தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 01, 2024

கண்டாலே காண்டாகிறது

ட்பூக்களே... நமது நாட்டில் திருமணம், கோயில் விசேஷம் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வார்கள், அதிலும் பெரும் செல்வந்தர்கள் என்றால் வைர நகைகள் அணிந்து செல்வதும் வழக்கம். ஆனால் வீட்டில் சாதாரணமாக சும்மா இருக்கும் பொழுது சமைத்து முடித்து வீட்டிலுள்ள வேலைகளை செய்து விட்டு குளித்து, முடித்து சாதாரண சேலை உடுத்தி அல்லது இன்றைய தேசிய உடையான நைட்டியை அணிந்து சுத்தமாக இருப்பார்கள்.
 
அதேநேரம் எவ்வளவு பெரும் செல்வந்தர்கள் குடும்பமாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு, வைர நகைகளை அணிந்து கொண்டு ஹாலில் வந்து பத்து நபர்களுக்கு மேலாக சுற்றி நின்று கொண்டு வசனம் பேசமாட்டார்கள். நடைமுறையில் பல குடும்பங்களும் தனிக்குடித்தனமே இரண்டு நபர்கள், அதிக பட்சமாக குழந்தை பிறந்தால் மூன்று நபர்கள். அதிலும் வசதி இல்லாதவர்கள் எண்ணை வழிந்த முகங்களோடு இருப்பார்கள் மேலும் சிலர் வேப்பண்ணை கிராக்கி மாதிரியும் இருக்கக் கூடும்.
 
ஒருமுறை மணமேல்குடி உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன் வீட்டில் தொலைக்காட்சியில் நாடகம் ஓடிக்கொண்டு இருந்தது. அதன் காரணமாக இடைவேளை நேரத்தில் மட்டும் என்னிடம் பேசினார்கள். பிறகு பயபக்தியோடு நாடகத்தை பார்க்கின்றார்கள். நமக்கு இவைகளை கண்டாலே காண்டாகும் ஆனாலும் வந்த இடத்தில் சொல்லவா முடியும்.
 
வேறு வழியின்றி இன்று நாமும் ஜோதிகாவோடு மன்னிக்கவும் ஜோதியோடு ஐக்கியமாவோம் பதிவுக்கு வழி கிடைக்கும் என்று பார்த்தேன் அதாவது நாடகத்தில் வருபவர்கள் எல்லோருமே,. பெருங்கொண்ட பங்களாவாசிகளாக இருந்தார்கள். உடைகளும் பட்டுப்புடவைதான் கட்டி இருந்தார்கள், விதம் விதமாக வைர நகைகள் அணிந்து இருந்தார்கள். அறையிலிருந்து வெளியில் ஒவ்வொருவராக வருகின்றார்கள். நான் நினைத்தேன் ஏதோ உறவினர் வீட்டு சடங்குக்கு போகின்றார்கள் போல என்று நினைத்தேன்.
 
னது நினைப்பில் மண் விழுந்தது எல்லோரும் கூடி நின்று அதை அப்படி செய்யணும், இதை இப்படி செய்யணும் என்று ஏதேதோ பேசினார்கள் எனக்கு அடிப்படை விளங்கவில்லை காரணம் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த நாடகமாம் அன்றே நான் மணமேல்குடி வந்து இருந்தால் ஒருவேளை கதை (?) புரிந்து இருக்கலாம். இவர்களின் வைர நகைகள் மீது எனக்கும் ஆசை வந்தது நகைகளின் அழகை பார்த்த எனக்கு அவர்களின் தாலி எங்கே ? என்று சந்தேகப்பொறி தட்டியது.
 
இவர்கள் எல்லோருமே சுமங்கலிதானே, இதோ இவன் அவளோட புருசன், அதோ அவன் இவளோட புருசன் என்று மனம் கணக்கு போட்டதும். நின்ற ஆறு பெண்களின் கழுத்தையும் பார்த்தால் மஞ்சக்கயிற்றில் கட்டிய தாலி இல்லை. சிலர் சொல்லலாம் இப்பொழுது தாலிச்செயின் தங்கத்தில்தான் போடுகின்றார்கள் அதனால் மஞ்சக்கயிற்றை பார்க்க முடியாது என்று. நானும் சோபாவிலிருந்து எழுந்து போக முடியாமல் ஆந்தி, ஆந்தி பார்த்தேன்.
ஒரு வழியும் கிடைக்கவில்லை காரணம் நெக்லஸ் போட்டு இருக்கின்றார்கள் அதன் மோடல் அமைப்பே இங்கு தாலிக்கு வேலை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது. இந்த மாதிரியான சாக்கடைகளில்தான் நமது தாய்க்குலங்கள் மூழ்கி கிடந்து வெளியுலகம் வராமல் இருக்கின்றார்கள். வந்தால்தானே விலைவாசி குறைவதற்கான மாற்று வழிகள் நமது அறிவுக்கண்ணுக்கு புலப்படும்..
 
அடுத்து மற்றொரு விடயம் இதில் வந்து கண்ணீர் சிந்தி விட்டு போவதற்காக வரும் பெண்கள்கூட சுமார் மூன்று இஞ்ச் அளவுக்கு பவுடர் அடித்து இருக்கின்றார்கள். இதை எப்படி கண்டு பிடித்தேன் தெரியுமா ? கிளீசரின் உதவியால் கன்னங்களில் வழிந்து ஓடும் நீர் பவுடரை ஆழம் பறித்து குழியாக்கி ஓடுகிறது. இதன் வழி எனது அறிவால் யோசித்து தெரிந்து கொண்டேன்.
 
மேலும் தனது கதாபாத்திரம் 35 அகவை பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்தாலும், ஏன் பாட்டியாக இருந்தாலும்கூட தலைமுடி நரைப்பதை பெண்கள் ஒத்துக் கொள்ளாமல் டை அடித்து வருகின்றார்கள். ஆனால் அப்பாவாக நடிக்கும் ஆண்கள் இவ்விசயத்தில் சரியாக வருகின்றார்கள் காரணம் வயதும் சரியாக இருக்கும், ஒப்பனையும் போடுவதில்லை. இரண்டும் இணைந்து சரியாகி விடும்.
 
இதோ மேலே முதல் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணிக்கு, கீழே மருத்துவமனையில் படுத்து கிடக்கும் ஆண் என்ன உறவாக இருக்ககூடும் ? என்று உங்களிடம் கேட்டால் அவளது ஒப்பனையும், உதட்டுச்சாயமும் பார்த்து, அவளுக்கு அண்ணன் அல்லது கணவனாக இருக்கும் என்று கணிப்பீர்கள். ஆனால் உண்மையில் அதாவது கதாபாத்திரத்தில் அந்தப்பெண் அவனுக்கு அம்மா ஆம் பெற்றெடுத்த அம்மா அவன் மட்டுமல்ல அவனைப் போல இன்னும் இரண்டு எருமை மாடுகள் இருக்கிறது. என்னாங்கடா இது உங்க கதை சொல்லும் போக்கு ?
 
கில்லர்ஜி புதாபி
 
சிவாதாமஸ்அலி-
திருச்சிக்காரவுங்க இதை எப்படித்தான் பொறுமையாத பார்க்கிறாங்களோ.. ?
 
அவசியம் (காணொலி) கேளுங்கள்

20 கருத்துகள்:

  1. அருமையான காணொலி.  உண்மையிலும் உண்மை.  நல்லவேளை எனக்கோ, எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லை.  ஆனால் உறவுகள் வீட்டில் உள்ளது.  அந்த நேரத்தில் அவர்களுக்கு தொலைபேசுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அது சமயம் அவர்கள்  சீரியல் பார்த்து முடித்து விட்டு, நாம் என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கிறோ என்பதை அறியாமல் நம்மிடம் மணிக்கணக்காய் பேசுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தொலைக்காட்சியை மறப்பது நன்று.

      நீக்கு
  2. நான் தொலைக்காட்சித் தொடரைப் பார்ப்பதே இல்லை. இந்த விஷயத்தில் மனைவி சொல்லே மந்திரம்.

    பதினைந்து வருடங்களுக்கு முன் வெள்ளிக்கிழமைகளில் தொலைக்காட்சியில் படம் பார்க்க உட்கார்ந்தால் அமங்கலச் செய்தி நிகழ்வு படத்தில் கண்டிப்பாக வருவதைக் கண்டு அதற்கும் முழுக்குப் போட்டுவிட்டேன்.

    ஆனால் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பவர்கள் அவைகளுக்கு அடிமையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தமிழரே...

      நீக்கு
  3. இப்போல்லாம் ஓடிடி மூலமாக விட்டுப்போன தொடர்களைப் பார்த்துவிடலாம் என்பதால் சில உறவினர்கள் வீடுகளில் தொடர் நடக்கும் நேரத்தில் சென்றால் அணைத்துவிட்டுப் பேசுகிறார்கள். இல்லைனா ஏன் வந்தாய் என்று கேட்டாலும் கேட்பார்கள்.

    காணொளி சொல்வது உண்மை. கேட்பவர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. Hahaha! I am not a serial addict. But sometimes it happened. Now no TV at all even for news. My husband says we are unnecessarily paying money to the cable people. 😀😀

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ? கேபிள் டிவிக்கு எதற்காக பணம் கொடுக்கிறீர்கள் ?

      நீக்கு
  5. Saw the name Tiruchikaranga and came to comment. 😁😁😁😁

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீன்னாக்கா... திருச்சி பெயர் தொலைக்காட்சியில் காண்பித்ததால்தான் பதிவுக்கு வருவீர்கள் ???

      நீக்கு
  6. ஹா....ஹா.....நல்ல அடி.

    நமக்கும் தொலைக்காட்சி தொடருக்கும் வெகுதூரம் . எப்பொழுதாவது தெரிந்தெடுத்த படங்கள் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. என்னாது..நைட்டி தேசிய உடையாக ஆகிவிட்டதா..எப்போதிலிருந்து...?? நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கடந்த தேர்தல் வாக்குறுதியில் படிக்கவில்லையா ?

      நீக்கு
  8. நல்ல பதிவு.
    காணொளி முன்பே கேட்டு இருக்கிறேன்.
    தொடர்களில் காவல் நிலையம், மருத்துவமனை, அடி தடி, பழி வாங்குவது இல்லாமல் இருப்பதே இல்லை. இப்போது நகை கடை விளம்பரங்கள், புடவை கடை விளம்பரங்கள் செய்வது போல நடிகைகள் வருகிறார்கள். எல்லாம் மிகை படுத்தி காட்டப்படுகிறது.
    நல்லதை கேட்க வேண்டும், நல்லதே நடக்க வேண்டும் என்றால் தொடர்களை பார்க்காமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. கணொலி அருமை, கில்லர்ஜி.

    நம் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மட்டும் கணினியில் அல்லது அலைபேசியில் பார்த்து தெரிந்து கொள்வதுண்டு. இப்படியானவை தனிப்பட்ட விஷயம் என்று நம் வீட்டில் கருதுவதால் பொதுவில் கிடையாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தொலைக்காட்சி தொடர்கள் பற்றிய தங்கள் கூற்று உண்மைதான். அது நம்மை சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளும். (ஒரு போதை பழக்கம் மாதிரி)

    காணொலி கேட்டேன். தொடர்களைப் பற்றி நன்கு அருமையாக சொல்லி இருக்கிறார். அனைவரும் இது கேட்டு பயனடைந்தால், நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு