தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 02, 2015

Delhi, Doctor Don.

எமது இனிய நண்பர் Bஜி in கோரிக்கையை ஏற்று Kஜி in அவசரடி.
(இது 2 G விவகாரமல்ல)
 
01.
டாக்டர் எனக்கு உருவங்கள் எல்லாமே வித்தியாசமா தெரியுது.
அப்படி எந்த ? வகையான உருவங்கள் தெரியுது ?
காலையிலே எந்திரிச்சா ? கடன்காரன் எல்லாம் சொறிநாய் உருவத்துல காட்சி தர்றான்.
? ? ?
02.
டாக்டர் நான் ஆபரேஷன் செய்யலைனா ? பிழைக்க மாட்டேனா ?
பிழைக்கலாம்தான், ஆனால் ? நான் பொழைக்க முடியாதே..
? ? ?
03.
டாக்டர் என்னை எப்படியாவது காப்பாற்றிடுங்கள் அது உங்க கையிலதான் இருக்கு.
உண்மைதான் ஆனால் ? அது இப்ப உங்க பையிலதான் இருக்கு.
? ? ?
04.
டாக்டர் எனது கணவருக்கு வர்ற சனிக்கிழமைதான் ஆப்ரேஷன் செய்வேனு ஏன் ? அடம் பிடிக்கிறீங்க ?
அன்றைக்குதான் என்னைப் பிடிச்சுருந்த பீடை விலகுதுனு சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து சொல்லியிருக்காரே... இதனாலே உங்களுக்கு பிரட்சினை என்ன ?
இல்லை சனிப்பொணம் தனியாப் போகாதுனு சொல்வாங்க, அதான்....
? ? ?
05.
டாக்டர் எனது இடது கண் பார்வை இப்ப நல்லாத் தெரியுது ஆனால் ? ஏற்கனவே நல்லாத்தெரிஞ்ச வலது கண் பார்வை தெரியலையே... ?
ஒரு நல்ல காரியம் நடக்கும்போது சில தவறுகள் நடக்கும் இதை அனுசரிச்சு போறதுதான் வாழ்க்கை.
? ? ?
06.
டாக்டர் போனமுறை நெஞ்சுவலிக்கு வேற மருந்து எழுதி தந்ததீங்களே....
உண்மைதான் இந்தக் கம்பெனி எனக்கு நிறைய கமிஷன் தர்றாங்களே...
? ? ?
07.
டாக்டர் என்னோட இருதய ஆப்ரேஷனுக்கு எவ்வளவு செலவு ஆகும் ?
நாளைக்கு வாங்களேன் பில்டிங் இஞ்சினியர் இருதயராஜ் கிட்டே கேட்டு சொல்றேன்.
அவருட்டே ஏன் ? கேட்கிறீங்க ?
அவர்தானே என்னோட புது கிளினிக் கட்டிக்கிட்டு இருக்காரு...
? ? ?
08.
டாக்டர் எனக்கு இரவு முழுக்க தூக்கம் வராமல் கஷ்டமாக இருக்கு.
பகல் நேரத்தில் ஆபீஸில் தூங்குவதை நிறுத்துங்க...
டாக்டர் நான் பகலில் வீட்டில்தானே தூங்குறேன்.
அப்ப எங்கே ? வேலை செய்றீங்க ?
இரவு நேரத்துல பேங்க்ல செக்யூரிட்டி.
? ? ?
09.
டாக்டர் இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் எனக்கு குழந்தை பிறக்கும்னு சொல்றது நம்ப முடியலையே...
ஏன் ? நம்பிக்கை இல்லை பலரும் ? இதை சாப்பிட்டு பலன் அடைஞ்சிருக்காங்க...
இல்லை டாக்டர் எல்லார் வீட்டிலும் மனைவிதானே குழந்தை பெறுறாங்க அதானாலதான் கேட்டேன்.
? ? ?
10.
கங்கிராட்ஸ் நீங்க அப்பாவாகப் போறீங்க உங்க மனைவி கர்ப்பமாக இருக்காங்க...
அப்படினா ? என்னோட மனைவி அம்மாவாக முடியாதா ? டாக்டர்.
? ? ?

பகவான்ஜி படிச்சோமா, கருத்துரை போட்டோமானு போகனும் மறுபடியும் கொக்கியை போடக்கூடாது சொல்லிட்டேன்

குறிப்புகடந்த எனது பதிவு அந்த நாள்க்கு நான் பின்னூட்டம் இடவில்லை காரணம் பிறகு சொல்வேன்.

59 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே.

  எப்படிங்க இப்படி கலக்குறீங்க.? சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. நாளை காலையில் நான் கண்டிப்பாக டாக்டரிடந்தான் செல்ல வேண்டும்.அவரை பார்த்ததும் தங்கள் காமெடி நினைவு வந்து விட்டால், போச்சு,! பல்லைத் தட்டி கையில் தந்து அனுப்பி விடப் போகிறார்.

  அனைத்துமே மிகச் சிறப்பாக உள்ளது. 3 4 7 9 10 போன்றவை மிகச் சிறப்பாக உள்ளது. கவலைகளை மறக்கச் செய்து மனம் விட்டு சிரிக்க வைத்தமைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ முதல் வருகைக்கும் ரசித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கும் நன்றி டாக்டர் பீஸ் பிடுங்கினதுக்கு நான்தான் காரணம்னு என்மீது பழி போட்டுறாதீங்க...

   நீக்கு
 2. தம 2

  கலகலப்பு தொடர்கிறது.....வாழ்த்துக்கள். ரசனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோ ஓட்டுப்போட போன பதிவை படிச்சுட்டுட்டு சோகத்துல மறந்துட்டீங்க.... இந்தப்பதிவை படிச்சுட்டு சந்தோஷத்துல மறந்துட்டீங்க... இருங்க.... அடுத்த பதிவை கோபமாக போடுறேன்.

   நீக்கு
 3. என்ன இப்படிப்போட்டு கலக்கறீங்க? சிரிச்சு முடியலீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா இது அவசரடி ஆகவே இப்படி ஆகிவிட்டது என நினைக்கின்றேன் அடுத்த முறை சிரிக்க வைக்க முயல்கிறேன்.

   நீக்கு

 4. மருத்துவருடனான சந்திப்பு
  நல்ல தகவல் வெளியீடு
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் மட்டுமா ? மருத்துவரை சந்தித்தேன் இனிவரும் சந்ததிகள் மருத்துவரை காணாமல் மரணத்திற்க்கு செல்ல முடியாது காரணம் அவர்களிடம்தானே டிக்கெட் இருக்கிறது.

   நீக்கு
 5. அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. போன மாசம் நம்மூரில் பாதுகாப்பு வேணும்னு சொல்லி சில மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செஞ்சாங்க. அன்னைக்கு சித்ரகுப்தனுக்கு வந்து சேர வேண்டிய உயிர்களெல்லாம் வாய்தா வாங்கிடுச்சுங்களாம். வாழ்க மருத்துவ!! சேவை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இது பதிவை விட ஸூப்பராக இருக்கு என்ன நண்பரே கடந்த பதிவுக்கு ஓட்டு மட்டும் போட்டு விட்டு போயிட்டீங்க....

   நீக்கு
 7. டாக்டர்களை இப்படி அடிச்சித் தொவைச்சு காயபோடுடீன்களே அண்ணா:)::))))))::)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளதைச்சொன்னால் பொல்லாப்பா ? இது நல்லா இருக்கே.... அப்புறம் இந்த மா3 பதிவு போடமாட்டேன் சொல்லிப்புட்டேன் ஆமா...

   நீக்கு
 8. பகவான்ஜி அவர்கள் தனக்கு இப்படி ஒரு கடும் போட்டி உருவாகும்
  என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்
  அனைத்தும் அருமை நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எங்களுக்குள் போட்டி வராது காரணம் நாங்களிருவரும் ஒருஜாதி Bஜி & Kஜி பார்த்தீங்களா ?

   நீக்கு
 9. எப்படி இவ்வளவு கற்பனைகள் ஆச்சரியமாகவே உள்ளது அனைத்தும் ரசித்தேன்.சிலர் மருத்துவரிடம் போவதே இல்லை ஏனெனில் அங்கு போனவுடன் இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி மருந்துகளைக் கொடுத்து நிரந்தர நோயாளி ஆக்கி வடிக்கையாளர்கள் ஆக்கிடுவார்களோ என்கிற பயம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கவிஞரே விஸ்தாரமாக ஒரு கருத்தை முன் வைத்தீர்கள் அருமை வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. வசூல் ராஜக்கள் எம்பிபி எஸ்ஸைின் புகழை இவ்வளவு உயரத்துக்கு தூக்கி வைத்த தங்களுக்கு பணம் செலவழித்து ஓய்ந்து போன வர்களின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இதையும்கூட புகழ்னு சொல்லலாமா ?

   நீக்கு
 11. இது தான் 3D நகைச்சுவை!..

  இஞ்சிநீருக்கிட்ட கேட்டதுக்கு அப்பறந்தான் இருதய ஆபரேஷன்!..

  ஆகா... ஊருக்குப் போன இஞ்சிநீரு கொஞ்சம் லேட்டாகவே வரட்டும்..

  நோயாளி லேட் ஆகாம பிழைத்துக் கொள்வார்!..

  காலையில் நகைச்சுவை விருந்து - அட்டகாசம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நல்லவேளை திருடிய நகைச்சுவைனு சொல்லலை..
   இதுக்குத்தான் பெரியவங்க சொல்லி வச்சாங்க இஞ்சி நீரு குடிச்சா நெஞ்சுவலி தீரும்னு... எதற்க்கு தேவையில்லாமல் டாக்டருக்கிட்டே போயிட்டு வருகைக்கு நன்றி ஜி.

   நீக்கு
 12. நல்ல நகைச்சுவையான பதிவு. எல்லாமே கலக்கல் சகோ.

  பதிலளிநீக்கு
 13. அனைத்தையும் ரசித்தேன் சிறப்பாக 8, 9, 10, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றி.

   நீக்கு
 14. இப்படி பதிவிட்டால் உங்களுக்கு எந்த டாக்டரும் மருத்துவம் செய்ய மாட்டாங்க... பிறகு பகவான்ஜியிடம் தான் செல்ல வேண்டியிருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க... இப்பத்தான் ஊரிலிருந்து எங்களது குடும்ப டாக்டர் படிச்சுட்டு போண் செய்தார் ஊருக்கு வா உன்னை வச்சுக்கிறேனு... நீங்க சொல்றதைப் பார்த்தால் பயமாகீது.

   நீக்கு
 15. மருத்துவர் பற்றிய நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை. அதுவும் அண்ட் 7 மற்றும் 8 ஆம் நகைச்சுவை துணுக்குகளை மிகவும் இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரசித்ததை குறிப்பிட்டமைக்கும், தொடர் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 16. அனைத்தும் சுவை தேன்!

  பதிலளிநீக்கு
 17. பகவான் ஜி மீன் கொக்கியை
  கொக்கு மாதிரி கொத்தி எடுத்து
  முள்ளில்லாத மீன் குழம்பு வைத்து தந்து விட்டீர்கள் கில்லர்ஜி அவர்களே!
  பகவான் ஜி + கில்லர்ஜி இந்த 2 ஜி விவகாரம்! செம காரம்!
  மருத்துவர் சிரிப்பு நினைத்தாலே பூரிப்பு!
  வாழ்க
  முனைவர் கில்லர்ஜி MBB
  முனைவர் பகவான் ஜி
  சிறப்பு பட்டம் பெற்று இருவரும் வாழக! சிரிப்போடு!

  நட்புடன்,
  புதுவை வேலுபகவான் ஜி மீன் கொக்கியை
  கொக்கு மாதிரி கொத்தி எடுத்து
  முள்ளில்லாத மீன் குழம்பு வைத்து தந்து விட்டீர்கள் கில்லர்ஜி அவர்களே!
  பகவான் ஜி + கில்லர்ஜி இந்த 2 G விவகாரம்! செம காரம்!
  மருத்துவர் சிரிப்பு நினைத்தாலே பூரிப்பு!
  வாழ்க
  முனைவர் கில்லர்ஜி MBBS
  முனைவர் பகவான் ஜி MBBS
  சிறப்பு பட்டம் பெற்று இருவரும் வாழக! சிரிப்போடு!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே நாங்க எம்.பி.பி.எஸ் ஆஆஆஆஆஆஆஆ அப்படீனாக்கா ? நோயாளி யாரு ? நேபாளியா ?
   நான்கூட நீங்க ஏதும் கொக்கி போட்டுருவீங்களோனு நினைச்சேன்...

   நீக்கு
 18. கரந்தையார் சொன்னது போல் கடும் போட்டி உருவாக்கி விட்டீர்கள் ...தமிழ் மணத்திலும் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை ,உங்கள் அபிமான சோலாந்தூர் சோசியர் சோனை முத்துவின் விலாசத்தை கொடுங்கள் :)
  அந்த நாள் பதிவுக்கு நாங்கள் போட்டது பின்னூட்டம் ,அதற்கு நீங்கள் சொல்ல வேண்டியது மறுமொழி .....அதை ஏன் சொல்லலே ,துக்கமா ?
  (எப்பூடி என் அடுத்த கொக்கி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அப்படியெல்லாம் நடக்காது சோசியர் நம்பர் எழுதிக்கங்க
   000 109 876 543 210
   துக்கம் இல்லை ஜி ஒரு பெயரில்லா என் மனதை காயப்படுத்தி விட்டது.

   நீக்கு
 19. அனைத்தும் சிறப்பு/ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 20. ஹஹஹஹஹ்ஹ செம போங்க....எல்லாமே...அதுல ரொம்ப பிடிச்சதுன்னா

  சனி பொணம், கண்பார்வை, பில்டிங்க் எஞ்ஜினீயர்...., மனைவி அம்மாவாக முடியாதா...ஹஹஹஹஹஹ்

  டாக்டர்கள் எல்லாரும் ஏதோ போராட்டம் பண்ணாங்களாம்...ஹஹ்ஹ அவங்க கை வெச்சாலும் பாலுதான், வைக்காட்டியும் பாலுதான்.....ம்ம் என்னத்தச் சொல்ல...நல்ல டாக்டருங்களும் இருக்காங்க....ஆனா வெளில தெரிய மாட்டாங்க....

  தெரியுமா ஜி அனாவசியமா மருந்து எழுதாக டாக்டருங்க எல்லாம் நல்ல டாக்டருங்க கிடையாது அப்படின்றது மக்கள் கருத்து...!!! இது எப்புடி?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க விலாவாரியாக விவரித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி
   டாக்டருங்க போராட்டம் நீடித்தால் நண்பர் அன்பே சிவம் சொல்வதுபோல சித்துரகுப்தனுக்கு விடுமுறைதான்.

   நீக்கு
 21. இரண்டு ஜி களுக்கு இடையில் எங்களுக்குக் கொண்டாட்டம்தான்

  தொடருங்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்தான் சொன்னபடியே 30ம் தேதி வந்து விட்டீர்களே.....

   நீக்கு
 22. நான் தான் கடைசி ஆளா, ரொம்ப சிரித்துவிட்டேன் போல, கடன் கொடுத்தற்கு இப்படி ஒரு பட்டமா? தேவையா இது.அனைத்தும் அருமையாக இருக்கு சகோ, நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் எவனுக்குமே கடன் கொடுக்ககூடாது தேவையா இது.

   நீக்கு
 23. வணக்கம்
  ஜி

  கேள்வி கள் கேட்டு அசத்தி விட்டீர்கள் அதுவும் இறுதியில் பகவான் ஜிக்கு இப்படி ஒரு எச்சரிக்கையா... ஆகா...ஆகா.. பகிர்ந்ததை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்ஜீ !...

  டாக்டர் டாக்டர் !... சீக்கிரம் பாருங்க என்னோட கை துண்டாயிடிச்சி....

  அட ! கொஞ்சம் இருய்யா... அங்க பாரு... தலை துண்டானவரே சத்தம் போடாம கிடக்கிறார் !

  ஏதோ என்னால் முடிஞ்சதுஜீ !

  நன்றியுடன்
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரது ? அடடே ஒசரமான எடத்துலேருந்து வந்துருக்கியலா ? அதுனாலே பட்டுனு மட்டுப்படலை நலமோனோ ?
   தங்களது நகைச்சுவையும் ஸூப்பர் தலை வெட்டிக் கிடக்கிறவன் மயக்கமா இருக்கான் போல அதனாலதான் பேசாமல் இருக்கான்.

   பொருமையாக கடலில் புதையல் எடுத்தேன் நண்பரே...

   நீக்கு
 25. சபாஷ் சரியான போட்டி, பகவான்ஜியுடன். உங்களிருவரின் பாணியும் ஒன்றையொன்று விஞ்சும் அளவு உள்ளது. வழக்கமான பிற பதிவுகளில் காணப்படும் உத்தி இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு நகைச்சுவைப் பதிவுகளை தந்துள்ள முறை மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றி போட்டி எல்லாம் வேண்டாமே....

   நீக்கு
 26. நகைப்பணி தொடரட்டும் தோழரே ...
  எதுவம் தவறில்லை
  எனவே அனுசரிக்காமல் ஒரு தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தோழரே எமது வீட்டில் அனைவரும் நகைப்பணியே என்னைத் தவிற... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 27. ஹா..ஹா... நல்லாவே doctors ஐ உருட்டியிருக்கிறீங்க. ரசித்து சிரித்தேன். சோகத்திலும், நகைச்சுவையிலும் கண்ணீரை வரவழைக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நன்றி.
   சிரித்தாலும் கண்ணீர் வரும்...
   அழுதாலும் கண்ணீர் வரும்..
   - கண்ணதாசன்.

   நீக்கு
 28. நீங்கள் போட்டுள்ள அத்தனையும் நிஜத்தில் நடக்கின்றவையாக இருக்கின்றன, காமடி என்று சொல்லவே முடியாது, கடைசி ஜோக், No.10 பிரமாதம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே அவன் அவ்வளவு உலகம் தெரியாதவனாக இருக்கிறானே நண்பரே...

   நீக்கு
 29. '2ஜி (பகவான் ஜி, கில்லர் ஜி) பரபரப்பு வலையுலகில் இன்னமும் ஓயவில்லை போலும்..'
  tamilmanam +1

  பதிலளிநீக்கு