வெள்ளி, செப்டம்பர் 13, 2019

தேவநாடுண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே ?
அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்குதான்டா போயிக்காரு சீக்கிரமே செஞ்சுரி அடிச்சு அடுத்த தேர்தலுக்குள்ளே டஃபுள் செஞ்சுரி அடிக்கிறதா... சபதம் எடுத்து இருக்காராம்டா...

ஏண்ணே மறுபடியும் இவரே பிரதமராக வந்தால் இந்தியாவில் இருப்பாராண்ணே ?
அடேய் அயன்பாக்ஸ் தலையா மூன்றாவது முறையும் இவரே பிரதமராயிட்டா உலகத்தில் இவர் கால் பதிக்காத நாடே இல்லைன்னு கின்னஸ் ரெக்கார்டுல வருவாருடா

சரிண்ணே உலகத்துல எல்லா நாடுமே போயிட்டு வந்துட்டாருனே வச்சுக்குவோம் அப்புறம் எங்கே போவாருண்ணே ?
அப்புறம் இந்தியா வல்லரசாகிடுமா... மற்ற கிரகங்களுக்கு ராக்கெட்டுல போயி தன்னோட காலடி தடத்தை பதிப்பாரு, செவ்வாய் கிரகத்துக்கு போயி தன்னோட செவ்வாய் தோஷத்தை கழிப்பாருடா...

சரிண்ணே இந்த தோஷத்தை கழிக்க ஐயர் வேண்டாமாண்ணே ?
அடேய் ஆண்ட்ராய்ட் தலையா ஐயர் செலக்ஷனை தேர்வு செய்ய இப்பவே ஒரு குழு தீர்மாணிச்சுட்டாங்களாம்டா...

சரிண்ணே அதற்கு அப்புறமாவது பாராளுமன்றத்துல உட்கார்ந்து வேலையை பார்ப்பாராண்ணே ?
அடேய் ரன்வேய் தலையா பாடிய வாயும் மூடாது, ஓடிய காலும் நிற்காதுனு அதிராம்பட்டணம், அதிரடி அதிரா மூதாட்டியார் கோவேறு சங்க இலக்கிய பாடல் இயற்றி இருக்காங்கடா... அப்புறம் இவரு இந்தியாவுக்குள்ளே இருக்கிற முக்கியமான ஊருக்கெல்லாம் போவாருடா...

அது என்ன முக்கியமான ஊருண்ணே ?
அடேய் நான்-ஸ்டாப் தலையா இந்தியாவுக்குள்ளே அவரு போற இடம் சொல்றேன் கேட்டுக்கோ ஒரத்தநாடு, கொடநாடு, கொங்குநாடு, வயநாடு, வளநாடு, வடநாடு, செட்டிநாடு, கந்தநாடு, குட்டைநாடு, வெள்ளலூர்நாடு, மலைநாடு, புலிக்காடு, புளியங்காடு, மாங்காடு, பழவேற்காடு, பாலக்காடு, கொழுஞ்சிகாடு, ஏற்காடு, ஆற்காடு, அரவங்காடு, ஆவாரங்காடு,  மூங்கில்காடு, காரங்காடு, சடையங்காடு, வலசைக்காடு, திருமறைக்காடு, குடிக்காடு, வேலங்காடு, திருவேற்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருஆலங்காடு, விளாங்காடு, களக்காடு, லெப்பைக்காடு, மண்டைக்காடு, வெள்ளியங்காடு, ஊத்துக்காடு, பாலமேடு, பீளமேடு, வாய்மேடு, நரிமேடு, கரிமேடு, காசிமேடு, வெங்கமேடு, சூளைமேடு, பொன்னம்பலமேடு, அப்பாச்சிமேடு, கீழச்செங்கல்மேடு, மேலச்செங்கல்மேடு, திருவிடைக்கோடு, திருச்செங்கோடு, காஸர்கோடு, கோழிக்கோடு, கோயம்பேடு, ஹளபேடு, மப்பேடு, படைவேடு, ஈரோடு, சேர்வீடு, கானாடுகாத்தான் இதுக்கெல்லாம் போவாருடா...

ஏண்ணே பிரதமர் கானாடுகாத்தான் வரை வந்தவரு ஒரு எட்டு நம்ம தேவகோட்டைக்கு வரமாட்டாராண்ணே ?
அடேய் கொப்பரைத்தலையா அதுக்குதான்டா தேவகோட்டையை தேவநாடு அப்படினு பெயர் மாற்றச்சொல்லி மனு கொடுக்கப் போறதா மக்கள் பேசிக்கிட்டாங்க...

ஏண்ணே இந்த "டு" ல அப்படி என்னண்ணே விஷேசம் ?
அடேய் அரைவேற்காடு தலையா தமிழ் மொழியில் அவருக்கு பிடித்த ஒரே எழுத்து "டு" மட்டும்தான்டா அதேபோல அவருக்கு ஆங்கிலத்துல பிடித்த ஒரே வாக்கியம் I’m going to other country அதேபோல தமிழ் சினிமாவுல இவருக்கு பிடிச்சது நம்நாடு, தாய்நாடு, தாய்வீடு, காடு, வீடு, பூம் பூம் மாடு மலையாள சினிமாவுலயே இவருக்கு பிடிச்ச ஒரே படம் ஈநாடு"தான்டா...

இவருக்கு புடிச்ச உணவு எதுண்ணே ?
அடேய் குண்டாச்சட்டி தலையா இவருக்கு பிடிச்சது ஆடு, மாடு, கருவாடு, மாவடு, நண்டு இவருக்கு சமையல்ல வெள்ளப்பூடு நிறைய சேர்கணுமான்டா..

Chivas Regal சிவசம்போ-
நல்லவேளை சுடுகாடு மட்டும்தான் வரலை...

காணொளி

107 கருத்துகள்:

 1. ஆஆஆஆஆஆஆஆஆஅ மீயேதான் 1ஸ்ட்டூஊஊஉ:)) பூஸோ கொக்கோ?:) வைட் ஹவுஸ் அதிராவாக்கும்:))

  பதிலளிநீக்கு
 2. அவ்வ்வ்வ் இது அறஜியலோ:) ஹையோ தெரியாம மீ தான் 1ஸ்ட்டூ எண்டு வேற கூவிட்டனே:)) ஹையோ ஆண்டவா கடுகுமலைக் கந்தா, புஷ்பா அங்கிள் கடையில புகை வராத கற்பூரம் ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துவேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:)).. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி அதிரா

   நீக்கு
  2. ‘அதிரா மூதாட்டியார்’னு நீங்க குறிப்பிட்டிருப்பதற்கு அதிரா பதிலடி கொடுக்கலையே? உங்க பதிவுகளை முழுசாப் படிக்காமலே பின்னூட்டம் எழுதுறாரோ?!

   நீக்கு
  3. அதிராவுக்கு முதல்வராய் வந்தால் போதும் பதிவின் சாராம்சம் அடுத்தே...

   Chivas Regalசிவசம்போ-
   இதற்கு எடப்பாடி அங்கிள் சம்மதிக்கணுமே ?

   சிவாதாமஸ்அலி-
   யோவ் நீ இதை அரசியலுக்கு கொண்டு போயிட்டே...

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அரசியல் என்றதும் மேலோட்டமாக ஓடிட்டேன்ன்ன்:) அறிவுப்பசிஜிதான் என் கண்ணைத் திறந்துவிட்டார்ர்:)...

   நில்லிங்கோ மோடி அங்கிளிடம் சொல்லி தேவகோட்டையில் ஒரு வயோதிப ஆச்சிரமம் அமைக்கச் சொல்லப்போறேன்ன்ன் கில்லர்ஜிக்காக:)... நோ ஏசி நோ ரீவி:)

   நீக்கு
  5. கோவேறு கழுதை தெரியும் அதென்ன சங்கம்?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  6. எனக்கு அழகான வீடு இருக்கிறது பிறகு எதற்கு ஆச்சி'ரமா'ம் ?

   சங்கத்தில் எதற்கு கழுதையை இழுக்கின்றீர்கள் ?

   நீக்கு
  7. ///பதிவை அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி அதிரா///
   பாருங்கோ மீ ஒரு அப்பாவி:)... நீங்க வேணுமென்றே இப்படி எழுதியிருக்கிறீங்க ஆனா , எனக்கது புரியல்லியே... அட கொமென்ஸ் போடாட்டிலும் நம்மை நல்லவிதமா சொல்றாரே கில்லர்ஜி எனப் பெருமைப்பட்டேன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)... அறிவுப்பசிஜி சொல்லாட்டில் இது எதுவும் தெரியாமலே போயிருக்கும் எனக்கு:)....

   ஆனா விடமாட்டேன் கில்லர்ஜி சுவிமிங் கிளாஸ் போய் நீந்தப் பழகுங்கோ:)... விரைவில உங்கட ஜேம்ஸ் ஊரணியைப் பார்க்கப் போறீங்க உள்ளே போய்ய்ய்ய் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  8. பதிவை படிக்காமல்தான் கருத்துரை இட்டீர்களா ?

   ஹலோ தேவகோட்டையில் ஒன்றரை வயதிலேயே நீச்சல் பழகியவன் நான்.

   நீக்கு
  9. அரசியல் பதிவு எனில் , உண்மையில் படிக்க மாட்டேன்ன் மேலோட்டம்தான்:)

   நீக்கு
  10. அரசியல் தெரியாத நீங்க எப்படி வெள்ளை மாளிகையில், ட்ரம் செட் அங்கிளோடு செக்கு உருட்டுறீங்க ?

   நீக்கு
  11. அது தேவையானதை ட்றம்ப் அங்கிள் படிக்கச் சொல்லுவாராக்கும்... நான் அவரின் பேசனல் செக் ஆக இருப்பது உங்களுக்குப் பொறாஆஆஆஆமை:) கர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  12. அவர் கூடவே இருந்து கொண்டு ஆமை என்பதால்தான் அவரு பதவி பறிபோவதற்கு அடிப்படை காரணம் என்று ஊருக்குள்ளே நாலு பேரு பேசிக்கிட்டாங்க...

   நீக்கு
 3. என்னது மோடி மோசடி பண்ணி ஜெயிச்சாரா? நானெல்லாம் அவர் ஆட்சியில் நல்லது செய்யப் போயி ஜெயிச்சிருக்காரு என்று நினைத்து இருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரே மோடி மோசடி செய்தார் என்று நான் எப்போ இப்படி சொன்னேன் ?

   எனக்கும், அவருக்கும் கோல்மூட்டி விடுவதே உங்களுக்கு வேலையாப் போச்சு.

   நீக்கு
 4. முக்கியமான ஊர்களின் லிஸ்ட் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  எனக்கும் அரசியல் புரியாது.. ஆயினும்
  எல்லா ஊர்களின் பெயர்களையும் தேர்வு செய்து பதிவிட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி உள்ளது. காலை நேரமாகையால்"டு"க்களை பாதி படித்து உள் வாங்கியிருக்கிறேன். இப்போதைக்கு அதனுடன் "டூ" விட்டு விட்டு மதியம் வந்து மிகுதியையும் படிக்கிறேன். ஹா.ஹா.ஹா.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மீண்'டு'ம் வந்து, டூ'வை மறந்து விட்'டு' டு'வுடன் இணைந்து கொள்ளவும்.

   நீக்கு
 6. நினைவூட்டல்.....

  தேவக்கோட்டை பற்றிய குறிப்புரையில்..... ‘அனைத்து மதங்களையும் மக்களும்’ என்பதில் ‘சார்ந்த’ என்ற சொல் விடுபட்டிருக்கு...‘மதங்களையும் சார்ந்த மக்கள்’ என்று இருக்கணும் இல்லையா?

  பொருள் புரியுது. திருத்தம் கட்டாயமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே இது விக்கிபீடியாவில் உள்ளது அவர்களின் தவறு.

   அதை நாம் திருத்தம் செய்வது தவறு ஆகவே அப்படியே விட்டு விட்டேன்.

   நான் சட்டத்தை மதிப்பவன்.

   நீக்கு
  2. ஹ...ஹ...ஹ! சரி நண்பரே.

   எனக்கென்னவோ ப.ஜ.க. ‘அதிரடி’த் தொண்டர் படையை நினைச்சா பயமா இருக்கு. கொஞ்ச நாள் நாமக்கல் வந்துடுங்களேன்.

   நீக்கு
  3. தங்களைப் பார்ப்பதற்காக வரச்சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது.

   தேவ'கோட்டை'க்குள் இருக்கும் எம்மிடம் எந்த பா.ஜே.தே.அ.தோ.து.கோ.மெ.எம்.பி.சே.சீக்காரர்கள் நெருங்கினால் ? நொறுங்கி விடுவார்கள்.

   நீக்கு
  4. உங்களைச் சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. வாய்ப்பு அமையும்போது அவசியம் வர்ணும். செல்பேசி எண் அனுப்பியிருக்கிறேன்.

   நீக்கு
  5. நல்லது அத்தியின் அருளால் நிச்சயம் ஒருநாள் இது நிகழட்டும்.

   நீக்கு
 7. நாடு பட்டியல் பெரிதாக இருக்கிறதே.... :) ரசித்தேன்.

  காணொளி மேற்கு வங்கத்தில் எடுத்ததாக தேர்தல் சமயத்தில் நிறைய சுற்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதில் வெளிநாடு இல்லையே செலவு குறைவுதானே பிரதமரால் நமது கடன் மேலும் உயராது மகிழ்ச்சியானதே...

   நீக்கு
 8. ஒரே நாடு... ஒரேடியா மூடு...!

  முடிவில் உள்ள டு வந்தவுடன், அனைத்து டு-வும் முடிந்து விடும்...

  பதிலளிநீக்கு
 9. எப்படியோ சந்தடி சாக்கில் தேவகோட்டையை மாநகராட்சி ஆக்கிட்டேன்...
  எப்படி என் சாமார்த்தியம்?...

  அண்ணே.. நீங்க பலே கில்லாடி..ண்ணே...
  அப்படியே தேவ கோட்டைய தனி சாம்ராச்சியமா ஆக்கிட்டீங்கன்னா..
  நீங்க தான் ராஜா... நாந்தான் மந்திரி!...

  அடேய்.. நண்டுத் தலையா!... நீ மந்திரி ஆகிடக் கூடாது..ங்கறதுக்குத் தானேடா
  நான் தேவகோட்டய தனி நாடா ஆக்கலை!...

  ஒங்களுக்குத் தான் நல்லவங்களக் கண்டா புடிக்காதே...

  என்னாது?... நல்லவனா!... எடுறா கல்லை!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. வாங்க ஜி
   இப்படியா கூட்டத்துல கட்டிச்சோத்து பொட்டணத்தை அவுத்து விடுறது...

   மாநகராட்சியை ரசிக்காமல் இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே...

   நீக்கு
 10. கவுண்டமணி, செந்தில் பேசுவது போல் இருக்கிறது.

  நான் இருந்த ஊர் திருவெண்காடு நான் இருந்த தெரு நரிமேடு எல்லாம் வருது உங்கள் ஊர் பட்டியலில்

  காணொளி பார்த்தேன் அவர்கள் கை பிடித்து ஓட்டு போடுகிறார்களா? என்னமோ நடக்குது நாட்டில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றி.
   திருவெண்காடு ஊர்ப்பெயர் உங்களால்தான் பதிவில் சொல்லியதை அறிந்து எழுதினேன்.

   நீக்கு
 11. சமையல்ல வெள்ளைப்பூடு...வெள்ளைப்பூண்டு அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே சில பகுதிகளில் வெள்ளைப்பூடு என்றும் சொல்கிறார்கள்.

   நீக்கு
 12. ஜீ நீங்க என்ன சொன்னாலும், தாமரை இங்கு மலர்ந்தே தீரும். அடுத்த கவர்னர் வேலை வேணுமா சொல்லுங்க...

  அவரென்ன சும்மா ஊர் சுத்தராருன்னு நினைச்சீங்களா, இந்த 6 வருசத்துல எவ்வளவு அன்னிய முதலீட்டை இங்க கொண்டு வந்திருக்காரு!! பொருளாதாரம் எங்கையோ போயிட்டு இருக்கு..சரித்திர நாயகன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   நான் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவன் சந்திரனில் ராக்கெட் இறக்கி வல்லரசு நாடு என்பதைவிட, பசியால் எந்தவொரு மனித ஜீவராசிகளும் மரணிக்காத நாடு என்பதை ஒவ்வொரு ஆட்சியாளர்களும் லட்சியமாக கொள்ளவேண்டும்.

   மக்களிடம் உயர்வான எண்ணங்கள் வராதவரை இந்நாடு மட்டுமல்ல எந்நாடும் முன்னேறாது.

   இலவசம் பெறுவதை நஞ்சாக மக்கள் உணர்தல் வேண்டும், மக்கள் ஓட்டின் விலையை உயர்த்தினார்கள், ஆட்சியாளர்கள் விலைவாசிகளை உயர்த்துகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் இனி எவன் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் வாழ்வில் ஏற்றமில்லை.

   இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகள் மில்லியன் கணக்கில் கொள்ளையடிப்பார்கள்.

   "வாக்கு" விற்கப்பட்டதால் மக்களுக்கு கேள்வி கேட்க "வக்கு" இருக்காது.

   நீக்கு
  2. வாங்க அருள்மொழிவர்மன் ஐயா... வணக்கம்...

   இதை சொல்வதற்கு தங்களுக்கு வக்கு இருக்கிறதா ஐயா...?

   நன்றி...

   நீக்கு
 13. எல்லாம் சரி, ஆனால் மோதி சுத்த சைவம் என்பதை மறந்துட்டீங்க போல. விரத காலம் வேறே இப்போ. பூண்டெல்லாம் குஜராத்தி சமையலில் அதிகம் பார்க்க முடியாது. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... அப்படியா ? நான் பழைய கணக்குப்படியே நினைத்து விட்டேன்.

   நீக்கு
  2. என்ன ஜி... அவருக்கு பூண்டோடு மனித கறி பிடிக்கும் என்பது தெரியாதா...? ஆதாரம் வேண்டுமா...?

   குஜராத் குறித்த காணொளி இருக்கு ஜி... பழைய கணக்கு அல்ல, அனைவரும் அறிய வேண்டிய பேடியின் கணக்கு...!

   நீக்கு
  3. பூண்டோடு பிடிக்குமா... இல்லை கூண்டோடு பிடிக்குமா ?

   நீக்கு
 14. சந்திரனில் ராக்கெட் இறக்குவதும் நாட்டின் தேவைக்கே. இந்த சாடிலைட் விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிச்சவங்க எல்லாம் புயல் அறிவிப்பை சாடிலைட் மூலம் துல்லியமாய்ப் பெறுவதைப் பார்க்கலை போல. அதே போல் சந்திரனில் ராக்கெட் இறக்குவதற்கும் காரணம் உண்டு. மக்கள் பசி, பட்டினியோடு தெருவோரங்களில் உறங்குவதும் பிச்சை எடுப்பதும் உலகம் முழுசும் இருக்கு. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடி மட்ட மக்களின் வாழ்வை நினைத்துப் பார்க்காத அன்றைய மன்னர்களோ... இன்றைய ஆட்சியாளர்களோ... அவர்கள் தகுதியற்றவர்களே...

   தன் நாட்டில் பிச்சை எடுப்பதால் தனக்கும் அவமானம் என்று கருதுபவனே உண்மையான குடிமகன்.

   இன்றும் அரபு நாட்டில் பிச்சை தடை செய்யப்பட்டுள்ளது. அதைக்கண்டால் சாதாரண குடிமகன் போலீஸை அழைத்து ஒப்படைத்து விட்டு செல்கிறான்.

   நாடு முன்னேறுவது ஆட்சியாளர்கள் கையில் அல்ல நல்ல பிள்ளைகளாக வளர்க்கும் பெற்றோர், ஆசிரியர் கையில் உள்ளது.

   இதை இன்று நாம் அனைவரும் உணர்ந்தால் ???

   அடுத்த முப்பது ஆண்டில் இந்தியா கண்ணியமான நாடாகும்.

   நீக்கு
  2. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியிலோ என்னவோ நினைவில் இல்லை. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வெற்றி பெறவில்லை.

   இந்த சாடிலைட் போன்ற உபகரணங்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்காகவும் முக்கியமாய் விவசாயிகள், இம்மாதிரி வீடற்ற மக்களைப் பாதுகாக்கவும் தான். வெள்ள அபாய காலங்களில் அரசு முன்கூட்டி எச்சரிக்கவேண்டும் என்று சொல்வதும் நாம் தான். அதற்காகத் தான் இத்தகைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

   நீக்கு
  3. உண்மைதான் மறுவாழ்வு மையங்கள் வெற்றி பெறவில்லை. அதை இன்றைய அரசாவது மறு பரிசீலணை செய்யலாம்.

   இந்தியா மற்ற நாடுகளோடு விஞ்ஞானத்தில் போட்டி போடுவது பெருமையே...

   இருப்பினும் அடித்தட்டு மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை விவசாயம் இல்லையெனில் நாளைய உணவு எப்படி ?

   ஒன்றை நினைவில் கொள்க! நான் பிரதமருக்கு எதிரி அல்ல!

   வெளியில் சொல்லக்கூடாது என்றாலும் சூழ்நிலை அப்படி ஆகவே உங்களைப் போன்றவர்களுக்காக சொல்கிறேன் எனக்கு சுற்றி வளைத்து அவர் அண்ணன் முறையே... மோடிஜி, கில்லர்ஜி விளக்கம் போதுமா ?

   நீக்கு
  4. என்ன ஜி, இப்படி சொல்லிட்டீங்க...

   அடித்தட்டு இந்திய மக்களாவது, இந்திய விவசாயியாவது... சில்லறை பசங்க...

   சேட்டிலைட் தான் முக்கியம்...

   அம்பேரிக்காவுக்கு நாம போறோம்... அவன் கொடுக்கிற பிச்சை காசை எடுத்து வாழ்றோம்... சரியா...?

   மரங்களை எல்லாம் வெட்டி, 24 வழி சாலை திட்டத்தை மேம்படுத்தி, சேட்டிலைட் ஆய்வுகள் செய்றோம்... இதுக்காவது ஒத்து வாங்க ஜி...

   நீக்கு
  5. வாங்க ஜி
   சேட்டிலைட் மனிதனின் பசியை அடக்குமா ?
   இல்லை மனிதனை அடக்கமாக்குமா ?

   நீக்கு
  6. விவசாயம் குறித்தும் விவசாயிகள் குறித்தும் அதிகம் அறிந்திருக்கிறேன். அவற்றை எழுதினால் அநாவசியமான மன வருத்தங்களே ஏற்படும். என்றாலும் சமீபத்தில் அதாவது ஜூலை மாதம் எங்க கிராமம் சென்றபோது திருவாரூரில் இருந்து வந்திருந்த சில சாமானிய மக்கள் விவசாயம் குறித்தும் விவசாயிகள் குறித்தும் சொல்லுவதைக் கேட்டபோது இப்போதைக்குக் கட்டுமான வேலைகளில் மட்டும் தலை நுழைத்திருக்கும் வடநாட்டார் விவசாயத்திலும் நுழைய அதிக நாள் ஆகாது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. ஏற்கெனவே ராமேஸ்வரம் --ராமநாதபுரம் பகுதியில் சில பஞ்சாபி சர்தார்கள் விவசாயத்தில் ஈடுபட்டு முன்னேற்றம் கண்டிருப்பது பல செய்திகளிலும் வந்துள்ளது. நம் விவசாயிகள் பற்றி நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே சொல்வதைக் கேட்கும்போது ரொம்பவெ அவமானமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

   நீக்கு
  7. சாடிலைட் பற்றி மட்டும் பேசுகிறோம். மற்ற நவீன உபகரணங்கள் எதுவும் மனிதனின் பசியை ஆற்றிவிடுமா? அல்லது இவற்றை மனிதன் உபயோகித்தால் விவசாயம் மேம்படுமா? விவசாயத்தை மேம்படுத்த சாடிலைட் மூலம் விவசாய விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதைக் குறித்து அறிந்திருக்கிறீர்களா? மேலும் விவசாயம் மட்டுமே செய்தால் நாட்டின் வளம் நிறைவு பெற்று விடுமா? மற்றத் தொழில்கள் எதுவும் வேண்டாமா? சாடிலைட் விட்டால் உடனே விவசாயத்தைக் கவனிக்கலை என்று சொல்வது சரியாகுமா? கொஞ்சம் யோசிங்க!

   நீக்கு
  8. மோதி அரசு மட்டுமில்லாமல் இதையே முந்தைய அரசும் செய்தது. பார்க்கப் போனால் கெயில்,பெட்ரோலியம் எடுப்பது, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்றவை எல்லாமே காங்கிரஸ் ஆட்சியில் இப்போதைய தலைவர் அப்போதைய துணை முதல்வர் காலத்தில் அவர்கள் கையொப்பத்துடன் துவங்கப்பட்டதே! ஆனால் இப்போது இந்த அரசு தான் இதைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இதற்கு அரசு ஆணைகள் உள்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. என்றாலும் இப்போதைய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதால் போராட்டம் நடத்துகின்றனர் ஹிந்தி எதிர்ப்பும் அப்படித் தான். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் ஹிந்தி வழி பாடம் கற்பிக்கும் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவர்கள் குடும்பக் குழந்தைகள் ஹிந்தி கற்றுக் கொண்டு அரசியலில் ஈடுபடுகின்றனர். சமீபத்திய வேலோர்த் தேர்தலே இதற்கு சாட்சி. ஆனால் சாமானிய மக்கள் மட்டும் ஹிந்தி கற்கக் கூடாதாம்.

   நீக்கு
  9. ஜெர்மன் நாட்டின் ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராமமும் இத்தகைய பெருவழிச்சாலைகள் மூலம் பெரிய நகரங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கிராமத்தை விட்டு யாரும் நகருக்குள் வந்து வாழ வருவதில்லை என்பதோடு கிராமத்துப் பொருட்களும் மிகவும் எளிதாக கிராமங்களை விட்டுப் பெரிய நகரங்களுக்கு விற்பனைக்கு உற்பத்தியாளரே எடுத்துச் செல்ல முடிகிறது. நகரங்களில் கூட்டம் இல்லை. கிராமங்களை விட்டு மக்கள் நகரத்திற்கு இடம் பெயர்வதும் இல்லை. அன்றாடம் நகருக்கு வேலைக்குச் செல்பவர்கள் கூடத் தங்கள் கிராமத்துச் சொந்த வீட்டில் இருந்து கொண்டே அன்றாடம் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் சென்று திரும்புகிறார்கள். நகரில் உள்ள சௌகரியங்களை எல்லாம் கிராமங்களில் செய்து கொள்கின்றனர்.

   நீக்கு
  10. விவசாயம் செய்வதற்குத் தேவையான நீராதாரங்களை மோதி வந்து தான் அழித்தார். அதனால் தான் விவசாயம் செய்ய முடியலை! சரியா கில்லர்ஜி? :))))))))) ஆனால் ஜூலை மாதம் ஊர்ப்பக்கம் போனப்போ எல்லா இடங்களிலும் வயல்களில் 2 ஆம் போகம் நடவும் சில இடங்களில் முதல் போகம் அறுவடையும் நடந்து கொண்டிருந்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். அப்போது மழை இத்தனை பெய்து மேட்டூர் அணை நிரம்பவெல்லாம் இல்லை. எல்லாம் பம்ப்செட் மூலம் தான் விவசாயம். மாயவரம் தாண்டியும் ஓரிரு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதான் உண்மை. யதார்த்தம். விவசாயியின் வாழ்வாதாரமான நீர் வழித்தடங்களை அழித்த நமக்கு விவசாயிக்கு அரசு ஏதும் செய்யவில்லை என்று பேசும் தகுதியே இல்லை. நீராதாரங்கள் ஒழுங்காக இருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக விவசாயம் நடக்கும். சொல்லப் போனால் இத்தனை அழிவுக்குப் பின்னரும் இன்னமும் அந்தப் பக்கங்களில் பசுமை, பச்சை, மூங்கில் கொத்துக்கள், தென்னை மரங்கள் எனப் பார்க்க முடிகிறதே என சந்தோஷம் வருது.

   நீக்கு
  11. பகுதி-1
   விவசாயிகளைக் குறித்து தாங்கள் சொன்னவை உண்மையே... நம்மவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை, மேலும் இழிவாக கருதுகின்றனர்.

   ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாபிகள் விவசாயத்தில் நுழைந்து விட்டதை படித்து இருக்கிறேன்.

   நீக்கு
  12. பகுதி-2
   விஞ்ஞானத்தின் பங்கு நாட்டிற்கு அவசியமே... அடித்தட்டு மக்களுக்கு அரிரி விலை குறைப்புக்கான முயற்சியை எந்த அரசாவது எடுக்கிறதா ?

   பெட்ரோல் விலை எல்லா நாடுகளைவிட இங்குதான் அதிக விலை ஏன் ?

   நீக்கு
  13. பகுதி-3
   //மோதி அரசு மட்டுமில்லாமல் இதையே முந்தைய அரசும் செய்தது//

   பாருங்கள் நீங்களும் அரசியல்வாதிகள் போலவே பேசுகிறீர்கள். முந்தைய அரசுக்கு நான் ஆதரவாளன் அல்ல! இன்னும் சொல்லப்போனால் வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.

   அவர்கள் கிடக்கட்டும் பழையவர்களை குற்றம் சொல்லாமல் நாம் என்ன மாற்றம் கொண்டு வந்தோம் ?

   ஹிந்தி இது நமது திமுக காரர்களின் நெடுங்கால விளையாட்டு இதை திமுகவின் அடிப்படை தொண்டன் கடைசிவரை உணரவே மாட்டான். இதோ உதயநிதி வரவு.

   நீக்கு
  14. பகுதி-4
   மோடியின் சுற்றுலாவுக்கான காரணத்துக்கு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் ரசித்தேன்.

   இந்தியாவில் விவசாயிகள் நிர்வாண போராட்டம் செய்தபோது இதே பிரதமர் ஃப்ரான்ஸில் நடிகை மல்லிகா ஷெராவத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தேவகோட்டையர்கள் மறக்க மாட்டார்கள்.

   நீக்கு
  15. பகுதி-5
   நான் ஊடக செய்திகளை முழுமையாக நம்புவதில்லை. நமது விவசாயிகள் நோகாமல் நுங்கு திங்க ஆசைப்படுபவர்களே...

   விவசாயக்கடன்களை அரசு ரத்து செய்தால் வேண்டாமென்று சொல்வதற்கு நமது நாட்டில் யாருமே இல்லை.

   இதேபோல் ஸ்விஸில் அரசு மக்களுக்கு இலவசமாக பணம் தரும் திட்டத்தை கொண்டு வருவதற்கு மக்களே தடுத்தனர்.

   இங்கு மக்கள் நல்லவர்கள் இல்லை இங்கிருந்து போனவர்களே அரசியல்வாதிகள் ஆகவே அவர்களும் இப்படித்தான்.

   குறிப்பு-நான் செல்வழி மறுமொழி தருகிறேன் ஆகவே சிறிய அளவே இயல்கிறது.

   மேலும்...
   சரியான கேள்வி பகுதிக்கு கீழே பதில் தரவும் இயலவில்லை காரணம் தாங்கள் கருத்துரைப்பெட்டியில் கொடுத்து இருந்தால் சரியாக வந்து இருக்கும் பதிலளி பகுதியில் கொடுப்பதால் இப்படி அமைந்து விட்டது.

   எப்படியோ நம்மை உச்சிப்பிள்ளையார் காப்பார் என்று நம்புவோமாக!

   நீக்கு
 15. மோதியின் ஆட்சியில் இலவசங்கள் கொடுப்பதாகச் சொன்னதாய்த் தெரியவில்லை. இலவசங்கள் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம். அடுத்து ஆந்திராவில் கொஞ்சம் தலை காட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நமது பிரதமர் இலவசமாக இந்தியா முழுவதும் கல்வியை மட்டுமாவது கொடுக்க முடியாதா ?

   நீக்கு
  2. இப்போவும் இல்லை என நீங்கள் நினைப்பது மிகத் தவறு. எல்லா மாநில அரசுப் பள்ளிகள் தவிர்த்து நவோதயா பள்ளிகள் ஏற்படுத்தப்பட்ட காரணம் என்னவென நினைக்கிறீர்கள்? அங்கே எல்லாம் இலவசம் தான். தங்கும் இடம் உட்பட. ஆனால் தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்கள் அண்டை மாநிலமான பாண்டிச்சேரி உட்பட அந்தப் பள்ளியின் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஹிந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தடுக்கின்றனர். ஆனால் அதே தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் அதிகப் பணம் கொடுத்து அதே ஹிந்தியைக் கற்பிக்கின்றனர். இத்தகைய முரண்பாட்டை இங்கே தான் பார்க்கலாம். இதுக்கெல்லாம் மோதி வந்து எதுவும் செய்ய முடியாது. இன்னொரு விஷயம். இந்த நவோதயா பள்ளிகள் மோதி பிரதமராக வந்த பின்னர் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டின் கடைசிக்குடிமகன் வரை இந்தப் பாடதிட்டங்கள் மூலம் நன்மை பெற வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். அப்போதிலிருந்தே இதைத் தமிழ்நாட்டில் நுழையவிட்டால் தங்களுக்கு நஷ்டம் என்பதை உணர்ந்தே இங்குள்ளவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

   நீக்கு
  3. தமிழக மக்கள் நதியாவை புரிந்து கொண்ட அளவு, நவோதயாவை புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மையே...

   //தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் அதிகப் பணம் கொடுத்து அதே ஹிந்தியைக் கற்பிக்கின்றனர். இத்தகைய முரண்பாட்டை இங்கே தான் பார்க்கலாம்//

   ஆம் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். இதோ இந்நொடி (உறவினர் வீட்டிலிருந்தே செல்வழி உங்களுக்கு மறுமொழி தருகிறேன்) என்னைச்சுற்றி ஹிந்தி டியூசன் எடுக்கும் குழந்தைகள் இதில் பலருக்கும் தமிழ் தெரியாதாம்.

   ஹிந்தி வேண்டும் என்பதே கில்லர்ஜியின் எண்ணங்கள் ஆனால் அவையால் தமிழ் ஓரங்கட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறேன் அது துணை மொழியாக இருக்கட்டும் பிரச்சனையில்லை.

   ஹிந்தி வேண்டுமென்பதை வலியுறுத்தி "ஹிந்தமிழ்" என்றொரு பதிவு எழுதி இருக்கிறேன்.

   நீக்கு
  4. ஜி... இன்றைய இந்தியாவை அழிக்க வந்த 'பேடி'யின் ஒரு சாக்கடை 'ஜண்டா'வின் தகவல் அறிந்திருப்பீர்கள்...

   இரு ஜந்துகளுக்கும் என்ன தீர்வு...?

   அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...

   நீக்கு
  5. அரசியல்வாதிகள் ராஜவாழ்க்கை வாழட்டும், ஆனால் அடிமட்ட மக்களின் வாழ்வை நசுக்கி வாழாமல் இருந்தால் போதும்.

   நீக்கு
  6. தமிழினத் தலைவர் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

   நீக்கு
 16. வணக்கம் ஜி !

  கவுண்டமணி செந்தில் நகைச்சுவை போல இருந்தது அருமை
  ஆமா இன்னுமா அந்த டு இந்தியாவில பேமஸ் ஆகல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே... நலமா ?
   தேவநாடு'தானே... இதோ விரைவில்...

   நீக்கு
 17. இந்த பதிவின் சுட்டி எனக்கு ஃபீட்லி வழியாகவும் வரவில்லையே! உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதே வார்த்தையை ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னை சொல்லி இருக்கின்றீர்கள் நன்றி ஐயா.

   நீக்கு
  2. அப்படியா? எனக்கு மறதி அதிகமாகிவிட்டது..:((

   நீக்கு
  3. எனக்கு ஞாபகத்தின் சேமிப்பே எனது வியாதி.
   மீள் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 18. இன்னைக்கு மொபைல் காலண்டர்ல காட்டுது ஜி...

  Hindi divas - இந்தி திவசம்

  திவசம் பண்ணிடவேண்டியதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா ? நன்று, நன்றி.

   நீக்கு
  2. ஹிந்தி திவஸ்= என்றால் அதற்குத் திதி கொடுப்பதாக அர்த்தம் இல்லை. உண்மையான பொருள் புரியாமல் எதையும் சொல்லக் கூடாது. திவஸ் என்றால் நாள் என்றே பெயர். அல்லது தினம் என்றும் சொல்லலாம், மற்றபடி டிடி சொல்லும் திவசம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு உள்ள பொருள் இங்கே சற்றும் பொருந்தாது. ராஷ்ட்ரிய திவஸ், மஹிளாவோ கி திவஸ், பச்சோன் கி திவஸ் என்றெல்லாம் வரும். வாலன்டின்ஸ் டே என்பது ப்ரேமிகோ கி திவஸ் என்பார்கள். இதனால் எல்லாம் அவர்களுக்கு ஸ்ராத்தம் என்னும் பொருள் வந்து விடாது. தமிழில் ஒரு சொல்லுக்கு உரிய பொருள் அதே வார்த்தை வடமொழியில் வரும்போது முற்றிலும் மாறும். கம்பீரம் என்றால் தமிழில் ஒரு பொருள். அதே வடமொழி அல்லது ஹிந்தியில் வேறு பொருள்.

   நீக்கு
  3. ஆனால் எனக்குத் தெரிந்து ஹிந்தியை வெறுப்பவர்கள் அவங்க உணவை வெறுப்பதில்லை; உடையை வெறுப்பதில்லை. ஒருத்தருக்கொருத்தர் அழைக்கையில் "ஜி" போட்டு அழைப்பதை வெறுப்பதில்லை. இதெல்லாம் வடநாட்டு வழக்கம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் இல்லை.

   நீக்கு
  4. ரயில்வே துறையில் ஆள் எடுப்பதோடு தேர்வு மொழி தமிழிலும் உண்டு. ஆனால் நம் மக்களுக்கு அதைக் குறித்த விழிப்புணர்வே இல்லை. ரயில்வே தேர்வே எழுதுவதில்லை! விளைவு! வடநாட்டார் ஆக்கிரமிப்பு! அதைக் கண்டு மட்டும் நமக்குக் கோபம் வந்தால் போதுமா? மத்திய அரசு வேலைகள் என்றால் ஹிந்தி தெரிஞ்சிருக்கணும் என்று ஒரு சிலர் சொல்லுவதைக் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இந்தத் தேர்வுகள் எதுவுமே இளைஞர்கள் பங்கு பெறாமல் போகின்றன. அதே போல் எலைசித் தேர்வுகள், இன்ஷூரன்ஸ் வேலை சம்பந்தப்பட்ட தேர்வுகள். இவற்றில் எல்லாம் பங்கு பெற அந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்கணும். அதைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் இத்தகைய தேர்வுகளில் பங்கு பெறுவதே இல்லை.

   நீக்கு
  5. //ஆனால் எனக்குத் தெரிந்து ஹிந்தியை வெறுப்பவர்கள் அவங்க உணவை வெறுப்பதில்லை; உடையை வெறுப்பதில்லை//

   அருமையாக சொன்னீர்கள் இன்னும் சொல்லப்போனால் நமது கலாச்சாரத்தை மறைத்து விட்டு அவர்களின் கலாச்சாரமே முன்னிலை வகிக்கிறது.

   மருதாணி ஒழிந்து மெகந்தி.

   //அழைக்கையில் "ஜி" போட்டு அழைப்பதை வெறுப்பதில்லை//

   அதானே... ? (ஹி.. ஹி.. நல்லவேளை என்னை சொல்லவில்லை)

   நீக்கு
  6. இரயில்வே குறித்து சொன்னவை உண்மை.

   நம்மவர்கள் "தலடா" "தளபதிடா" என்று மோதிக்கொள்வதிலேயே காலம் ஓடி விடுகிறது.

   பிறகு அவர்கள் மகன் நடிக்க வருவான், அவர்கள் மகன் கோஷம் போடுவான். இதை பயன்படுத்தி பிற மாநிலத்தவர்கள் நுழைந்து விட்டார்கள் நாளை ஆட்சியையும் பிடிப்பார்கள்.

   நீக்கு
  7. இப்போவும் பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அந்த அந்த மாநில மொழியிலேயே எழுதலாம். இதை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விக்கு உரியது! இதிலும் ஏதானும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

   நீக்கு
 19. தேவக்கோட்டையை தேவநாடு என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற தங்களது உள்ளக்கிடக்கையை ஒருவழியாக இந்த பதிவு மூலம் தெரிவித்துவிட்டீர்கள். உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துகள்! பதிவில் இழைந்தோடிய நகைச்சுவையை இரசித்தேன். பாராட்டுகள்!

  காணோளி சிலர் வெற்றி பெற்ற இரகசியத்தை சொல்லிவிட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் பதிவை மிகவும் ரசித்து கருத்துரை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 20. அருமையான பதிவு
  நாமும் ஒரு நாள் தேவகோட்டை வருவோம்.

  பதிலளிநீக்கு
 21. படிக்க மறக்காதீர்கள்
  நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
  http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டை இலங்கை வேந்தரை அன்புடன் வரவேற்கிறது. இராமேஸ்வரத்திலிருந்து 150 KM.

   திருக்குறள் காண வந்தேன் நண்பரே

   நீக்கு
 22. நன்றி நண்பர் : நஞ்சித்குமார் பத்மாமகன்

  நான் பொறியியல் படித்தது முதல் இன்று வரை 7 வருடம் வட மாநிலத்தவர் தான் (ஹிந்திகாரர்கள் என்பதே தவறு) Ground Level Peoples .... அதாவது கீழ் மட்ட வேலையாட்கள் .

  அதர் - அங்கே
  க்யா?- என்ன?
  இதர் ஆவோ?- இங்கே வா
  கானா - சாப்பாடு
  காம் - வேலை
  நயா - புதிய
  நை - இல்லை
  ஜாவோ - போ
  கித்னா - எத்தனை
  கன்டா - மணி

  இதை தவிர எனக்கு எந்த வார்த்தையும் தேவை பட்டதேயில்லை. அவர்களும் தவறாகவும் எந்த வேலையும் செய்ததுமில்லை.

  ஒரியா, பீகாரி, பெங்காலி இந்த மூன்று மக்கள் தான் அதிகம் இருப்பவர்கள் அவர்களுக்குமே பல நேரங்களில் இந்தி தெரியாது, தேவையுமில்லை...

  பதிலுக்கு 10ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களாக இருந்தால் இந்த செல்போன் பயன்பாட்டால் அடிப்படை ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான்

  இதுல தமிழனான நானும் ஒரியா காரணும் பேச 3வதா இருவரும் இந்தி ஏன் படிக்கனும் (அவன் தமிழோ, நான் பெங்காலி யோ தான படிக்க வேண்டும்?)

  உலக நாடுகள் ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளே தங்களது ஆவணங்களில் ஒவ்வொரு வரிக்குமே ஆங்கிலத்தை தருகின்றன.

  இப்போ கேள்வி என்னவென்றால்
  நான் தனியார் பணியில் ராஜ்கோட்,கொல்கத்தா போன்ற நகர பொறியாளர்களிடம் தகவல் பரிமாறினாலும் அவர்கள் ஆங்கிலம் தான் பேசுகிறார்கள்...

  அங்கும் ஹிந்தி தெரிந்தவர்களை விட ஆங்கிலம் தெரிந்தவர்களை தான் அவர்களும் நியமிப்பார்கள்.

  ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் மொழி பிரச்சனை வரும் அது மத்திய அரசு பணி

  அங்கும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரமோ, இரு வாரமோ பயிற்சி கொடுங்கள் போதுமானது.

  அதற்கு மேல் கற்று கொண்டு இலக்கியமா எழுத போகிறார்கள்?

  கொசுவுக்காக கூரையை கொளுத்தாதீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரமிப்பான தகவல்கள் ஜி தந்தவருக்கு நன்றி

   நீக்கு
  2. அதர் -அங்கே என்றொரு வார்த்தையே இல்லை. இதர், உதர் என்றே சொல்லிப் பார்த்திருக்கேன். இத்தகைய சிறிய வார்த்தைகளை வைத்துக் கொண்டு கீழ்மட்ட வேலையாட்களிடம் வேலை வாங்கி இருக்கலாம். ஆனால் மற்றப் பணிகளில் முடியாது. தமிழகத்திலேயே அனைவருக்கும் வேலை கிடைத்துவிடுமா? தமிழகத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்குத் தான் ஹிந்தியின் தேவை நன்கு புரியவரும். சுற்றிச்சுற்றித் தமிழகத்தைத் தாண்டாதவர்களுக்கு வேண்டுமானால் ஹிந்தி தேவைப்படாது! இதிலே பிரமிக்க எதுவுமே இல்லை கில்லர்ஜி! துபாயில் பாதுகாப்புச் சோதனையின் போது ஹிந்தியில் கேள்வி கேட்கையில் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கும் தமிழர்களைப் பார்த்திருப்பீர்களே?

   நீக்கு
 23. நன்றி : வெங்கடேஷ் ஆறுமுகம் 1/2

  Sridhar Subramaniam (இந்தி மொழி பற்றி) அவர்களின் கிளாசிக்கான பதிவு..

  மதிப்புக்குரிய அமித்ஷா அவர்களுக்கு,

  ஹிந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று சொல்லும் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். இந்தக்கடிதத்தை ஒரு கேள்வியுடன் துவக்குகிறேன்: இந்தியாவின் அடையாளமாக இந்தி இருக்க வேண்டும் என்கிறீர்கள். அந்த அடையாளத்தை வைத்து உலக அரங்குக்கு போவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்தியின் அடையாளம் என்பது என்ன?

  அதாவது இந்தி என்றவுடன் உங்கள் மனதில் வரும் வார்த்தை என்ன? இலக்கியம்? பொருளாதாரம், சமூக முன்னேற்றம்? பொருளாதாரத்துக்கு பெயர் பெற்றது மகாராஷ்டிரா மற்றும், முக்கியமாக, மும்பை: அங்கே மராட்டி கலந்த ஒரு மொழி பேசப்படுகிறது. பங்குச்சந்தையை ஆண்டு கொண்டு இருப்பது பெரும்பாலும் குஜராத்திகள்.

  இசைக்கு இன்று உலகில் பெயர் பெற்றிருப்பது பாங்க்ரா என்ற பஞ்சாபி கலாச்சாரத்தின் இசை. இந்தியாவின் இசைக்கலைஞர் என்றால் உலகுக்கு நினைவுக்கு வருவது ரஹ்மான் எனும் தமிழர். அவருக்கு முன்பு உலகப்புகழ் பெற்ற இந்திய இசைக்கலைஞர்கள் ரவி ஷங்கர் (பெங்காலி), ஜாகிர் ஹுசைன் (மகாராஷ்டிரர்), எல் சுப்ரமணியம் (தமிழர்).

  தவிர, பாலிவுட்டிலேயே பார்த்தாலும் அங்கே இன்று இசை அமைத்துக் கொண்டு இருப்பது விஷால் (சிந்தி), சேகர் (குஜராத்தி), அமித் திரிவேதி (குஜராத்தி), பிரீதம் (பெங்காலி) ஐடிக்கு பெயர் பெற்றது பெங்களூரு. அங்கே கன்னடம், தமிழ் ஆகியவைதான் முக்கிய மொழிகள். (ஐடி நிறுவனங்களின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பது தனி சமாச்சாரம்.)

  இந்திய திரைப்படங்கள் என்றால் பெயர் பெற்றவை பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ். பாலிவுட்டில் இந்தி கிடையாது. அங்கே பயன்படுத்தப்படும் மொழி ஹிந்துஸ்தானி எனப்படும் இந்தி மற்றும் உருது கலவை. (தொண்ணூறுகளில் இருந்து பஞ்சாபியும் கூடவே சேர்ந்து கொண்டு இருக்கிறது.)

  மனித வள முன்னேற்றம் என்று பார்த்தால் இந்தி பேச்சு மொழியாக இல்லாத தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. படிப்பறிவு என்று பார்த்தால் திரும்பவும் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் என்று பட்டியல் போகிறது.

  இலக்கியம் என்றால் பெங்காலி, மராட்டி என்று சொல்ல வேண்டும். உலக அளவில் மாபெரும் மதிப்புக்குரிய இலக்கியப்பரிசு புக்கர் விருது. இதனைப் பெற்றவர்கள் யார் என்று பார்த்தால் சல்மான் ரஷ்டி (மகாராஷ்டிரர்), கிரண் தேசாய் (மகாராஷ்டிரர்), அருந்ததி ராய் (பெங்காலி + மலையாளி),

  அரவிந்த் அதிகா (கன்னடியர்). அமெரிக்காவில் புகழ் பெற்ற புலிட்சர் விருது பெற்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் சித்தார்த் முகர்ஜி, ஜும்பா லாஹிரி, இருவரும் பெங்காலிகள். இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் தாகூர், ஒரு பெங்காலி.

  விஞ்ஞானம் என்றால் நமக்கு நினைவில் வரும் பெயர்கள் விக்ரம் சாரபாய் (குஜராத்தி), சதீஷ் தவன் (பஞ்சாபி), சி வி ராமன் (தமிழ்), அப்துல் கலாம் (தமிழ்), ஜெகதீஷ் சந்திர போஸ் (பெங்காலி). உலக அரங்கில் விஞ்ஞானத்துக்கு நோபல் பெற்ற இந்தியர்கள் எல்லாருமே தமிழர்கள் தான். சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

  பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் ஒரு பெங்காலி. இந்தித் தாய்மொழியாகக் கொண்டு நோபல் பெற்ற ஒரே இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. சிறார் தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க பங்களித்தமைக்கு அவர் நோபல் பெற்றார். சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் கொடுமைகள்தான் அத்துறையை தேர்ந்தெடுக்க அவருக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

  திரைப்படக்கலைக்கு உலகின் மாபெரும் விருது என்று கருதப்படும் ஆஸ்கார் பரிசு பெற்ற மூன்று இந்தியர்கள் ரஹ்மான் (தமிழர்), குல்ஸார் (பஞ்சாபி) மற்றும் ரெசுல் பூக்குட்டி (மலையாளி). மருத்துவ வளர்ச்சி என்று கேட்டால் இந்தியாவிலேயே மருத்துவ வசதிகள் நிறைந்த மாநிலங்கள் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு என்று பட்டியல் போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு திரு. அமித்ஷா அவர்கள் பதில் தருவது கடினமே...

   நீக்கு
  2. உண்மைதான் கில்லர்ஜி, அதைப் போலவே -மஹாத்மாவின் கனவான ஹிந்தியும் ஓர் ஆட்சிமொழியாக இடம்பெற வேண்டும் என்று சொல்லும் அனைவருமே மஹாத்மா உட்பட குஜராத்தியர். முதல் முதல் ஹிந்தியை ஆதரித்துப் பேசின மஹாத்மாவும் சரி, பிரதமர் மோதியும் சரி, மஹாத்மாவின் கனவு நனவாகவேண்டும் என்று சொன்னதற்காகவே ஹிந்தி வெறியராகச் சித்திரிக்கப்படும் அமித் ஷாவும் சரி, மூவருமே குஜராத்தியர். அவர்கள் மாநிலத்தில் குஜராத்தி தான் அலுவலக மொழி என்பதோடு கற்பிக்கப்படும் மொழியும் கூட! ஆனாலும் மாநில மக்களிடம் பேச ஹிந்தியைக் கற்றுக் கொண்டிருந்தால் போதும். இதனால் குஜராத்தி மொழிக்கு எவ்வித பங்கமும் வந்ததாகத் தெரியவில்லை. குஜராத்தி மொழி அழிந்தும் போகவில்லை.

   நீக்கு
  3. ஹிந்தியைச் சாமானிய மக்கள் கற்கக் கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி தான் கற்பிக்கப்படுகிறது. அதை ஏன் உணர்ந்து பார்ப்பதே இல்லை? நம் கட்சித் தலைவர்கள் செய்தால் சரி என்னும் மனப்பான்மையா?

   நீக்கு
  4. இங்கே பெங்களூரைப் பற்றிச் சொல்லி இருக்கும் நண்பர் அங்கே ஓர் ரயில்வே போர்ட்டராகட்டும், ஆட்டோ ஓட்டுநராகட்டும் குறைந்த பட்சமாக ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுகு,தமிழ் ஆகிய ஐந்து மொழிகள் பேசுவார்கள் என்பதை அறிந்திருக்கிறாரா? கர்நாடகாவின் மலைக்கிராமங்களுக்கு அவர் பயணம் செய்திருக்கிறாரா? அங்குள்ள சாமானிய மக்கள் கூட இன்னும் சொல்லப் போனால் பத்து வயதுச் சிறுவர், சிறுமியர் கூட ஹிந்தியில் கேட்டால் பதில் சொல்லும் திறன் வாய்ந்தவர்கள் என்பதை அறிந்திருக்கிறாரா? இதற்குக் காரணம் நவோதயா பள்ளிகள் தான் என்பதை அறிவாரா? ஹிந்தி கற்றதாலோ, கற்பித்தலாலோ கன்னடமோ, தெலுகோ, மலையாளமோ அழிந்தா விட்டது?

   நீக்கு
  5. இந்தியாவிலேயே மத்தியப்பிரதேசத்தில் மட்டுமே ஹிந்தி மொழி பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பல மொழிகள். பிஹாரிலும் அப்படியே! வடகிழக்கு மாநிலங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். மஹாராஷ்ட்ராவில் மராட்டி, ராஜஸ்தானில் ராஜஸ்தானி, ஹரியானாவில் ஹரியானவி, பஞ்சாபில் பஞ்சாபி மொழி, அதே போல் இமாசலப் பிரதேசம், உத்திராகான்ட் ஆகிய மாநிலங்களில் அதற்கெனத் தனி மொழிகள் உள்ளன. ஆக வட மாநிலங்கள் எல்லாமுமே ஹிந்தி பேசும் மாநிலங்கள் என்றோ அவற்றில் இருந்து வந்திருக்கும் அரசியல்வாதிகளால் தான் ஹிந்தியைக் கொண்டு வருகிறார்கள் என்றோ நினைக்க வேண்டாம். ஹிந்தி கற்க எளிது. பேச எளிது. தொடர்புக்கு எளிது. இந்தக் காரணங்களால் தான் அரசியல்வாதிகள் பலரும் ஹிந்தியைத் தொடர்புக்கு வைத்துக்கொள்ள ஆதரிக்கின்றனர். சமீபத்தில் திராவிடக் கட்சி வேலூர் வேட்பாளர் தனக்கு ஹிந்தி எழுதப் படிக்க, பேசத் தெரியும் என்பதை ஓர் தகுதியாகக் கூறியதை மறக்கவேண்டாம். ஹிந்தியை எதிர்ப்பதும் அந்தக் கட்சி தான். அவர்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கையில் சாமானிய மக்கள் ஏன் படிக்கக் கூடாது?

   நீக்கு
  6. பார்ட்-1
   நீங்கள் என்ன சொன்னாலும் சரி, அரசியல்வாதிகள்தான் இந்தி ஒழிக என்று ஓட்டு வாங்குவதற்காக கோஷம் போடுகிறார்கள்.

   உண்மையில் மக்கள் தங்களது குழந்தையை ஹிந்தி படிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

   தமிழ்மொழி படிக்காத குழந்தைகள் அதிகமாகி விட்டனர். தமிழ் தானாகவே அழியும் போல...

   இவர்கள் அரசை எதிர்ப்பயு வீண்

   நீக்கு
  7. பார்ட்-2
   உண்மைதான் ஸ்டாலின் மனைவி நடத்துவது ஹிந்தி பள்ளியே...

   ஸ்டாலின் எதிர்ப்பது ஹிந்தி ஒழிக!

   எவ்வளவு கேனத்தனமான மக்கள், கட்சித்தொண்டர்கள்.

   நீக்கு
  8. பார்ட்-3
   நான் இந்தியை ஆதரிப்பவனே அதனைக்குறித்த பதிவு இதை அவசியம் மீண்டும் படியுங்கள்.

   ஹிந்தமிழ்

   http://killergee.blogspot.com/2014/07/blog-post_11.html?m=0

   நீக்கு
  9. பார்ட்-4
   நான் மீண்டும் இதையே சொல்கிறேன் தமிழை வீட்டில் பேசுவது குறைந்து கொண்டு போகிறது...

   தமிழை ஒழிக்க அமித்ஷாவோ, மோடியோ தேவையில்லாமல் முயலவேண்டாம்.

   நீக்கு
  10. கில்லர்ஜி, தமிழையோ, தமிழர்களையோ அழிப்பதால் அமீத்ஷாவுக்கோ மோதிக்கோ என்ன லாபம் கிடைக்கும்? அதான் மண்டையை உடைக்குது! மற்ற மாநிலங்களை எல்லாம் விட்டுட்டு அவங்க இருவரும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே துரோகம் செய்யறாங்க என்பதில் உள்ள உண்மையான காரணம் என்ன?

   நீக்கு
  11. நான் சொல்வது தமிழர்களே தனியார் பள்ளிகள் மூலம் ஹிந்தி படிக்கின்றார்கள் மேலும் குழந்தைகளுக்கு தமிழ் வேண்டாமென்ற போக்கில் வந்து விட்டார்கள் ஆகவே இவர்களே தமிழை அழித்து விடுவார்கள். என்று சொல்கிறேன்.

   திருக்குறளை இந்தியா முழுவதும் கட்டாய பாடமாக்குவதற்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தியில் படித்தேன்.

   நீக்கு
 24. நன்றி : வெங்கடேஷ் ஆறுமுகம் 2/2

  எனவே, இந்தி என்று நீங்கள் குறிப்பிடும் மொழியைப் பேசும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள். பொருளாதாரம், சமூகம், படிப்பறிவு, மருத்துவம், இலக்கியம் போன்ற எந்தத் துறையை எடுத்தாலும் கடைசி வரிசைகளில் இருக்கும் மாநிலங்களின் மொழி என்ன என்று பாருங்கள். இவற்றைத்தான் இந்தியாவின் அடையாளமாக உலகுக்கு காட்ட விரும்புகிறீர்களா?

  இந்தியை இந்தியாவின் அடையாளமாக உலகுக்கு காட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியை ஒரு முக்கிய அடையாளமாக, முக்கிய ரோல் மாடலாக இந்தியாவுக்கே கூட உங்களால் காட்ட முடியுமா என்று நான் கேட்கிறேன். மேலே குறிப்பிட்ட எந்த சாதனைக்கும் முன்னேற்றத்துக்கும் உதவி இராத, பங்களித்திராத ஹிந்தியை எந்த அடிப்படையில் தேசத்தின் அடையாளமாக உலகுக்கு காட்டப்போகிறீர்கள்? இந்தி படித்தால் ஆஸ்கார், புக்கர், புலிட்சர், நோபல் என்று ஏதாவது கிடைக்குமா?

  படிப்பறிவு வளருமா? இலக்கியம் வருமா? பொருளாதார வளர்ச்சி கிட்டுமா? விஞ்ஞானம் புரிபடுமா? இசை ஞானம் வருமா? மூளையை கசக்கிப் பார்த்து ஓரிரு பெயர்களை கொண்டு வந்தாலும், பெரும்பான்மை இந்தியற்றவர்களாகவே இருக்கும். சரி, மேலே குறிப்பிட்ட நிறைய பேர் இந்தி தெரிந்தவர்கள் என்றும் சொல்லலாம்.

  ஆனால் அவர்களின் சாதனைகள் இந்தி தெரிந்ததால் மட்டுமே என்று வாதிட இயலுமா? உதாரணமாக, ரஹ்மானுக்கு இன்று வரை கூட இந்தி சரியாகத் தெரியாது. ஆனால் பல்லாண்டுகளுக்கு பாலிவுட்டை ஆள முடிந்திருக்கிறது. ஆஸ்கார் வரை போக முடிந்திருக்கிறது. தரவுகளை வைத்துப்பார்த்தால் இந்தி தெரிந்திருந்தால் இந்தியாவிலோ உலக அரங்கிலோ பெரிதாக சாதிக்க இயலும் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிட்டவில்லை.

  இந்தியாவை உலகுக்கு மரியாதையாக அடையாளம் காட்ட வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஒன்றை பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்தியா பன்மொழிகளைக் கொண்ட, பல்-கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதை இன்னும் உரக்க உலகுக்குப் பரப்புங்கள்.

  இங்கே யாரும் எந்த சாதனையையும் படைக்க முடியும். அவர்தம் மதமோ, மொழியோ, இனமோ தடையாக இருக்காது என்று சொல்லுங்கள். ஒரே மொழி கொண்ட நாடுகள் டஜன் கணக்கில் இருக்கின்றன. ஒரே மொழியை திணிக்க முயன்று நாசமாய்ப்போன நாடுகள் இருக்கின்றன. ஆனால் பல்மொழிகளைக்கொண்டு சாதித்துக்காட்டிய ஒரே தேசம் இந்தியா. இதனை உலக அரங்கில் மார் தட்டிப் பேசுங்கள்.

  ஒற்றைத்துவத்துக்குப் பதிலாக பன்மைத்துவம், ஏதேனும் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்துக்கும் முக்கியத்துவம் தரும் கொள்கையைப் பின்பற்றும் நாடு என்ற செய்தி உலகிற்கு எட்டட்டும். அது உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கட்டும்.

  இப்படிக்கு
  உங்கள் அன்புக்குடிமகன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் மக்களை சர்ச்சையில் குழப்ப வைத்தே காலத்தை கடந்து விடுவார்கள் வேறென்ன சொல்வது ?

   நீக்கு
 25. பதில்கள்
  1. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மறுக்க இயலாத கருத்துரையை அறியத் தந்த தனபாலன் அவர்களுக்கும், வெளியிட்ட கில்லர்ஜி அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 26. ஹ..ஹஹா.ஹஹஹா. அய்யோ... ஹைய்யோ.. காணோளியை பார்த்து எனக்கு ஒரே சிரிப்பு....!!!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...