக்கிடைக்காத செல்வம் தானே அது? எழுதும்போதே உணர்ந்து மனதும் வலிக்கிறது. வலியை அனுபவித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எப்படியிருக்கும்! இதற்கு எது தான் மருந்தாக இருக்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் நாளை சேர்ந்தாலும் எனது இழப்பை யார் ஈடு செய்வார்கள் ?

   என்னால் இனி ஜீரணிக்க முடியாது தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 13. உங்கள் மகன் தமிழ்வாணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும். அடுத்த பிறந்தநாளில் அவரோடும், பேரக்குழந்தையோடும் நீங்கள் இருக்கும் புகைப்படத்தை பகிர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மேடம் அவர்களோடு சேர்ந்து வாழும் பேராசை எல்லாம் எனக்கு கிடையாது. இனி சாத்தியமும் இல்லை

   பெயர்த்திகளை காணும் பாக்கியமே பேறு.

   நீக்கு