தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 09, 2022

கூத்தாடிகள், காத்தாடட்டும்

   ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? இந்த விபச்சார ஊடகங்களின் வார்த்தை பிரயோகத்தை எவன் இங்கே அதிர்ச்சி அடைஞ்சு இருக்கான் ? பெத்த தகப்பன் செத்துப் போயிட்டதாக சொன்னாக்கூட அப்படியா ? என்று சாதாரணமாக கேட்கிறான். இங்கே என்னடான்னா.. இவங்கே பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறாங்கே...
 
ஏண்டா டோய் வேலை வெட்டி கிடைக்காம, குடிக்க கஞ்சி இல்லாம எத்தனை பட்டதாரிகள் அடிமட்ட வேலைக்கும் போக முடியாமல், வெளியில் சொல்ல முடியாமல் அலையிறாங்கே தெரியுமா ? பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்றை இப்படி காற்றில் பறக்க விடாதீர்கள். கூத்தாடிப்பயல் குசுவினால்கூட அதை முதல் பக்கத்தில் போட்டு பணம் பார்க்கும் வேசித்தனமான வேலை எதற்கு ? இந்த அரசியல்வாதிகளின் மோசடிகளை தட்டிக் கேட்பது பேனா முனைதானே... இது போர்வாளின் முனையை விட பலமானது என்பது தெரியுமா ? அல்லது இதுகூட தெரியாத இழிபிறவிகளா நீங்கள் ?
 
நாட்டுக்கு அவசியமான அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நல்ல விடயங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். தமிழன் ராஜராஜசோழன் கடல் கடந்து சென்று இந்தோனிஷியாவில் கொடி நாட்டி தனது தோரண வாயிலை கட்டி வைத்து இருக்கிறான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழனின் புகழை பரப்பி கம்பீரமாக நிற்கிறது. ஆனால் இன்றைய தமிழன் நடிகைகளின் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான் இதைப் போன்ற கேவலமான விடயங்களைத்தான் முன்னிலைப் படுத்துகின்றீர்கள்.
 
பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணம் என்ன ? இதை குறைக்க வழிமுறைகள் என்ன ? என்பதைப் பற்றிய வாதங்களை ஊடகங்களில் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்றும் எண்ணங்களே கிடையாதா ? நாளைய சந்ததிகளின் உயர்வுக்கு நாம்தானே வித்திடல் வேண்டும். நாளைய சந்ததி என்பதில் எமது மக்கள் மட்டுமல்ல உமது மக்களும் உண்டு.
 
பள்ளி பாட புத்தகத்தில் திரைப்படக் கூத்தாடி ரஜினிகாந்தின் வாழ்க்கையை பாடமாக்க முயற்சி எடுத்தவர்கள்தானே நமது ஆட்சியாளர்கள். மிகச்சிறந்த நடிகன், தமிழன் திரு சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றைகூட பள்ளிப்பாடங்களில் சேர்ப்பது தவறானதே... இவர்கள் நடித்தார்கள் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள் அவ்வளவுதான். மக்களை மூடர்களாக்கும் இந்த கூத்தாடிகளின் வாழ்வு இனியாவது காத்தாடட்டும். அறிவற்றவர்களை அரியணை ஏற்றிய நாம் அறிவார்ந்த சமூகமா ? ஆழ்ந்து சிந்திப்போம் அடுத்த தலைமுறையாவது. அறிவோடு ஆளட்டும் வாழ்க பாரதம், வந்தே மாதரம்.
 
சிவாதாமஸ்அலி-
கேனப்பயல்கள் ஊருல கிறுக்குப்பயல்கள் நாட்டாமை..
 
இதோ ஒரு கூத்தாடியின் அன்பு வேண்டுகோளாம்.
https://www.youtube.com/watch?v=iiqRPFsqZxI&t=123s

29 கருத்துகள்:

  1. திடுக்கிடும் தலைப்புகளைக் கொடுத்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்களாம்!  இவர்களுக்கு குறிப்பிட்ட ஆயிரம் பார்வையாளர்கள் கிடைத்தால்தானே அதில் பணம் பார்க்க முடியும்?  இதுபோல புற்றீசல் போல ஏகப்பட்ட யு டியூப் சேனல்கள் முளைத்திருக்கின்றன.  பயில்வான் ரெங்கநாதன் போன்ற நாகரீகமற்ற பரபரப்பாளர்களும் இதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யூடியுப் சேனல்கள் திறந்த பிறகு கண்டவன் எல்லாம் வரைமுறை இன்றி காணொளிகளை பதிவு செய்கிறான்.

      நீக்கு
    2. காசு பார்க்கும் ஆசை!

      நீக்கு
    3. ஆம் நல்ல வருமானம்தான்...

      நீக்கு
  2. நாட்டின் சிறுமைக் கூட்டம் மகிழ்வதால், Petrol, Gas விலை உயர்வு எல்லாம் பேசவே கூடாது...

    வெங்கோலன் ஊரில் சங்கிப்பயல்கள் நாட்டாமை...

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி நானும் இந்த யுட்யூப் சேனல்கள் பற்றி ஒரு பதிவு எழுதிய நினைவு.

    தலைப்பு வைச்சு பார்வையாளர்களைக் கவரும் கூட்டம். அதைப் பார்க்கும் வேலை வெட்டியத்த ஒரு கூட்டம். அதை இன்னும் நான்கு ஐந்தாகத் திரிக்கும் ஒரு கூட்டம். இப்படி ஏகப்பட்ட யுட்யூப் சேனலள். இதைத்தான் நான் என் பதிவில் இதற்கு தடை கிடையாதா? சென்சார் கிடையாதா என்று கேட்டிருந்தேன்.

    அட போங்கப்பா....இதுங்களுக்கு எல்லாம் நல்ல வருமானம். இங்கு வீட்டில் நல்ல விஷயம் கற்பிக்கும், கற்பிக்க நினைக்கும், எதிர்கால சந்ததியினரை அறிவு பூர்வமாகச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் நிலையோ.....என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் எல்லோரும் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர் என்பது உண்மையே...

      நீக்கு
  4. நான்/நாங்கள் ஆங்கில இலக்கணம், பாட சம்பந்தமான குறிப்புகள் கற்பித்தலை காணொளியாகப் போட என் மாணவர்களுக்காகத் தொடங்கியது அத்தனை போகவில்லை. உங்கள் பதிவு வாசித்ததும் இதுதான் நினைவுக்கு வருகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. கில்லர்ஜி ஆ ஆ ஆ ஆ என் கருத்து வரவே இல்லையே.....துளசியின் கருத்து வந்துவிட்டது!!!!

    மீண்டும் போடுகிறேன். அதற்கு முன், துளசி வருத்தப்பட்ட போது நான் சொன்னது இதுதான்...

    இப்ப லேட்டஸ்ட் செய்தியான. தனுஷ், ஐஸ்வர்யா பிரிவார்களா மாட்டார்களா கோர்ட்டுக்குப் போவாங்களா மாட்டாங்களா, சிவனும், நயனும் பிரிந்தார்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்று வீடியோ போட்டால் ஒரே வரியைத் திரும்ப திரும்ப அரைத்துக் கொண்டிருந்தாலும் வீடியோ வைரலாகும். ஸோ வருத்தப்படாமல் நாம் செய்வதைச் செய்வோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எல்லா தளங்களிலும் கருத்து இடுவது கஷ்டமான விசயம்.

      நீக்கு
  6. சவுக்கடி பதிவு . முன்னர் செய்திகளுக்கு நடுவே திரைப்பட மற்ற சில விளம்பரங்கள் வரும் இன்று விளம்பரங்களுக்கு நடுவே செய்திகள். வெட்கக் கேடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ? நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. எதுக்குனு ஒண்ணும் புரியலை. ஆனாலும் விஜய்/அவர் மனைவி என்பது மட்டும் புரிந்து கொண்டேன். அவர் மனைவி ஶ்ரீலங்கா தமிழ்ப்பெண். சிவ தீக்ஷை வாங்கிக் கொண்டவர் என்பது மட்டும் தெரியும். விஜயைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி மதம் மாறினார் என்பதும் படிச்சுத் தெரிந்து கொண்டது. மற்ற இரு ஜோடிகள் யாருனு புரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீ லங்காதான் இங்கு சம்பாதிக்கும் கோடிகள் எல்லாம் லண்டனில் முதலீடாகிறது.

      நமது அரைவேக்காடு ரசிகனுக்கு இவைகளை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது.

      நீக்கு
  8. நல்லதை பேச நல்லதை கேட்க ஆட்கள் இல்லைதான்.
    இது போன்ற செய்திகளை ஆர்வமுடன் படிக்கும் ஆட்கள் இருக்கும் வரை.அவர்களுக்கு .

    பதிலளிநீக்கு
  9. இது போன்ற செய்திகளை ஆர்வமுடன் படிக்கும் ஆட்கள் இருக்கும் வரை அவர்கள் வழங்கி கொண்டு தான் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் தங்களது கருத்து உண்மை.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் மனக்குமுறல் புரிகிறது. இந்த மாதிரி செயதிகளை உடைய யூ டியூப் சேனல்களை நாம்தான் கவனியாது அகன்று விட வேண்டும். என்ன செய்வது? நல்ல விஷயங்களை படிக்கும் போது, சமயங்களில் இதுவும் கண்களில் பட்டு விடுகிறது. இது அவர்களின் பொழுது போக்கு என நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. கலை ஞானம்.. ன்னு ஒரு சூனியம்.. அது கூட இன்னொன்னு..

    இதுகளுக்கு என்ன வேலை என்றால் எப்பவோ செத்து சாம்பலாப் போன நடிக நடிகையர்களப் பத்தி ஏதாவது சொல்லி வைக்கிறது.. இதுங்க பக்கத்திலேயே இருந்து பார்த்த மாதிரி...

    குரங்குகள் கையில் சிக்கிய பூமாலை போல ஆகிவிட்டது யூட்யூப்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் யூடியுப் இப்போது இதே நிலைதான்...

      நீக்கு
  12. உங்கள் வேதனை புரிகிறது ஜி. காசுக்காக எதையும் செய்யும் மனிதர்களிங்கே அதிகம். ஊடகங்கள் இப்படி மோசமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. ஒரு எல்லையே இல்லாமல் ஓடிக்கிட்டு இருக்கிறது...

    பதிலளிநீக்கு