தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 15, 2026

தற்குறி வெட்டிக் கலகம்

ணக்கம் நட்பூக்களே… 

வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்

அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.

காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். 


ஆனால் மக்கள் ? ? ?

அறிவுக்கு ஏனிந்த அழிவீனம் ?


தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்சிக்கு மக்களாகிய நாம் நன்றி சொல்லக்

கடமைப்பட்டுள்ளோம் காரணம் தமிழ்நாட்டில் இவ்வளவு கூமுட்டைகள்

வாழ்வதை வெளிக்கொண்டு வந்தது இந்தக் கட்சிதான் அதற்காக திரு.விஜய்

அவர்களுக்கு நன்றி.


அறிவாளிகளின் வகைகள்.


  1. எனது கணவரைவிட எனக்கு விஜய் மாமாவைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  2. வேலை, குடும்பம், குழந்தைகள் வேண்டாம் தளபதியை நேரில் பார்த்தால் போதும். பல வருசக்கனவு.

  3. அம்மா, அப்பாவைவிட எனக்கு விஜய் அண்ணாதான் முக்கியம்.

  4. என் மனைவி வேணுமா ? விஜய்  வேணுமானு கேட்டால் தளபதிதான் வேணும்.

  5. நான் அடுத்த வருசம் விஜய்க்கு மனைவியாக பிறக்கணும். இதுதான் எனது ஆசை.

  6. நாங்க சகோதரிகளாக இருப்போம், இல்லையென்றால் மனைவியாககூட இருப்போம்.

  7. எனது மகள் மருத்துவமனையில் இருக்கிறாள் (ICU) ஆனாலும் தளபதியை பார்க்க வந்தோம்.

  8. எங்கள் தளபதி நல்லபடியாக முதலமைச்சர் ஆகணும் அதற்காக அம்மனுக்கு பூக்குழி இறங்கினேன்.

  9. எங்க பேரன் உயிரை விட்டு எங்களை பக்கத்தில் நின்று பார்க்கும் பாக்கியத்தை கொடுத்தான்.

  10. ஆட்சியை பிடிக்க நாங்கள் 264 இடங்களில் வெற்றி பெறுவோம்

  11. எனது கணவன் தினமும் துன்புறுத்துகின்றான், தளபதி ஆட்சிக்கு வந்து இதற்கு முடிவு கட்டுவார்.

  12. நான் தளபதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் கணவர் ஓட்டுப் போடலை விவாஹரத்துதான்.

  13. எனது குடும்பத்தினர் 9 பேரும் தளபதிக்கு ஓட்டுப் போடலை விஷம் வைத்துக் கொல்வேன்.

  14. எனக்கு பிடித்த கொள்கைத் தலைவர் இப்போது கட்சியில் சேர்ந்த செங்கோட்டையன்.

  15. நாங்கள்  மூன்று, நான்கு இடத்தை பிடித்து விடுவோம்.

  16. தளபதி முதல்வர் ஆனதும் எங்கள் கிராமத்துக்கு கண்டிப்பாக வருவார்.

  17. எங்கள் தளபதி நடந்து வந்த மண்ணில் உருண்டால் அறிவு வளரும்.

  18. எனது மகளைவிட, தளபதியைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  19. மற்ற இடத்தில் இறந்தால் வெளியே தெரியாது, தளபதிக்காக இறந்தால் உலகம் பூராம் தெரியும்.

  20. எங்கள் தளபதி பத்து பேரை திருமணம் செய்தாலும் அவருக்குதான் ஓட்டுப் போடுவோம்.

  21. விஜய் முதல்வர் ஆனால்தான் அவருக்காக உயிர் விட்ட  என் மகன் ஆத்மா சாந்தியடையும்.

  22. எனக்கு வந்து பிராக்டிகல் நடக்குது அது வேண்டாம், மார்க் வேண்டாம் தளபதியை பார்த்தால் போதும்.

  23. தளபதியை பார்க்கப் போறதை நினைத்தால் எனது ரெண்டாவது அப்பாவை பார்க்கும் பீலிங் வருது.

  24. உயிர் போனா மயிரே போச்சு, உயிர் தலைவனுக்காக போகுதுனு வச்சுக்க அசால்டா விட்டுப் போவேன்.


இன்னும் சொல்வதற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் பதிவு நீளும் ஆகவே

வேண்டாம். இப்படி  அறிவு ஜீவிகள் இன்னும் எவ்வளவு வாழ்கிறதோ…

அரசியல் துளியளவும் தெளிவு பெறாத இந்த ஞானசூன்யங்கள்தான் 

நாளைய தமிழகத்தை தீர்மானிக்கப் போகிறதா ? இவ்வளவு இழிநிலைக்கு

தமிழனினம் தாழ்ந்து விட்டதின் அடிநாதம் எங்கு, எப்போது, எவ்விதம் தொடங்கியது ?

(அதை மற்றொரு பதிவி்ல் அலசுவோம்)


தனி மனித ஒழுக்கம் இல்லாத மனிதன் நாட்டை ஆள்வதற்கு தகுதி இல்லை.

மற்றவர்களுக்கு உள்ளதா ? என்று என்னைக் கேட்டால் திரு.காமராசர்,

திரு.கக்கன்  அவர்களைத் தவிர எவருக்குமே இல்லை என்பதே எமது கருத்து. 


இதற்கு காரணம் நமது தாய்-தந்தையர்கள்தான். திரு.சிவாஜி கணேசன்,

திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற கூத்தாடன்களிடம் மதிமயங்கி

அதே அறிவை தங்களது சந்ததிகளிடம் கொடுத்துச் சென்றதே…

சரி அவர்கள்தான் படிக்காதவர்கள் (பெரும்பான்மை) இன்று படிக்காதவர்கள்

யார் ? உங்களது படிப்பறிவு பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை சரி

என்கிறதா ? அடுத்த சந்ததிகளாவது உண்மைத் தமிழர்களாக வாழ்வதற்கு வழி

வகை செய்யுங்கடா மூடர்களா…


தமிழக வெற்றிக் கழகம் என்பதை தமிழக வெற்றி கழகம் என்று தவறுதலாக

தொடங்கும் பொழுதே இவர்களின் அரசியல் ஞானம் தெரிகிறது இதில் நானும்

ஞானம் பெற்றுதான் தலைப்பை இப்படி வைத்துள்ளேன்.


சரி இந்த ரசிகர்கள் மட்டும்தான் இப்படி அறிவு மழுங்கி போனார்களா ?

மற்ற கூத்தாடன்களின் ரசிகர்கள் மட்டும் அறிவாளிகளா ? என்றால் அவர்களும்

பதாகைகளுக்கு பாலூற்றி தனது வாழ்க்கையை பாழாக்கும் இதே நிலைப்பாடுதான்.


சரி மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அறிவாளிகளா ? என்றால் அவர்களும் காலம்

முழுவதும் வாழ்க கோஷமிட்டு தங்களது வாழ்வு மட்டுமல்ல, தங்களது

சந்ததிகளின் வாழ்வையும் நாசமாக்கிய மூடர்கள்தான். இவர்கள் எப்படியானவர்கள்

தெரியுமா ?


உங்கள் ஓட்டு யாருக்கு ?

நாங்க, எங்க தாத்தா காலத்துலருந்து ரெட்ட எலைக்குத்தான்.

உங்கள் ஓட்டு யாருக்கு ?

நாங்க, எங்க அய்யா காலத்துலருந்து ஒதய சூரியனுக்குத்தான்.


இவர்கள் அறிவாளிகள் என்றால் நான் மேலே வரிசைபடுத்திய எனது உயிரினும்

மேலான ரத்த உறவுகள் தவெக தொண்டர்கள் அனைவரும் அறிவாளிகளே…


காரணம் ஒட்டக விட்டையில் முன்விட்டை வேறு, பின்விட்டை வேறு அல்ல எல்லாம்

ஒரே குட்டையில் ஊறிட மட்டைகள்தான்.


சிவாதாமஸ்அலி-

கடவுள் இல்லை என்று சொன்னவரின் கொள்கையை ஏற்றவர்கள், அவருக்கே

சிலை வடித்து கடவுளாக வணங்குபவர்கள் வாழும் பூமியில் இவர்களை

யாருமே வேக வைக்க முடியாது பாஸ்.


தேவகோட்டை கில்லர்ஜி துபாய்


22 கருத்துகள்:

  1. இந்த கர்மங்களை பார்த்துப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் கர்மா!  என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  2. நடப்பு கோலங்கள் பார்த்தும் 
    அவர்தம் ஊழல் ஜாலங்கள் பார்த்தும்,  
    மாய்மாலங்கள் கேட்டும் 
    காலத்தைக் கடந்தும் 
    கண்ராவிகளுக்கே  வாக்களிக்கும் 
    தமிழக மாக்கள்!

    பதிலளிநீக்கு
  3. இரண்டு வாரங்களாக உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். எப்படி இருக்கிறீர்கள், தற்போதைய சூழலில் நலமாக இருக்கிறீர்களா எனக் கேட்க நினைத்திருந்தேன் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே சூழல் மாறி அமைதி வருகிறது.

      நீக்கு
  4. பொதுவா தமிழர்களில் காசு வாங்கிக்கொண்டு, அரசியல் அறிவோ இல்லை குறைந்தபட்ச மூளையோ இல்லாத 25-30 சதம் தமிழர்களால்தான் நம் நாடு நாசமாகிறது. இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை கொடுத்த நம் முன்னோர்களை என்ன சொல்லி நொந்துகொள்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே
      இவர்கள் கல்லூரியில் படித்தது என்ன ? என்பது புரியவில்லை.

      நீக்கு
  5. நீங்கள் தமிழகத்துக்கு நிரந்தரமா வரும்போது நடிகர் விஜய் முதலமைச்சரோ இல்லை துணை முதலமைச்சரோ ஆகி அவரிடம்தான் மனு கொடுக்கும் நிலைமை வரலாம் (உங்க நேரம் நல்லா இருந்தால். இல்லைனா திரிஷா, நிவேதா, நயனதாரா போன்றவர்களிடம்தான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்கனுமோ... தேவுடா...

      நீக்கு
  6. வேதனை தரும் சூழல் தான் இங்கே. ஒவ்வொரு நாளும் இப்படியான மூடர்களை பார்த்து வேதனை தான் மிஞ்சுகிறது.

    நலமாக இருக்க பிரார்த்தனைகள். அங்கே சூழல் சரியில்லையே... கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

      நீக்கு
  7. நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    அமைதி வருவது மகிழ்ச்சி.

    நாங்கள் தினம் இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டு வேதனை அடைந்து வருகிறோம்
    மாற்ற முடியாது இப்படி பட்டவர்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும் கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நான் இராணுவ முகாமில் வேலை செய்வதால் சற்று இலக்குடன் இருங்கிறோம். மற்றபடி ஒன்றுமில்லை.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? அங்குள்ள சூழலை பற்றிய கவலைகளில் உங்கள் நலனுக்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டேயிருந்தேன்.
    உங்கள் பதிவு மகிழ்ச்சியை தருகிறது. (பதிவிலுள்ள விஷயங்கள் அல்ல..!)

    நடப்பது நடந்து கொண்டேதான் உள்ளது. அனைத்தும் நலமாக நடக்க வேண்டி பிரார்த்தனை செய்வோம். வேறு வழி..! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், எனது நலன் பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  9. நலமாக இருக்கிறீர்களா? விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. 18% சதவீதம் ஓட்டு இருக்கிறதாமே? அதுவும் நகரங்களில்தான் ஆதரவு அதிகமாம். என்னத்த சொல்வது? படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லைதான்.

      நீக்கு
  11. என்னை நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ்மணத்தில் தருமி என்ற பெயரில் எழுதி வந்தேன். தமிழ்ச்சரம் பற்றி இன்றுதான் அறிந்தேன். எவ்வாறு இதில் இணைவது. உதவுங்கள்.

    Apr 2, 2026, 11:14:13 PM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நலமா ?
      தங்களை தெரியாதவர் வலையுலகில் உண்டோ... 2014-ஆம் ஆண்டு மதுரை பதிவர் விழாவில் சந்தித்து புகைப்படம் எடுத்து இருக்கிறோம். மறக்க முடியுமா ?

      ஐயா தற்சமயம் வலைத்திரட்டிகள் இயக்கவில்லை. நான் தமிழ் மனத்தில் இருந்தேன்.

      தமிழ்ச்சரத்தில் இல்லை அதனுள் தங்களது வலைப்பூ முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யுங்கள் போதுமானது.

      நீக்கு