இது பலரும் கேட்டு அறிந்த கதையாக இருக்கலாம் இருப்பினும் எனது
பாணியில்.... கொஞ்சம் சொதப்பி உங்கள் பார்வைக்கு....
சிவனும், பார்வதியும்
ஒருநாள் சிட்அவுட்டில் நின்று கொண்டு நாட்டு நடப்பைப்பற்றி விவாதித்துக் கொண்டு
இருந்தார்கள்
பிரபு தங்களது பக்தன் பக்தவச்சலம் வாழ்க்கையில் மிகவும்
கஷ்டப்படுகிறானே, கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா ?
என்ன செய்வது ? பார்வதி எல்லாம் அவனுக்கு எழுதியபடிதானே நடக்கும்
தங்களின் Testக்கு ஒரு Limit வேண்டாமா இப்படியா பக்தர்களை சோதிப்பது ?
வேண்டுமானால் நீ உதவி செய்து பாரேன்
பார்வதி தனது கழுத்தில் கிடந்த தங்கச் செயினை கழட்டினார். சிந்தாமணி தியேட்டரில் ராஜபார்வை மேட்னி ஷோ பார்த்து விட்டு
வெளியே வந்த பக்தவச்சலம் வீடு நோக்கி நடந்து கொண்டு இருக்கும் பொழுது நமக்கு கண்
தெரியாமல் போனால் படத்தில் நடித்த கமல் மாதிரிதானே கம்பு ஊன்றி நடக்க வேண்டும்
ச்சே எவ்வளவு கஷ்டமாக இருக்கும் திடீரென மனதில் தோன்றியது நாமலும் கமல் மாதிரி நடித்துப்
பார்ப்போமே சட்டென கண்களை இறுக்க மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்
மேலோகத்திலிருந்த பார்வதி கீழே பக்தவச்சலம் நடந்து போகும்
பாதையில் கடந்த வாரம் கல்யாண் ஜூவல்லர்ஸில் வாங்கிய செயினை போட.... சரியாக அந்த
செயினைக் கடந்தவுடன் பக்தவச்சலம் கண்களை திறந்து விட்டான் ஆத்தாடி எவ்வளவு கஷ்டமாக
இருக்கு நல்லவேளை எனக்கு கண் தந்த சிவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என
நினைத்துக்கொண்டே வீட்டுக்கு செல்ல... எதிர்புறம் பைக்கில் வந்த பகவான்ஜியின்
கண்களில் அந்த செயின் தென்பட சட்டென குனிந்து எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு குறுக்குச் சந்தில் வண்டியை பறக்க விட்டார்.
என்ன பிரபு தங்களது பக்தனுக்கு கிடைக்காமல் தங்களை வணங்காத
பகவான்ஜிக்கு கிடைத்து விட்டது
இதுதான் எழுதப்பட்ட விதி
அதெப்படி தங்களையே தினமும்
வணங்கும் பக்தவச்சலத்தை விட பகவான்ஜி முக்கியமா ?
அப்படியில்லை, பக்தவச்சலம்
தனது வாழ்வில் யாரையுமே சிரிக்க வைத்ததில்லை ஆனால் பகவான்ஜியால் தினம் பலரும்
அவரது வெப்ஸைடில் நகைச்சுவையைப் படித்து சிரித்து மகிழ்கிறார்கள் தனது வாழ்வில்
பிறரை மகிழ்விப்பவருக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைத்தே தீரும் தேவையில்லாமல்
இப்பொழுது எனக்கு செலவு வைத்ததுதான் மிச்சம்.
சரிதான் எனக்கு வேண்டாத வேலையால் செயின் போய் விட்டது சரி
கிளம்புங்கள் ஷாப்பிங்குக்கு கல்யாண்
ஜூவல்லர்ஸில் எனக்கு நகை எடுக்க வேண்டும் அப்படியே இந்த திருகாணியையும்
மாற்றிக்கொண்டு வருவோம்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது
தேவி, சித்திரகுப்தன் மாலை வருவதாக போண் செய்திருக்கின்றான்
அப்படியானால், டெபிட் கார்டை
கொடுங்கள் நான் கிளம்புகிறேன்
சிறிது நேரம் முன்புதான்
இளையவன் முருகன் திருப்பரங்குன்றம் போவதற்காக டெபிட் கார்டை வாங்கிக் கொண்டு போனான்
சரி, க்ரெடிட் கார்டையாவது
தாருங்கள்
அதை நேற்றே மூத்தவன்
பிள்ளையார்பட்டியில் ஏதோ தனக்கு விஷேசம் என்று வாங்கிப் போய் விட்டானே
சரி பணம் ஏதும் இல்லையா ?
சரி பணம் இருந்தாலும் எப்படி போவாய்
இண்டிகோவை இளையவன் எடுத்துப்போய் விட்டான், பென்ஸை பெரியவன் எடுத்துப்போய் விட்டான் ஓடியும் ஒர்க் ஷாப்பில் கிடக்கிறது.
நான் கால் டாக்ஸியில்
போகிறேன்.
நமது ரேஞ்சுக்கு கால்
டாக்ஸியில் போவது அழகா ?
அதற்காக இப்படி
நகையில்லாமல் இருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
இதுவும்கூட நல்லதுதான்
பக்தர்களும் உதவி கேட்டு உன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள் நாமிருவரும் நாளைக்காலை
தங்க மயில் ஜூவல்லரிக்கு போவோம்
ஹும் நம்மை வணங்காத
பகவான்ஜிக்காக நான் ஏன் நகை இல்லாமல் இருக்கவேண்டும் ?
இதுவும் எழுதப்பட்ட விதிதான் பகவான்ஜி நம்மை வணங்கா விட்டாலும்
பெயரில் நாம்தானே இருக்கிறோம் ஆகவேதான் ஆபரணம் கிடைத்து விட்டது.
சரி பகவான்ஜியிடமிருந்து அதைப்பறிக்க வழி இல்லையா ?
இருக்கிறது அது வேறு வகையில் மற்றொருநாள் கில்லர்ஜி கைக்கு
மாறிவிடும் இந்த மாற்றம் உலக நியதியாகும்.
ஹூம் என்னவோ போங்கள் கிச்சனில் குழம்பு சுண்டிய வாசம்
வருகிறது நான் போகிறேன்.
சரி அவர்கள் சாப்பிட போகிறார்கள் போல நாம் ஒதுங்கி கொள்வோம்.
சாம்பசிவம்-
இதுல கில்லர்ஜி வரவே இல்லையே... ?
Chivas Regal சிவசம்போ-
அடுத்து பதிவுல வருவாரோ ? என்னமோ....
ஆகா ,இப்படியென்று தெரிந்து இருந்தால் ,அந்த செயினை மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து இருப்பேனே :)
பதிலளிநீக்குகில்லர்ஜி...சீக்கிரம் மதுரைக்கு வாங்க ,அந்த செயினை உங்கள் கழுத்தில் மாட்டி விடுகிறேன் ...சிவன் பார்வதியிடம் என்னை அறிமுகம் செய்த நன்றிக் கடனுக்கு :)
வாங்க ஜி அடுத்த பதிவை படித்தால் இப்படிச் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஹி ஹி ஹி...
நீக்குஅப்படின்னா ,சம்போ சிவ சம்போ ,அந்த செயின் எனக்கு அம்போதானா :)
பதிலளிநீக்குJust Wait and see...
பதிலளிநீக்குஏழையாய் போன பார்வதி! ஒரே ஒரு செயின்தானா பாரவ்தி கழுத்தில்? சிவன் மற்றவற்றையெல்லாம் ஹிந்தி படிக்க அனுப்பி விட்டார் போல! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குவருக நண்பரே ஒருவேளை சேட்டுகடையில் அடகு வைத்து இருப்பார்களோ...?
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குதங்கமழை பொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...!
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...? சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?
த.ம.4
வருக மணவையாரே என்மீது உள்ள கோபத்தைக்காட்ட என்னை சிங்கத்துடன் ஒப்பிட்டு எனக்கு ''ஐந்தறிவு'' என்று சொல்லி விட்டீர்களே...
நீக்குபகவான்ஜியின் நிலை என்னவாகப் போகிறதோ? செயின் அவருக்கு உண்டா,இல்லையா?
பதிலளிநீக்குவருக முனைவரே எல்லாம் பகவானுக்கே தெரியும்.
நீக்குபகவான்ஜி சார் செயின்ல பாதி எனக்கு ...
பதிலளிநீக்குஎனக்கு முழுசா வருகிறதா என்று ,அடுத்த பதிவு வரை பார்த்துட்டு கொடுக்கிறேன் :)
நீக்குநண்பர் மலையப்பன் அவர்களுக்கு அடுத்த பதிவிலும் பாதி கேட்பீர்களா ?
நீக்குகில்லர்ஜி ,இதற்கு என்பதைக் கிளிக் செய்தால் நம்பள்கி பதிவுக்கு கொண்டு போய் விடுகிறது ! சரி செய்யுங்க :)
பதிலளிநீக்குதவறுக்கு வருந்துகிறேன் தகவலுக்கு நன்றி ஜி
நீக்குஇப்போது சரியாகி விட்டது ,நன்றி :)
பதிலளிநீக்குஉங்கள் பாணி கதை நல்லா இருக்கிறது.
பதிலளிநீக்குயாருக்கு கிடைக்க வேண்டும் என்று இருக்கோ அவர்களுக்கு தான் கிடைக்கும்.
வருக சகோ உண்மையான வார்த்தை.
நீக்குமுன்பாதிக்கதை தெரிந்ததுதான் பின் பாதி சொதப்பல் ஒன்றும் இல்லை,.கற்பனை கரை புரண்டோடுகிறது
பதிலளிநீக்குவாங்க ஐயா இன்னும் பாதி இருக்கின்றது...
நீக்குகல்யாண் ஜ்வல்லர்ஸ் தங்கம் பத்தி முகநூலில் கிழி கிழினு கிழிக்கிறாங்களே! :) உண்மை எதுனு தெரீயாது! இருந்தாலும் எனக்கு நகை ஆசை கிடையாது. அதனால் வேண்டாம். :)
பதிலளிநீக்குவாங்க அப்படியெல்லாம் வேண்டாம்னு சொல்லப்படாது.
நீக்குபகவான் ஜி அதிர்ஷ்டக் காரர்தான்! அருமையான கற்பனை!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஹஹஹஹ் பகவான் ஜிக்கு எப்படி செயின் கிடைத்தது என்று இப்போதுதான் தெரிகிறது! அவர் தனது கவசமான அந்தக் கூலிங்க்ளாசை எடுத்துவிட்டு வண்டியில் வந்ததால்தான்!!! ஹரே பக்வான் ஜி இல்லையா அதான் முக்கண்ணின் உதவியால் வருவதை அறிந்து க்ளாசை எடுத்துவிட்டு வந்திருக்கிறார். அந்த முக்கண்ணனுடன் என்ன டீலிங்கோ தெரியலை...இதுல கில்லர்ஜியுடன் வேறு டீலிங்கா சரியாப் போச்சு! அந்தச் செயின் மீண்டும் பார்வதிக்குப் போனாப்புலதான்...அதுக்கு முன்னாடி அந்தச் செயின நல்ல தங்கமானு கொஞ்சம் பார்த்துக்கங்க...பகவான் ஜி...இல்லைனா நைசா கில்லர்ஜி கிட்ட சிவன் கொடுத்த வ்ரப்பிரசாதம், பொக்கிஷம் அப்படினு தள்ளிவிட்டுருங்க .ஹிஹிஹி
பதிலளிநீக்குவாங்க அடுத்த பகுதியை பார்த்து விட்டு முடிவு சொல்லுங்கள்.
நீக்குஉங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தினர். தயாராக இருங்கள். வாய்ப்பு வந்தே தீரும்.
பதிலளிநீக்குவந்தால் நான் தயார் நண்பரே....
நீக்குநல்ல கற்பனை!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குரசிக்க வைத்த கற்பனை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா..
வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்கு>>> ஓடியும் ஒர்க் ஷாப்பில் கிடக்கின்றது!..<<<
பதிலளிநீக்குபழைய காளை மாடு கெடந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா!...
ஆடி காரை நம்பி அதையும் வித்து காசு பார்த்தாயிற்று...
அவசரத்துக்கு ஆடியும் இல்லை..
ஒத்தாசைக்கு ஓடியும் இல்லை...ன்னா என்னதான் செய்றது?...
வாங்க ஜி உண்மையான பழைமையை தோண்டி எடுத்து சொன்னீர்கள் அர்த்தம் வேதனையைத்தான் தருகின்றது என்ன செய்வது எல்லாம் விஞ்ஞான மோகம்.
நீக்குநல்ல கற்பனை. அடுத்த பதிவில் கொடுத்ததை எடுத்தது எப்படி என படிக்க வேண்டும்! இதோ வருகிறேன்.
பதிலளிநீக்குவருக ஜி வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி
நீக்குகிடைக்க வேண்டியவர்களுக்குத்தான் கிடைக்கும் என்று பகவானே சொல்லியதை மீண்டும் நிணைவு படுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான் கிடைக்க வேண்டியவர்களுக்கே கிடைக்கும்.
நீக்குஆகா! பகவான் என்ற பெயருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? திரு பகவான்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களுக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே
நீக்குஉங்கள் கதை மிகவும் அருமை. நான் ,சில கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க
பதிலளிநீக்குhttps://play.google.com/store/apps/details?id=manam.ajax.com.manam
வருக நந்தினி ஸ்ரீ அவர்களே வருகைக்கு நன்றி இதோ செல்கிறேன்.
நீக்கு