நான்
வேலை செய்தது Government Office வேலைக்கு போகும்போது Tie கட்டிப்
போகவேண்டும் சில நாட்களில் Got போட்டு போவேன் ஒருநாள் நான் Office போகும்போது வழியில் எனது
நண்பர்கள் இரண்டு பேரை சந்திக்க நேர்ந்தது சற்று நலகுசலம் விசாரித்து விட்டு
சென்று விட்டேன் அதில் ஒரு நண்பர் எனக்கு மிகமிக வேண்டியவன் மற்றவன்
சொல்லியிருக்கிறான், அவனிடம்...
இவனுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீயா ?
என்று காரணம் நாங்கள் எல்லோருமே ஒருகாலத்தில்
ஒன்றாக போனவர்கள் (20 வருடங்களுக்கு முன்பு
U.A.E க்கு) இன்று வரை அவர்கள் கந்தூரா என்று
சொல்லப்படும் Labor Dress தான் போட்டு இருக்கிறார்கள் காரணம் அவர்கள் இன்றுவரை அதே Company யில்தான்
வேலை செய்கிறார்கள் இதற்கு நான் என்ன செய்ய முடியும் ? விதி என்று சொல்வார்களே அதுதான். வேலை முடிந்ததும் எனக்கு பிடித்த கருப்பு நிறத்தில் Pant & T-Shirt போட்டுக் கொண்டுதான் நான் வெளியில் செல்வேன் அதே நிறத்தில்
எத்தனை உடைகள் வைத்திருக்கிறேன் என்பது எனது Room metக்கு மட்டும்தான் தெரியும் மற்றொரு நாள் நான் வெளியில்
போகும்போது என்னை குறை சொன்னவனை சந்திக்க நேர்ந்தது அவன் கேட்டான் என்னை...
நல்லாத்தானே சம்பாரிக்கிறே... ஏன் நல்ல Dress போட வேண்டியதானே ?
முதல்ல நான் எப்படி ? Dress பண்ணணும்னு சரியா சொல்லு, நல்லாயிருந்தா இவனுக்கு வந்த
வாழ்க்கையா ? னு
கேட்கிறே, நல்லாயில்லாட்டா இப்படி கேட்கிறே, நான் என்ன செய்ய ?
முடிவை நீயே சொல் என்றேன் அவனுக்கு திக்கென்றாகி
விட்டது, ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான்.
என்ன செய்வது சமூகத்தில், இந்த மாதிரி
சண்முகங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், இவன் என்ன செய்வான் ? என்மீது உள்ள கோபத்தை எப்படி காண்பிப்பது ? ஒரு 4 பேரை சந்தித்து 8 விதமாக
சொல்லி விட்டு போய் விடுவான், அந்தப் 8 பேரும் எப்படி பட்டவர்கள்
ஒரு 16 பேரை சந்தித்து 32 விதமாக சொல்லக் கூடியவர்கள், அந்த 32 பேரும்
ஒன்று கூடுதலாக போட்டு ஆயக்கலை 65 ன்னு சொல்லிட்டு போய்ட்டே...... இருப்பார்கள்,
இவர்கள்தான்
திண்ணைப்பேச்சு
வீரர்கள்
வாழ்நாளில்
கடைசிவரை இப்படித்தான் இருப்பார்கள் ஏனெனில் பேய் காலை வளைக்க முடியுமா ? மா
CHIVAS REGAL சிவசம்போ
பேய்க்கு
கால் இருக்கா... இல்லையா ?
சாம்பசிவம்
கலர்க்கலரா உடையணியும் மனிதனுக்கே
இருக்கும்போது வெள்ளை உடையணியும் வெள்ளை மனம் படைத்த பேய்க்கு இருக்காதா ? தா






