என்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?
சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...
ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?
டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...
அதுக்கு நீ என்ன சொன்னே ?
பின்னே எதுக்கு போர்டு வச்சு இருக்கீங்க ? கழட்டி எறிய வேண்டியதுதானேனு சொன்னதுக்கு படார்னு அறைஞ்சுட்டாங்கே...
நீ முதல்ல என்ன கேட்டே மரியாதை இல்லாம பேசுவியே அதான் கேட்டேன்
மரியாதையாதான்ணே... கேட்டேன் டைல்ஸ் விலை எவ்வளவுனு ?
எந்த டைல்ஸ் கடை சொல்லுடா கேட்போம்.
ஆர்ச் பக்கத்துல கில்ஜி பில்டிங் கீழ் தளத்துல...
டேய்... அதுல கீழ் தளத்துல ஸ்ரீ வைஷ்ணவி டெக்ஸ்டைல்ஸ்ல இருக்குது...
ஆமாணே... அவங்கேதான் வந்து கேளுணே...
டேய்... ஜவுளிக்கடையில் எதுக்குடா கேட்டே
அவங்கேதாண்ணே போட்டு இருந்தாங்கே... டெக்ஸ் ‘’டைல்ஸ்’’னு ?
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஏண்டா சோத்துமடை ரொம்ப வேகமாப் போறே... ஏதும் விஷேசமா ?
ஆமாணே வீட்ல அக்காவும், மச்சானும் வந்து இருக்காக அதான் ஆத்தா ஏதாவது வாங்கிட்டு வாடானு சொல்லுச்சு.
அதுக்கு கறிக்கடைக்கு போகாம நஞ்சக்காட்டு எதுக்குடா போறே ?
கரி வாங்கத்தான்.
ஏலே, ஆட்டுக்கறியா ? அடுப்புக்கரியாலே ?
ஏதோ வாங்கிட்டு வா விருந்தாடி வந்துருக்காகல... அப்படினு சொல்லுச்சுணே.
ஏலே, ஆத்தா பணம் எவ்வளவுலே கொடுத்துச்சு ?
ஆயிரம் ரூவாணே...
மூதேவி தேரடியில நம்ம கரீம்பாய் கடையில போயி ஒரு கிலோ ஆட்டுக்கறினு கேட்டு வாங்கிட்டு போலே...
சரிண்ணே....
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
சார் பஸ்ஸு கொழிஞ்சிமடைதானே போகுது ?
ஆமா, நீ எங்கே போகணும் ?
கொழுந்தியா வீட்டுக்கு போகணும்
அங்கே எல்லாம் போகாது இறங்கு.
சார் கொழிஞ்சிமடைனு போர்டு போட்டு இருக்கீங்களே ?
ஆமாயா, கொழிஞ்சிமடைதான் போகுது.
அப்ப ஏன் கொழுந்தியா வீடு போகாதுனு சொல்றீங்க ?
யோவ் காலையிலேயே எதுக்குயா கழுத்தை அறுக்கிறே...
அங்கேதானே என் கொழுந்தியா வீடு இருக்கு.
இருந்தால் அந்த வீட்டுக்கு பஸ் போகணுமா ?
நீங்க பஸ் ஸ்டாப்ல நிறுத்துங்க... நான் இறங்கி போயிக்கிறேன்.
யாரு வேண்டாம்னு சொன்னா முதல்ல டிக்கெட்டுக்கு பணத்தை கொடுயா ?
பஸ் ஸ்டாண்டுலதானே என் கொழுந்தியா வீடு இருக்கு.
இதுக்கு எதுக்குயா.. இவ்வளவு அலுச்சாட்டியம் ?
பஸ்ஸுல போரடிக்காம ஒரு எஞ்ஜோய்தான்.
உன்னோட போதைக்கு நான் ஊருகாயா ? ம்... நேரம்
.* * * * * * * * * * 03 * * * * * * * * * *
வாங்கண்ணே எல்லா மீனும் இருக்கு உங்களுக்கு என்ன வேணும் ?
எனக்கு விண்மீன் வேணும் கிடைக்குமா ?
என்னையா கேள்வி கேட்கிறே ?
நீங்கதானே சொன்னீங்க எல்லா மீனும் கிடைக்கும்னு ?
இருக்கிறதை கேளுங்க ?
அப்ப ஜாமீன் கொடுங்க ?
எத்தனை கிலோ வேணும் ?
ஜாமீன் எப்படி இருக்கும் ?
இந்தக் கத்தியால உன்னை ஒரு போடு போட்டேனு வச்சுக்க, பிறகு எனக்கு ஜாமீன் வாங்கி உனக்கு கொடுப்பேன்.
ஆளை விடுய்யா... நான் போறேன்.
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
ஓட்டுநர் நம்மளைப் போல அவோரட கொழுந்தியா முகத்தில முழிச்சு இருப்பாரோ ?
நான்கையுமே மிக ரசித்தேன். .சுவாரஸ்யமான வார்த்தை விளையாட்டு.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. டைல்ஸ் புராணம் சூப்பர் . ரசித்து வாய் விட்டு சிரித்தேன். உங்கள் கற்பனையே அலாதி.
இரண்டாவதும் நன்றாக உள்ளது. அடுப்புகரி வாங்க அம்மா ஆயிரம் ரூபாய் தந்தனுப்புவாளா என் யோசிக்காதது நல்ல நகைச்சுவை.
அதுபோல் பேருந்தில் வீண் வம்புக்கிழுப்பதும், கடைத் தெருவில் மீன் வியாபாரமும் சிரிக்க வைத்தது
உங்கள் நகைச்சுவை பதிவுகள் இனியும் தொடரட்டும். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஎல்லாமே நல்லாருக்கு கில்லர்ஜி. வார்த்தைகளை வைச்சு சூப்பர்.
பதிலளிநீக்குமுதல் ஜோக் டெக்ஸ் டைல்ஸ் நல்லாருக்கு.
கீதா
ஜா மீன் இதுவும் ...சூப்பர்
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குநல்ல நகைச்சுவை பதிவு. அருமை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குநான்கு நகைச்சுவையும் மிக அருமை சகோ . நீங்க எப்படி இருக்கீங்க சகோ
பதிலளிநீக்குவருக சகோ நலமே... நலமா ?
நீக்குதங்களது வருகைக்கு நன்றி
ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. ஜாமீன்/விண்மீன் மாத்திரம் திரைப்படத்தில் ஏற்கனவே வந்துவிட்டது.
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஆம் ஆனால் நான் சற்று மாறுதலாக எழுதி இருக்கிறேன்.