வணக்கம் நட்பூக்களே…
வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்
அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.
ஆனால் மக்கள் ? ? ?
அறிவுக்கு ஏனிந்த அழிவீனம் ?
தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்சிக்கு மக்களாகிய நாம் நன்றி சொல்லக்
கடமைப்பட்டுள்ளோம் காரணம் தமிழ்நாட்டில் இவ்வளவு கூமுட்டைகள்
வாழ்வதை வெளிக்கொண்டு வந்தது இந்தக் கட்சிதான் அதற்காக திரு.விஜய்
அவர்களுக்கு நன்றி.
அறிவாளிகளின் வகைகள்.
எனது கணவரைவிட எனக்கு விஜய் மாமாவைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வேலை, குடும்பம், குழந்தைகள் வேண்டாம் தளபதியை நேரில் பார்த்தால் போதும். பல வருசக்கனவு.
அம்மா, அப்பாவைவிட எனக்கு விஜய் அண்ணாதான் முக்கியம்.
என் மனைவி வேணுமா ? விஜய் வேணுமானு கேட்டால் தளபதிதான் வேணும்.
நான் அடுத்த வருசம் விஜய்க்கு மனைவியாக பிறக்கணும். இதுதான் எனது ஆசை.
நாங்க சகோதரிகளாக இருப்போம், இல்லையென்றால் மனைவியாககூட இருப்போம்.
எனது மகள் மருத்துவமனையில் இருக்கிறாள் (ICU) ஆனாலும் தளபதியை பார்க்க வந்தோம்.
எங்கள் தளபதி நல்லபடியாக முதலமைச்சர் ஆகணும் அதற்காக அம்மனுக்கு பூக்குழி இறங்கினேன்.
எங்க பேரன் உயிரை விட்டு எங்களை பக்கத்தில் நின்று பார்க்கும் பாக்கியத்தை கொடுத்தான்.
ஆட்சியை பிடிக்க நாங்கள் 264 இடங்களில் வெற்றி பெறுவோம்
எனது கணவன் தினமும் துன்புறுத்துகின்றான், தளபதி ஆட்சிக்கு வந்து இதற்கு முடிவு கட்டுவார்.
நான் தளபதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் கணவர் ஓட்டுப் போடலை விவாஹரத்துதான்.
எனது குடும்பத்தினர் 9 பேரும் தளபதிக்கு ஓட்டுப் போடலை விஷம் வைத்துக் கொல்வேன்.
எனக்கு பிடித்த கொள்கைத் தலைவர் இப்போது கட்சியில் சேர்ந்த செங்கோட்டையன்.
நாங்கள் மூன்று, நான்கு இடத்தை பிடித்து விடுவோம்.
தளபதி முதல்வர் ஆனதும் எங்கள் கிராமத்துக்கு கண்டிப்பாக வருவார்.
எங்கள் தளபதி நடந்து வந்த மண்ணில் உருண்டால் அறிவு வளரும்.
எனது மகளைவிட, தளபதியைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மற்ற இடத்தில் இறந்தால் வெளியே தெரியாது, தளபதிக்காக இறந்தால் உலகம் பூராம் தெரியும்.
எங்கள் தளபதி பத்து பேரை திருமணம் செய்தாலும் அவருக்குதான் ஓட்டுப் போடுவோம்.
விஜய் முதல்வர் ஆனால்தான் அவருக்காக உயிர் விட்ட என் மகன் ஆத்மா சாந்தியடையும்.
எனக்கு வந்து பிராக்டிகல் நடக்குது அது வேண்டாம், மார்க் வேண்டாம் தளபதியை பார்த்தால் போதும்.
தளபதியை பார்க்கப் போறதை நினைத்தால் எனது ரெண்டாவது அப்பாவை பார்க்கும் பீலிங் வருது.
உயிர் போனா மயிரே போச்சு, உயிர் தலைவனுக்காக போகுதுனு வச்சுக்க அசால்டா விட்டுப் போவேன்.
இன்னும் சொல்வதற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் பதிவு நீளும் ஆகவே
வேண்டாம். இப்படி அறிவு ஜீவிகள் இன்னும் எவ்வளவு வாழ்கிறதோ…
அரசியல் துளியளவும் தெளிவு பெறாத இந்த ஞானசூன்யங்கள்தான்
நாளைய தமிழகத்தை தீர்மானிக்கப் போகிறதா ? இவ்வளவு இழிநிலைக்கு
தமிழனினம் தாழ்ந்து விட்டதின் அடிநாதம் எங்கு, எப்போது, எவ்விதம் தொடங்கியது ?
(அதை மற்றொரு பதிவி்ல் அலசுவோம்)
தனி மனித ஒழுக்கம் இல்லாத மனிதன் நாட்டை ஆள்வதற்கு தகுதி இல்லை.
மற்றவர்களுக்கு உள்ளதா ? என்று என்னைக் கேட்டால் திரு.காமராசர்,
திரு.கக்கன் அவர்களைத் தவிர எவருக்குமே இல்லை என்பதே எமது கருத்து.
இதற்கு காரணம் நமது தாய்-தந்தையர்கள்தான். திரு.சிவாஜி கணேசன்,
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற கூத்தாடன்களிடம் மதிமயங்கி
அதே அறிவை தங்களது சந்ததிகளிடம் கொடுத்துச் சென்றதே…
சரி அவர்கள்தான் படிக்காதவர்கள் (பெரும்பான்மை) இன்று படிக்காதவர்கள்
யார் ? உங்களது படிப்பறிவு பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை சரி
என்கிறதா ? அடுத்த சந்ததிகளாவது உண்மைத் தமிழர்களாக வாழ்வதற்கு வழி
வகை செய்யுங்கடா மூடர்களா…
தமிழக வெற்றிக் கழகம் என்பதை தமிழக வெற்றி கழகம் என்று தவறுதலாக
தொடங்கும் பொழுதே இவர்களின் அரசியல் ஞானம் தெரிகிறது இதில் நானும்
ஞானம் பெற்றுதான் தலைப்பை இப்படி வைத்துள்ளேன்.
சரி இந்த ரசிகர்கள் மட்டும்தான் இப்படி அறிவு மழுங்கி போனார்களா ?
மற்ற கூத்தாடன்களின் ரசிகர்கள் மட்டும் அறிவாளிகளா ? என்றால் அவர்களும்
பதாகைகளுக்கு பாலூற்றி தனது வாழ்க்கையை பாழாக்கும் இதே நிலைப்பாடுதான்.
சரி மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அறிவாளிகளா ? என்றால் அவர்களும் காலம்
முழுவதும் வாழ்க கோஷமிட்டு தங்களது வாழ்வு மட்டுமல்ல, தங்களது
சந்ததிகளின் வாழ்வையும் நாசமாக்கிய மூடர்கள்தான். இவர்கள் எப்படியானவர்கள்
தெரியுமா ?
உங்கள் ஓட்டு யாருக்கு ?
நாங்க, எங்க தாத்தா காலத்துலருந்து ரெட்ட எலைக்குத்தான்.
உங்கள் ஓட்டு யாருக்கு ?
நாங்க, எங்க அய்யா காலத்துலருந்து ஒதய சூரியனுக்குத்தான்.
இவர்கள் அறிவாளிகள் என்றால் நான் மேலே வரிசைபடுத்திய எனது உயிரினும்
மேலான ரத்த உறவுகள் தவெக தொண்டர்கள் அனைவரும் அறிவாளிகளே…
காரணம் ஒட்டக விட்டையில் முன்விட்டை வேறு, பின்விட்டை வேறு அல்ல எல்லாம்
ஒரே குட்டையில் ஊறிட மட்டைகள்தான்.
சிவாதாமஸ்அலி-
கடவுள் இல்லை என்று சொன்னவரின் கொள்கையை ஏற்றவர்கள், அவருக்கே
சிலை வடித்து கடவுளாக வணங்குபவர்கள் வாழும் பூமியில் இவர்களை
யாருமே வேக வைக்க முடியாது பாஸ்.
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்

.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக