தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 17, 2022

எனது விழியில் பூத்தது (6)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...
 
ஸ்ரீ கோட்டை கருப்பணசாமி திருக்கோவில்
(இடம்: கொடுமலூர்)

தாகம் தீர்க்கும் தண்ணி வண்டி
(இடம்: இதம்பாடல்)

மலையின் மேலே
(இடம்: மருதமலை)

ஒரு காலத்துல இதை யார் வச்சுருந்தா ?
(இடம்: தேவகோட்டை)

மகளது திருமண வேலையில்...
(இடம்: பரமக்குடி)
 
கிராமத்துக் கோயில்...
(இடம்: சுக்காம்பட்டி)

கண்மாய்க் கரையோர கோயில்
(இடம்: இதம்பாடல்)

மரகத நடராஜர் ஆலயத்தில்
(இடம்: உத்திரகோசமங்கை)

பட்டமரமும் அழகே...
(இடம்: மதுரை)

சாய்ந்தும் சாயாத மரம்
(இடம்: கோபாலபட்டணம்)
 
பங்குனி உத்திரத்தின்போது...
(இடம்: இதம்பாடல்)

ஆண்டாள் கோயிலின் அருகில்
(இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்)

திருமணத்திற்கு சென்றபோது...
(இடம்: மதுரை)

அகத்தியருக்கும் கோயில்
(இடம்: இராமேஸ்வரம்)

பாழடைந்த ராணி மங்கம்மாள் சத்திரம்
(இடம்: இதம்பாடல்)
 
அமைதியான கிராமத்தில்...
(இடம்: சுக்காம்பட்டி)

உணவருந்தியபோது...
(இடம்: தாராபுரம்)

வயலை தூரெடுக்கும் இயந்திரம்
(இடம்: புளியால்)

கும்பாபிஷேகம் முடிந்த நிலையில்...
(இடம்: அரசடி வண்டல்)

விமான நிலையத்தின் உள்ளே
(இடம்: கொழும்பு)
 
நட்பூக்களே... ரசித்தீர்களா ? முந்தைய பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து

32 கருத்துகள்:

  1. அன்பின் தேவகோட்டைஜி,
    என்றும் நலமுடன் இருங்கள்.

    படங்கள் எல்லாமே அருமை. மகள் திருமணத்துக்கு வாழ்த்துகள்.
    அன்பும் அறமும் உடை வாழ்வு அமைய வேண்டும்.

    பல ஊர்க் கோவில்கள். எல்லாமே கிராம மணத்தில்
    வாசம் வீசுகின்றன.

    தண்ணீர் லாரிகள் வித விதமாய்.
    அதே போல ஊர்கள் பெயர்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பதிவை ரசித்து மைக்கு நன்றி.

      மகளுக்கு திருமணம் நிகழ்ந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டது பழைய படம் அம்மா வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  2. பலவித படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் மூன்றாம் விழிப் பார்வை.

    பதிலளிநீக்கு
  4. படங்களை ரசித்த்தேன்.  மருதமலை இதுவரை சென்றதில்லை.  இதம்பாடல் கண்மாய்க்கரையோரக் கோவில் கவர்கிறது. ஆர்ட் பிலிம் போல ருக்கிறியாது பட்ட மரம்.  சாய்ந்தாலும் ஒளிதருவேன் என்கிறது லேம்ப் போஸ்ட்.  படமெடுக்கும் நீங்கள் நிழலாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. உங்கள் விழியில் பூத்த மலர்கள் எல்லாம் மிக அருமை. உத்திரகோச மங்கை மரகத நடராஜர் சன்னதி இப்போது மாறுதல் அடைந்து இருக்கிறது.
    அங்கு வணங்கி கொண்டு இருப்பது மகளும், மருமகனும் என்று நினைக்கிறேன்.

    மருதமலை படமும் பழைய படம் என்று நினைக்கிறேன். இப்போது பல மாற்றங்கள் மருதமலையில்.
    கண்மாய்கரையோர கோயில் படங்களை இன்னும் போட்டு இருக்கலாம். கோயிலும் இயற்கை காட்சியும் அழகு.
    உங்கள் விழியில் பூத்த மலர்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் மருமகனும், மகளும்தான்.

      சில படங்கள் பழையதுதான் தொடர்ந்து படங்கள் வரும்....

      நீக்கு
  6. கிராமத்து கோவில்களைக் காணும் போதே மனம் நிறைவாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. எல்லாப் படங்களும் அருமை, குறிப்பாகக் கிராமத்துக்கோயில்கள். அனைத்து வகைகளையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி உங்கள் விழியில் பூத்த புகைப்படங்கள் எல்லாமே ஒவ்வொரு கதையைத் தாங்கி நிற்பவை என்று சொல்லலாம். அனைத்தும் அருமை...இதோ புகைப்படமாலை வருது....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உம்ம பெண்ணையும் மருமகனையும் கூட்டியாரும்...கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வேண்டிக்கிட்டு போவோம்....
    .என்னடே லாரிக்க மொகத்த காணும்? பையனுகளையும் காணும்? இது என்னலெ வண்டி? முகத்த லவட்டிட்டானோ எவனாச்சும்...சரி அத அப்புறம் வைச்சுக்கிடுவோம்... இப்பம் எல்லாரும் வந்துருவாங்ல்லா தண்ணி சீக்கிரம் நிரப்பச் சொல்லு.
    மண்டபத்துக்கு போறதுக்குள்ளார வேகமா மலைக் கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செஞ்சுட்டு போவோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... லேனா கல்யாண மண்டபம் வரை வந்துட்டீங்க...

      நீக்கு
  10. அண்ணே, நம்ம சனங்களை கொண்டார இந்த வண்டிய எடுத்துக்கிடலாம்...சும்மாதானே கிடக்கு..
    மருதமலை மாமணியே...பிள்ளைங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருச்சு..
    இந்தா, அடுத்து ரெண்டு வீட்டுக் குடும்பக் கோயிலுக்கும் போய் பொங்கல் வைக்கணும்லா
    அப்படியே வேண்டுதல் வைச்ச எல்லா கோயிலுக்கும்ப் போய்ட்டு வந்திருவோம் என்ன சொல்லுறீரு... போய்டுவோம்....
    நல்லா வேண்டிக்கங்கப்பா சாமிகிட்ட....குடும்பம் தழைச்சு பூத்துக் குலுங்கி சந்தோஷமா இருக்கணும்னு...
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதம்பாடல் பங்குனி உத்திரம் திருவிழா வந்துட்டீங்க...

      நீக்கு
  11. வண்டிய எடுப்பா...அடுத்த கோயில் போவோம்...ஒரு நாள் ஆகிப் போகும்......தங்க்ச்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் போய்ட்டு அப்படியே மதுரைல மச்சான் வீட்டுக் கல்யாணத்துலயும் தலைய காட்டிருவோம் என்ன?
    அண்ணே கடைசியா ராமேஸ்வரம் போய்ட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான் நாளைக்கு பொண்ணும் மருமகனும் ஊருக்குப் போவணும்லா...அண்ணே வீட்டுக்குப் போக லேட்டாயிரும்ல வழில சங்கீதால நைட் சாப்பாட்டை முடிச்சுருவோம்...என்னா?
    இந்தா பாரும்மா இதான் நம்ம நிலம் மருமகனே இது உங்க ரெண்டு பேருக்கும் தாரேன்...வழி வழியா வந்த நிலம்... எந்தக்காலத்துலயும் விட்டுறாம வித்துடாம வளமா வைச்சுக்கிடணும்...வயலா வைச்சுக்க இல்லை தோட்டம் போட்டுக்க...ஆனா சும்மா போட்டு வைக்க்க் கூடாது...அதான் தூர் வாரித்தாரேன்...என்னா...
    சரி சாமிய கும்புட்டுக்குங்க....நல்லபடியா .தேநிலவு இலங்கைல சுத்திப் பாத்துட்டு வாங்க...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எல்லாம் சரி இலங்கை இப்ப தேன் நிலவுக்கு போறது மாதிரியா இருக்கு.

      நீக்கு
    2. நாலு வருஷத்துக்கு முன்னாடியான கதை!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ஓஹோ பழைய கதையா ?

      நீக்கு
  12. படங்களை ரசித்தேன், சிலவற்றை முன்னர் பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி இரண்டு படங்கள் முன்பு வந்துள்ளது.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    தங்கள் விழியில் பூத்த மலராக அத்தனை படங்களும் மிக அருமையாக உள்ளது. படத்துக்கு ஏற்ற வாசகங்களும் அருமை.

    பட்ட மரமும் சாய்ந்த மரமும் எடுத்த விதம் நன்றாக உள்ளது. சுக்காம்பட்டியில் எடுத்த படமும், கண்மாய் கரை கோவில் படமும் அழகாக உள்ளது. கோவிலில் நடராஜரை தரிசனம் செய்யும் இருவர் தங்கள் மகள் மருமகன்தானே.. தங்கள் மகள் மருமகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்தனைப் படங்களும் அழகாக வந்துள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தாமதமாக வந்து கருத்துரைப்பதற்கு வருந்துகிறேன். இரண்டு நாட்களாக பதிவுலக பிரவேசம் செய்ய இயலவில்லை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. கவிஞரின் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்...!!

    பதிலளிநீக்கு
  15. அழகிய படங்கள் பல கதைகள் சொல்கின்றன. இதில் மதுரை, மருதமலை, இராமேஸ்வரம் சென்றிருக்கிறேன்.
    கொழும்புவும் வந்துள்ளது.
    இன்று ஸ்ரீலங்கா நிலை பெற்றோல் அடிக்க ,கெரோசின் வாங்க பாய் தலையணியுடன் முதல் நாள் மாலையே சென்று வரிசையில் படுப்பதுதான் :( அதுவும் கிடைக்குமா என்பது சந்தேகம்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு