தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 29, 2017

தள்ளாத வயதிலும்...


தள்ளாத வயதிலும் இல்லாத கணவனென்று
இல்லாள் நினைக்கவில்லை பொல்லாத
உலகமிது இருப்போர்க்கு ஊக்குவிக்கும்
இல்லாத மனிதருக்கு இடம் மறுக்கும்

முதுகெலும்பு இல்லாத அரசு இது
முதியோரை நினைக்க இங்கு நேரம் ஏது
பெற்றோரை மதியாத பிள்ளை இங்கு
பெருமழையால் இவர்கள் போவது எங்கு

கல்லானாலும் கணவன் என்றே கசிந்தாள்
புல்லானாலும் புருசன் என்றே புசித்தாள்
மண்ணானாலும் மனைவி என்றே மணந்தான்
துரும்பானாலும் துணைவி இவளே துணைதான்

மகன் வேண்டுமென்று மன்றாடினாள் அன்று
மகன் வேண்டாமென்றான் திண்டாடினாள் இன்று
இறைவா இவர்கள் செய்த பாவம்தான் என்ன
இவர்கள் வாழ்வதால் இங்கு லாபம்தான் என்ன

சிவாதாமஸ்அலி-
இவர்களைக் கண்டாவது பாவம் செய்பவர்கள் திருந்தணும்.

37 கருத்துகள்:

  1. கில்லர்ஜி கவிஞராக மாறிவிட்டார் போல இருக்கே கவிஞர் கில்லர்ஜிக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை சகோ கில்லர்ஜி முன்பிஎ கவிஞர் ஆகிவிட்டார்...முன்பும் எழுதிருக்கார்....



      நீக்கு
    2. தமிழரின் முதல் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாக்கிற்கும் நன்றி

      நீக்கு
  2. ,மனம் கனக்கச் செய்த படம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லாருக்கு கில்லர்ஜி.....

    பதிலளிநீக்கு
  4. மனதை உருக்கும் காட்சி. அழகாக எழுத்தாக்கி இருக்கிறீர்கள் கில்லர்ஜி. அவர்களுக்கும் வாழ உரிமை உண்டுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு வாழ உரிமை இல்லை என்று சொல்லவில்லை.
      இறைவனிடம் கேள்வியை வைக்கிறேன்.

      நீக்கு
  5. மனதை நெகிழவைத்த படம். கவிதையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  6. அந்த இறைவனின் பதில்தான் என்ன ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் கிடைக்கவில்லை ஐயா வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. கவிதையாய் சோகத்தை கோபத்தை .........

    பதிலளிநீக்கு
  8. காட்சி மனதை வாட்டுகின்றது என்றால்
    கவிதை அதற்கு மேல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே!

    படமும் உங்கள் கவிதையும் மனதை நெருடுகிறது!
    வாழ்க்கையைத் தள்ளியோ அல்லது இழுத்தோதான்
    கழித்திடும் வயதுக்காலம் இது!
    பல முதியோர்களின் அதிலும் நோயுற்றவர்களின் தற்கால வாழ்வியலை மிக அழகாகக் கவிதையில் சொல்லியுள்ளீர்கள் சகோ! சிறப்பு!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  10. கவிதை அருமை!
    இந்தப்புகைப்படம் எத்தனை கதைகளை சொல்கிறது!
    முதிய வயதிலும் தலை நரைத்தாலும் முதுகு வளைந்தாலும் ஒரு உண்மையான மனைவி இப்படித்தான் இருக்க முடியும்.
    நெகிழச்செய்யும் புகைப்படத்திற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. கொடிது கொடிது முதுமையில் வறுமையும், நோயும்..

    பதிலளிநீக்கு
  12. இறைவன் அழைக்கும்வரை அவர்கள் வாழ்ந்து தானே ஆகணும்! கவிதை மனதைத் தொட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நினைத்தவர்கள் எல்லாம் போய் விடமுடியாதுதான். வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. நேற்று முதலா வந்தேன் மனசை என்னமோ பண்ணிடுச்சி படத்தில் பார்த்த காட்சி .
    இப்படி வயசானவங்களை தவிக்க விடறவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க .
    நம் நாட்டு மக்களுக்கு இந்த 10 மாத செண்டிமெண்ட் பிள்ளை செண்டிமெண்ட் எல்லாம் அளவோட வச்சிக்க கற்றுக்கொடுக்கணும் .இங்கே வெளிநாட்டில் வெள்ளைகாரங்க 18 வயதிலேயே தனியா அனுப்பிடுவாங்க அது கொஞ்சம் அதிகம்தான் ..ஆனாலும் அவரவர் future ,life அவரவரே தீர்மானிப்பதால் வயதான காலத்தில் பெற்றோர் நிம்மதியாவே இருக்காங்க இங்கே பென்ஷன் பணம் லாம் நம்மூர் மாதிரி பிள்ளைகளுக்கு முழுதும் தாரை வார்ப்பதில்லை பெற்றோரும் பிள்ளைகளை நம்பி ஏதும் யாசிப்பதுமில்லை எந்த எதிர்பார்ப்புமில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தாய்ப்பாசம் இப்பொழுது இன்றைய தலைமுறையினருக்கு அற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது.

      இதற்கு பெருகி வரும் முதியோர் இல்லங்களே சாட்சி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. முதியோரை மதியாதோர் நிறைந்ததனால் வந்த நிலை...!
    கதியில்லை என்பதனால் தெருவோடு நொந்த நிலை !

    பதிலளிநீக்கு
  15. யாரை எல்லோரும் கவனிப்பதில்லையோ, அந்த எளியவர்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் இப்படிப்பட்டவர்களை கண்டால் சமூகத்துக்கு பயப்படாமல் தைரியமாக இரண்டு வார்த்தை பேசுவேன்

      நீக்கு
  16. படமும் பகிர்வும் மனதை கனக்கத்தான் செய்துவிட்டது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள திரு கில்லர்ஜி அவர்களே

    உங்கள் கவிதைப்பகுதியில் "தள்ளாத வயதினிலே" ல் பதிவான‌
    கவிதை எலும்புசதை வற்றிய நிலையிலும் அந்த இருவரும் உருகிக்
    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவது அருமை!இளமை முறுக்கில்
    இருந்தால் நான் புண்ணியம் செய்தேன் என்பதும் உடல் இற்ற நிலையில் இது நான் செய்த பாவம் என்பதும் தான் இந்திய ஃபிலாசஃபி.அதனால் தான் நம் நாட்டில் சொர்க்கவாசல்களில்
    மனித ஈசல்கள்.உங்கள் கவிதைப்பதிவுகள் மிகவும் ரசனைக்கு உரியவை.

    அன்புடன் ருத்ரா

    (உங்கள் பகுதியில் என் மடல் இடுவது ஏற்றுக்கொள்ளப்படுகிறதா
    என்பது தெரியவில்லை.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கவிதையில் ஊடுறுவி வெளியில் வந்து இருக்கின்றீர்கள் என்பதை தங்களது மடல் பிரதிபலிக்கிறது மிக்க மகிழ்ச்சி.

      இறுதியில் மடல் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா ? என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

      ஒரு பதிவருக்கு பாராட்டுகள்தானே ஊட்டச்சாறு தொடர்ந்து தங்களது கருத்தை முன்வைப்பீர்கள் என்று நம்புகிறேன் ஐயா.

      நீக்கு
  18. அருமையான எண்ணங்கள்

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    பதிலளிநீக்கு