தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 11, 2016

கோடரி வேந்தன்


நண்பர்கள் மாதிரித்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ ? கில்லர்ஜியின் பே(த்)தை நெஞ்சம்.

வருடம் 1764 சுமார் 300 ஆண்டுகளுக்கும் முன்பு...
பாரத நாட்டின் தேவராய கோட்டம் செல்வந்தர்களும், மிராசுதார்களும் விவசாய மக்களும் முப்போகமும் விளையும் செல்வச் செழிப்பான அழகிய கிராமம் மலைகளும், நதிகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான வயல் தோட்டங்கள் தூரத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தனது வாரிசுகளுக்கு உணவு தேடி பறந்து சென்றன.... காலை வேளைகளில் பெண்கள் கண்டாங்கி சேலை உடுத்தி இடுப்பில் கூடைகளும், அதில் வெங்கல தூக்கு வாளிகளில் கம்மங்கஞ்சி உருண்டைகளும், அதன் கம்பிகளில் துணியில் முடிந்து வைத்த மிளகாய் வத்தல்களும் தொங்கி கொண்டு இருக்க இடுப்பை அசைத்து, அசைத்து வயற்காடுகளுக்கு களையெடுக்க சென்றனர்... ஊரணியின் கரையோரம் வளைந்து நெளிந்து தண்ணீரில் முகம் காண ஆசைப்பட்ட தென்னை மரங்களில் ஏறிப்போய் 8 வயது முதல்12 வயது வரையிலான இடுப்பில் அர்ணாக்கயிறு கட்டிய சிறுவர்கள் பிறந்த மேனியாய் தண்ணீரில் குதித்து குளித்து விளையாடிக் கொண்டு இருந்தனர் சற்றுத்தள்ளி ஒருவன் தூண்டில் போட்டு ஊரணியில் பெறுகி விட்ட கெண்டை மீன்களை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் கரையோரம் கோவணத்துடன் நின்று வேப்பங்குச்சியை வாய்க்குள் விட்டு குடைந்து கொண்டு இருந்தவர் வயலுக்கு மாட்டை ஓட்டிக்கொண்டு போன மாராத்தான் ஊரணியில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டு நிற்க கோவணத்து பெரியவர் கேட்டார்.

ஏன்டா மாராத்தான் ஒழவு நட்டியா ?
இல்லே சித்தப்பு நாளைக்கு கொழுந்தியாளுக்கு பரிசம் போடுறோம் அதை முடிச்சிட்டுத்தான் ஆரம்பிக்கணும்.
எங்கிட்டு கொடுக்குறீங்க ?
கிழக்கேதான் மோந்தைக்காடு சரி சித்தப்பு மாமனார் வீட்டுக்கு போகணும் கூட்டு வண்டி வேணுமே...
ஒனக்கு இல்லாததா எடுத்துக்கடா ஆமா எத்தனை வண்டியிலே போறே... ?
ஜாதி சனம் கூடிப்போச்சு பொண்டு, பொடுசுக வேற கல்லு வீட்டுக்காரரும் வண்டி தாரேன்னு சொல்லிருக்காரு மொத்தம் 3 வண்டி போதும்ப்பு சரி சித்தப்பு நீயும் கண்டிப்பா வரணும்.
அட போடா வயலுக்கு தண்ணி பாச்சுனேன் கை கால் உலைச்சலா இருக்கு ஓன் சின்னாத்தாளை கூட்டிப் போடா பரிசம் போடத்தானே கண்ணாலத்துக்கு நான் வாறேன்.
சரி சித்தப்பு நான் வாறேன்.
மாராத்தான் மாடுகளை பத்திக்கொண்டு போனான் ஊரின் எல்லையோர கோடரியம்மன் கோயிலில் 2 குதிரை வண்டிகளும் சக்கரத்தில் கட்டப்பட்ட குதிரைகளும் நிற்க வெங்கலக் கம்பிக் கதவுகளுக்குள் பூட்டி சிறை வைக்கப்பட்ட கோடரியம்மனை வணங்கிக் கொண்டு 4 ஆண்களும், 2 பெண்களுமாக சிறிய கூட்டம் நின்றிருந்ததை கண்டான் மாராத்தான் அவர்களை பார்த்து கேள்விக்குறியுடன் நின்றவனை பார்த்த பெரியவர்.
தம்பி நமஸ்காரம்.
நமஸ்காரம்.
நமக்கு உள்ளுருதானே...
ஆமாய்யா நமக்கு.....
நாங்க தெற்கே இருந்து வாறோம் கொழுஞ்சியோடை.
நல்லது என்ன வெசயமா வந்து இருக்கீங்க ?
தேவராய கோட்டத்துல அழகான நல்ல குணநலமான பொண்ணுகள் இருக்குன்னு கேள்விப்பட்டுதான் வந்துருக்கோம்.
அப்படியா ? சந்தோஷம் நம்ம பொண்ணு பொருசுகளைப்பத்தி வடக்கே வரைக்கும் போயிருக்கே கொழுஞ்சியோடைக்கு போகாதா ?
நமக்கு தெரிய இங்கே யாரு வீட்லயும்.......
நமக்கு எந்த ஆளுகள்னு மட்டுப்படலே.....
நமக்கு ஊடகழி..
அப்படியா ? ரொம்ப சந்தோஷமாப் போச்சு சுத்தி வளைச்சு நம்ம கூட்டமாப் போயிட்டீங்க...
உங்களை சந்திச்சதுல எங்களுக்கும் சந்தோஷம் கோடரியம்மா கண் திறந்துட்டா...
பின்னே ரொம்பத் துடியானவளாச்சே...
ஏத்தா, மகமாயி தம்பிக்கு நீராகாரம் கொடுத்தா....
பரவாயில்லை நான் வீட்ல கஞ்சி குடிச்சிட்டுத்தான் வாறேன்.
வாங்க தம்பி இப்படி உட்கார்ந்து பேசுவோம் நம்ம ஆளுகளா போயிட்டீங்க.... 
ஓரமாய் இருந்த கூத்து மேட்டில் எல்லோரும் உட்காந்தார்கள்.
ஏப்பா, காளிங்கா இப்படியே பசியாறிக்கிறலாமே... மொக்கை ஏதாவது எலை தளை பறிச்சாவேன் அப்படியே குதிரைகளுக்கும், கொள்ளு போட்டு வாடா.
ஆச்சுய்யா..
அதோ அந்த எறக்கத்துக்கு கீழே போங்க அரசமரம் நிக்கும் பறிச்சாங்க.
சரிங்க...
தம்பி, நம்ம சாதியில பொண்ணுக.... ஏதும்..
நம்மூருல ஊடகழி தலக்கட்டு 400 க்கும் மேல இருக்கும் ஒண்ணும் கவலைப்படாதீங்க கண்டிப்பா நம்மூருல நீங்க சம்பந்தம் பண்ணுறீங்க, கோடரியம்மா துணையிருப்பா அவ வாசல்லருந்து சொல்றேன் இது நடக்கும்.
சந்தோசம் தம்பி நமக்கு சொந்தக்காரங்க வீட்ல பொண்ணு ஏதும் இருக்குதா ?
பொண்ணுக நிறைய இருக்குதய்யா... நம்மூரு மிராசுதாரு மோகனரங்கம் வீட்டுலகூட ரெண்டு பொண்ணுக இருக்குதுக மூத்தபொண்ணு நல்ல குணம் செவத்த தோலு பாக்க லெட்சணமா இருக்கும் நமக்குகூட என்னோட மதினியா புருசனோட பெரியப்பா வகையறா வழியில சொந்தம்தான் அங்கே போய்ப் பாருங்க மாராத்தான் சொன்னேன்னு சொல்லுங்க.
நல்லது தம்பி அவுங்க வீடு எங்கேயிருக்கு ?
நீங்க ஊருக்குள்ளே நுழைஞ்சவுடனே ஒரு மடம் இருக்கும் அதுக்கு அடுத்த மொரட்டு கல்லு வீடு ஊருக்குள்ளேயே பெரிய வீடு அவுங்களோடதுதான்.
பொண்ணு கூடப்பொறந்தது எத்தனை பேரு ?
அது பெரிய குடும்பம் மோகனரங்கம் அவருதான் மூத்தவரு அவரோட அக்கா-தங்கச்சி 5 பேரைக் கட்டிக்கொடுத்தது போக அண்ணன்-தம்பிகள் 8 பேரும் ஒரே கூட்டுக் குடும்பமாத்தான் இருக்காங்க இன்னும் சொத்துப் பத்துகூட பாகம் பிரிக்கலை சொத்துப் பிரிக்காம கூட்டுக் குடும்பமா இருக்கனும்னு செத்துப்போன மோகனரங்கத்தோட அப்பாரு சத்தியம் வாங்கிட்டு இறந்து போயிட்டாரு அப்பாவோட சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வாழுறாங்கன்னா எப்பேர்ப்பட்ட குடும்பம் பாருங்க...
அதானே வேணும் நமக்கு சரி தம்பி மூத்தவரு கூட பொறந்தது பொண்ணுக 5 பேருன்னு சொல்றீங்க அவங்க யாரும் பொண்ணு எடுக்கலையா ?
நல்ல கேள்வி கேட்டீங்க, மூத்தவரு ரொம்ப பாசமானவரு ஆனா, நமக்கு அக்கா-தங்கச்சிகளோட சம்பந்தம் பண்ண முடியலையேன்னு வருத்தம்.  
ஏதும் தோஷம் இருக்கா ?
நீங்க வேற அவுங்களுக்கு பொறந்தது மூத்தது எல்லாமே பொட்டக் குட்டிகளாப்போச்சு இவரு பொண்ணுக்கு கட்டுற மாதிரி ஏதும் இல்லை ஆனா, அடுத்தடுத்ததுகள் எல்லோருமே ஆணும் பொண்ணுமாப் கலந்து பெத்து வரிசையா சிங்கக்குட்டிகளா நிக்கிறாங்கே எப்படிப் பார்த்தாலும் இந்த மூத்த பொண்ணை மட்டும்தான் வெளியில சம்பந்தம் பண்ணுவாங்க அதுக்குப்பிறகு யாரு பொண்ணு கேட்டு நுழைஞ்சாலும் பயலுக கோடரியைத் தூக்கிட்டு வந்துருவாங்கே வரிசையா நிக்கிறாங்கள்ல கோடரியம்மன் மஞ்சு விரட்டு வந்தால் மாடு புடிக்கிறதுல நம்ம பயல்கதான் முன்னாடி நிப்பாங்கே.
நல்லது சந்தோசமான விசயமாச் சொன்னீங்க, நாங்களும் பெருங்கொண்ட தலக்கட்டுதான் என்னோட பேரன்தான் பயகூடப் பொறந்ததுக ஆணு 11 பொண்ணுகள் 7 இவன் பசங்கள்லயே அடுத்தவன் ஜாதகம் பொருத்தம் இருந்தால் நல்லபடியா இந்த இடமே முடியட்டும்.
கண்டிப்பாக நடக்கும் ஆத்தா வழி விடுவா.
சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மொக்கை அரசமரத்து இலைகளை பறித்து வர எல்லோருக்கும் பரிமாறினாள் ஆண்டாள், மகமாயி கேட்டாள்.
தம்பி புளியோதரை கொஞ்சம் சாப்புடுங்களேன் நம்ம வீட்டுச்சோறுதான்.
இல்ல தாயி... இப்பவே வெயிலு உச்சிக்கு வந்துருச்சு நான் மேற்கால புஞ்சைக்கு போகணும் நம்ம வீட்டுச்சோறுதானே எப்ப வேணும்னாலும் சாப்புட்டுக்கிறலாம் நீராத்தண்ணியை மட்டும் கொடுங்க.
ஒரு வாய் சாப்புட்டுப் போங்களேன் தம்பி
எல்லோரும் சொல்லியும்
பரவாயில்லை கல்யாணத்துக்கு சாப்புடுவோம் நீங்க ஊருக்குள்ளே போயி நல்ல விதமாப்பேசி முடிங்க நான் பொழுது சாய திரும்பி வாறேன்.
வயற்காட்டை நோக்கி நடந்தவன் தூரத்தில் ஒரு மாடு வயலுக்குள் இறங்கி மேய்ந்ததை கண்டதும் ஓங்கி குரல் கொடுத்தான்.
டோ..................ய் கொங்காப்பலே யார்ராவேன் மாட்டை வடக்கே பத்துடோய்.
பொழுது சாய்ந்து வீடு திரும்பிய மாராத்தான் வீட்டின் வாசலில் மிராசுதாரின் குதிரை வண்டி நிற்க வெளியில் சில பெரிய மனிதர்களும் நிற்க குழம்பிப் போய் வர திண்ணையில் போட்டிருந்த கயிற்று கட்டிலில் மிராசுதார் மோகனரங்கம் உட்கார்ந்திருக்க, கீழே அவரது மனைவி முத்தழகி உட்கார்ந்திருக்க 8 மாத கர்ப்பினியான மாராத்தான் மனைவி மாத்தமுகி கதவில் தன்னை பகுதி மறைத்து நின்று கொண்டு பதில் சொன்னாள் மிராசுதார் மோகனரங்கம் மாராத்தானை கண்டதும் எழுந்து வந்து கட்டித் தழுவிக் கொண்டார்.
வாங்க, வாங்க நம்ம வீட்டுக்கு சொல்லி விட்டா வந்திருப்பேனே....
பரவாயில்லை மாராத்தா உன்னை நாங்க தேடி வந்து சொல்றதுதானே மரியாதை உன்னாலதான் 4 வருசமாக செவ்வாய் தோஷத்தால தள்ளிப்போன என்னோட மக கல்யாணம் நடக்கப் போகுது.
ஓரளவு புரிந்து கொண்ட மாராத்தான்.
உட்காருங்க ஏ... புள்ளே மாத்தா குடிக்க ஏதும் கொடுத்தியா ?
ஆமாப்பா இப்பத்தான் உம் பொண்டாட்டி எல்லோருக்கும் மோர் கொடுத்தா, என்றாள் முத்தழகி
நீங்க ய்யேன் வீட்டுக்கு வந்ததுல சந்தோசம்.
அதனால என்ன, நம்ம வீடுதானே மாராத்தா வந்தவங்க கொழிஞ்சியோடை ஜமீன்தார் அவங்க பையனுக்கும் செவ்வாய் தோசமாம் ரெண்டு ஜாதகமும் பொருத்தம் சரியா இருக்கு.
அவங்க, ஜமீன்தாரா ? எங்கிட்டே சொல்லவே இல்லையே ?
அதான் பெரிய மனுசங்க, அவங்களும் நம்மளை மாதிரி பெரிய தலக்கட்டுதான் வர்ற ஆவணியில் கல்யாணம் பேசி முடிச்சாச்சு உங்கிட்டு சொல்லிட்டுப் போகத்தான் வந்தோம்.
ரொம்ப சந்தோசம் இருந்து ஒரு வேளை சாப்பிட்டு போனால் நல்லது.
பரவாயில்லை மாராத்தா நம்ம வீடுதானே இன்னொரு நாளைக்கு சாப்புடுவோம் தாயி வர்றேன்த்தா...
சொல்லி விட்டு குதிரை வண்டியில் ஏறிய மோகனரங்கம் முத்தழகி தம்பதியினரை தெருவின் முனைவரை வந்து வழியனுப்பினர் மாராத்தான் மாத்தாமுகி தம்பதியினர்

ஆவணியில் கோடரி வேந்தன் - முல்லை தம்பதிகளுக்கு தேவராய கோட்டம் குலுங்க சீரும் சிறப்புமாக திருமணம் நடந்து முடிந்தது மறுமாதம் மாராத்தானுக்கு ஆண் குழந்தை பிறக்க மாராத்தாவின் வீட்டுக்கு மனைவியுடன் வந்த மிராசுதார் அவனது கையில் ஒரு சுவடியைக் கொடுத்து விட்டு சென்றார் அதில் ஊருக்கு வெளியே மிராசுதாருக்கு பாத்தியப்பட்ட புஞ்சை நிலம் ஒரு ஏக்கரை மாராத்தானும், அவனது வாரிசுதாரர்களும் உரிமை கொண்டாடிக் கொள்ளலாம் எழுதி இருந்தது அடுத்த நாளே கொழிஞ்சியோடையில் இருந்து தனது புது மனைவி முல்லையோடு வந்த கோடரி வேந்தன் குழந்தைக்கு தங்கச்சங்கிலி, வெள்ளி அர்ணாக்கொடி, தங்கத்தில் அரைமுடி மொத்தம்10 சவரன் இருக்கும் குழந்தைக்கு போட்டு கொஞ்சி விட்டு சென்றார்கள் தனது வீட்டுக்குள் நுழைந்ததும் முல்லை கேட்டாள்.

* * * * * * * * * * * * * * *
ஏங்க விஸ்வகர்மா வீட்டுல குழந்தைக்கு அரைமுடி செய்யச் சொல்லி இருக்கீங்களே எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுருக்க கூடாதா ?
ஏன் ?
அரைமுடி ஆம்பளைப் புள்ளைக்கு போடுவாங்களா ? இது கூடவா தெரியலை.
நான் எல்லாமே நகைதானேனு செய்யச் சொன்னேன்.
அய்யோ நான் உங்களைக் கட்டிக்கிட்டு....
* * * * * * * * * * * * * * *

கால மாற்றத்தின் சூழ்ச்சியால் அதி வேகமாய் விஞ்ஞானம் வளர்ந்து விரிவாக மனித மனங்கள் சுருங்கியதின் விளைவாக தேவராய கோட்டம் என்ற சொர்க்க பூமி வெட்கத்தால் கூனிக்குறுகி இன்று தனது பெயரைக்கூட தேவகோட்டை என்று சுருக்கி நகரம் என்ற பெயரில் நரகமாகி விட்டது இது தேவகோட்டையின் வரலாறு மட்டுமல்ல ஒவ்வொரு ஊருக்கும் இப்படியொரு சரித்திரங்கள் உண்டு.

குறிப்பு - பொதுவாக நான் பதிவெழுதும் பொழுது மனதில் ஏதாவதொரு ‘’கரு’’ வைத்துக் கொண்டுதான் பதிவை உருவாக்குவேன் ஆனால் இனிய நண்பர் திரு. S.P. செந்தில் குமார் அவர்கள் போட்டுச்சென்ற கொக்கியால் என்ன எழுதுவது ? என்றே புலப்படாமல் வீம்புக்காக எழுதத் தொடங்கி எப்படியோ கொண்டு வந்து முடித்து விட்டேன் ஒருக்கால் பதிவு நீளமாயின் மன்னிக்கவும் என்னை 300 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று எனது பழைய பிறவியான கோடரி வேந்தனைப்பற்றி எழுத வைத்த இனிய நண்பருக்கு நன்றி. 

68 கருத்துகள்:

  1. சற்றே நீளமான பதிவு. ஆனால் உங்களுக்கு ஒரு சப்ஜெக்ட் கிடைத்து விடுகிறது பாருங்கள்! நண்பர்கள் உங்களுக்கு கரு கொடுத்து விடுகிறார்கள். பின்னி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சும்மா இருந்த என்னை இப்படி எழுத விட்டது அவர்தானே பதிவு நீளமாயின் நண்பர் செந்தில் குமாரையே திட்டுங்கள் அவர் கோவிக்க மாட்டார்.

      நீக்கு
  2. கோடரி வேந்தன் நீங்களாத்தான் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது..ஹஹஹ. ஜி பதிவு ஒன்றும் பெரிதல்ல...

    இப்படித்தான் ஒவ்வொரு ஊரும் பல வருடங்களுக்கு முன்னால் இருந்த தன் பொலிவை, அழகை இழந்து இன்று நரகங்களாகிக் கிடக்கின்றன. காலம் மாற மாற வாழ்வியலும் மாறுவதை அந்த அரைஞாணில் சொல்லிவிட்டீர்கள்..

    அது சரி 300 வருடங்களுக்கு முன் தமிழ் இப்படியா இருந்துச்சு....ஹிஹிஹி சும்மா...உங்களக் கலாய்க்கவில்லை என்றால் தூக்கம் வராது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க போன ஜென்மத்துல நாங்க பேசிக்கிட்ட தமிழ் வழக்கத்தைதான் எழுதினேன்

      நான் காலமாற்றத்தில் நிறைய விடயங்களை இழந்து விட்டதற்கான காரணத்தை சொல்லி இருந்த கோடரி வேந்தன் - முல்லை தம்பதிகளின் சிறிய உரையாடலை சரியாக புரிந்து கொண்டீர்கள் நன்றி

      நீக்கு
    2. Puthiya thakaval .mikka nandri

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  3. அப்படின்னா ,அரைமுடி நகையில்லையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அது வெள்ளியில் செய்வது நகை வட்டத்துக்குள் வராது வருகைக்கு நன்றி 300 வருடங்களுக்கு முன்பு மாமன் மகள், அத்தை மகளுக்கு இளங்காளையர்கள் கோடரியம்மன் கோயில் திருவிழாவுக்கு இதைத்தான் வாங்கி கொடுப்போம்

      நீக்கு
    2. உங்க பாரம்பரியத்தில் 'புதிய பாதை'யில் ,பார்த்திபன் வாங்கித்தந்த 'அரை முடி 'யை நினைவுக்கு வந்து விட்டது :)

      நீக்கு
    3. ஆமாம் ஜி அதே, அதே... மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கோடாரி வேந்தன் ரொம்ப நல்லா இருக்கு....
    உங்ககிட்ட இருந்து மிக நீளமான பகிர்வு...
    நம்ம தேவகோட்டை இப்படித்தான் வந்துச்சா....????
    அது சரி....
    பரவாயில்லை... ஒவ்வொரு பதிவிலும் வரும் கருத்துக்களில் இருந்தே அடுத்த பதிவுக்கான விதை கிடைச்சிருது தங்களுக்கு... நாங்கள்லாம் என்ன எழுதன்னு யோசிச்சே எழுதாமல் விட்டுவிடுகிறோம்....

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டை வரலாறு உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா ?

      நீக்கு
  5. பெரிய பதிவு தான் சகோ, ஆனாலும் உங்க கற்பனை அருமை

    பதிலளிநீக்கு
  6. அன்பு ஜி நீங்க உண்மைலேயே
    300 வருடத்துக்கு முன்னாடி பிறக்க வேண்டியவர்தான்....
    முன்னாள் தமிழ் அருமை....
    தமிழ் இப்படிதான் இருந்திச்சானு
    நம்மில் யாருக்கும் தெரியாது
    ஆனால் கற்பனை செய்து பார்த்தால்
    இப்படியே இருக்க கூடாதா னு தோணுது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. கில்லரிஜியின் நெஞ்சை பேதை நெஞ்சைாக்கியவர்களை..கில்லர்ஜி தடுத்தாலும் விடேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை விடுங்கள் நண்பரே உங்கள் ஊருக்காரர்தானே...

      நீக்கு
  8. 300 வருடங்களுக்கு முன் தமிழ் மொழி இப்படித்தான் இருந்ததாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க பேசிக்கொண்டு இருந்ததைத்தானே எழுதுறோம்.

      நீக்கு
    2. உங்கள் ஆசை இப்படியேனும் நிறைவேறியதே!

      நீக்கு
    3. மீள் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  9. வணக்கம்
    ஜி
    கற்பனையில் பதிவை அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையை ரசித்தமைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
  10. ஐயன்மீர் யாமும் அப்பொழுதில் ஆங்கிருந்து அவல் பொரி அப்பமுடன் அமுது உண்டு களித்திருந்தோமே.. நினைவில் கொணர்வீர்.. கோடரியாரே.. இங்ஙனம் செந்துரட்டி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி மன்னிக்கவும்
      கோடரி வேந்தனும், செந்துரட்டியுமான நம்மைப் பற்றி எழுதுவது சிறிய வியயமா ஜி அது பெரிய கதையாயிற்றே ஆகவே ஒரு விடயத்தை மட்டும் குறிப்பு கொடுப்பது நன்றாக படவில்லை
      நமது விடயங்கள் சரித்திரமாயிற்றே ஜி.

      நீக்கு
    2. அங்ஙனம் ஆயின் அதனை நீரே அருஞ்சொல் வழக்கில் எடுத்து இயம்புவீராக... இங்ஙனம் செந்துரட்டியான்..

      நீக்கு
    3. ஜி மீண்டும் எழுத இதென்ன ? தொடரா ? ஆஆஆஆஆஆ

      நீக்கு
    4. ஆஹா, செந்துரட்டி யாருனு இப்போப் புரிஞ்சது! :))))

      நீக்கு
    5. வாங்க இவ்வளவு தாமதமாகவா புரிந்து கொள்வது ?

      நீக்கு
  11. நகை செய்யச் சொன்ன ஆம்பளையை நினைத்தால் நகைப்புக்கு ஏது பஞ்சம்!
    வகை வகையான சிந்தனை
    வாய்தா வாங்காத சாதனை
    வாழ்க நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகை செய்யச்சொன்ன கோடரி வேந்தனை காலை வாறி விடுவது போல் இருக்கின்றதே நண்பா.

      நீக்கு
  12. கற்பனை வெள்ளம் கண்டாங்கி சேலையாக !ஆமா 300 ஆண்டு ஆச்சா சேலை வந்து சொல்லுங்க குருவே??,[[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உடைகளை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் எஜிப்தியர்கள் வருடம் 1679 பிறகு ஜப்பான் நாட்டினர் அதை கொஞ்சம் விரிவுபடுத்தினர் நமது நாட்டினர் கண்டாங்கி தொடங்கி இன்று கண்ட்றாவியாக்கி விட்டார்கள்

      நீக்கு
  13. மிக நீளமான பதிவு பொறுமையாக படித்தத்தில் உங்கள் கற்பனை வளம் அருமையாக இருந்தது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீளத்தை நிறுத்த முடியாமல் கஷ்டப்பட்டு நிறுத்தினேன் சகோ

      நீக்கு
  14. அருமையான திரைக்கதைக்கு அச்சாரம்...ஜி....உங்க்ளுக்கு மட்டும் எப்படி இப்படி எழுத வருகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே ஏதோ யோசித்தேன் கதை பின்னோக்கி ஓடியது... வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. உங்கள் கற்பனை அலாதிதான் சகோ,, ஆனால் நான் 300 ஆண்டுகளுக்கு முன் எனும் போது இன்னும் எதிர்பார்த்தேன் உங்களிடம்,,,
    ஏதோ நம்மால் முடிந்தது,,
    வரேன் சகோ,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ வந்தவங்க எல்லோருமே பதிவு நீளம்னு சொல்லிட்டாங்க இதுல நீங்க வேறயா...?
      வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ.

      நீக்கு
    2. நீளமா அப்படி ஒன்னும் தெரியல சகோ,

      நன்றாக இருந்தது, மனிதன் நல்ல மனசோட இருந்தான் என்ற கரு,,

      இன்று அந்த மனிதன்,,

      நீக்கு
    3. ஆமாம் சகோ அன்று மனிதன் மனிதத்தோடு வாழ்ந்தான்

      நீக்கு
  16. 300 ஆண்டுகளுக்கு முந்தைய, போனஜென்மத்து கதை. கற்பனை அருமை. நெஞ்சம் மறப்பதில்லை. அது தன் நினைவை இழப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி

      நீக்கு
  17. எவ்வளவு பெரீய்ய்ய்ய பதிவூஊன்னு நான் சொல்லமாட்டேனேஏ. ஏன்னா இது 300 வருஷத்து பதிவு. அப்படி சீக்கிரமா முடிக்கமுடியாது எனக்கு புரிந்துவிட்டது.ஹா..ஹா..ஹா.
    பதிவை எழுதி உங்க மனக்குறை தீர்த்திருக்கீங்க.விட்டா இன்னும் எழுதியிருப்பீங்கபோல. ஆனா நிறைய தெரியாத விடயங்கள்,தேவகோட்டை விபரம் அறிந்து கொண்டேன். நன்றி அண்ணா ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சரியாக சொன்னீங்க 300 வருடச் சம்பவத்தை உடன் முடிக்க முடியாதுதானே... உண்மையிலே விடயமே இல்லாமல் தொடங்கினேன் ஆனால் முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் காரணம் நீண்டு கொண்டே சென்றது எழுத்து....

      நீக்கு
  18. ஐயா கோடரி வேந்தன் அவர்களே என்னை நினைவில்லையா ?எனக்குத்தான் அந்தக் காலம் மறந்து விட்டது. ஆனால் நன்கு நினைவுபடுத்தி எழுதி இருக்கிறீர்கள் இப்படிக்கு மோகனரங்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஹாஹாஹா நீங்கள்தானே மடத்துக்கு அடுத்த கல் வீட்டுக்காரர் உங்களை நான் அறிமுகப்படுத்துவது முறையில்லை காரணம் பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு ?

      நீக்கு
  19. கருத்துரையில் இருந்தே
    ஒரு பதிவு
    தங்களால் மட்டுமே முடியும் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  20. ஆஹா..! இந்த பதிவுக்கு நான்தான் காரணமா..! எனது கோரிக்கை ஏற்று அதை நிறைவேற்றிய அரசர் கோடரி வேந்தனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இன்னும் பதிவை முழுமையாக படிக்க வில்லை நண்பரே! பதித்துவிட்டு கருத்திடுகிறேன்.
    இப்போதைக்கு தமிழ்மணம் 13 மட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சும்மா ஆக்ஸிலேட்டரை மிதித்து விட்டுப்புட்டு இப்படித்தான் கடை மூடும் கடைசி நேரத்தில் வருவதா ?

      நீக்கு
  21. 300 வருஷத்திற்கு முன்னாள் எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்.நீளமாக இருந்தாலும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை

    பதிலளிநீக்கு
  22. கோடரி வேந்தனும், தேவராய கோட்டமும்....கற்பனையில் அசத்தல்...அப்பப்பா...அபாரமா இருக்கு உன் ஜென்மம்....ஒரு சிறுகதை போல் நன்றாக இருக்கிறது சகோ. த ம வை காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலம்தானே தேவகோட்டையின் சரித்திரம் படிக்க இவ்வளவு தாமதமாகவா வருவது.

      நீக்கு
    2. கொஞ்சம் வேலை இருக்கும் காரணத்தால் தாமதம். வலைப்பக்கம் வரயியலவில்லை. அதான். இன்னும் மற்ற சகோக்களின் தளங்களுக்கும் செல்ல வேண்டும்.

      தம 14

      நீக்கு
  23. கிராமிய மணத்துடன்...ஆஹா அருமை!

    பதிலளிநீக்கு
  24. 300 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு பற்றி எழுதுவது கடினம், அதுவும் அதை சுவையாக எழுதுவது மிக கடினம். கற்பனைத்திறன் இருந்தாலோழிய எழுத இயலாது. அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் மனம் திறந்த வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
    2. கோடரி வேந்தன் யாருனு இந்தப் பதிவின் மூலம் புரிந்தாலும் செந்துரட்டியும், மோகனரங்கமும் யார்னு மண்டை குடைஞ்சது. அதோடு நெல்லைத் தமிழர் வேறே தேவராயகோட்டை என்றே சொல்லிட்டு இருந்தார். எல்லாத்துக்கும் காரணம் புரிஞ்சதோடு இல்லாமல் அந்தப் பதிவின் காரணமும் புரிஞ்சது. அப்பம் திருடியவங்க யார்னும் புரிஞ்சது.

      நீக்கு
    3. இயல்பான தென் மாவட்டப்பேச்சுத் தமிழ். ரொம்பவே ரசித்தேன். எங்க ஊர்ப்பக்கம் கிராமங்களிலும், கிராமத்து மனிதர்களும் இப்படித் தான் பேசிப் பார்த்திருக்கேன். இப்போது தமிழே மாறிப் போச்சு! :(

      நீக்கு
    4. பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      இதில் வந்து நாட்டாமையும், செந்துரட்டியும் வாலண்டரியாக சிக்கி கொண்டதின் விளைவே தொடர் பதிவு. ஹா... ஹா... ஹா... ஸாரி கெக்.. கெக்.. கே...

      நீக்கு
  25. மிக மிக அருமை. அப்படியே பழுவேட்டரையரைப் பார்க்கும் நினைவு. வயதானால் அப்படித்தான் இருப்பீர்கள்.
    நல்ல தமிழ்.நல்ல கதை. மனசுக்கு மிக இசைந்தது. நன்றி தேவகோட்டையாரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  26. கிராமத்து வட்டார மொழியில் பேசியது அருமை.
    கதை தோன்றிய வித பதிவை படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு