தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 19, 2021

அதிராம்பட்டிணம், அதிரடி அதிரா


‘’அதிரா’’

இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெயர்ந்து கீழே விழும். என்றால் அப்பாவி பொதுமக்கள் எப்படி பயப்படுவார்கள் ? வைஜயந்தி ஐபிஎஸ் சையே ஓர் தினம் தூக்கிப்போட்டு மிதித்ததில் உடனடியாக மாற்றலாகி வேறு ஊருக்கு பறந்து போனவர் அப்படியே வடக்கு பக்கமாகவே போய் செட்டிலாகி விட்டாராம்.

காவல் நிலையங்களே சில நேரங்களில் அலைபேசியில் அழைத்து தீர்க்க முடியாத பஞ்சாயத்துகளை முடித்துக் கொடுக்க சொல்வார்களாம். பெரிய அதிகாரிகளே நின்று கொண்டு மேடம் என்று பவ்யமாக வாயை மூடிக்கொண்டு பேசுவார்களாம். காரணம் எல்லாமே அதிரடியான முடிவுகளாக இருக்குமாம். காய்கறி மார்கெட்டுக்கு வசூலுக்கு போகும் போது பதினாறு குதிரைகள் புடைசூழ அடியாட்களோடு போய் காய்கறி வந்த முட்டைக்கோஸ் மூடையை பிரித்து கீழே கொட்டி விட்டு அதே மூடையை பணத்தோடு நிரப்பிக் கொண்டு பங்களாவுக்கு வருவார்களாம். நகைக்கடை பஜாருக்கு போனால் பதினாறு கேரட் நகைகளை இலவசமாக கொடுத்து விட்டு பூமியை பார்த்து வணக்கம் சொல்வார்களாம். டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி வந்தால் ஊரே அதிராவுக்கு பதினாறு கிலோவில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடுவார்களாம். கேக்கில் ஸ்வீட் பதினாறு என்று எழுதுவது மரபாம் இல்லையேனில் பேக்கரி முதலாளிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் பேருந்து நிலைய மையத்தில் வைத்து பதினாறு சவுக்கடி கொடுக்கப்படுமாம்.

அதிரா நகருக்குள் வலம் வருகிறார் என்றால் போக்குவரத்துதுறை சமிக்ஞை விளக்குகளை மாற்றியமைத்து அவர்களது மகிழுந்து செல்வதற்கு வழிவகை செய்வார்களாம். அதேபோல் டெல்லி - இராமேஸ்வரம் விரைவு வேக புகையிரதம் அதிராம்பட்டிணம் நிலையத்தில் சாதாரணமாக நிற்பது இல்லையாம். ஆனால் அதிரா ஏதும் அவசர வேலையாக புகையிரதத்தில் வெளியூர் கிளம்பினால் உடனே புகையிரதம் நின்று விடுமாம். இதையே காரணமாக வைத்து பொது மக்களும் அன்று இராமேஸ்வரம் போய் கருமத்தை தொலைத்து வரப்போவார்களாம்.

அதிரா சில நேரங்களில் சாலையில் நடந்து போகும்போது அவங்களுக்கு முன்னால் நடந்து போனவர்கள் அப்படியே சிலைபோல நின்று விடணுமாம் அதிரா போனவுடன்தான் அவருக்கு பின்னால் வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு போகணுமாம்.

ஒருமுறை திருமணம் ஒன்றுக்கு செல்லும்போது திருமணத்தில் பாட்டுக் கச்சேரியில் மதுரா நகராம் தமிழ்ச்சங்கம் என்று பாடிக்கொண்டு இருந்தவரை அதிராவின் அல்லக்கைகள் அடித்து உதைத்து அவரது வாயைக் கிழித்து அவர் இனி வாயைத் திறந்து பாடமுடியாது என்று தெரிந்தவுடன் வேறு நபரை அதிரா நரகம் டமில்ச்சங்கம் என்று பாட வைத்தார்களாம். திருமண விருந்து முடிந்தவுடன் மொய்ப் பெட்டியை அதிராவின் அல்லக்கைகள் எடுத்துக் கொண்டு போவார்களாம்.

இதனாலேயே பெரும்பாலும் யாரும் திருமணம் செய்யாமலே யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிப்போய் குழந்தை பிறந்தவுடன் சொந்த ஊர் திரும்புவார்களாம் அதேபோல் ஊரில் உள்ள அசைவ உணவகங்களில் ஆட்டு ஈரலை மட்டும் அப்படியே வறுவல் செய்து அதிராவின் பங்களாவுக்கு கொடுத்து விடவேண்டுமென்று சொல்லி விட்டதால் நகரில் உள்ள எல்லோருமே சைவ உணவகங்களாக மாற்றி விட்டார்களாம். காலப்போக்கில் முனியாண்டி விலாஸிலும் தயிர்ச்சாதம் கிடைத்ததாம்.

இப்படியே சொல்லி வந்தவன் பலகை மாட்டிய அந்த குடிசை முன் நின்றான்.
இதுதான் ஸார்
கதவைத் தட்டுவோமா ?
கதவு இல்லை தட்டிதான்.
அதான்
பாட்டீ... பாட்டீ...
சத்தம் கேட்டு தட்டியை விளக்கிய தொண்ணூறு வயதை தாண்டிய பாட்டி கேட்டார்.
யாருப்பா பேராண்டிகளா ?
பாட்டி நாந்தான் மொக்கை மயேன், இவங்க மதுரையிலருந்து வந்து இருக்காங்க ஒங்கிட்ட ஏதோ அனுமதி வாங்கணுமாம் கேளுங்க ஸார்.

வணக்கம் பாட்டி என் பேரு தமிழன் குறும்படம் எடுத்துக்கிட்டு இருக்கோம். பாலக்காடு தில்லையகத்து குறும்பட இயக்குனர்கள் துளசிதரன், மற்றும் கீதா அவர்கள் அனுப்பி வச்சாங்க. உங்கள் பேரு என்ன பாட்டி ?
எம்பேரு அதிராம்பட்டிணம் அதிரடி அதிரா (ஐய்... தலைப்பு வந்துடுத்து....)
உங்க வயசு என்ன பாட்டி ?
ஸ்வீட் பதினாறு
என்ன பாட்டி தொண்ணூறு வயசு இருக்கும்போல பதினாறுனு சொல்றீங்க ?
டேய் நான் என்றும் பதினாறு இதுக்கு மேலே கேள்வி கேட்டே அருவாளை எடுத்து வீசிடுவேன்.
எதுக்கு பாட்டி அருவாளை வீசுறீங்க இருந்தா தேங்காய் உடைக்க ஆகும்ல...
டேய்.... என்ன லந்தா ?

சரி பாட்டி கோவிக்காதீங்க உங்கள் வாழ்க்கை வரலாற்றை படமெடுக்க அனுமதி தரணும் எவ்வளவு வேணும் ?
பதினாறு கோடி
என்னாது... பதினாறு கோடியா ? நல்லாயிருக்கே கதை... நான் வந்ததால ஏதாவது பணம் கிடைக்கும் துளசிதரன் ஸார் வந்தாருனா... கருவேல மரத்து இலையை ரெண்டு பறிச்சு துளசி இலைனு கொடுத்துட்டு சோலியை முடிச்சுட்டு போயிருப்பாரு...

வேண்டாம் இதுக்கு மேலே படமெடுத்தே லண்டன் கோர்ட்ல கேஸ் போட்ருவேன்.
நான் உகாண்டா கோர்ட்ல கேஸ் போட்டு உன்னை இழுத்தடிச்சுவேன்.
வேண்டாம்டா வயசான காலத்துல என்னை அலைக் கழிக்காதடா ஏதோ கையில உள்ளதை கொடுடா...
சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் வரும்போது நெல்லை ஸ்வீட் ஸ்டால்ல உனக்கு பிடித்தமான அதிரசம் பதினாறு பீஸ் வாங்கி வந்துருக்கேன் இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு உட்கார்ந்து தின்னு
சரிடா சாமி கொடு.

இப்ப சொல்லிக்கிட்டு வந்தீங்கள்ல சம்பவம் இதெல்லாம் எப்ப நடந்தது ?
இது நடந்து எப்படியும் அருபது வருசத்துக்கும் மேலே இருக்கும் ஸார்.
அப்ப பாட்டியோட பங்களா, சொத்து எல்லாம் என்னாச்சு ?
அதெல்லாம் பாட்டி கூடவே இருந்த அல்லக்கைகள் அதிரசம் வாங்கி கொடுத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு போயிட்டாங்கே... ஸார்
அப்ப பாட்டியோட நகைகள் எல்லாம் என்னாச்சு ?
அதெல்லாம் அல்லக்கைகளோட பொண்டாட்டிமாரு பாட்டியை என்றும் பதினாறு போலவே இருக்கீங்கனு சொல்லி ஐஸ் வச்சு நகைகளை புடுங்கிட்டு போயிட்டாளுக... இந்தக் குடிசைதான் மிச்சம்
.
ம்.... சரி நல்லது நான் புறப்படுறேன். இவ்வளவு தகவல்கள் சொன்னதுக்கும், வீட்டை காட்டியதற்கும் ரொம்ப நன்றிங்க பாட்டி வர்றேன்.
மகராசனா போயிட்டு வாப்பா... நேரம் இருந்தா வா என்னோட மூணு வயசு கதையெல்லாம் இருக்கு ஜொள்ளுறேன்.


குறிப்பு – இந்த அதிராம்பட்டிணம் தியாகியின் வரலாறுக்கும், ஸ்காட்லாந்து நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை மீறி யாராவது தொடர்பு படுத்தினால் நிர்வாகம் ஜவாப்தாரியல்ல!

காணொளி

123 கருத்துகள்:

  1. பங்களா, சொத்து எல்லாம் அதிரசம் வாங்கி கொடுத்தே... ஹா... ஹா...

    அதிராம்பட்டிண அதிரச அதிரா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்படி ஆளுகளும் இருக்கிறார்களே...

      நீக்கு
  2. ஆக என்றும் பதினாரு வயசு என்று சொல்லிக் கொண்டிருப்பவர் தொண்ணூரு வயசு பாட்டியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நீங்க யாரை சொல்றீங்க ?

      ஸ்டாலின் மாதிரி.... ஹி.. ஹி... ஹி...

