தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 21, 2024

வள்ளியை கிள்ளியபோது...

 

01.  மளிகை கடை வேலை செய்து மாளிகை வீடு கட்டியவர்களும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.
 
02.  மூளை இருந்தும், மூலையில் கிடந்து காலத்தை ஓட்டியவர்களும் உண்டு.
மூலையில் கிடந்து மூளையை மூலதனமாக்கி சம்பாரித்தவர்களும் உண்டு.
 
03.  காதல் செய்வதால் மோதல் வருவதும் உண்டு.
மோதல் வந்ததால் காதல் வருவதும் உண்டு.
 
04.  மாண்டு போகும் வரையில் மண்டுவாக வாழ்ந்தர்களும் உண்டு.
மண்டுவாக வாழ்ந்து மாண்டு போகாதவர்களும் உண்டு.
 
05.  விட்டில் பூச்சி கடித்த ஆச்சிகளும் உண்டு.
வீட்டில் ஆச்சி அடித்து மாண்ட பூச்சிகளும் உண்டு.
 
06.  காவி உடுத்தி பாவியானகளும் உண்டு.
பாவியானதால் காவி உடுத்தியர்களும் உண்டு.
 
07.  மகான்களாகி பெற்ற மகன்களும் உண்டு.
மகன்கள் பெற்றிடாத மகான்களும் உண்டு.
 
08.  கட்சி மாறியதும் காட்சி மாறுவதும் உண்டு.
காட்சி மாறினாலும் கட்சி மாறுவதும் உண்டு.
 
09.  ஊரணியில் குளிக்க ஆரணி போனவரும் உண்டு.
ஆரணி போய் ஊரணியில் குளிக்காதவரும் உண்டு.
 
10.  பழி வாங்க துடிப்பவர்கள் பலியானதும் உண்டு.
பலியானாலும் பழி வாங்காதவர்களும் உண்டு.
 
11.  கண்ணடி பட்டு கண்ணாடி உடைவதும் உண்டு.
கண்ணாடி உடையாமல் கண்ணடி படுபவரும் உண்டு.
 
12.  அழகியை கண்டு விலகியவர்களும் உண்டு.
விலகியவர்களில் அழகிகளும் உண்டு.
 
13.  பண்டு போட்டு பணத்தோடு மீண்டு வந்தவர்களும் உண்டு.
மீண்டு வராமலேயே பண்டு பணத்தை இழந்தவர்களும் உண்டு.
 
14.  படம் பார்த்து வாழ்க்கை பாடம் கற்றவர்களும் உண்டு.
பாடம் என்னவென்று அறியாமல் படம் பார்த்தோரும் உண்டு.
 
15.  உதவி செய்து பதவி பெற்றவர்களும் உண்டு.
பதவி இருந்தும் உதவி பெறாதவர்களும் உண்டு.
 
16.  துபாய் சென்று தூப்பாய் கழுவியவர்களும் உண்டு.
தூப்பாய் கழுவியும் துபாய் செல்லாதவர்களும் உண்டு.
 
17.  பெண்ணை பெற்று பண்ணைக்கு கொடுத்தவர்களும் உண்டு.
பண்ணையார் வீட்டில் பெண்ணை கட்டியவர்களும் உண்டு.
 
18.  பொன்னுக்காக பெண்ணை விரும்பியவர்கள் உண்டு.
பெண்ணுக்காக பொன்னை இழந்தவர்களும் உண்டு .
 
19.  வீணாவின் கடையில் வீணை வாங்கியவரும் உண்டு.
வீணை வாங்கி வீணாப் போனவரும் உண்டு.
 
20.  சாட்டையடி வாங்கியபோது சட்டை கிழிந்ததும் உண்டு.
சட்டையை கழற்றி வைத்து சாட்டையடி வாங்கியவர்களும் உண்டு.
 
21.  வண்டு கடித்த வாண்டுப்பயலும் உண்டு.
வாண்டுப்பயல் அடித்து மாண்ட வண்டும் உண்டு.
 
22.  மலையில் ஏறும்போது மழையில் நனைந்தவர்களும் உண்டு.
மழையில் நனையாமல் மலையில் ஒதுங்கியவர்களும் உண்டு.
 
23.  பூட்டு கடைக்காரர் புட்டு வாங்கி தின்றதும் உண்டு.
புட்டு தின்றதுக்கு பூட்டு கொடுத்து கழித்ததும் உண்டு .
 
24.  கிள்ளி சென்றவர்களில் அத்தை மகள் வள்ளியும் உண்டு.
வள்ளியை பதிலுக்கு நான் கிள்ளி விட்டதும் உண்டு.
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
வள்ளியை கிள்ளினால் முருகன் கோவிக்க மாட்டாரா ?

22 கருத்துகள்:

  1. வார்த்தை ஜாலங்களை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. உங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.
    பூட்டு கடைக்காரர் ரசித்தேன். 5, 21 ம் ஒரே மாதிரி இருந்தாலும் , பூச்சி, வண்டு ரசித்தேன்.
    நன்றாக யோசிக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. எல்லாவற்றையுமே ரசித்தேன். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்னும் சொலவடை நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  4. வார்த்தை விளையாட்டு - சிறப்பு. உங்களுக்கு கைவந்த விஷயங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    துணை வார்த்தைகளின் விளையாட்டுக்களுடன் பதிவு அருமை.

    பதிவில், இந்த வார்த்தைகளின் அழகான ஒன்றுக்கொன்று இசைந்த பொருத்தமான துணை வார்த்தைகளை மிகவும் ரசித்தேன். எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன்.

    ஆனால், துணை இல்லாமல், வருந்தி, தன் வாழ்க்கையை மட்டும் தூணாக நம்புபவர்களும் உண்டு. துணையிருந்தும் அத்துணையை அலட்சியப்படுத்தி, அவரையே ஒரு தூணாக கருதி வாழ்பவர்களும் உண்டு.:))))

    ஏதோ எனக்குத் தோன்றியதை சொன்னேன் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தவறாயின் மன்னிக்கவும்.

    உங்களின் கற்பனாசக்திக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      தங்களது வாக்கியம் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள்.

      கருத்தை எழுத மன்னிப்பு எதற்கு ?
      பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு ?

      நீக்கு
  6. ரூம் போட்டு யோசிச்சீங்களோ? ரசித்தேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ரூமிலிருந்துதான் எழுதினேன்....

      நீக்கு
  7. வார்த்தை ஜாலங்கள் மிகவும் அழகு..
    அற்புதம்...

    பதிலளிநீக்கு
  8. ஆகா, மீசைக்கார நண்பரால் மட்டுமே இதுபோன்ற பதிவுகள் சாத்தியம். நன்றி நண்பரே. ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. கில்லர்ஜி நிஜமாவே வார்த்தைகளை வைத்து விளையாடியிருக்கீங்க. ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி

      நீக்கு
  10. 10, 13, 18 யதார்த்தம்.

    10 ரொம்பவே யதார்த்தம்.....எழுதியவரே பொருந்திப் போவார்!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      10-ல் எழுதியவர் எதில் அடங்குவார் ?
      முதல் வரியா ? இரண்டாவது வரியா ?

      நீக்கு
  11. வார்த்தை விளையாட்டில் அறிவின் கவிதை விளையாட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு