தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 14, 2022

நாரமங்கலம், நாரவாய் நாராயணமூர்த்தி


ணக்கம் ஐயா அரசியல் விமர்சகர் திரு. நாராயணமூர்த்தி அவர்களே... எங்களது கோணங்கி பத்திரிக்கையிலிருந்து தங்களை பேட்டி காண்பதில் பெருமை கொள்கிறோம். பேட்டியை தொடங்கலாமா ?

மங்கலமாய் ரம்பிக்க சைந்துள்ளேன் சன் துணையோடு நாராயணா...

ஐயா தங்களது பெயரோடு இந்த ‘’நாரவாய்’’ என்ற பட்டம் தங்களுக்கு யார் கொடுத்தது ? எப்படி இணைந்தது ?

நோர்வே நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் இணைந்து நடாத்திய ‘’தமிழின் சுவையும், அவையின் நிலையும்’’ என்ற தலைப்பில் என்னை உரை நிகழ்த்திட அழைத்திருந்தார்கள். அதில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது எனது உடல் தீப்பற்றி கருகி மறைந்தாலும் உயிர் தமிழுக்கே இரையாகும் என்று சொன்னதுதான் தாமதம் மேடையில் ஒலிபெருக்கியில் மின்சாரம் கசிந்து இரண்டு ஊழியர்கள் அந்த இடத்திலேயே கருகி இறந்து விட்டனர். சொன்னது எனக்காக என்றாலும் நிகழ்ந்தது உண்மை என்றதால் விழா முடிவில் எனக்கு நாரவாய் நாராயணமூர்த்தி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பிறகு அதுவே நிலைத்து விட்டது.

நமது இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் நடக்கிறதே இதனால் நாடு வளர்ச்சி அடையுமா ?

நிச்சயமாக இல்லை மேலும் விலைவாசி உயர்வுதான் வரும். தேர்தல் நடப்பதால் சாதாரண வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுவதற்கே கட்சியின் மேலிடம் வேட்பாளரிடம் வளர்ச்சி நிதியாக ஒருகோடி மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள், பிறகு வாக்கு அளிப்பவர்களுக்கு வாக்கரிசி போடுவதற்கு சுமார் ஒருகோடி தேவைப்படுகிறது, பிறகு தேர்தல் செலவுக்கு கட்சியின் அடிவருடிகளுக்கு, இத்யாதிகளுக்கு என்று மேலும் ஒருகோடி அவசியமாகிறது இதன் பிறகு அவர் வெற்றி பெற்றவுடன் செலவு செய்த இந்த மூன்று கோடிகளை முப்பது கோடிகளாக-எடுப்பதற்கு ஐந்து வருடங்கள் முயற்சிப்பதிலேயே காலங்கள் ஓடிவிடும். இவர்களே இப்படி என்கின்றபோது சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் இவர்களின் நிலையே வேறு அவர்கள் லட்சம் கோடிகள் சேர்க்க முயல்வார்கள் இதன் காரணமாக விலைவாசிகள் ஏற்றக்கூடிய நிலை வருகிறது அரசியல்வாதிகளும் எவ்வளவு அடித்தாலும் மக்கள் தாங்குவார்கள் என்ற நோக்கில் விலையை மா’’க்கல் தலையில் வைக்கிறார்கள்.

ஐயா இன்றைய கல்லூரி மாணவர்களால் இவைகளை மாற்றி அமைக்க முடியாதா ?

ஒருக்காலும் முடியாது காரணம் பட்டதாரிகளில் எவனாவது ஒருவன் திரைப்படக் கூத்தாடியின் பின்னால் போகாமல் இருக்கின்றானா ? மேலும் ஜாதி சங்கத் தலைவர்களின் தூண்டுதலினால் ஜாதியின் பெயராலும் சிதைந்து கொண்டு வாழ்கிறான். போதாக்குறைக்கு டாஸ்மாக்கின் உபயம். தனது நண்பனுக்கு திருமணம் என்றால் வாழ்த்தி சுவரொட்டியோ, பதாகைகளோ வைப்பதில் தவறில்லை அங்கும் ஜாதீயை மூட்டுகின்றான் செலவு செய்த அவனது முகத்தையோ மணமக்களின் முகத்தையோ சிறிதாக போட்டு விட்டு, இருக்கும் தலைவன், இறந்த தலைவன் என்று வரிசை படுத்துகின்றான் சிலவற்றின் காட்சிகள் எனக்கு இதுவரை ஒன்றுமே விளங்கவில்லை. இறைவனின் படத்தில் தொடங்குகின்றான் முருகன் (குறவர்) உ.முத்துராமலிங்கம் (தேவர்) பெரியார் ஈ.வே.ராமசாமி (நாயக்கர்) கு.காமராஜர் (நாடார்) சுபாஸ் சந்திரபோஸ் (ஆச்சாரி) அஜித் (?) இவர்கள் எல்லோரும் எந்த வகையில் இணைகிறார்கள் என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை.

ஐயா பெண்கள் இப்பொழுது எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்களே அவர்களால் இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாதா ?

பெண்கள் என்று சீரியலில் நடிக்கும் கூத்தாடிகளை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்களோ அன்றுதான் இந்த நாடும் முன்னேறுமோ... என்ற கேள்வி என்னுள் எழலாம் அவர்களது முன்னேற்றம் டாஸ்மாக் கடைகளில் நிற்பதையும் சேர்க்க வேண்டும். நடிகைகள் அனுராதா, சீமா போன்றவர்கள் இன்றைய தாய்மார்களுக்கு பெரிய கடவுள் போலவே காட்சி தருகின்றார்கள் நமது முடுமைகளும் அப்படித்தான் ஆராதனை செய்கின்றனர். அவர்கள் உடுத்தி வரும் பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங் ஜாக்கெட் பிரமாதமாக இருப்பதாக சொல்லி மகிழ்கின்றார்கள். ஒரு காலத்தில் இந்த அனுராதா நடனக் காட்சிகளில் மட்டும் வந்து போகும் டூ-பீஸ் நடிகையாக வலம் வந்தவர் சீமா சொல்ல வேண்டாம் பிட்டுக் காட்சிகளில் மலையாளப் படங்களில் நடித்தவர் இது நமது முடுதாருகளுக்கு தெரியாது. எல்லாம் காலத்தின் கோலம்.

வாழ்க்கை அனுபவம் உள்ள பெரியவர்கள் இனியாவது முயன்றால் ?

நமது பெரியவர்கள் விடிந்தால் டாஸ்மாக் கடைகளில் கிடக்கின்றார்கள். வேலைக்கு போனாலும் சரியாக செய்வதில்லை இதன் காரணமாக யாரும் வேலை கொடுப்பதில்லை இதை புரிந்து கொண்ட வட நாட்டவன் சரியாக உழைத்து பணத்தை வடக்கே செலுத்துகின்றான். தமிழன் தேர்தல் எப்பொழுது வரும் பணம் நான்கு புறமும் கேட்கலாம் என்று வருடம் முழுவதும் காத்து கிடக்கின்றான். வேலைக்கு சென்றால் குறைந்த சம்பளம் இன்று ஆயிரம் ரூபாயாக இருக்கிறது ஆனால் வாக்களிக்க கிடைக்கும் ஆயிரம் ரூபாய்க்காக காத்திருந்து வாங்கி ஒருநாள் வேலையை கெடுத்து வாக்களிக்கப் போகிறான். இன்னும் இரண்டு தலைமுறைகள் மரணிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒர் விடிவுகாலம் பிறக்கலாம். அல்லது ஏதாவது மந்திரவாதியால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.

ஐயா திடீரென்று ஏதாவது மந்திரசக்தி கிடைத்தால் இந்த நாட்டுக்காக என்ன செய்வீர்கள் ?