      நீக்கு
    2. மதுரை அது இப்பத்தான் தெரியுமாக்கும்?!!!

      கீதா

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஹையையோ ஹையோ.. இதை ஆராவது தட்டிக் கேட்பினம் எனப் பார்த்தால், எல்லோரும் கில்லர்ஜி பக்கமே சாய்ஞ்சிட்டினமே தேவகோட்டையின் மேற்குப் பக்கத்து மாரியம்மன் கோயிலின் வலப்புறமிருக்கும் வைரவா!!!.. இதை எல்லாம் தட்டித்தட்டிக் கேய்க்க மாட்டீங்களோ:))

      நீக்கு
    4. //தேவகோட்டையின் மேற்குப் பக்கத்து மாரியம்மன் கோயிலின் வலப்புறமிருக்கும் வைரவா//

      இவரு யாரு எனக்கு தெரியாமல் ???

      நீக்கு
    5. ஆஆஆஆஆஆஅ கில்லர்ஜியும் கம்பிமேல:)) ஹா ஹா ஹா..

      ம்ஹூம்ம்ம்ம்.. நீங்க நியூஜோர்க்கில இருக்கிறீங்களெல்லோ:)).. இந்த ஊர்க்கோயில் எல்லாம் தேவகோட்டையில இருக்கிற ஆட்களுக்கேதான் தெரியுமாக்கும்:))...

      நீக்கு
    6. இதோ உடனே தேவகோட்டை மேப்பை கூகுளில் பார்க்கிறேன்.

      நீக்கு
    7. கூகிள்ள அதுவெல்லாமா கிடைக்குது கில்லர்ஜி:)) நான் அங்கின ஃபூட் ஐட்டம்ஸ் தானே கிடைக்கும் என நினைச்சேன்:))..

      ஹையோ நேரமாக ஆக எனக்கு என்னமோ ஆகுது:)).. இனியும் இங்கின நிண்டால் ஆபத்து.. மீ ஓடிடுறேன்ன்:)))

      நீக்கு
    8. தேவகோட்டையை அலச கூகுள்தான் உதவி.

      நீக்கு
  3. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிப்பீங்களோ? இதிலே துளசிதரன், தி/கீதா, நெல்லை எல்லோரையும் இழுத்துட்டீங்க! நல்லாவே இருந்தது. காணொளியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ யாரு எப்பொழுது எனது பதிவில் வருவார்கள் என்பது அவரவர்களின் நல்லநேரம்தான்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. அட உங்களது பெயரை மாற்றி விட்டீர்கள் போலயே... இதன் இராயல்டி என்னிடம்தான் உள்ளது.

      நீக்கு
  4. அதிரா இன்னிக்கோ நாளைக்கோ வருகை தருவது உறுதி. கில்லர்ஜி தளம் 'கிடு கிடு கிடு'னு அதிரப்போகுது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பயமாக இருக்கு எனக்கு...

      எதற்கும் நான் ஒரு வாரத்துக்கு உகாண்டா பக்கமாக போயிட்டு வாரேன்.

      நீக்கு
    2. நான் பார்த்துட்டேன் எப்படியாச்சும் வரவைச்சிடறேன் :)

      நீக்கு
    3. நன்றி சகோ.
      அதிரா வந்து ஆட்டம் போடுவாரே...

      நீக்கு
    4. ஆஆஆஆ அறிவுப்பசிஜி.. நேற்றே என் செக் எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறா, ஆனா நான் நேற்றுப்பார்த்து அசதியா இருக்கே என கொஞ்சம் ஏழியாக நித்திரையாகிட்டேன்.. அதுவும் நல்லதுக்குத்தான், ஏனெனில் இப்போ அவிச்ச முட்டை ரெண்டு சாப்பிட்டுப்போட்டுத்தான் இங்கின வந்தேனாக்கும்:))

      நீக்கு
    5. முட்டை சாப்பிட்டு விட்டு பதிவர்களை முட்ட திட்டமா ?

      நீக்கு
    6. ஜத்து:).. வேணுமெல்லோ கில்லர்ஜி:))

      நீக்கு
    7. ஐத்து எதற்கு அதிராவுக்கு ?

      நீக்கு
    8. இதென்ன கொஸ்ஸன் கில்லர்ஜி.. ஸ்ரெடியா நிக்கத்தான் சிறீ சிவசம்போ அங்கிளைப்போல:))

      நீக்கு
    9. நான் கேட்டது ஜத்து அல்ல ஐத்து.

      நீக்கு
  5. பதிவு நல்ல நகைச்சுவை . தமிழ் , தெலுங்கு காணொளி நல்ல நகைச்சுவை காட்சி.
    பாட்டியின் வீட்டை இல்லை இல்லை ஸ்வீட் பதினாறு அவர்களின் வீட்டை காட்டி விட்டீர்கள், ஸ்வீட் பதினாறு தன்னை படம் எடுக்க அனுமதிக்கவில்லையா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஸ்வீட் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையுமென்று படமெடுக்க அனுமதிக்கவில்லையாம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கோமதி அக்கா .. குட் கொஸ்ஸன்:))... ஆயுள் குறைஞ்சாலும் பறவாயில்லை, இந்த வயசிலும் இவ்ளோ அழகோ என கண்ணு போட்டிட்டாலும் எனப் பயம்:)) ஹையோ மீ தேம்ஸ்ல ஒளிச்சிருந்தாலும் விடமாட்டினம் என் தியானத்தை அப்பப்ப ஆரோ கலைச்சுக் கொண்டே இருக்கினம் கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. கொரோனா காலத்தில் ஜேம்ஸ் ஊரணியோரம் தியானமா ?

