அபுதாபியில் இருக்கும்
பொழுது ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் சைனா நாட்டு நண்பன் திரு. லீங் ஸுவாங்
டுஸ்பு விடுமுறைக்கு சென்றவன் அவனுடைய கொழுந்தியாளுக்கு சடங்கு என்று பத்திரிக்கை
அனுப்பி இருந்தான் கூடவே விசிட் விசாவும் வைத்திருந்தான் சரி டிக்கெட் செலவு
மட்டும்தானே மேலும் விஷேசம் வெள்ளிக்கிழமை வைத்து இருந்ததால் அரசு வெள்ளி. சனி
விடுமுறைதானே என்று பைஜூங் ரிட்டன் டிக்கெட் போட்டு பயணித்தேன் விஷேசம் கோலாகலமாக
நடந்து முடிந்தது
நண்பனின் மூத்த சகலையின் மகள்
லீ ஸிங் பீஜூவுடன் கில்லர்ஜி
மறுநாள் சனிக்கிழமை ஹூவாங் ஸௌட் வீதியில்
நடந்து சென்று கொண்டு இருந்தோம் வழியில் ஒரு பெண் பல பொருட்களை விரித்து வைத்து
சைனா மொழியில் நம்மூரில் எதை எடுத்தாலும் பத்து ரூவா என்பது போல கூவிக்கொண்டு
இருந்தாள். நண்பன் சொன்னான் நான் இப்ப செய்யிறதை காணொளி எடு முகநூலில் போடுவோம்
என்றான். நானும் நமக்கென்ன பிரச்சனை வந்தால் அவன் பார்த்துக் கொள்வான் மேலும்
நண்பனின் மூத்த சகலை ஊர் நாட்டாமையாக இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தான்
நேற்றுகூட சடங்கில் சந்தித்து பேசினோமே என்ற தைரியத்தில் எனது செல்லில் காணொளி
எடுக்க தயாரானேன்.
தனது பர்ஸில் இருந்து பத்து யென்
எடுத்துக்கொண்டான் நேராக அவளிடம் சென்றவன் காசை கீழே விரிப்பில் போட்டு விட்டு
என்ன செய்தான் தெரியுமா ? அவனது
செயலைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மேலும் அப்படியே பக்கத்தில் இருந்த
மூத்திரச்சந்தில் ஓடினான் இதற்கு மேல் இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து என்று
அப்படியே விமான நிலையத்துக்கு நடையைக் கட்டி அபுதாபிக்கு சென்று விட்டேன். அதன்
பிறகு மறுமாதம் அவன் அபுதாபிக்கு வந்ததும் இனிமேல் உனது சங்காத்தம் எனக்கு ஆகாது
என்று அவனுடன் ‘க்கா’ விட்டு விட்டேன் என்ன
நண்பர்களே நான் செய்தது சரிதானே ?
இதோ அவன் செய்த செயலை நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன் அப்படியே ஷாக்
ஆகிடுவீங்க..
காணொளி.
நஹ் யான், நஹ் யான், ஸெம்பூ நஹ் யான்
Nah yen,
nah yen, shempoo nah yen
日元 日元 洗发水 日元
(தமிழாக்கம் பத்து ரூபா,
பத்து ரூபா, எல்லாமே பத்து ரூபா)