நிச்சயமாக அந்த சக்தியை நாட்டுக்காக பயன் படுத்துவேன் கட்சி கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்குப் போய் இந்தக்கட்சி கரைவேட்டிகள் அனைத்தும் தீப்பிடிக்க கடவது என்று மனதுக்குள் சபித்து வேட்டிகள் அனைத்தையும் தீப்பிடிக்க வைப்பேன் பிறகு யாருமே எந்தக் கட்சிக்கரை வேட்டியும் உடுத்த மாட்டார்கள். அதேபோல் கூத்தாடிகளுக்கு பதாகைகள் வைத்து பாலூற்றும் போது அந்தப்பதாகைகள் அவர்கள் மீது மட்டுமே விழுந்து அவர்கள் ஒழிந்து போக வைப்பேன் இப்படி தொடரும் பொழுது மாணவர்கள் ரசிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேறுவான், தொண்டன் கட்சி என்ற வட்டத்தை விட்டு வெளியேறி உழைக்கத் தொடங்கி விடுவான்.

ஐயா நமது நாடு நாசமாவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணமா ?

நிச்சயமாக அவர்கள் இல்லை கட்சித் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் முழுவதும் உழைக்காமல் அடுத்தவன் பணத்திலேயே வாழ்க்கையை ஓட்டும் முதுகெலும்பு இல்லாத தெண்டங்கள்தான் காரணம் இவர்கள் எல்லோரையும் பிடித்து பாக்கிஸ்தான் எல்லையில் விட்டு விட வேண்டும் அப்பொழுதுதான் இவர்களுக்கு நாடு என்றால் என்ன இராணுவ வீர்ர்களின் தியாகம் என்ன என்பது புரியும். மேலும் மதத்தால், ஜாதியால் மக்களை பிரித்து வைத்து குளிர் காயும் அரசியல்வாதிகள் திருந்துவார்கள். அவர்கள் இறங்கி வந்து கலவரத்தில் ஈடுபட மாட்டார்கள், சுவரொட்டிகள் ஒட்ட மாட்டார்கள், ரவுடிசம் அழியும். அடி மட்ட மனிதரின் வாழ்வு தெரியும் இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு சிறக்கும்.

ஐயா கிரிக்கெட் வீர்ர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஏதும் திட்டம் இருக்கிறதா ?

அவர்களை திட்ட நிறைய விசயங்கள் இருக்கிறது முதலில் அவர்களை வீர்ரகள் என்று சொல்வதை தவிருங்கள். அவர்கள் இராணுவத்தில் பணி செய்கின்றார்களா ? வீர்ர்கள் என்று சொல்வதற்கு கபடிக்கு இன்றைக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கின்றதோ அதையேதான் அவர்களுக்கும் வழங்கப்படும் விளம்பரங்களில் நடிக்க கூடாது அரசு சார்பாக அவர்களை பிறநாடுகளுக்கு விளையாட அனுப்பி வைக்கலாம் அவர்களுக்கு அரசுதான் சம்பளம் கொடுக்கும். கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்காத அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

நல்லது ஐயா தங்களது பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி தந்தமைக்கு எங்களது கோணங்கி பத்திரிக்கை சார்பாக மிக்க நன்றிகள்.

நன்றி தமிழ் சிறக்கட்டும் அதன் சிறப்பு உலகெங்கும் பரவட்டும். வாழ்க வையகம் நாராயணா...

சிவாதாமஸ்அலி-
இந்த ஆளுக்கு மந்திரம் கிடைச்சு கட்சி கூட்டத்திற்கு போனால் அவங்களோட நிலைமை என்னாகும் வெந்து போகுமே... அடியாத்தீ

Chivas Regal சிவசம்போ-
கருநாக்கு கருப்பையாவா இருப்பாரோ... ? இந்த ஆளு நமக்கும் ஆப்பு வச்சுடுவாரோ.... ?

