தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 13, 2024

தறுதலை ராகம்

ணக்கம் நண்பர்களே... ‘’இது குழந்தை பாடும் தாலாட்டு’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
இது குடந்தையாரின் ஆராட்டு
இது உறவு நேரா ஊர்கோலம்
இது வடக்கில் தோன்றி வதையும்
இது நாதியில்லாத நாதம்
இது நாதியில்லாத நாதம்
 
தடை துறந்த கோல்கள் தன்னில்
தாயத்தை கேட்கிறேன்
மடம் பிழந்த ஊரது இன்றே
பால் தந்தும் இழக்கிறேன்
உறவிழந்த பாவை ஒன்றை
நாணத்தில் கேட்கிறேன்
 
கண் தராத உன்னை எண்ணி
காலத்தை நான் கடக்கிறேன்
இது குடந்தையாரின் ஆராட்டு
இது உறவு நேரா ஊர்கோலம்
 
அரும் புதரில் சரம் கண்டு
பூஞ்சோலை கொடுக்கிறேன்
மடிந்து விட்ட போதும்கூட
ஜாமீனை நான் கேட்கிறேன்
மறுப்பு இல்லா உன்னை எண்ணி
உயிரை நான் அறுக்கிறேன்
இது குடந்தையாரின் ஆராட்டு
இது உறவு நேரா ஊர்கோலம்
 
உளம் பிழந்ததால்... தானோ
தவளைதான் கனைத்தது
நலம் பெறுவாள் என தானோ
மானத்தை நான் தடுத்தது
உயிர் இருந்த உருவைக் கண்டு
கண்ணைத்தான் மடிப்பது
மறு பிழையாய் காவலிலே
எத்தனை முறை வீழ்வது
 
இது குடந்தையாரின் ஆராட்டு
இது உறவு நேரா ஊர்கோலம்
இது வடக்கில் தோன்றி வதையும்
இது நாதியில்லாத நாதம்
இது நாதியில்லாத நாதம்
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1980
படம்: ஒரு தலை ராகம்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
 
இதோ டி.ராஜேந்தரின் பாடல் வரிகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்
 
வடம் இழந்த தேரது ஒன்றை
நாள் தோரும் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
 
வெறும் காற்றில் உளி கண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில்கூட
விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமிலா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
 
உளமறிந்த பின்தானோ
அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானோ
மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவை கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது
 
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=PS2B4loZqYc
நன்றி – கில்லர்ஜி புதாபி
 
இப்பாடல்களின் இணைப்பான முந்தைய பாடல்களின் சுட்டிகள் கீழே
மறு கலை தாகம் ஒரு கொலை மோகம்

22 கருத்துகள்:

  1. இந்த ஒரிஜினல் பாடல் மறைந்த என் மாமாவின் ஃபேவரைட் பாடல். ராஜேந்தர் உண்மையிலேயே அருமையாக எழுதி இருக்கும் பாடல்களில் ஒன்று. குழந்தை பாடும் தாலாட்டு, இரவு நேர பூபாளம், மேற்கில் உதயம் என்று எதிர்மறையில் சதிராடி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனக்கும் பிடித்தமான பாடலே.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. டி. ராஜேந்தர் பாடல் சோக பாடல், ஆனால் இனிமையான பாடல்.
    நீங்கள் எழுதிய கவிதை அதைவிட சோகமாக இருக்கிறது.
    பழைய பாடல்களுக்கு சுட்டி மூலம் போனேன்.
    எல்லோரும் உங்களை உற்சாகமான பாடல் பாட சொல்லி கேட்டு இருக்கிறார்கள்.
    நானும் கேட்கிறேன். அடுத்த கவிதை மகிழ்ச்சியான கவிதையாக இருக்கட்டும்.
    சந்திரசேகர் நல்ல உற்சாகமாக பாடும் படம் தான், நீங்கள் மேலே போட்டு இருக்கும் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் சந்தோஷம், சோகம் என்பதை பார்ப்பதில்லை.

      பாடல் வரிகளை அதனிடமிருந்து வேறுபடுத்தி வார்த்தைகளை எழுதுகிறேன் இதனால்தான் சில வரிகளில் அர்த்தம் இல்லாமல் போகிறது.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. டி ராஜே ந் தர் எழுதிய இந்தப் பாடல் மிகவும் அருமையாக அவர் எழுதியிருக்கும் பாடல். உங்கள் வரிகளும் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. கில்லர்ஜி, இந்தப் பாட்டு ரொம்பப் பிடித்த பாட்டு. சூப்பரா எழுதியிருக்கிறார் ராஜேந்தர். நல்ல கற்பனை வளம். தமிழ் இலக்கியம் கற்றவர்! மெட்டும் செம

    வழக்கமா சொல்றதுதான் கில்லர்ஜி. ஜாலியா எழுதுங்கன்னு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கு நன்றி.

      இனி மகிழ்ச்சியான பாடல்களுக்கு முயல்கிறேன்.

      நீக்கு
  5. ஒரு குழந்தை பாடும் தாலாட்டு - மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. உங்கள் பாடலும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். நானும் இதனை நன்றாகப் பாடுவேன்.... அதைப்போய் இப்படி மாற்றிவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இதையும் பாடிப் பாருங்கள்...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் மாற்றுப் பாடலும் நன்றாக உள்ளது. ஒன்றிரண்டு வரிகளைத் தவிர்த்து திரைப்பட பாடலுடன் சேர்ந்து பாட வருகிறது. பாடியும் பார்த்தேன். தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    அந்த திரைப்பட பாடலும் நன்றாக இருக்கும். அப்போதெல்லாம் வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. இது குழந்தை பாடும் தாலாட்டு...

    கவியரசரை மயக்கிய பாட்டு இது...

    பள்ளி மாணவர்கள் ஐந்து லட்சம் பேருக்குத் தமிழ் தெரியாத நிலையில் இப்படியொரு பாடல் இனி வரவே வராது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் வந்தும் பயன் ? தமிழ் தெரியாத நல் உலகில்...

      நீக்கு
  9. மூலப் பாடலை ரசிப்பதற்கே -

    தமிழ் தெரிந்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் தலைப்புகள் சுண்டி இழுக்கின்றன. அழகான பாடலை உங்கள் பாணியில் மாற்றியிருக்கிறீர்கள். சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. என் மனதை மயக்கும் பாடல் இது. தோழரே தங்களின் வரிகளும் சிறப்பாகவே இருக்கிறது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு