இந்த விசயத்தைப்பற்றி, நான் கூடுதலாக எழுத
விரும்பவில்லை காரணம் ? மேற்கண்ட படங்களிலும், கீழ்கண்ட
வீடியோவிலும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், என்னைக்கேட்டால் என்மனம் கணக்கிறது
அவ்வளவுதான், பணவிரயம் தவறு, (تـــبذيـــر المال حـــرامதப்தீர்
அல்மால், ஹராம்)எனஉலகுக்கு சொல்ல வேண்டியவர்களே !
இப்படியிருந்தால் ?
எனது தளத்தில்நான் வெளியிடும் விசயங்களை சிலர் Copy அடித்து முகநூலில் தனது கருத்துக்கள்போல் வெளியிடுவதாக ஷார்ஜா நண்பர் கணேசன்
காளீஸ்வரன்,( Working in CBD Dubai )சொன்னதை கேட்டு என் மனம் வேதனையாக உள்ளது,
1983 - 1989 ஆண்டுகளில் நான் சிலவார இதழ்களுக்கு
எழுதி அனுப்பிய துணுக்குகள், சிறுகதைகள், பத்திரிக்கைகளில்
வெளிவராமலும், எனக்கு திருப்பியனுப்பாத
கதைகளும் சிறிதுகாலம் கழித்து மற்றவர்கள் பெயரில் எனது தலைப்பும், கதாபாத்திரங்களின்
பெயர்களும் மாற்றப்பட்டு கதையில் சிறிய மாற்றங்கள் செய்து வெளியானது கண்டு மனம்
துடித்திருக்கிறேன், அந்த வேதனை எப்படியானது
தெரியுமா ? உனது குழந்தைக்கு
மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படிஇருக்கும் ? அதைப் போலிருந்தது எனக்கும், இந்த வேதனையில் நாளடைவில்
எழுதுவதையே நிறுத்தி விட்டேன்,எனது தளத்தில்கூட பிறருடைய கருத்துக்களை நான் சொல்ல
வேண்டிய நிலை வரும்போது...
இதில் சில வார்த்தைகள்
யாருடையது என்பதை குறிப்பிட்டுள்ளேன், முகநூலில் வெளிவரும் பல புகைப்படங்களை
பார்த்துக்கூட பல விஷயங்கள் நான் எழுதுகிறேன், அல்லது விஷயங்களுக்கு
புகைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் கருத்துக்களை
ஒருபோதும் நான் Copy அடித்ததில்லை, அது எதற்கு சமம் என்பதை
கீழே கருப்பு நிறத்தில் எழுதியுள்ளேன்,எழுத்தாளர் ராஜேஸ்குமார்
அவர்கள் சொன்னதைப் போலபிஞ்சு செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றா விட்டாலும் பரவாயில்லை வெண்ணீர் ஊற்றாதீர்.
அபூர்வமான, இந்த தேதியில் நானும் இந்தபூமியில்
வாழ்ந்திருக்கிறேன் என்பதில் பெருமைப்பட்டுக்கொண்டு, இதற்க்கு வாய்ப்பளித்த இந்த
உலக மேலாளருக்கும், அடிப்படை காரணகர்த்தாவாகிய எனது தாய்-தந்தையர்க்கும் நன்றி
தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று மரணமடைந்தவர்களுக்கு இந்தவாய்ப்பு கிடைக்கவில்லை, நாளை பிறக்கும் குழந்தைகளும் இதைகாண வாய்ப்பில்லை, ஏனெனில்
அடுத்து இந்ததேதியை காண 100 வருடமாகும், அதேநேரம் இன்று பிறந்த
குழந்தைகளுக்கு அற்புதமான பிறந்ததேதி கிடைத்திருக்கிறதுஇனி அடுத்த சந்ததிகள் எப்போது
காணமுடியும் ? அடுத்த 75 ஆண்டுகள் கழித்து பிறக்கும்
குழந்தைகளுக்குத்தான், இந்தவாய்ப்பு கிடைக்கும், ஏனெனில் 100 வயதுவரை வாழ்ந்தவர்களை நாம் கண்டு இருக்கிறோம், இன்று அது
அரியதான விசயமாகி விட்டது, நாளை காணவேமுடியாது காரணம் மனிதனின் ஆயுட்காலம் 50 ஆககுறைந்து விட்டது, அடுத்த சந்ததியினருக்கு அது 25 ஆககுறைந்து விடும் இதில் துளியளவும் ஐயமில்லை. இதன்
அடிப்படை காரணம் என்ன ? விஞ்ஞானவளர்ச்சி, மனிதன் அற்பவிசயங்களுக்கு
ஆசைப்பட்டு அற்புதமான வாழ்வை இழந்துகொண்டு இருக்கிறான் இல்லை, இழந்து விட்டான். 25 க்குபிறகு என்ன
ஆகும்? கழுதை தேய்ந்து
கட்டெரும்பான கதைதான் கடைசியில் மனிதஇனமே அடியோடு அழிந்துவிடும்பிறகுதான் உலக மேலாளர்
தனது ஆதாம்-ஏவாள் வேலையை PART No: 2 வென்று தொடங்குவார் என நினைக்கிறேன்.
சாம்பசிவம்-
ஒருவேளை மேற்படியாரு, PART No: 2 வைத்தொடங்கினா ?
எல்லாமனிதனையும் பேசமுடியாத ஊமையாக படைக்கட்டும், அப்பத்தான் மனிதன் மதங்களை
உருவாக்கி, ஜாதிவாரியாக பிரிக்கமாட்டான், வாய்தானே இத்தனை சீரழிவுக்கும் காரணம்.
You Want See
Big size ? Just Click One Time Photo Inside.
20.08.2012 in DUBAI Meeting
என்இனிய, U.A.E. வாழ் தேவகோட்டையர்களுக்கு, வணக்கம் இந்த DEWA அமைப்பு ஏற்படுத்தியதின் நோக்கம், நமது ஊருக்கு
நம்மாலான ஏதாவது நல்லகாரியங்கள் செய்வோமென்ற உயர்ந்த எண்ணத்துடன், இந்தஅமைப்பின்
வேலைகளை 100க்கு100 % உண்மையாக
செயல்படுகிறேன் இதில் தாங்களும் ஒரு 5 % மாவது பங்குகொள்ளுங்கள்
என கேட்டுக்கொள்கிறேன் அந்த 5 % என்பது தாங்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிப்பதே, தாங்கள்
கூட்டத்துக்கு வராததால் எந்தமுடிவையும் தீர்மானிக்கமுடியவில்லை, காரணம் கருத்து
வேறுபாடு, இந்தஅமைப்பை ஏற்படுத்தி எனது பணத்தையும், நேரத்தையும்தான்
செலவு செய்திருக்கிறேனே தவிர வேறு நோக்கம் ஒன்றுமில்லை எனது WEBSITE டில் நான் வெளியிடும் விசயங்களை ஆத்மார்த்தமாய் படித்து,
அறிவுப்பூர்வமாய் உணர்ந்து பார்த்தால் தெரியும் இது உண்மையென, நாம் எவ்வளவோ செலவு
செய்கிறோம், அதிலொரு துளி நல்லகாரியங்களுக்கு செய்யலாமே !தேவகோட்டையர்கள் செலவு செய்வதில்
சளைத்தவர்கள் அல்லர் ! என்பது எனக்கும் தெரியும், இந்த அமைப்பை
ஏற்படுத்தியபிறகு, நமது ஊரில் நமக்கு நல்லபெயரும், பொருளாதாரத்தில் நமக்கு பலனும் கிடைத்துள்ளது
என்பதை யாரும் மறக்கவேண்டாம் SAUDI ARABIA வில் வேலைசெய்யும் ஒருவர் எனக்கு PHONE செய்து நானும் சந்தாபணம் தருகிறேன் என்று சொன்னார், உங்கள்
எல்லோருக்கும் தெரிந்த அவர் தேவகோட்டையைச் சேர்ந்த எனது நண்பர், வெல்டர் சுப்பிரமணியன்
அவர்கள். சந்தாபணம் செலுத்துவதால் நமக்கு நஷ்டம் வரப்போவதில்லை
மீண்டும் நாமே எடுத்துக்கொள்ளும் வழிகள் பலஉண்டு.