தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 26, 2017

ஞாயிறு ஒலிளிழி மழையில்....


யேங்க.. சும்மாதானே இருக்கீங்க ?
ய்யேன்... ஒன்னைத்தூக்கி வச்சுக்கிட்டு நிக்கவா ?

இல்லே.. காய்கறி வாங்கிட்டு வாங்களேன்....
வாங்கியாந்ததும், அப்பொறம் அது சொத்தை இது சொத்தைனு சொல்லுவே...

நல்லதை வாங்கியாந்தா... நான் ய்யேன் கொறை சொல்லுறேன்...
யெனக்குத்தான் தெரியாதுனு சொல்லுறேன்ல... பின்னே யெதுக்கு தொந்தரவு பண்ணுறே... ?

ஏழு கழுதெ.. வயசாச்சு ஒரு காய்கறி வாங்கியாறத் தெரியலே... யெப்பிடித்தான் ஒங்களையும் வச்சு ஆபீசுல மேக்கிறாங்கெளோ... ?
ந்நான் ஒன்னை மேக்கிற மாதிரித்தான்..

ஹூம் காலத்துக்கும் எல்லா வேலயும் நாந்தேன் செய்ய வேண்டியிருக்கு..
ஆபீஸுல ய்யேன் வேலைய நீயா செய்யிறே.. நான் செய்யலே ?

அதுக்காக, வீட்டுல இருந்தா, பொழுதன்னைக்கும் இப்பிடி டிவியப்பார்த்தா சரியாகிடுமா ?
இன்னைக்கு நாயித்துக்கெழமை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறியா ?

ஆபீசுல போயி வெட்டிக் கிழிச்சுட்டிக... ரெஸ்ட் எடுக்கிறாகளாம், ரெஸ்டு.
பேசாம, எந்திரிச்சு ஆபீஸுக்கே போயிருக்கலாம்... செக்குரிட்டி உள்ளே விடமாட்டான்.

அப்பொறென்ன போறது மாதிரி போயிட்டு செக்குரிட்டி திருப்பி விட்டானு அப்படியே... காய்கறி வாங்கிட்டு வரலாம்ல...
யோசனை மஞ்சிவாடு வண்டிதான் சகடை சப்பையாம்....

இப்பிடி பழமொழிக்கு பேசுறதுக்கு, ஒண்ணும் கொறைச்சல் இல்லே...
சரி பையை எடுத்தா... போயிட்டு வர்றேன் ஒங்கிட்டே வாயக் கொடுக்குறதுக்கு காய்கறிக்கடைகாரிகளே... தேவலே..

இந்தாங்க... பணம் போயிட்டு சீக்கிரம் வாங்க... காய்கறிக்கடையில, வாயப்பாத்துக்கிட்டு நிக்காமே, புள்ளே வந்துருவான் பசி தாங்க மாட்டான்.
அயிரமீனு வாங்கியாறேனே....

ஆமாமா... சாம்பாரு வச்சு கஞ்சி ஊத்துறதுக்கு வாய் ரொம்பத்தான் நீளுது.. இதுல அயிரமீனு வேணுமாக்கும் அயிரமீனு...
ஒம்புள்ளைக்கு புடிக்குமேனு சொன்னேன்..

சாமி பேரைச்சொல்லி பூசாரி திங்கவா ? போயி சாம்பாருக்கு வெண்டிக்கா வாங்கிட்டு வாங்க, மூளையாவது வளரட்டும்...
இனிமே மூளை வளந்து என்னத்தே... சாதிக்கப்போறே ?

நான் சொன்னது எனக்கில்லே, ஒங்களுக்குத்தான்...
இன்னைக்கு, நேத்தா நீ ய்யேன் காலைப்புடிக்கிறே....

யென்ன... சொன்னீங்க... ?
இல்லே காலை வாறுறேனு சொன்னேன்.
ம்... அது.

மனைவி மங்காத்தாள் காணாதபோது தலையில் அடித்துக் கொண்டு காய்கறி வாங்கப் போனான் கணவன் கண்ணப்பன்.


இனிய குடியரசு தினவாழ்த்துகள் - கில்லர்ஜி

44 கருத்துகள்:

 1. ஹாஹாஹா, வீட்டுக்கு வீடு வாசப்படி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வீட்டுக்கு வீடு கதவும் இருக்குமே...

   நீக்கு
 2. >>> சாமி பேரைச் சொல்லி பூசாரி திங்கவா?... <<<

  குடியரசு நாளில் அற்புதமான வரி!..

  எது எப்படியிருந்தாலும் -

  அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நேரடியாக மனைவியிடம் கேட்க பயமோ...
   குடியரசு தின வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 3. ரொம்பநல்லாஎழுதியிருக்கீங்க... பேச்சுத்தமிழை அப்படியே கொண்டுவந்திருக்கீங்க. படமும் (தொலைக்காட்சி பார்க்கறமாதிரி) நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விடயத்தை கவனித்து எழுதியமைக்கு நன்றி

   நீக்கு
 4. இதுக்குத்தான் நாங்க இரண்டு பேருமே காய்கறிக கடைக்கு போறது. பேச்சு வராது பாருங்க. 10 நாளைக்கு ஸ்டாக் வச்சிடுவோம்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஐயா இதிலிருந்து விலகிட்டீங்க....

   நீக்கு
 5. அருமை . குடியரசு தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குடியரசு தின வாழ்த்துகள்

   நீக்கு
 6. பதிவில் உள்ள நகைச்சுவையை ரசித்தேன். எனது இனிய குடியரசுதின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 7. வீட்டுக்கு வீடு.... :)

  குடியரசு தின நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா........இதெல்லாம் சகஜம்தானே..........வாழ்க்கைன்னா இப்படித்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இருந்தாலும் கழுதை'னு சொல்றது நல்லாயில்லாயே....

   நீக்கு
 9. என் வீட்டில் எல்லாமே என் மனைவிதான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா உண்மையை சொல்லி விட்டீர்கள்...

   நீக்கு
 10. ‘அங்கங்கே அகப்பை ஆறு காசுதான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பதிவை இரசித்தேன்! வாழ்த்துகள்!

  இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா.. பழமொழி நன்றாக இருக்கிறதே...

   நீக்கு
 11. ரசித்தேன் சகோ. தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 12. என் வீட்டில இப்படியெல்லாம்...இல்லீயே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது உங்களுக்கு சாத்தியமில்லை நண்பரே

   நீக்கு
 13. காய்கறி வாங்கி வந்தால் நன்றாக இருந்தால் பாராட்டுவதும், நன்றாக இல்லையென்றால் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லுவதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் அதற்காக புருசனை கழுதை என்று சொல்லலாமா ?

   நீக்கு
 14. பேச்சு வழக்கு சுவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. இனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. பூச்சி விழுந்த காலி பிளவரையும் ,அழுகின தக்காளியையும் வாங்கிட்டு போங்க ,அப்புறம் எதுக்கு காய்கறி வாங்கிட்டு வரச் சொல்லப் போறாங்க?என்ன நாலு வார்த்தை அதிகம் வந்து விழும் ,இதுக்கெல்லாம் ரோசப்பட்டா பொழப்பை ஓட்ட முடியுமா :)

  பதிலளிநீக்கு
 17. வீட்டுக்கு வீடு உதை வாங்குறதுக்குனே ஆண்டவன் கணவன் என்ற ஒரு படைப்பை படைத்திருக்கிறான்

  பதிலளிநீக்கு