தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 07, 2025

கொடுமலூர், கொடுமைக்காரி கொடிமுல்லை

கொடிமுல்லை பெயரைப்போல ஆளும் அழகுதான் ஆனால் குணம் ? அதுதான் இந்த ஏரியாவுல எங்கே தேடினாலும் கிடைக்காத அபூர்வ குணம். கணவனை பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரி பாயாசம் செய்தால்கூட நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள். வேலை செய்து விட்டு வந்து நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாள். இதனால் சாப்பிட்டவுடன் வெளியேறி விடுவான்.

பக்கத்து வீட்டு பர்வதம் புருஷனைப்போல தனது, புருஷன் புருஷோத்தமனை புருனேவுக்கு வேலைக்கு அனுப்பி விடவேண்டுமென்று பல காலமாக உறவுகளிடம் சொல்லி திட்டம் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. கொடிமுல்லையின் நச்சரிப்பு தாங்கவில்லை வீட்டிலிருந்து குழந்தையை கொஞ்சுவதைகூட பொறுக்காமல் திட்டிக் கொண்டே இருப்பாள்.

அன்று மதியம் புருஷோத்தமன் வீட்டுக்கு சாப்பிட வந்தான், மகிழ்ச்சியாக வரவேற்று சாப்பாடு போட்டாள் பாயசம் வேறு வைத்து இருக்கவும், சற்றே சந்தேகம் வந்து. இன்றைக்கு என்ன விஷேசம் ? என்று கேட்டான் சாப்பிடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்று சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போடச் சொன்னாள். சரி விசயத்தை சொல்லு நான் வேலைக்கு போகணும் என்றான். இன்றைக்கு லீவு போடுங்க உண்ட மயக்கம் கொஞ்சம் தூங்கலாம்ல...

காலையில் எங்க மானகிரி மச்சான் மருது வந்துட்டு போனாரு... அவருட்டே கேட்டேன் உங்களுக்கு ஏதாவது வெளிநாட்டுக்கு விசா எடுக்கலாமானு அவரும் நான் சூப்பர்வைசரா இருக்கிற கம்பெனியில் உடனே விசா கொடுப்பாங்க... அதுக்கு ஒரு லட்ச ரூபாய் வேணும்னு சொன்னாரு... இன்னும் ஒரு வாரத்துல விசா வந்துடுமாம் நான் உங்களுக்கு உடனே ஏற்பாடு செய்யச் சொல்லி என்னோ மூணு பவுன் சங்கிலியை கொடுத்தேன், மிச்சப்பணம் டிக்கெட்டுக்கு சரியாகிடுமாம்..

ஏண்டி அந்த மானங்கெட்டவன் மருது, கொல்கத்தாவுல பேப்பர் பொறுக்கி வித்துக்கிட்டு திரியிறான் அவன் சொன்னானு சங்கிலியை கழட்டி கொடுத்து இருக்கியே... அறிவு இல்லை ? அவன் வெளிநாட்டுல இருக்கானு எவன்டி சொன்னான் ?

அவருதாங்க சொன்னாரு...

அந்த நாதாரி சொன்னா, நம்பிடுறதா.... எந்த நாடுனு சொன்னான் ?

ஏதோ கொரியாவாம்.

கொரியாவா.... முழுசா கேட்டியா ?

வட கொரியானு சொன்னாரு...

அடிப்பாவி என்னை உசுரோட கொளுத்தி விடப்பாக்கிறியேடி...

என்னங்க இப்படி சொல்றிய....

உனக்கு கிம் ஜோங் உன் அவரைத் தெரியுமா ?

யாருங்க அவரு ?

உங்க பெரிய மாமனாரு... விளங்காப்பய மவளே.. அவன் உன்னை நல்லா ஏமாத்தி செயினை வாங்கிட்டு போயிட்டான் இனி கோவிந்தாதான். இந்நேரம் கொல்கத்தாவுக்கு ரயில்ல பறந்துருப்பான்... உங்க அப்பனுக்கு சொன்னியா ?

இல்லைங்க...

எனக்கும் போன் போட்டு கேட்கலை, அடுத்த தெருவுருலதானே உங்கொப்பன் வீடு இருக்கு போய் கேட்டு கலந்து  இருக்கலாம்ல... முதல்ல அந்த கூதரைக்கு போனைப் போட்டு சொல்லி என்ன ஏதுனு தேடச் சொல்லு.

குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு செல்போனை அலமாரியில் வைத்தவன் கோபமாக வீட்டை விட்டு வெளியேறினான். மனக்கவலையை குறைக்க அவனது பெரியம்மா ஊரான தென்காசி அருகில் இருக்கும் திருமாஞ்சோலை கிராமத்துக்கு போய் நிம்மதியா ஒரு வாரம் இருந்துட்டு வரலாம் என்று உடுத்திய உடையோடு புறப்பட்டான்.

கில்லர்ஜி தேவகோட்டை                  

காணொளி

13 கருத்துகள்:

  1. ஆசைக்கு அளவேது... நல்லவேளை தாலிச்சங்கிலியைக் கழட்டிக் கொடுக்கவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஒரு காலத்தில் இப்படி கொடுத்த கொடிமுல்லைகளும் இருந்தார்கள்.

      நீக்கு
  2. காணொளியில் வரும் ஜோக் போல ஆயிரம் வந்தது ஒரு காலத்தில்...  

    அது சரி, வடகொரியா போனவர்களை என்ன பண்ணாராம் அந்த அதிபர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வடகொரியாதான் போக்கையே.... மச்சான் மருது தட்டிக்கொண்டு போயிட்டாரே.....

      நீக்கு
  3. கதை பேராசையை சொல்கிறது. பேராசையால் மூணு பவுனு செயின் போச்சா?
    காணொளி சிரிப்பை வரவழைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. பேராசை பெருநஷ்டம் என்று யார் சொல்வார்கள் கொடிமுல்லைக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பட்டுத்தான் தெரிகிறது சில நேரங்களில்....

      நீக்கு
  5. பணத்தாசை யாரை விட்டது... ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று தெரியாமலா சொன்னார் புத்தர்....

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்வது போல நடக்கிறது என்றாலும்.....கில்லர்ஜி பெண்களுக்கு மட்டும்தான் பேராசையா!!!!!!

    அதுவும் இன்று பெண்கள் தினம். பெண்களிடம் உள்ள நல்ல குணங்களைச் சொல்லிப் போட்டிருக்கலாமே! சாதனை படைக்கும் பெண்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கு நன்றி.

      இது நேற்று வெளியிடப்பட்ட கதை.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவுக்கு பொருத்தமான நகைச்சுவை காணொளி கண்டேன். செல்வம் எப்போது நிலையில்லாதுதானே..! யார் புரிந்து கொள்வது.? பணத்தின் மீது அளவுகடந்த ஆசை வைத்தால் அவ்வளவுதான். நிம்மதி போகத்தான் போகும். கூடவே இருக்கும் பணமும்.

    ஆமாம்.. கதையில் அவர் பேசாமல் செல்போனை வேறு அலமாரியில் வைத்து விட்டு போய் விட்டாரே..! அவர் திரும்பி வரும் வரை அது பத்திரமாக இருக்குமா? :)) கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு