தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 17, 2021

சம்பல், சாம்பல் சாம்பசிவம்

ட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இதெல்லாம் காலக்கொடுமைதானே... நண்டு கொழுத்தால் வலையில் நிற்காது என்பார்களே... அதைப்போல் நாட்டுல எத்தனையோ பெண்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இவளுக்கு கணவன் சண்டை போடமாட்றானாம். 

இவளுக்கு நம்ம தமிழ்நாட்டு சிவகாசி Chivas Regal சிவசம்போ மாதிரி ஆளுகள்தான் சரியா வரும். நாட்டுல அவனவன் டாஸ்மாக்கே கதி என்று கிடந்து வேலைக்கு போகாமல் தாலியைக்கூட கழட்டி அடகு வைத்து குடிக்கிறான். இவளுக்கு புருசன் சண்டை போட மாட்றானாம், அதுவும் பாசமாக இருக்கிறானாம். ஏண்டி கொங்காச்சிறுக்கி உனக்கு மூளை குழம்பிப் போச்சோ ? சந்தோஷமாக வாழ்ந்து, இறந்து, எரிந்து, சாம்பலாகி சிவனடி சேராமல்... இதுக்குப் போயி நீதிமன்றம் போய் இருக்கிறாள்.

சண்டை போட ஆசையிருந்தால் நம்மூர் குழாயடிக்கு வா மங்காத்தாமாரு நிறைய இருக்காங்க... ஒரேநாளில் உன்னை ஒக்குட்டுருவாளுக... ஒழுங்கா இருந்துக்க இல்லைனா கீழ்ப்பாக்கம் கொண்டு போயிடப் போறாங்கே... பார்த்து நடந்துக்கத்தா... சம்பல்க்கார சாம்பசிவம் பொண்டாட்டி.

சிவாதாமஸ்அலி -

இவள் ஊருப்பேரே சம்பல் என்று இருக்கே... ?  

ChavasRegal சிவசம்போ-

நாம அப்ளிகேஷன் போட்டு பார்க்கலாமோ... ?

23 கருத்துகள்:

  1. "இந்த நீதிமன்றம் எத்தனையோ வித்தியாசமான வழக்குகளை சந்தித்திருக்கிறது....."

    ஹா..  ஹா..  ஹா...

    நல்ல பெண்மணி...  மிக நல்ல பெண்மணி!!!

    பதிலளிநீக்கு
  2. அந்த பெண்மணிக்கு பூரிக்கட்டையால் அடிக்க வாய்ப்பே அந்த கணவன் கொடுத்திருக்கமாட்டார் அதனால் அப்படிபட்ட கணவனோடு வாழ்வதற்கு பதிலாக மதுரைத்தமிழன் போல உள்ள ஆள் கூட வாழ அந்த பெண் ஆசைப் பட்டு விவாகரத்து கேட்டு இருக்கலாமோ என்னவோ

    பதிலளிநீக்கு
  3. ஐயோ சாம்பசிவம் என்பது கீதா மாமியின் மாமா பெயர் அல்லவோ! மாமி கோபித்துக் கொள்ள (ல்ல)ப் போகிறார்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  4. ஏதேனும் காரணத்துல அவனை விட்டுப் பிரிந்து, அடுத்த சேப்டருக்கு அவள் அடிபோட்டிருப்பாள். அதைப் புரிந்துகொள்ளாமல் நீங்களும் ஒரு இடுகையைப் போடறீங்களே கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
  5. அந்தம்மா வேறு எதையோ மனசில் வைத்துக்கொண்டு(அதையெல்லாம் வெளிப்படையாச் சொல்ல முடியாது) இப்படியொரு காரணத்தைச் சொல்லியிருக்கு. நீங்கபாட்டுக்கு அதைத் திட்டித் தீர்த்துட்டீங்க. பாவம்!

    மனசுலாயோ கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி! உங்களுக்கு நல்ல செய்தி பாருங்கள் இடுகை போடுமளவிற்கு! அப்பெண்ணிற்குக் கொடுத்துவைக்கவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி முன்ன இப்படி ஒரு செய்தி போட்டிருந்தீங்கல்லியா? அப்படி ஒரு நினைவு.

    அப்பெண்ணிற்கு வேறு காரணம் இருக்கலாம்...இது சும்மா டுபாக்கூர். இதெல்லாம் கோர்ட்டில் செல்லுபடியாகுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. என் நினைவு சரிதான்...தேதி பார்த்தேன் பழைய செய்தி நீங்க முன்னமேயே போட்டிருந்தீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பரபரப்புக்காக போடப்பட்ட செய்தியாகவே தெரிகிறது. பல செய்திகள் இப்படித்தான் வருகின்றன. தினத்தந்தி பாணி - இளம்பெண் கொலை என்ற தலைப்பில் 60 வயது மூதாட்டியின் கொலை பற்றி எழுதி இருப்பார்கள்! :)

    பதிலளிநீக்கு
  10. ஆம் பரபரப்புக்குப் போட்ட செய்தியாகத்தான் எனக்கும் தோணுகிறது....இந்தக் கணவன் நித்தமும் தகராறு செய்கிறான்..எனவே விவாகரத்து கொடுங்கள் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  11. வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது தளம் கைப்பேசியில் திறந்திருக்கின்றது.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...

    தளத்திற்கு வருவதில்லை என்று எண்ணியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்...

    பதிலளிநீக்கு
  12. தேனோடு கலந்த தெள்ளமுதம்..
    கோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றல்..

    இந்த வார்த்தைகளுக்கெல்லாம் இனிமேல் அர்த்தமே இல்லை...

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஜி!...

    தாங்கள் சில மாதங்களுக்கு முன்பாக இங்குள்ள அடையாளம் ஒன்றைப் போட்டிருந்தீர்கள்.. Fb ல் இணைப்பானது பிளாக்கரில் திறக்கவில்லை... Blocked என்று வந்தது.. வெளி நாட்டுச் சதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. திருவிளையாடல் வசனம் "குற்றம் கண்டு பிடித்தே"...
    "இதில் நீர் எந்த வகை என்று "
    ஞாபகம் வருகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  15. பெண் மனசு ஆழமென்று உங்களுக்கு தெரியாததா சார்?
    இதற்கான காரணங்களை மேலே நன்பர்கள் சொல்லிவிட்டார்கள்.
    அப்ளிக்கேஶன் போட்டா வடிவேல் ஜோக் மாதிரி நமக்கு மூனு வருஶத்திற்கு பிரகு தான் ஸ்லாட் கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  16. உயர்ந்த மனிதன் (சிவாஜி படம்) செளகார், சகுந்தலா வசனம் நினைவுக்கு வருகிறது.

    ஊடலும் நல்லது என்கிறார் போலும்.

    பதிலளிநீக்கு
  17. சண்டைக்கார மனைவி. காலக்கொடுமை.

    பதிலளிநீக்கு
  18. என்னவெல்லாமோ செய்தி.இதற்குப் பின்னால் வேறு விஷயம் இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
  19. சிரிப்புத் தான் வருகுதையா! ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  20. நிஜம்தானா? அந்தப் பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து கொடுத்திருப்பார்களோ?

    பதிலளிநீக்கு
  21. அறியாத பிள்ளை தெரியாமல் செய்த பிழை... 😂😂😂😂
    அவரோட பொறுமைய இன்னும் சோதிக்குது போல அந்த மனைவி ...

    பதிலளிநீக்கு