தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 17, 2024

ஈரோடு, ஈயக்கட்டி ஈஸ்வரன்

 

ஈரோடு, மாநகராட்சி அலுவலகம் அருகில்....
 
வணக்கம் ஈஸ்வரன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா தொன்னையப்பா நல்லா இருக்கேன் என்ன இந்தப்பக்கம் ?
 
சில சந்தேகங்கள் வந்துச்சு கேட்டுப் போகலாம்ணு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
உங்களை எல்லோரும் ஈயக்கட்டி ஈஸ்வரன்ணு ஏண்ணே சொல்றாங்க ?
அதுடாத்தம்பி நான் எதைச் சொன்னாலும் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துறது மாதிரி சொல்வேன் அதனால சொல்றாய்ங்கடா... இப்படி சொல்றவய்ங்கே வாயில வண்ணப்புத்து வெக்கே...
 
என்னணே பொசுக்குன்னு தம்பியவும் சேர்த்து சொல்லிட்டீங்க ?
நீயும் அந்த நாதாரிப்பயல்க மாதிரிதானேடா சொல்றே...
 
உங்களுக்கு எல்லா விசயமும் தெரியும்னு சொல்றாங்களே உண்மையாணே ?
உன்னைப் போலதான்டா எல்லா முட்டாப்பயல்களும் நம்புறாய்ங்கே...
 
என்னணே என்னையும் முட்டாப்பயல்னு சொல்றீங்க ?
உன்னை அவங்கே லிஸ்ட்ல சேர்க்க முடியாதுடா நீ அடி முட்டாள்டா...
 
என்னை எதுக்கு இப்படி சொல்றீங்க ?
வேணும்னா கூமுட்டாப்பயல்னு வச்சுக்க...
 
ஏண்ணே இப்படி கேவலமா பேசுறீங்க ?
அட அரைவேக்காட்டுக்கு பொறந்தவனே இதை புரியுற அளவுக்கு உனக்கு அறிவும் இருக்காடா ?
 
எதுக்குணே எங்க அப்பாவையும் திட்டுறீங்க ?
அந்தக்கேனப்பயல நான் எப்பவும் இப்படித்தானேடா சொல்லுவேன்.
 
அண்ணே இது நல்லா இல்லை சொல்லிட்டேன்.
அட, பார்ரா தரை டிக்கெட்டை சொன்னா, அரை டிக்கெட்டுக்கு கோபம் வருது.
 
நான் போறேன் உங்க பேச்சே சரியில்லை.
என்னமோ சந்தேகம் கேட்கணும்னு சொன்னியடா...
 
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் நான் போறேன். ஊருக்காரங்கே ஈயக்கட்டினு சரியாத்தான் சொல்றாங்கே...
என்னடா மொனங்குறே மொள்ளமாறிப்பயலே... டே.. நில்லுடா....
 
தொன்னையப்பன் இடத்தை காலி செய்து விட்டு நடையை கட்டினான்.
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
இப்படி கிழிச்சா, எவன்தான் நின்னு பேசுவான்... பாவம் தொன்னை.

16 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா... வாயைக் கொடுத்து... புண்ணாக்கிக் கொண்டாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தொன்னையப்பனுக்கு இது தேவையா ?

   நீக்கு
 2. ஈயக்கட்டி மாதிரியான ஆட்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவை பகிர்வு நன்றாக இருக்கிறது.கவண்டமணி, செந்தில் பேசுவது போல கற்பனை செய்து கொண்டு படித்தேன்.
  தொன்னையப்பன் போல சிலர் வாங்கி கட்டி கொள்பவர்கள், ஈயக்கட்டி போல நல்ல வார்த்தை பேசாதவர்கள் வாழும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. சிரித்துவிட்டேன். தொன்னையப்பனுக்கு முடிவில் எப்படியோ தெரிந்துவிட்டது ஈயக்கட்டி என்று எப்படி ஈஸ்வரனுக்குப் பெயர் வந்தது என்று!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈஸ்வரன் வரலாறு அறிந்து கொண்டமைக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. நல்ல நகைச்சுவை பகிர்வு. வாய் விட்டு சிரிக்க வைத்தது. இப்படியும் சிலர் தொட்டதற்கெல்லம் ஈயத்தை காய்ச்சி காதில் ஊத்துவது போலத்தான் பேசுகிறார்கள். ஊர்க்காரர்கள் அந்த ஈஸ்வரனுக்கு வைத்த பெயர் சரிதான்..!பாவம் தொன்னைய்யன். வலிய வந்து வாங்கி கட்டிக் கொண்டார். அவர் வாங்கியதால் நமக்கும் ஈஸ்வரனின் அருமை தெரிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் இனி நாமும் ஈஸ்வரனைக் கண்டால் ஒதுங்கி கொள்ளலாம்.

   நீக்கு
 6. ஆமாம். எப்போதும், யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்களை நானும் சந்தித்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. அருமையான நகைச்சுவை பதிவு சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 8. நன்று. இப்படியான ஆட்களை தவிர்ப்பதே நல்லது.

  பதிலளிநீக்கு