வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படம் இணையத்தில்
உலாவிக் கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே... முன்பு ஒரு கவிதையும், திரு.ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு ஒரு கதையும் எழுத
வைத்தது இன்று மீண்டும் ஓர் கவிதை (? ) இதோ அந்த சுட்டிகள்... மே.மே.மே தள்ளாத
வயதிலும்...
உன் மோகம் என்னாலன்றோ
அன்புக்காதல் மணவாளனே
என் ஆசை உன்னாலன்றோ
உன்னுலகம் நான்தானன்றோ
உன் செல்லம் நான்தானே
என்னுலகம் நீதானன்றோ
வாழ்வோம் நாம் இந்நாளும்
சமூகம் என்ன நினைத்தாலும்
சகிப்பேன் இனி எந்நாளும்
பழைய நினைவு ருசித்தாலும்
பந்துக்கள் நமை வெறுத்தாலும்
பதிதான் நீ எனக்கு இந்நாளும்
அழகி என்றாய் நீ அன்றே
அன்புதானே இன்று பரஸ்பரம்
அதுதான் என்றும் நிரந்தரம்
இதயம் தந்தும் மகிழ்ந்தாயே
கடமை வாழ்வை கடப்போமே
கடைசி வரையில் காப்பேனே
இந்த வாழ்வில் லாபமில்லை
இவரை அழைத்த தினத்தன்றே
இளவரசி எனையும் இணைத்திடு
தள்ளாத வயதிலும், தள்ளாத காதல்.
இழுப்பவருக்கு கைகளில் பாரம் - இருக்கையில்
பதிலளிநீக்குஇருப்பவருக்கு மனதிலும் பாரம் - ஆனால்
இவர்களுக்குள் இழைவது
அன்பின் சாரம்.
வாங்க ஜி தங்களது கவிதை வரிகள் சிறப்பு.
நீக்குதொட்டுத் தாலி கட்டியவரை - என்னால்
பதிலளிநீக்குவிட்டுப் போக முடியாது
முன்பு வாழ்ந்த வாழ்வில் போட்ட
அன்பு விதை - இன்று
மரமாகி இருவர் வாழ்வின்
அறமாக நின்று
இணைக்கிறது
இந்த வரிகளும் அருமை ஜி
நீக்குஒருவருக்கொருவர்
பதிலளிநீக்குஉரமாக நின்று
உறவாகத் தொடர்வோம்.
தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்லதொரு கவிதை. படமும் கவிதை வரிகளும் மனதில் பாரத்தை ஏற்றியது.
/இறைவன் மீது கோபமில்லை
இந்த வாழ்வில் லாபமில்லை
இவரை அழைத்த தினத்தன்றே
இளவரசி எனையும் இணைத்திடு. /
நல்ல வேண்டுதல். எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைத்து விடுமா? ஆனால் அந்த முதியவர்களுக்கு கிடைத்தால் நல்லது.
அருமையான மனதை தொடும் கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகில்லெர்ஜி ஸ்ரீராம் இருவருடைய கவிதைகளும் நன்றாக உள்ளன. கில்லெர்ஜீ படைப்பு பாடல் என்ற வகையில் எதுகை மோனை இவற்றுடன் மெட்டு அமைத்து பாடத்தக்கதாய் உள்ளது- சினிமா பாடல் போன்று.
பதிலளிநீக்குஸ்ரீராமின் படைப்பு புதுக்கவிதையின் வடிவத்தில் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பவர் மனதில் சிந்தனையை தூண்டும் வண்ணம் உள்ளது. பாடத் தகுதி இல்லை. படித்து ரசிக்கலாம்.
Jayakumar
வாங்க ஐயா தங்களது எண்ண உணர்வுகளை அழகிய கருத்துரையாக தந்தமைக்கு நன்றி.
நீக்குநன்றி JKC ஸார்.
நீக்குபடம் நெஞ்சை தொடுகிறது தள்ளாத வயதில் அன்புப் பாரத்தை சுமந்து இழுக்கும் பாட்டி இருவர் மனதும் இணைந்து செல்கிறது.
பதிலளிநீக்குஇதை அண்மையில் கேட்டதுண்டு எனது கணவரின் தங்கை நடக்கமுடியாது உதவிப் பெண்ணின் துணையுடன் அழைத்து வந்து வெளியே காற்றுப் பட இருத்துவார்கள்ல. உதவிப் பெண் வராத இடத்து அவரின் வயதான கணவரே கதிரையில் இருக்க வைத்து இழுத்து வந்து வெளியே விடுவாராம்.மீண்டும் கதிரையுடன் இழுத்துச் சென்று படுக்கையில் விடுவேன் என்பார் தள்ளாத வயதில் இழுப்பது என்பது இழுப்பவரின் உடலுக்கு .........சுமை . இருந்தும் அன்பு முன்நிற்கிறது. சிறு குழந்தைக்கு உணவூட்டுவது போல ஊட்டி பார்த்து வந்தார். அவர் மனைவி சென்ற மாதம் இறைபதம் அடைந்து விட்டார்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்கு"முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும் "
பதிலளிநீக்குஎன்ற பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருகிறது.
படமும் உங்கள் கவிதையும் மனதை நெகிழ வைக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருக்கும் காலம் முதுமை காலம்,
யார் முந்தி, யார் பிந்தி என்று தெரியாது அது இறைவன் கையில்.
இறைவன் நினைத்தால் அந்த அம்மாவின் பிரார்த்தனை நிறைவேற்றலாம்.
என் தங்கை அப்படித்தான் தினம் பிரார்த்தனை செய்கிறாள் இருவரும் சேர்ந்து இறைவனிடம் போக வேண்டும் என்று.
நான் என் கணவரிடம் நீங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை என்னால் என்றேன். இப்போது உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
என் தந்தை எங்களை விட்டு போகும் போது 50 வயது, என் அம்மாவுக்கு 40 எங்களை வளர்த்து ஆளாக்கி அவர் மறைந்தார். அம்மாவும் அப்பாவுடன் போய் இருந்தால் எங்கள் கதி !
எல்லாம் அவன் அருள்.
ஸ்ரீராம் கவிதையும் நன்றாக இருக்கிறது.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்து தங்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல!
நீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஅப்போதும்சரி..இப்போதும் சரி நான் தனிதான்
பதிலளிநீக்குஇதுவும் சரிதான் நண்பரே
நீக்கு