      இதைக் கேட்க ஆளில்லையா ?

      நீக்கு
    4. அங்கின “நித்தியானந்தா சுவாமியைக” கூட்டி வாங்கோ கில்லர்ஜி:)).. அவரூஊஊஊ கேட்பார் ஹையோ எனக்கு இண்டைக்கு கில்லர்ஜி போஸ்ட்டால என்னமோ ஆச்சூஊஊஉ:))

      நீக்கு
    5. இதோ உடனே கைலாசத்துக்கு கால் பண்ணப் போறேன்.

      நீக்கு
    6. @ utube chef
      ==============

      ////நித்தி/ரையில் இருந்து எழும்புங்க தலவீ :) நித்தியெல்லாம் நெத்தில அடிச்சுக்கற அளவுக்கு இப்போ நிறைய பேர் வந்தாச்சு :)

      நீக்கு
    7. சைலஜாவுக்கு .. சே..சே டங்கு அடிக்கடி ஸ்லிப்பாகுதே கர்:)) கைலாசத்துக்கு கோல் போச்சுதா கில்லர்ஜி:)).. லைன் கிடைச்சா என்னையும் யூஊஉம்ம் கோல்ல கூப்பிடுங்கோ:)) நானும் கொஞ்சம் கொஸ்ஸன் கேய்க்கணும் கைலாசத்தில:))

      நீக்கு
    8. நீங்க அந்த சி..னா ச..னாவைச் சொல்லல்லியே அஞ்சு:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
    9. நித்தி கொரோனா பயத்தால் யாருடைய காலையும் அட்டெண்ட் செய்வதில்லையாம்.

      நீக்கு
    10. அப்போ கையைத் தொடுவாராமோ?:)).. ஹா ஹா ஹா ஹையோ மீ ஒரு அப்பாவீஈஈஈஈஈ என்னை விட்டிடுங்கோ:))

      நீக்கு
  6. இப்படி அதிரசாத்தால் காரியம் நடக்கும் என்று தெரிந்திருந்தால்
    அமைதி படை படத்தில் சத்யராஜ் அன்றே அல்வாவை மாத்தி இருப்பார் நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. தேம்ஸ் நதிக்கரையோரத்துக்காரர் வந்தததும் அக்கச்சேரி ஆரம்பமாகலாம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எந்தக்கச்சேரி ?

      நீக்கு
    2. அதானே எல்லோரும் அதிரா எண்டதும், கச்சானும் வறுத்து அனியன் பக்கோறாவையும் எடுத்துக் கொண்டு ரெடியாகீனம், கச்சேரி பார்க்க:)).. அதுதான் நடக்காது.. மீ இப்போ ரொம்ப அமைதியாகிட்டேனாக்கும்:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)) ஆறு வயசிலிருந்தே:))

      நீக்கு
    3. உண்மைமிலேயே எல்லாப் பதிவர்களுக்குமே மகிழ்ச்சிதான் போலும் அதிராவால் நன்றி

      நீக்கு
    4. நிஜமாவோ சொல்றீங்க... அப்பூடி எனில் மகிழ்ச்சிதான்.. நன்றி நன்றி..

      நீக்கு
    5. அப்படீனாக்கா இனி அதிராவை திட்டி பதிவு போட்டாலும் மகிழ்வார்களோ ?

      நீக்கு
    6. ம்ஹூம்ம்ம்......:)) ஏதோ இப்ப மட்டும் திட்டாம பதிவு போட்ட மாஆஆஆஆஆறியும்:))).. இனிமேல்தான் திட்டிப் போடப்போறார் மாஆஆஆஆஆஆஆஆஆஅறியும்:)) எல்லோ பேசுறார் கில்லஜி:))...

      ஹையோ வைரவா எண்ட யூ ரியூப்பையும் மறந்தெல்லோ இங்கின நிற்கிறேன்ன்..:)) தோஓ ஓடிடுறேன்ன்:)),....

      நீக்கு
    7. நான் எங்கே திட்டினேன் ? திட்டலாம்'னு நினைத்தேன்.

      நீக்கு
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  8. அதிரசப் பதிவு.
    கற்பனை வெள்ளம் ஆகப் பாய்கிறது.
    நகைச்சுவையோடு சொல்லும் வேகம் அருமை.

    எப்படி ஐயா யோசிக்கிறீர்கள்.
    நல்ல காணொளி. அடிக்கடி பதிவிடுங்கள்.
    மனசுக்கு மகிழ்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இது கற்பனை அல்ல உண்மைச் சம்பவம். பாராட்டுக்கு நன்றி.

      வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  9. உங்களுக்கு விஷயமே தெரியாதா :) அவங்க நட்புக்கு தயிர்சாதம் பிடிக்குமென்கிறதால :) தான் முனியாண்டிவிலாஸையே தயிர்சாதம் சப்லை செய்ய வச்சிருக்காங்க :) எப்புடி ஐடியா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஓ... விசயம் இப்படியா ? பேட்டி எடுத்தவருக்கு இதை சொல்லவில்லையே...

      நீக்கு
    2. ம்ஹூம்ம்ம்ம்.. இதில என் செக்:) க்குப் பெருமை வேற:)).. “பெருமைக்கு எருமை மேச்ச கதை” யாவெல்லோ இருக்கப்போகுது என் கதை:)) ஹையோ ஹையோ:))

      நீக்கு
    3. அட அடுத்த பதிவுக்கு தலைப்பை வைக்கலாம் போலயே...

      நன்றி அ.அ.அ.

      நீக்கு

    4. ///ம்ஹூம்ம்ம்ம்.. இதில என் செக்:) க்குப் பெருமை வேற:)).. “பெருமைக்கு எருமை மேச்ச கதை” யாவெல்லோ இருக்கப்போகுது என் கதை:)) ஹையோ ஹையோ:))///


      வேற யாரும் நம்மள கழுவி கழுவி ஊத்தறதுக்கு முன்னாடி நாமே குளத்துல குதிக்கிறதுதானே பெட்டர் தல்வீ :)

      நீக்கு
    5. ஆஆஆஆஆஆஆஆஆஆ என் செக்.. வந்திட்டு ஓடிட்டா.. நேக்குத்தான் கண்ணு தெரியல்ல:))..

      ஆஆஆ கில்லர்ஜி இப்போ அ அ அ ஆக்கிட்டீங்களே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  10. என் கண்ணுல //அதிரா/// பட்டுச்சு அதனால் தகவல் அனுப்பிட்டேன் .:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் அனுப்பியமைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா சத்தியமாக அஞ்சு சொல்லவில்லை எனில் என் கண்ணில பட்டே இருக்காது இது, நான் தான் சொன்னனே.. புளொக் பக்கம் பார்த்தால் களம் குதிப்பேன், இல்லை எனில் பார்க்க மாட்டேன், இந்தக் கெட்ட பழக்கத்தை மாத்தோணும்.. இனி புளொக்கையும் தூசு தட்டோணும்.. எங்களுக்கு ஹொலிடே ஆரம்பமாகப்போகுது இந்தக் கிழமையுடன்.... ஓஓஓஒ லலலாஆஆஆஆஆஆஆஅ:))

      நீக்கு
    3. ஓ.... இன்று இரவுக்குள் ஒரு பதிவு உங்களிடமிருந்து பதிவு வரும்... வரட்டும் நல்லதே...

      நீக்கு
    4. சே..சே... அவ்ளோ கெதியா வராது கில்லர்ஜி.. ஊ ரியூப் லயே நேற்றுப் போட வேண்டிய வீடியோ இன்னும் போடவில்லை.. இதில புளொக் எப்போ எழுதுவது, ஆனாலும் இனி ஆரம்பிக்கோணும் என மனதில விருப்பம் இருக்குது...

      நீக்கு
    5. அதிரா பதிவுலகம் வரவும்.
      மீண்டும் கலகலப்பாக்கவும்.

      நீக்கு
    6. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ கில்லர்ஜி:)).. ஆருடைய காதிலயாவது கேட்டுதோ அவ்ளோதேன்ன்:)) ஹையோ மேல்மருவத்தூர்ப் பழனி முருகா.. வள்ளிக்கு கன்போமா அஞ்சு பவுணில மூக்குத்தி போடுவேன் என்னைக் காப்பாத்தப்பா:))

      நீக்கு
    7. மேல்மருவத்தூர் பழனி முருகாவா ?
      அடக்கடவுளே...

      நீக்கு
  11. ஹாஹாஹா கில்லர்ஜி ஏற்கனவே அவங்க பாட்டிதான்! ஆமாம் பின்னே Archie யோட ஆச்சிதானே!!!!!! அவங்க சும்மா ஸ்வீட் 16ன்னு சொல்லிக்கிட்டு ஹிஹிஹி பாருங்க நாங்களும் நேர்ல பார்த்து பேசப் போயிருக்கோம்....

    ஹிஹிஹி துளசி இலை ரெண்டு கொடுத்து அவங்களை பேய்க்காட்ட முடியாதாக்கும்!!! அதுக்கு வேற தக்கினிக்கி இருக்கு!

    தமிழன் னதும் நெல்லையா, மதுரையான்னு யோசனை...பின்னாடி நெல்லை வந்துவிட்டார் அப்ப அது மதுரை தானே!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிராவைப்பற்றி நீங்களும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆ அதிரா புளொக் பக்கம் இல்லை எண்டதும் கீதாவும் லபக் எனக் கட்சி மாறிட்டாஆஆஆஆஆ.... ஆஆஆஆஆஆ விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்கு ஓடிப்போய் ..டீஈஈஈஈக்குளிக்கப் போறேன்ன்ன்:))

      நீக்கு
    3. ஜேம்ஸ் ஊரணிக்கு போலீஸ் காவல் போடணும்.

      அதிரா உடணடியாக ஸ்கோட்லாண்ட் டோலர் பத்து லட்சத்தை எனது ஸ்விஸ் அக்கவுண்டுக்கு அனுப்பவும்

      நீக்கு
    4. நானும் போனாப்போகுது காசா பணமா.. பத்து லட்சம்தானே அனுப்பலாம் என கையை வச்சேன், அப்போ ஸ்கொட்லாந்துப்பல்லி ஒண்டு பச்சுப்பச்செனச் சொல்லிச்சுதா:)) சாத்திரம் பார்த்தால்.. இண்டைக்கு நல்ல காரியம் எதுவும் பண்ணப்புடாதாம்:)) அதால கையை விட்டிட்டேன்ன்:)).. வெரி சோரி கில்லர்ஜி:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. பரவாயில்லை அதிரா நாளைக்கு அனுப்புங்க...

      நீக்கு
  12. கில்லர்ஜி அதிரா பேலஸ்ல அல்லவா இருக்காங்க இப்படி அதுவும் வயசான காலத்துல குடிசைல இருக்க வைச்சிட்டீங்களே!!!

    (பாக்கதான் குடிசை ஆனா அதுவும் அரண்மனை ந்னு சொல்லறீங்களோ!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு நான் ஜவாப்தாரியல்ல!

      நீக்கு
    2. அது கீத்ஸ்ஸ்ஸ்.. அதிரா அவ்ள்:ஓ அடக்கொடுக்கமான பொண்ணு:)).. அதனாலதான் பெரீஈஈஈய ஆச்சிரமத்தைக் கட்டி அதில பெரீய சாய்மனைக் கதைரையில தேம்ஸ் கரையில இருந்தாலும், குடிசையில இருக்கிறமாதிரி எல்லோரும் ஃபீல் பண்ணீனம்:)) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊஉ:))

      நீக்கு
    3. குடிசை. வடிவில் பங்களாவாக இருக்குமோ... ?

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. நன்கு கற்பனையுடன் யோசித்து மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள். பேட்டியெடுக்க போனவர்கள் கருத்துரைக்கவும் வந்து விட்டார்கள். இன்னமும் சம்பந்தபட்ட அவரைக் காணவில்லையே... அவர் வரவுக்காகக் காத்திருக்கிறேன். காணொளி இன்னமும் பார்க்கவில்லை... இதோ பார்த்து விடுகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      காணொளி காண்பமைக்கும நன்றி.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆ கமலாக்காவாவது, “எதுக்கு ஒரு சுவீட் 16 ல இருக்கிற, அழகான பொண்ணாகிய:))[ஒரு ஆசைக்குச் சொன்னா விட்டிடோணும்:))] அப்பாவி அதிராவைத் திட்டுறீங்கள் கில்லர்ஜி” எனக் கேட்பா எனப் பார்த்தால்:)).. கச்சேரி களை கட்டப் போகுது.. புறுணம் பார்க்கலாம் எண்டெல்லோ ரெடியாகிட்டா கமலாக்காவும் :)).. ஹையோ முச்சந்தி முனியாண்டிப் பிள்ளையாரே.. இதைக் கேட்க மாட்டீங்களோ!!!!!:))

      நீக்கு
    3. முச்சந்தி முனியாண்டிப் பிள்ளையாரா ?

      இது லிஸ்ட்லயே இல்லையே... ?

      நீக்கு
    4. அது என் முற்பிறப்பு நினைவுக்கு வந்துதா.. அந்த லிஸ்ட்டில இருக்குது கில்லர்ஜி:)).. சே..சே... இன்னும் நான் போஸ்ட்டுக்கே பதில் போடத்தொடங்காமல்.. சுத்தியே சுத்தியும்.. கொமெண்ட்டுக்குள்ளயே நிற்கிறேனே தென்கச்சி முருகா!!!:))

      நீக்கு
    5. உங்களது கடவுள்கள் எல்லோரும் ஸ்கோட்லாண்டு இறக்குமதியா ?

      நீக்கு
  14. ////‘’அதிரா’’

    இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெயர்ந்து கீழே விழும். /////

    ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் ஆரம்பமே அடிதடியா சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:)…. அதிரடியா இருக்கே:)… சே சே அதிரா புளொக் பக்கம் வராமல் விட்டதால ….. “பூனை தூங்கினா எலிக்குக் கொண்டாட்டமாம்” எனும் கதையாவெல்லோ இருக்குது புளொக் கதை:)… விரைவில ஒரு கம்பபாரதக் கதையுடன் களம் குதிக்கோணும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பூனை யாரு ? எலி யாரு ?

      விரைவில் கம்பு பாரத்தோடு வருவீங்களா ?

      நான் ஒரு மாதம் உகாண்டா போறேன்.

      நீக்கு
    2. உங்கட கிளவிகளுக்கெல்லாம் கில்லர்ஜி... ஹையோ திரும்படியும் டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இங்கிலீசில சொன்னால்தான் ஸ்லிப் ஆகாது:))... உங்கட கொஸ்ஸனுக்கெல்லாம் கில்லர்ஜி:)).. என்னோட செக்:) தான் கரீட்டாப் பதில் சொல்லுவா:))...

      கம்பு ரெசிப்பி விரைவில வீடியோவா வரபோகுது தெரியுமோ:))...

      அப்போ, உகண்டாவைக் கைவிட்டிட்டேன்ன்.. கொழுந்தியாவை மறந்திட்டேன் என முன்பு சொன்னதெல்லாம் பொய்ய்ய்யாஆஆஆஆஆ:)) ஓ மை எலிசுத்தி விநாயகரே என்னைக் காப்பாத்துங்கோ:))

      ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. கம்பு ரெஸிப்பி போட்டு பதிவர்களை பழி வாங்கப் போறீங்களோ ?

      உகாண்டாவை மறக்க இயலுமா ?

      நீக்கு
  15. இன்னும் போஸ்ட்டுக்கு கொமெண்ட்ஸ் போடவில்லை, கொஞ்சத்தால வாறேன்:)

    பதிலளிநீக்கு
  16. அப்பாடாஆஆஆஆ ஒருமாதிரி போஸ்ட்டுக்குள் குதிக்கப்போறேன்:))..

    அந்த அதிராம்பட்டிணம் போர்ட் போட்ட படம் கையில கிடைச்சதும்தானே இப்படி ஒரு கதையை மின்னி முழக்கலாம் என முடிவெடுத்தீங்க கில்லர்ஜி:)).. பாருங்கோ ஒருநாளைக்கு நான் அந்த ஸ்டேசனுக்குப் போய், அந்த போர்ட் பக்கத்தில நிண்டு படமெடுத்துப் போடுவேன்..{முகத்தைப் பெட்டி போட்டு மறைச்சுப்போட்டுத்தான்:)) ஹா ஹா ஹா [[நன்றி நெ.தமிழன்:)]]}... அது நீங்க பொய்க்குச் சொல்றீங்க அப்படி ஒரு ஊர் இல்லை என நினைச்சேன் கில்லர்ஜி.. உண்மையா இருக்குதே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பதிவுகளில் இதுவரை சொன்ன, சொல்லும் ஊர்கள் அனைத்தும் உண்மையே...

      விரைவில் அனுராதாபுரம், அனுபவம் அனுராதா

      நீக்கு
    2. https://tse2.mm.bing.net/th?id=OIP.UBrh9lkOxa4iDY3IYvGO2AHaE2&pid=Api&P=0&w=235&h=155

      நீக்கு
    3. நன்றி செல்கிறேன்...

      நீக்கு
  17. முதல் பந்தி படிக்கும்போது, என்னைத்தான் என நினைச்சேன்:), ஆனா ரெண்டாம் பந்தி படிக்கும் போது, சே..சே ஸ்ரெடியா இருக்கோணும், அதிராம்பட்டின என ஊர் உண்மையாக இருப்பதைப்போல, அப்படி அதிரா என ஒரு பொலீஸ் உம் இருக்கலாம் என முக்..குவாட்டர்:)) நம்பிட்டேன் ஹா ஹா ஹா...

    அதுசரி அதிராவின் அல்லக்கைகள்:)) ஹா ஹா ஹா அப்பூடி ஆரும் இருந்தால் பொயிங்கியிருப்பினமெல்லோ :)).. இதுவரையில ஆரும் பொயிங்கல்ல:)).. எல்லோரும் கட்சி மாறியெல்லோ முசுப்பாத்தி பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அன்று பங்களா
      இன்று குடிசையல்லோ...

      ஆரு வருவினம்...

      நீக்கு
  18. பாருங்கோ, எப்பவும் பொஸிடிவா திங் பண்ணோனும் என அம்மம்மா ஜொள்ளித் தந்திருக்கிறா:)).. அந்த வகையில, உங்கட எழுத்தில ஒரு நன்மை பண்ணியிருக்கிறேன்:)))..
    பாருங்கோ ஒரு சிம்பிள் கல்யாணம் எண்டாலே சீதனம் குடுகோணும், தாலி கூறை எடுக்கோணும், ஆனா அந்தச் செலவில்லாமல் மக்கள் குழந்தையுடன் எல்லோ வருகிறார்கள்:)).. அப்போ அந்தக் கல்யாணத்துக்கான பணமெல்லாம் இப்போ என் சுவிச்சு என்கவுண்டருக்கு சே சே அடிக்கடி டங்கு ஸ்லிப்பாகுதே:)) எக்கவுண்டுக்கு வந்து சேரோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).. இல்லை எனில் கில்லர்ஜி தேவகோட்டைக் காண்ட் கோர்ட்டுக்கு அழைக்கப்படுவார்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ இதுல தற்பெருமை வேறயா ? இப்ப ஏஞ்சல் வந்து உங்களுக்கு வந்து பதில் தருவார்.

      என்னை காண்ட் கோர்டுக்கு இழுத்தால் காண்டாயிருவேன் ஜொள்ளிட்டேன்.

      நீக்கு
    2. ம்ஹூம்.. என் செக் ஐ அப்படி ஓசியில உங்களுக்குப் பதில் சொல்ல விட்டிட மாட்டேனாக்கும்:)).. முதல்ல அதற்கான பணத்தை என் எக்கவுண்டுக்குப் போட்டிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்...:))...

      அப்போ கான்ட் கோர்ட் வாணாம்:)) தேவகோட்டை முச்சந்தி முனியாண்டி கோயிலுக்கு வாங்கோ அங்கு கற்பூரத்தை ஓங்கி அடிச்சு அணைச்சு .. ஒரு முடிவுக்கு வந்திடலாம்:))..

      ஹா ஹா ஹா.. இப்போ என் கொமென்ட்ஸ் படிப்போரெல்லாம் காண்டாகப்போகினமே வைரவா.. இனி 4 நாளாலதான் புளொக் பக்கம் வருவேன்.. ஓடிடுறேன்:))

      நீக்கு
    3. யாரும் காண்டாகல. 'கல கல கல'னு வாய்விட்டுச் சிரிச்சிட்டிருக்காங்க.

      நீக்கு
    4. ஆமாம் இனி இது மாதிரி பதிவுதான் போடணும் போலயே...

      நீக்கு
    5. ஆஆஆஆ அறிவுப்பசிஜி நன்றி நன்றி... ஆனால் கில்லர்ஜி சிரிக்க மாட்டாரம்.. எப்ப பார்த்தாலும் சீரியசாகவே இருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    6. இஃஹி, இஃஹி, இஃஹி

      நீக்கு
  19. ஆஹா ஆத்தங்கரையில அழகிய வீடு.. விட்டின் பெயரோ சுவீட் சிக்ஸ்ரீன் எனவும் போட்டிருக்குது:)).. இது உண்மையாக என்னுடைய தேம்ஸ்கரையும் ஆச்சிரமும்தேன்:)).. எனகுத் தெரியாமல் இப்போட்டோவை எடுத்ததுமில்லாமல்:), பப்புளிக்கில போட்டதற்காக கில்லர்ஜிக்குச் சங்கிலி வருது:)).. கழுத்துக்கில்லை கைக்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கில்லர்ஜிக்குச் சங்கிலி வருது:)).. கழுத்துக்கில்லை கைக்கு:))//

      பரவாயில்லை கைக்கு போட்டாலும் இரண்டு பவுன் வருமுல்ல... மகிழ்ச்சி.

      நீக்கு
  20. முடிவில போட்டீங்க பாருங்கோ ஒரு ஊசிக்குறிப்பு:)).. அதுதான் டாப்பூஊஊஊ ஹா ஹா ஹா.. சரி சரி மீண்டும் அடிக்கடி வரப்பார்க்கிறேன்.. எதுக்கும் முச்சந்திமுனியாண்டிக்கு நேர்த்தி வையுங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனியாண்டி கிடா வெட்டச் சொல்லுவாரே...

      நீக்கு
  21. கீதா பேட்டி எடுக்க வந்தது ஓகே:)))) ஆனா அப்பாவித்துளசி அண்ணனும் மாட்டிட்டாரே ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அப்பாவியா ? இதெல்லாம் ஓவரு...

      எனது அலைபேசியில் மறுமொழி சொல்வதால் சிறியதாகத்தான் இருக்கும் ஸோரி....

      நீக்கு
  22. படத்திலுள்ள பங்களா மிக அருமையா இருக்கு.

    வாசல் கதவே வைக்காம பங்களா.... ரொம்பவே பாதுகாப்புதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்தக் குடிசை உண்மையில் போலீஸ் செக் போஸ்ட்.

      போலீஸ் ஸ்டேஷன் என்று இருந்ததை நான்தான் மாற்றி எழுதினேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. அதிரடி அதிரா பற்றி அதிரடியாக ஒரு பதிவு போட்டதும், கருத்து மழை பொழிகிறதே! ஹாஹா..

    பதிவினை மிகவும் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி உண்மைதான் இனி அதிராவை திட்டி பதிவு போடலாம் போலயே...

      நீக்கு
    2. நோ.. நோ திட்டினால் என் ரசிகர்கள் ச்ச்ச்ச்சும்மா இருக்க மாட்டினம் ஜொள்ளிட்டேன்:))))))

      நீக்கு
    3. உங்களுக்கு ரச்சிகர்ர்ர்ர்ர்ர்ர்களும் உண்டா ?

      நீக்கு
  24. கற்பனை என்றாலும் சுவாரசியமாக இருந்தது . யார் மனதும் புண் படவில்லை

    பதிலளிநீக்கு
  25. கில்லர்ஜி என்பவரை ரெண்டு கிழமையாகக் காணம்:)).. கடசியாகப் பார்த்தபோது அரிவாளோடு அதிராம்பட்டின எல்லையில் நிண்டதாக கூகிள் ஜொள்ளுது:)))

    பதிலளிநீக்கு
  26. எனக்கு பயமா இருக்கு நண்பரே! பக்கத்துவீட்டு அடங்காப்பிடாரி..90 வயசு வரைக்கும் எனக்கு இம்சை தருவாளோ?? என்று...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஆம் நண்பரே தற்போதைய உங்களது நிலையும் இதுதானே...

      நீக்கு
  27. தலைப்பில் அதிரா என்று போட்டீங்க. அவங்களை மாதிரியே அடுத்த இடுகை வரலையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி ஓரிடத்தில், நான் வேறிடத்தில் இருப்பினும் அலைபேசியில் (மெமோவில்) பதிவுகள் எழுதி வைத்து இருக்கிறேன். அலைபேசி சற்று பழுது இதன் காரணமாக அலைபேசியில் வெளியிட இயலாநிலை.

      விசாரிப்புக்கு நன்றி தமிழரே... விரைவில் தருகிறேன் பதிவுகளை...

      நீக்கு