Just click on the photo to view it in big size.
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ.
26.10.2014 மதுரை மாநகர் எமது
அன்புத் தங்கை தமிழ்ச்செல்வியின் வீடு.
அதிகாலையிலேயே எழுந்து
தயாராகினேன் இரண்டு சக்கர வாகனத்தோடு காரணம் இருப்பு கொள்ள முடியவில்லை எமது
கழுத்தில் கைக்குழந்தை (புகைப்படக்கருவி) தொங்கி
கொண்டிருக்க... நானும், மருமகன் K.விவேக்கும் புறப்பட்டோம் பதிவர் திருவிழாவுக்கு... வைகை ஆற்றுப்பாலத்தை
கடக்கவும், வண்டியூர் தெப்பக்குளத்தின் மையத்தில் அமர்ந்திருந்த சிறிய கோவில்
வளாகத்தை சுற்றி நின்றிருந்த மரங்கள் தங்களின் கிளையென்ற கைகள் கொண்டு கையசைத்து
வருக... கில்லர்ஜி என எம்மை அழைப்பது போன்ற உணர்வு வலதுபுறம் வளைந்தால் கீதா நடன
கோபால நாயகி மந்திர் பள்ளி வளாகம் தென்பட வண்டியை விட்டு இறங்கினேன்.
(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)
முகவாயிலில்
கண்கொள்ளாக்காட்சி ஆம் ! பழுத்தபழம் ஐயா திரு.சீனா அவர்கள் தனது துணைவியாருடன்
நின்று கொண்டு ‘’வாங்க கில்லர்ஜி’’ என அன்பொழுக
அழைத்தார். ஐயாவை வணங்கி விட்டு கரம் பற்றினேன்.... சற்று நேரத்தில் இரண்டு சக்கர
வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஒருவர் வந்தார்.. கண்களை ஊடுறுவினேன். சட்டென கணித்து ஐயாவிடம்
சொல்லி விட்டேன், தலைக்கவசத்தை கழட்டும் முன்னே சொல்லி விட்டீர்களே... ஆம்
சுழற்சி
நாயகன் திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்.
பசுமை நினைவுகளை புகைப்படக்கலைஞர் K.விவேக் நிழற்படமாக
சுட்டுத்தள்ள தொடங்கினார்.
.JPG)
.JPG)
உள்ளே நுழைந்தோம் பிரமாண்டமான
பதாகைகள் எம்மையும் வரவேற்றன... சற்று நேரத்தில் மதிப்பிற்குறிய ஐயா திருச்சி திரு.தி.தமிழ்
இளங்கோ அவர்கள் தொடந்து... எம்மை கழுத்துவரை கல்லாக்கிய மதுரை மன்னன் பகவான்ஜி (நேற்றிரவே வலைச்சித்தர்,
பகவான்ஜி,
குடந்தையார் அனைவரையும் ஹோட்டல்
ராஜேஸ்வரியில் சந்தித்து விட்டேன் என்பது வேறு விசயம், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள் மன்னிக்க)
பிறகு ஐயா திரு.தருமி அவர்களை, தொடந்து ஐயா கவிஞர் திரு.ரமணி அவர்கள், துளசிதளம் திருமதி.கீதா அவர்கள் கணவருடன் வருகை தந்தார், அடுத்து பெங்களூருவிலிருந்து 76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்கள், தனது துணைவி மற்றும் மகனுடன் வந்தார். அபுதாபி அண்ணல் கவிஞர் திரு.மகேந்திரன் அவர்கள், திரு.குடந்தையூர் சரவணன், வலைச்சித்தர், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.மணவை ஜேம்ஸ் அவர்கள், திரு.டி.என். முரளிதரன் அவர்கள், திரு.கோவை ஆவி அவர்கள், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள்,
திடீரென பரபரப்பு சில காலங்களாக
நேற்று மாலையில்கூட எமது செவிகளில் செல்களின் வழியே ஒலியலை மூலம் கேட்டுப்பழகிய
எமது இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் மனைவி, மகளுடன் வருகை தந்தார். முதன் முதலாக ஒளியாக நேரில்
கண்டதால் வணங்கி கட்டித்தழுவி வரவேற்றேன். கூடவே சோழ நாட்டில் பௌத்தம்
முனைவர் ஐயா திரு. B. ஜம்புலிங்கம் அவர்களின் வரவு.
.JPG)
.JPG)
.JPG)
சிட்டுக்குருவி திரு.விமலன் (தங்களோடு புகைப்படம் எடுக்க முடியவில்லை கடைசிவரை தாங்கள் விலகியே
இருந்தீர்கள்)
தன்னை ஸ்கூல் பையன் என அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தார் திரு.ஸ்பை உண்மையிலேயே
ஸ்கூல் பையன் போலவே இருந்தார். அவரோடு புகைப்படம்
எடுக்க முடியவில்லை.
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
திடீரென மின்னல் போல தோன்றினர் மலர்த்தரு திரு.மது கஸ்தூரி மற்றும் அவரது துணைவியார் மகிழ்நிறை திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை கலக்கல் மன்னன்
திரு.நா.முத்து நிலவனார் அவர்கள், கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ்
குடும்ப சகிதமாய் வந்து
கலக்கினார்கள். தேவகோட்டை பெற்றமகள்
புதுக்கோட்டை கவிஞி திருமதி.மு.கீதா அவர்கள், நண்பர் திரு.வலிப்போக்கன் அவர்கள், திரு.நவாஸ் அவர்கள், திரு.மகாசுந்தர் அவர்கள்,
எமக்கு ஆச்சர்யம்
என்ன என்றால் அனைவருமே எம்மை அடையாளம் கண்டு வாங்க கில்லர்ஜி
என்று சொல்லி விட்டார்கள். சகோதரி மைதிலியின்
குழந்தைகள்கூட கில்லர்ஜி அங்கிள் என....
நான்தான் திணறினேன், விழா தமிழ்த்தாய்
வாழ்த்துடன் தொடங்கியது. குடந்தையாரின் குறும்பட வெளியீடு மற்றும் நண்பர் திரு.கரந்தையார், கவிஞி திருமதி.தேன்மதுரத்தமிழ்
கிரேஸ், கவிஞி திருமதி.மு.கீதா, திரு.பி.ஆர். ஜெயராமன் ஆகியோரின்
நூல் வெளியீடு, எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்பு பேச்சு,
நிகழ்ச்சியினை அபுதாபி அண்ணல் கவிஞர்
திரு.மகேந்திரன் அவர்கள்
அழகாக தொகுத்து வழங்கியதை சற்றுப் பொறாமையுடனே... பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.
.JPG)
தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ....
பதிவர்கள் மேடையேறி தங்களை சுய
அறிமுகம் செய்து கொள்ள அழைக்கப்பட்டார்கள்.
தமிழ் வளர்த்த மதுரையிலே எமது
வாழ்வில் முதல்முறையாக மேடையேறினேன். நேரமின்மை காரணமாக ஐந்து நிமிடம் மட்டுமே பேசினேன்.
ஆனால் எமது திட்டப்படி நான் பேச நினைத்த
நிறைய விசயங்கள் பேசமுடியவில்லை எமது கனவை அடுத்த விழாவில் புதுக்கோட்டையில் கலக்கல் மன்னன் திரு.நா.முத்து நிலவனார் அவர்கள் நனவாக்குவார்கள்
என்று நம்புகிறேன். ஐயா அவர்களுடன் சிறிது நேரமே பேசியதில் ஐயாவும், நானும் .......த்திகத்தில் ஒரு அலசல் அலச முடிந்தது. போதாது, போதாது இன்னும் இருக்கிறதே.... கேள்விக்கணைகள்.... பரவாயில்லை பதிவுகள் மூலம் அவரை
சந்திப்போம்.
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்களுடன்
பேசிய வார்த்தைகள் எமது வாழ்வின் பொன்னான தருணங்கள். ஐயா கையொப்பமிட்டு எமக்கு
கொடுத்த வாழ்வின் விளிம்பில் என்ற தனது நூல் மறக்க முடியாதகும்.
இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களும் கரந்தை மாமனிதர்கள் என்ற தனது நூலை அன்புடன் கையொப்பமிட்டு
கொடுத்தார்கள்.
வாத்தியார் மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்கள் தனது சரிதாசணம் என்ற நூலை எமது பதிவை தொடர்கிறேன் என்று சொல்லி கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.
இனியதோழி கவிஞி திருமதி.மு.கீதா அவர்களும் ஒரு கோப்பை மனிதம் என்ற நூலை பருகச்சொல்லி, கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.
இனியதோழி கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களும்
துளிர் விடும் விதைகள் என்ற நூலை கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.
நண்பர் திரு.கோவை ஆவியும் தனது ஆவிப்பா என்ற நூலை
கையொப்பத்துடன் வழங்கினார்.
அனைவருக்கும் நன்றியும் வேண்டுகோளும் இவை அனைத்தையுமே படித்து
அதனைக்குறித்து பதிவிடுவேன் அதற்கு கால அவகாசம் தருவீர் தங்களுக்கே தெரியும்
எமக்கு தற்போது வேலை நிறைய இருக்கிறது.
(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)
.JPG)
.JPG)
.JPG)
.JPG)
நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் காண இருகண்கள்
போதாது என தனது பதிவில் சொன்னதை நானும் உணந்தேன். நண்பர் திரு.கரந்தையார் அவர்களிடம் மட்டுமல்ல,
ஐயா முனைவர் திரு.B. ஜம்புலிங்கம் அவர்களிடம் மட்டுமல்ல,
ஐயா திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமல்ல,
தோழர் திரு.மது அவர்களிடம் மட்டுமல்ல,
நிறைய எவ்வளவோ பேசுவதற்கு கேள்விக்கணைகளுடன்
வந்தேன் எங்கே ? நேரம் கிடைத்தது நேரம் போனதே தெரியவில்லை திடீரென சூரியன் மேற்கே போய்விட்டான்,
அழைத்தால் மீண்டும் நாளைதான்
வருவேன் என மறைந்தே விட்டான்.
விழா ஏற்பாடுகளை பம்பரமாய் சுழன்று
வேலை செய்த, ஐயா திரு.சீனா அவர்கள், நண்பர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள், திரு.தமிழன் கோவிந்தராஜ் அவர்களுக்கு கில்லர்ஜியின்
மனமார்ந்த நன்றிகள்.
புதுக்கோட்டை கலக்கல் மன்னன் ஐயா
திரு.நா.முத்து நிலவனார் அவர்களுக்கு பணிவான கோரிக்கை.
பதிவர் சந்திப்பு என்பது தலைப்பு. சந்தித்தோம் இல்லை என்று
சொல்லவில்லை ஆனால் ? ஒருவருக்கொருவர் பேசினோமா ? ஆகவே அடுத்த புதுக்கோட்டை விழாவில் மடை திறந்த வெள்ளம்போல் மனம்
திறந்து பேச குறைந்த பட்சமாக மூன்று மணி நேரமாவது இடைவேளை விடவேண்டும் என்பது எமது
அவா.
இடையே ஜிகிர்தண்டா வழங்கப்பட்டது.
முடிவில் ஒரு வருத்தமும்கூட இனிய
நண்பர் திரு.வே.நடனசபாபதி மற்றும் நண்பர் திரு.துளசிதரன் மற்றும் கீதா அவர்கள் நண்பர்
திரு.தளிர் சுரேஷ், திரு.கிங் ராஜ், திரு.அ.பாண்டியன், திரு.ஜெ.பாண்டியன், அவர்கள் வராமல், அவர்களை சந்திக்காமல் போனது மன
வருத்தத்தை தந்ததே...
குறிப்பு இதில் பெயர் குறிப்பிடாத பதிவர்கள் தயவு செய்து மன்னிக்க எம்முடன் பேசியவர்களை குறிப்பிட்டு விட்டேன் ஆயினும் ஒருசிலர் எம்மிடம் பேசுவதற்க்கு தயங்கியதை கவனித்தேன் காரணம் அறியேன்.
02.11.2014 தினமலரில்...
Video I am on the stage speech.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
(புகைப்படங்கள்
அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)