தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 28, 2014

திருமண அழைப்பிதழ்


முன்குறிப்பு - பெயரின் வண்ணம் சிவப்பு, ஊரின் வண்ணம் கருப்பு.

ஏங்க, திருப்பதி இருக்காரா ?
அவரு, காலையிலதான் பழனிக்கு போனாரு நீங்க யாரு ?
நான், வாத்தியார் சிதம்பரம்.
வாங்க, என்ன விசயம் ?
நம்ம, பழனி மகளுக்கு வர்ற புதன்கிழமை திருப்பதியில தாலிகட்டி சிதம்பரம் வடுகநாதா மஹால்ல வரவேற்பு வச்சுருக்காங்க குடும்பத்தோட வந்துருங்க, ஆமா நீங்க...
நான், அவரு மனைவி பவானி.
தப்பா நினைக்காதீங்க, நான் இதுவரை பார்த்ததில்லை, அதனாலதான் கேட்டேன் நமக்கு எந்த ஊரு ?
எனக்கு, பவானி.
அப்படியா ? யேன் மச்சினனுக்குகூட பவானிலதான் பேசி முடிச்சுருக்கோம் ஆவணில கல்யாணம்.
அப்படியா, யாருவீட்ல ?
நம்ம, கருதாஊரணி மேலத்தெரு திருமலை இருக்கார்ல அவரு மகள் தென்குமரி.
அவளைத்தான், கன்னியாகுமரி குமரிமுத்து கூட்டிகிட்டு ஓடுனதா சொன்னாங்களே ?
உண்மைதான், ஆனா நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்லயே வளைச்சு புடிச்சு கொண்டு வந்துட்டாங்களாம்.
அப்படியா... சந்தோஷம்.
சரி, கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருங்க.
நல்லது வந்துடுறோம்.

பின்குறிப்பு – படிக்கிற நீங்களும் கல்யாணத்துக்கு, வந்துடுங்க....

 
காணொளி

மேலே உள்ள காணொளிக்கும், பதிவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை பிறகு எதற்கு ? என கேட்கலாம் பழைய காலங்களில் காய்கறி கடைகளில் கத்திரிக்காய், தக்காளி வாங்கும்போது ஓசியாக கருவேப்பிள்ளை கொடுப்பார்கள் இல்லையா, அதைப் போலவே இதுவும் இருக்கட்டுமே... மேலும் காணொளியில் வரும் நண்பர்களோடு எமக்கு கொடுக்கல் வாங்கல் தகறாறு ஏதும் இல்லை என்பதையும் இதன் மூலம் அறிவித்து கொள்(ல்)கிறேன்.

66 கருத்துகள்:

  1. காணொளியை பார்க்கமுடியவில்லை. ஊரை வைத்து வார்த்தைகளில் ஒரு திருமண அழைப்பு, மைசூர் போண்டா பொதுவாக இல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக இல்லையா ? மெதுவாக இல்லையா ? நண்பரே...

      நீக்கு
  2. இப்படியே அட்ரெஸ் விசாரிச்சு, அவசியம் வந்துடறோம்:(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் வாங்க, பாயசத்துல வடிச்ச தண்ணியை கலந்துடப்போறாங்க...

      நீக்கு
  3. திருப்பதியில பழனி மகளுக்குக் கல்யாணமுன்னு சிதம்பரம் வாத்தியார் அழைச்சத, அபுதாபியிலேர்ந்து நம்ம கில்லர்ஜி கூப்பிட்டபிறகு போகாம இருப்போமா..?
    நம்ம கல்யாணம் மகன் கல்யாணத்துக்கு,திருப்பதி மகள் காவேரியைப் பொண்ணு பார்த்தீங்களே..!என்னாச்சு..?
    ....அந்த காணொளி சூப்பருங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளைத்தான், பொள்ளாச்சி நாச்சியார் மகன், பேச்சி முத்து கூடலூருக்கு கூட்டிக்கிட்டு ஓடிட்டானே...

      வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  4. தஞ்சாவூர் தாம்பூலம் வைக்காம கூப்பிடலாமா - ஜி?..

    கல்யாணத்துக்கு வர்றது சரி!..
    சாப்பாடு பற்றி ஒன்றும் சொல்லலையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, அனைத்து வகை செட்டிநாடு உணவுகளும் உண்டு வருக,,, வருக,,,

      நீக்கு
  5. சகோ,இப்படி ஒரு கல்யாணத்துக்கு வந்து இப்படி ஒரு விருந்து
    கொடுத்தீஙக கல்யாணமும்நல்லாருந்துச்சி விருந்து தடபுடல்
    தான் எனன..........பேரச்சொல்லி ஊரக்கேக்ரதுதா.......கொன்ச
    கச்ட்டமா இருந்துச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரியின் முதல் வருகையிலே சுபமான பதிவு விருந்துடன் சந்தோஷமே,,, பெயரைச்சொல்ல சங்கடமா ? அதுக்கு என்ன செய்யமுடியும் என்னயும்தான் ஐயா முத்து நிலவன் ’’கொலைகாரரே’’ அப்படினு சொல்றாரு... வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. சகோ நான்சொன்னபெயர் பழனி,திருப்பதி,பவானி,தென்குமரியச்சொன்னேன்

      நீக்கு
    3. நானும் அதனைத்தான் சொன்னேன்.

      நீக்கு
  6. ஆஹா சூப்பர் கல்யாணம் அவசியம் வந்துடுறோம்,,வீடியோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க வந்து மணமக்களை வாழ்த்’’திட்டு’’ போங்க...

      நீக்கு
  7. மணமக்கள் வாழ்க வளமுடன்.
    ஊர் பேர்களை வைத்து பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  8. வருகை தந்து மணமக்களை வாழ்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. முதல்நாளே வந்துருங்க, ராஜேஸ்வரி ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன் 25 ம் நம்பர்.

      நீக்கு
  10. பெயரும் ஊர்பெயரும் ஒற்றுமையாய் வருவதை வைத்து அழகான ஒரு பகிர்வு அண்ணா...
    பதிக்கு மேல ஊருப் பேருக்கும் மனித பேருக்கும் கலர் வரலையே...
    கலக்கிட்டீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலர் எனது கணினியில் இருக்கிறதே நண்பரே...

      நீக்கு
  11. உங்க பதிவை படிச்சு பைத்தியம் பிடிக்காம இருந்தா கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கும் ரெண்டு ஆளை நிறுத்தி வைக்கட்டுமா ? உங்களுக்காகவே ''விடாக்கண்டன்'' அப்படினு ஒரு பதிவு போடுறேன்.

      நீக்கு
  12. கடல்கடந்து என் இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொய்யின்றி, மெய்யாக வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா....

      நீக்கு
  13. வித்தியாசமா சிந்திச்சு ஒரு பதிவு. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  14. ஊரின் பெயர்களை வைத்தே ஒரு பதிவு
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. வருகை தந்து 'மொய்' வைத்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  16. அண்ணே webcast உண்டுதானே!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக Webcast, Police பாதுகாப்பும் உண்டு காரணம் குமரி முத்து மீண்டும் வந்து விடக்கூடாதே...

      நீக்கு
  17. அட்ரெஸ் எல்லாம் தெளிவா இருக்கே
    அவசியம் வந்திடறோம்
    அஞ்சு புருஷன்
    பதினெட்டாம் படிக்கு பேத்திதானே அது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க கவிஞரே, ஏற்கனவே பழனி வீட்டாரை உங்களுக்கு தெரியுமா ?

      நீக்கு
  18. பதில்கள்
    1. மறக்காமல் மொய் வைத்தமைக்கும் நன்றி கவிஞரே...

      நீக்கு
  19. திருமண வாழ்த்துக்களை இவ்வாறு ஊர்பெயர், சினிமா படங்கள் கொண்டு நான் எழுதுவதுண்டு! அது போல நீங்கள் காமெடியில் அசத்திவிட்டீர்கள்! காணொளி காணக் கிடைக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சுரேஷ் அவர்களே... காணொளி சிலருக்கு மட்டுமே கிடைக்கவில்லை என்றார்கள் மீண்டும் முயற்சிக்கவும்.

      நீக்கு
  20. காணொளி சூப்பர் நண்பா...... அடுத்த திருமணத்துக்கு சம்மதித்த தென்குமரிய நிணச்சாததான் பாவமா இருக்கு ............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி தங்களுக்கு பிடிக்குமென எனக்கு தெரியும் நண்பா, தென்குமரியை நினைச்சா பாவமா இருக்கா ? அவளை கட்டிக்கிறப் போறானே அவனை நினைச்சா பாவமாக இல்லையா ?

      நீக்கு
  21. எனக்கென்னவோ இந்த கல்யாணம் நடக்கும்னு தோணலே ,தென்குமரி கன்னியாகுமரியில் வாழ்க்கைப் படுவதே நல்லது !
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவானே இப்படி அபசகுணமா பேசலாமா ? இதை பெத்தவுக மனசு கேட்டா எவ்வளவு ? வேதனைப்படும் எதுக்கும் அவுங்களை ஒரு மாசத்துக்கு எனது பதிவுகளை படிக்க வேண்டாம்னு சொல்லிடவா ?
      மொய் வச்சதுக்கு நன்றி பகவான்ஜி

      நீக்கு
  22. ஊர் பெயர் வைத்து அருமையான ஒரு நகைச்சுவை. காணொளியும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் முதல் வருகையை வெண்சாமரம் வீசி வரவேற்கிறேன் காணொளி கண்டு களித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  23. மிகவும் வித்தியாசமான பதிவு. மிகவும் ரசித்தேன். காணொளியை மிக மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அம்மா ரசித்து மகிழ்ந்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  24. நாங்க லேட்டுப்பா! முகூர்த்தம் முடிஞ்சுருச்சு போல ஹப்பா நல்லபடியா முடிஞ்சுசுருச்சே...ஏன்ன நாகர்கோயில்ல வளைச்சுப் பிடிச்சாங்க...பக்கத்துலதானே திருநெல்வேலி எங்கயாச்சும் அருவா தூக்கிட்டு வந்துருவாங்க்ளோன்னுதான் பயந்து....லேட்டா வர்ரோம்....சரி இத்தனை பேரு வந்துருக்காங்க...எங்களுக்குச் கல்யாண சமையல் சாதம் இருக்கா...இல்ல ரிசப்சென் உண்டா. அப்ப நல்ல சாப்பாடு கிடைக்கும்ல......அல்வா கொடுக்க மட்டீங்கல்ல...

    பரவால்ல சுத்தி வளைச்சு நல்ல ஒரு திருமணம்பா....வீடியோ பயங்கரம்பா....மோடி என்னமா ஒபாமாவ டென்ஷனாக்குறாரு....கடைசில எப்படிக் கூப்பிட வைச்சுட்டாரு..பாருங்க...அதான் மோடிகேடி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க, இவ்வளவு தாமதமாக வந்தால் சாப்பாட்டுக்கு நான் பொருப்பல்ல சமையல்காரர் ரசத்துல தண்ணியை கலந்துட்டாரு அதுனாலதான் 'மொய்' வைக்காம போயிட்டீங்க போலத்தெரியுது. பரவாயில்லை கல்யாணத்துக்கு வந்ததே சந்தோஷம்.

      நீக்கு
  25. மொய் வைச்சுட்டோம்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே ரோசக்காரவுங்களா ? இருப்பீங்களோ.....

      நீக்கு
  26. பதில்கள்
    1. வருகைக்கும், மொய்க்கும் நன்றி தோழர்.

      நீக்கு
  27. மொய் வைக்கனுமில்ல அதாங்க .....தம. 10 அப்பாடா கல்யாணத்தை பார்த்து முடித்து விட்டோம். சூப்பருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே பார்த்தேன் மொய் வைக்காமல் போறதுக்கு நாமென்ன ? காரைக்குடிக்காரவுங்களா ? தி கிரேட் தேவகோட்டைக்காரவுங்க...

      நீக்கு
  28. ஊரின் பெயர்களை வைத்து இவ்வாறு ஒரு பதிவு என்பது தங்களின் வித்தியாசமான நோக்கிலான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், நன்றி

      நீக்கு
  29. பதில்கள்
    1. கண்டிப்பாக வந்துடுங்க... தொடர்ந்து.... நன்றி.

      நீக்கு
  30. பவானியோட மகளை பாவானிக்கார மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க நினைச்சப்போ ஒருத்தன் இழுத்துகிட்டு போய் பவானி கல்யாண மண்டபத்தில் வச்சு தாலிகட்ட, பவானியம்மா பவானி போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்து............. ஐயா....... போதும்யா ..........போதும்...... தலை சுத்துது...... மிடில ..............!!

    மோடி ஜெயிச்சு மெஜாரிட்டி வாங்கிட்டார்னு தெரிஞ்ச அன்னைக்கே அமெரிக்கா காரன் அழைப்பு விடுத்துட்டானே.............. இவங்க தப்பா காமிச்சிருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே இதுவும் நல்லாத்தான் இருக்குது உங்களுக்கு டைரக்கடர் விசு சொந்தக்காரவுங்களா ?
      நன்றி நண்பா,,,,

      நீக்கு
  31. வணக்கம்
    ஜீ...

    சொல்லாமல் விட்டீங்கள்... நிச்சம் முகவரியை தருங்கள் வருகிறோம்
    நகைச்சுவை கலந்த பாணியில்சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன் நண்பா....

      நீக்கு
  32. ரொம்ப பெரிய இடத்து கல்யாணம் போல இருக்கே கண்டிப்பா வருகிறோம்
    நடந்தாவது ஹா ஹா ஹா நல்ல காமெடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்து வந்தால் கல்யாணத்துக்கு எப்ப வர்றது.

      நீக்கு
    2. கண்டிப்பா அறுபதாம் கல்யாணத்துக்கு முதல் வந்து சேர்ந்திடுவேன் கில்லர்ஜி ...வருகை உறுதி நம்புங்க பா..!

      நீக்கு
    3. சரி, சரி வாங்க...

      நீக்கு