காணொளி

43 கருத்துகள்:

  1. பேட்டி மிக சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. உபி யோகியின் பங்களிப்பு இல்லாவிட்டால் தமிழகத்தின் கட்டுமான வளர்ச்சி இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்காது.. அவரது ஆட்சியினால்தான் தமிழகத்திற்குக் கட்டுமான கூலித் தொழிலாளிகள் எளிதாகக் கிடைக்கின்றனர்... அவர் இல்லாமல் வேறு யாரவது ஆட்சி செய்து இருந்தால் உபி மக்கள் படித்து அரசுத் துறைகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று இருப்பார்கள்.. அதனால் சொல்லுகின்றேன் தமிழக மக்கள் யோகி அதித்தியநாத்திற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே யோகி ஆதித்யாவுக்கு இவ்வழியில் வந்து நன்றி சொல்கிறீர்களோ... ?

      நீக்கு
    2. எதிர்பாராத நுணுக்கம் அவ்ற்கள்!
      போர்வைகளில் மூடப்படுபவை சங்கடங்களும் தான்.

      நீக்கு
    3. வருக தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. தேர்தல் நடப்பதால் நாடு வளர்ச்சியடையாது. தேர்தலில் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்தால்தான் நாடு வளர்ச்சியடையும். இப்போது ஆள்பவர் நல்ல தலைவர் என்றால் நாடு நல்லா வளர்ச்சி அடைந்துவிட்டது அதனால் யாரும் வேலை இல்லை என்று குறை சொல்லக் கூடாது பஸ் ரயில் விமான போக்குவரத்து சுகாதார வசதி இல்லை என்று சொல்லக் கூடாது பட்டினி பசியால் உயிரும் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் இறக்கிறார்கள் என்று சொல்லக் கூடாது அப்படி சொன்னீர்கள் என்றால் நாடு வளர்ச்சியடையவில்லை என்பதுதான் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தலைவர்கள் தான் 60 ஆண்டுகளாக கிடைக்கவில்லையே கடல்லயே கிடையாதாம்.

      நீக்கு

  4. மாணவர்களால் மாற்றி அமைக்க முடியாத என்றால் முடியும் அதற்கு அவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகள் வளர்ப்பு முறைகள் முக்கியம் இந்த கேள்விக்கு நீங்கள் சொல்லி இருக்கும் பதிலை உற்றுப்பாருங்கள்.. உங்கள் பதிலில் சொல்லி இருப்பவைகளை மேல் சாதியனர் என்று சொல்லப்படும் யாரும் செய்வதில்லை காரணம் அந்த மேல் சாதியினர் வளர்க்கும் முறைதான்... இப்பொது அவர்களும் வழி தவறுவதினால்தான் இப்போது வெறுப்பு அரசியல் ஊக்கவிக்கப்பட்டு நாடும் வளர்ச்சி பாதையில் இருந்து நகர்ந்து மோசமான பாதை நோக்கி பயணிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நானும் இதைத்தான் சொல்கிறேன் வளர்ப்பு முறைகளில் தவறு.

      இரண்டு தலைமுறைகள் மறைய வேண்டும்.

      நீக்கு
  5. நாடு நாசமாவதற்கு அரசியல்வாதிகளை குறை சொல்ல முடியாது. தவறு செய்யும் அரசியல்வாதிகளை தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மக்கள்தான் காரணம்

    பதிலளிநீக்கு
  6. நிறைய எழுதும் அளவு விஷயதானம் செய்திருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், நடிகநடிகையரும், விளையாட்டுகள் விளையாடுபவரும்!  வீரர்கள் என்று சொல்லவில்லை பாருங்கள்!  ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஹா.. ஹா.. கவனமாக எழுதுகிறீர்கள்.

      நீக்கு
  7. தினசரி மூன்று தடவை பாதக்குறடு எடுத்து படையல் போட்டாலும் நம்மக்கள் திருந்தப் போவது இல்லை..

    கேவலமான குணத்திற்குள் சிக்கிக் கொண்ட சனங்களுக்கு விடிவு காலமும் உண்டா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கேள்வியும் இதுதான் ஜி விடிவுகாலம் உண்டா ?

      நீக்கு
  8. ஆபாசக் காட்சிகளுடன் ஒரு திரைப்படப் பாடல்.. அதை தினசரி போடுறான் - இழுத்துக் கொண்டு கிடக்கும் வானொலியில்..

    நேயர் விருப்பமாம்..

    அந்தப் பாட்டை முக்கி முனகிக் கொண்டு பாடுகின்றாள் கிராமத்தில் இருந்து வந்த பெண் ஒருத்தி..

    படம் ஆக்கப்பட்ட விதம் படு கேவலம்... அவளே மேல் துணியை நழுவ விட்டு நழுவ விட்டுக் காட்டுகின்றாள்...

    இப்படி இயக்கியவன் அவளது சதையைக் காட்டி அதில் கிடைக்கும் காசில் வயிற்றை நிறப்பிக் கொள்கின்றான் எனில்

    தமிழ் மரபின் சீரழிக்கப்பட்ட கொடுமை தான் என்ன?..

    இப்படி சதையைக் காட்டி
    பசியைத் தீர்த்துக் கொள்பவர்கள் - மைக் கிடைத்து விட்டால் தமிழ் நாட்டுக்கு அறிவுரை சொல்வார்கள் பாருங்கள்!..

    அடடா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‌ஜி மக்களின் எண்ணப்போக்கு முற்றிலும் மாறிவிட்டது. கூத்தாடிகளை, அரசியல்வாதிகளை குற்றப்படுத்துவதில் நியாயமில்லை.

      நீக்கு
  9. நானும் ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. // கட்டியிருக்கும் கரை வேட்டிகள் தீப்பிடித்துக் கொள்ள வேண்டும்..//

    வெகு நேரத்திற்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தது ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இத்தக்கரைகளை கண்டாலே எனக்கு இதுவே தோன்றும்.

      நீக்கு
  11. என்னால் ரசிக்க முடியலை. மனது வேதனையில் ஆழ்ந்து விட்டது. அதோடு மிகப் பெரிய பதிவும் கூட! படிக்கவும் பொறுமை தேவை. படிச்சேன். காணொளியும் பார்த்தேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், பொறுமையாக படித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  12. ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  13. பதிவும், காணொளியும் அருமை.

    நல்ல கருத்துக்களை சொல்லி உள்ளீர்கள்.

    காணொளியில் சொன்னது போல காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்ட பின் கேள்விகள் எப்படி கேட்பது அரசியல் வாதிகளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் எம்.ஆர்.ராதாவின் சொந்த கருத்துக்களே அவரது படங்களில் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  14. நாரவாய் கருத்துகள் நன்று அதனால்தான் நாரவாய்?!!! ஹாஹாஹா

    சிவதாமஸ்அலி ஹாஹாஹா சிவாஸ் ரீகலை ரொம்பவே பயமுறுத்திவிட்டார்!

    காணொளி நல்லாருக்கு இந்த சீன் பார்த்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இலங்கை தமிழர்கள் கொடுத்த பட்டம் சிறப்பாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  15. அழகான படத்தைப் போட்டு அதுல பெரிய பெரிய எழுத்துகள்...ஜி அதை சின்னதா ஓரமா போட்டிருக்கலாமோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது நோர்வே இணையத்திலேயே இருந்தது.

      எனது கனிவான பெயர்தான் சற்று இடையூராகி விட்டது உண்மைதான்.

      மற்ற தகவல் கீழேதான் இருக்கிறது.

      நீக்கு
  16. கருத்துகள் அருமை. அதற்கு ஏற்ற பொருத்தமான காணொளிக் காட்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  17. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  18. படிக்க ரசனையாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு எமது நாட்டுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  19. சிந்திக்க வைக்கும் பேட்டி. இங்கே எதுவும் மாறிவிடப் போவதில்லை - மக்கள் மாறும் வரை.

    பதிலளிநீக்கு
  20. மக்கள் மாறினால் அரசு திருந்தும்.
    அரசியலை என்றுமே ரசிக்க முடிந்ததில்லை.
    காணொளி சொல்லும் உண்மை கோடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு