இது ஆஸ்ட்ரேலியா இந்த மாதிரியான விசயங்களைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், நமது நாட்டிலும் தலைக்குமேல் இந்த மாதிரி தொங்கு ரயில்கள் ஓடாதா ? என, நிச்சயம் முடியும்....
இதற்கு நம்மிடம் பொருளாதாரமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது, நமது பொருளாதாரம் 60 % வெளிதேசங்களில் முடங்கி கிடக்கிறது, அதேநேரம்
அது அவர்களுக்கே உபயோகமாக இருக்கிறது, அதேபோல நமது திறமைசாலிகள் வெளிதேசங்களில்
இருந்து தமது வாழ்வாதாரத்துக்காக, வேறு வழியின்றி அடகு வைக்கப்பட்ட ஆபரணங்களைப் போல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், இதே போலத்தான் கடுமையான உழைப்பாளிகளின் நிலையும்
இதை எல்லாம் ஒன்று திரட்டி, நமது பொருளாதாரங்களையும், திறமைசாலிகளையும்,
உழைப்பாளிகளையும் மீட்டு இந்தியாவில் செயல்படுத்தினால் ?
தலைக்கு மேல் ஓடும் ரயில் என்ன ? தரைக்கு கீழ் பறக்கும் ரயில்களைக்கூட நாம்
உருவாக்க முடியும், நாளை நமது சந்ததிகளாவது வாழட்டுமே !
அதற்கு முதலில் வேண்டியது மனம், இது சரியாக
இருந்தால் நாமும்கூட நமது இந்தியாவில் வானுயர்ந்த கட்டடங்கள் கட்டலாம்,
அயல் தேசங்களில் கட்டிக் கொடுக்கத் தெரிந்த நமக்கு நமது தேசத்தில் கட்டத் தெரியாதா ?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு
என நம்முன்னோர்கள்
சொல்லி வைத்தது நமக்காகத்தான், ஆனால் இதன் அர்த்தம் புரியாமல் நாம் நம்மை
அழித்துக் கொண்டு வாழ்கிறோம், நாம் யாருக்காக வாழ்கிறோம் நமது சந்ததிகளுக்காகத்தானே... அவர்களுக்காகத்தானே
வாயைகட்டி, வயித்தைகட்டி வாழ்ந்தார்கள், வாழ்கிறோம், வாழப்போகிறார்கள்
ஆகவே நாளைய சரித்திரம் படைக்க, நமது அரசாங்கம் இன்றே
முயற்சியை துவங்கட்டும்.... சரி இந்த அரசாங்கம் என்ற பூனைக்கு மணியை கட்டுவது யார் ?
நாம்தான்
MONEYயை வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறோமே ! பின்னேயாரு கட்டுவது..........?
CHIVAS REGAL சிவசம்போ-
யேன், நாங்க கட்ட மாட்டோமா ? கொஞ்சம் MONEY யோட, ஒரு மணியை வாங்கித்தாங்க நான் போயி,
கத்த்த்த்துர்ர்ர்ரேன்.....
Video
(Please
ask Audio Voice)
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் யாரும் மணி கட்டியதாகத் தெரியவில்லை ,பூனைக்கு எந்த எலி கட்டும்னு எதிர்ப்பார்த்து ஏமாந்து நிற்கிறோம் :)
பதிலளிநீக்குத ம வோட்டு வரும் பின்னே ,கருத்துரையை தந்து விட்டேன் முன்னே :)
இன்னும் எத்தனை காலம் ? நண்பரே,,,
நீக்குஎதுதான் முடியாது. முதலில் priorities நிர்ணயிக்க வேண்டும். எது முதலில் எது பிற்பாடு என்று.
பதிலளிநீக்குவருக ஐயா அந்த முன்னுரிமையையும் நாம்தானே அமைத்துக் கொள்ளவேண்டும்.
நீக்குமணி வாங்கப் போன ஆள் எங்கெங்கேயோ தேடப் போறார்!..
பதிலளிநீக்குநாம தான் - அந்தப் பூனை!..
அவனைத் தேடவிட்டது சமூகம் அக்கத்தினர் ஆகிய நாம் தானே...
நீக்குநல்ல பாடல்.
பதிலளிநீக்குநாம் தான் MONEY ஐ வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறோமே!
சாட்டையடிக் கேள்வி......
வருக நண்பரே,,, இந்தச்சாட்டையடி நமக்குத்தானே,,,
நீக்குமனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதானது எக்காலத்திற்கும் பொருந்தும். சமூகப் பிரக்ஞையுள்ள பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி முனைவர் அவர்களே...
நீக்குநமது அரசாங்கம் 1991ம் ஆண்டிலே..துவங்கி விட்டது நண்பா...!!! தனியார்மயம்,தாராளமயம். உலகமயம் என்று.. தங்களுக்குத் தெரியாத.... செவ்வாயில் கழிப்பரை கட்ட மங்கள்யான் அனுப்பி...நாங்கள் வல்லரசுன்னு பெருமை அடைஞ்சுட்டாங்கல்ல...
பதிலளிநீக்குமுதலில் தெருவோரம் பொது மக்களுக்கு கழிப்பறை கட்டினால் போதாதா ?
நீக்குநான் ஸ்பான்சர் பண்ணின விசாவுல ஆஸ்திரேலியாவுக்கு வந்துட்டு, என்னைய பார்க்காம திரும்பி ஊர் போயிட்டேங்களே, இது நியாயமா?
பதிலளிநீக்குஇனி வரும் காலங்களிலாவது, பூனைக்கு மணியை கட்டுவார்களா?
இந்தப் புகைப்படம் எடுப்பதற்காகத்தான் வந்தேன் உடன் திரும்பி விட்டேன் பரவாயில்லை மீண்டும் வருவேன் விடா கொடுக்க தாங்கள் இருக்கும்போது...
நீக்கு\\எனக்கென்ன மனக்கவலை\\
டாஸ்மார்க்கை மூடாதவரை சாத்தியக்குறைவே...
100 % உண்மையான ஆ...தங்கம்?. ஆனால் சத்தியமாய் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.
பதிலளிநீக்குவெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை கொண்டுவர ஏற்படும் தாமதத்தை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களைப்போன்ற கறுப்பு தங்கங்கள் இனியும் வெளிநாட்டில் வா...டக்கூடாது. எப்ப வரப்போறீங்க அன்பரே..
சமூக அக்கரை எமக்கு உலகறிந்த நாள்முதல் இருக்கிறது நண்பரே... விரைவில் வருவேன் நண்பரே,,, என் இனிய இந்தியாவுக்கு நிரந்தரமாய்...
நீக்குநண்பரே!
பதிலளிநீக்குஉங்களது நியாமான கேள்விகளைச் செவிட்டூமைகளின் காதில் யாராவது போட்டால் தேவலாம் தான்! மனம் இருக்கிறது மார்க்கம் வரும் என்று காத்திருப்போம்! நிச்சயம் உங்கள் வாக்குப் பலிக்கும்.
தம 2
நண்பரே! இந்த ஓட்டு தங்கள் மணிமணியான கருத்திற்குப் போடப்படுவதே ஒழிய மணிக்காகப் போடப்படுவதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருக கவிஞரே, எனது கருத்தும் ‘’மணி’’யாக இருக்கிறது என்பதை கேட்டும்போதே ‘’கனி‘’போல, ‘’இனி’’க்கிறதே...
நீக்குபேரத்தில் பெற்ற பலநூறு கோடிகளைப் பெருந்தலைவர் ஒருவர்முன் அவர் அணிச் சிறு தலைவர் காட்டிய போது ,
நீக்கு“ மணி எனக்கு, கனி உனக்கு “ என்று சொன்ன துணுக்கை அல்லவா ஞாபகப்படுத்துகிறீர்கள். கிலலர்ஜி?
எல்லாம் தங்களைப்போன்ற கவிஞர்களின் உறவாடலே காரணம் என்பேன்.
நீக்குபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுகிறது.
பூனைக்கு மணியை யார் கட்டுவது..? என்ற கேள்வி மட்டும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டு இருக்கும்....எனத் தான் தோன்றுகிறது. வேற என்ன சொல்ல..?
பதிலளிநீக்குசகோதரி சொல்வது மிகச்சரியே.... கடைசிவரை தொடர்கதைதான் வாக்களித்தமைக்கு நன்றி.
நீக்குthama.4
பதிலளிநீக்குமுடியாதது என்று ஏதுமில்லை நண்பரே
பதிலளிநீக்குதொடக்க காலத்தில் இருந்தே
தமிழரின் திறமையெல்லாம் அடுத்தடுத்த
நாடுகளை மேம்படுத்துவதிலேயே
முட்ங்கி போய்விட்டது
நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்களிப்பிற்க்கும் நன்றி.
நீக்குதம +1
பதிலளிநீக்குமணி கொடுத்தால்தான் ஓட்டுப் போடுவோம் என்ற மனநிலைக்கு நாம மாறியாச்சு... இனி எப்போ நாம மாறுவது... நாட்டில் வளர்ச்சி வருவது எப்போது..?
பதிலளிநீக்குநல்ல பகிர்வு...
காலம் ஒருநாள் கைகூடும் - அது
நீக்குகனவாய் போனால் மனம் வாடும்,
- கண்ணதாசன்
அனைத்தும் நம்மாலே என்பது உண்மை....
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே கைகூடுவது......
நீக்குசகாயம் மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி 20 ஆண்டுகளில் 22 முறை இடம் மாற்றப் பட்டு பந்தாடப் பட்டிருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் இதே நிலைதான். அவர் சென்ற இடமெல்லாம் ஊழலை களை எடுத்து நஷ்டத்தை லாபமாக்கி, அந்த துறையை தூய்மைப் படுத்தியே வந்திருக்கிறார். ஆனால் ஆள்பவர்களிடத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறதா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரெண்டு 'கலக'த் தலைமைகளுக்கும் இல்லை, என்பதற்கு இது ஒரு உதாரணம். அப்புறம் அவர்களது கூன் பாண்டிய அடிமைகளுக்கு அது எங்கேயிருக்கப் போகிறது? மாநில அளவில் நடக்கும் இதே கதை தான் தேசிய அளவிலும் நடக்கிறது. இவனுங்க நமக்கு ஒருபோதும் நல்லது செய்யப் போவதில்லை நண்பரே.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பா இவங்கே நமக்கு ஒருபோதும் செய்யப்போறதில்லை நாமயேன் இவங்களுக்கு செய்யனும் ? ஓட்டு போட்டதாலதானே இவங்களுக்கு ஸ்விஸ் அக்கவுண்ட் வந்துச்சு ? எனக்கு என்ன ஆச்சர்யம்னா ? காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறவன் நியாயமாக நடக்கனும்னு சொல்றானே அதுதான்.
நீக்குநாடு சுபிக்ஷமா இருக்கவேண்டும், நம்ம ஜனங்க சிரமப்படக்கூடாது என்று நினைக்கும் அரசியல் தலைவர் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை இருந்திருக்காது. பூனைக்கு மணி கட்ட நினைத்தாலும் பூனை கழுவிய நீரில் நழுவிய மீனாக அல்லவா வழுக்கிக்கொண்டு போகிறது. பிள்ளையார் சுழி போட்டு இருக்கீங்க. கண்டிப்பா இது நடைமுறையில் செயல்பட மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் ஜீ.
பதிலளிநீக்குமஞ்சுபாஷிணி அவர்களின் முதல் வருகைக்கு நல்வரவு, மன்னிக்கவும் நல்ல அரசியல் தலைவர் இருந்திருந்தால் ? என்ற தங்களது கருத்தை எதிர்க்கிறேன் தாங்கள் கேட்கலாம் அவரின் குணம் எப்படித்தெரியும் ? என.. ஏன் ? அவர் கோடி கோடியாக செலவு செய்யும்போதே தெரியவில்லையா ? இவண் வியாபாரியென... அதேபோல தாங்கள் என்னை வாழ்த்துவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது யார் யாரை வாழ்த்துவது ? நாமிருவருமே தி கிரேட் இந்தியர்கள் இருவருமே வாழ்க்கைச்சூழலில் நான் அபுதாபியிலும், தாங்கள் குவைத்திலும் வாழலாம் ஆனால் ? நாளை இந்தியாதான் நமக்கு நிரந்தரம். சர்வாதிகாரர்களிடம் சாட்டையை எடுத்து கொடுத்துவிட்டு என்னை அடிக்கிறார்கள் என்று சொல்வது சரியா ? சாட்டையை எடுத்து அவர்களை அடிக்கவேண்டும் என்பதே எமது கொள்கை ஒரு கண்ணத்தில் அறையவும் மறு கண்ணத்தையும் கொடுப்பதற்க்கு 'நான் காந்தி அல்ல' எம்மை அடிக்க நினைக்கும்போதே அவனது இரு கண்ணமும் பழுக்கவைப்பவன் நான், வேலியில் போற ஓணானை நாம்தான் காதுக்குள் விட்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க..... எதிர் கருத்துரைக்கு மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
நீக்குஉள்ளதை உள்ளபடி சொல்லும் மாயாவி நான்.
அடேங்கப்பா.. இம்புட்டு பேசுவீங்களா நீங்க :) என்ன தான் என்னிடம் சண்டை போட்டாலும் எதிர் கருத்து சொன்னாலும் அமைதியா போயிடுவேன்பா :) நீங்க சொல்றது சரியே தான்.. ஆனா அதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாம் :)
நீக்குமீள் வருகைக்கு நன்றி இப்பொழுதுதான் எனக்கு தங்கள்மீது கோபம் வருகிறது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததோ ? இல்லையோ ? ஆனால் ? நமக்கு கருத்து சுதந்திரம் கிடைத்தது உண்மையே தங்களது கருத்தை உரைப்பதற்க்கு எந்த கொம்பனுக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை அமைதியா போயிடுவேனு சொன்னால் ? என்ன அர்த்தம் ? என்னைப்போன்ற அப்பாவிகளுக்கே பயந்தால் வலைப்பூவில் எத்தனையோ விடாக்கண்டனும், கொடாக்கண்டனும் இருக்கிறார்களே,,,, விவாதம் எமக்கு பிடிக்கும் ஆனால் ? வி(தண்ட)வாதம் பிடிக்காது நன்றி சொல்லி பயத்துடன் முடிக்கிறேன்,
நீக்குஅது சரி :) படபடவென்று பட்டாசு போல் வெடித்துவிட்டு பயத்துடன் முடிக்கிறேன்னு சொல்லி இன்னும் பயத்தை கிளப்பிட்டீங்க... :)
நீக்குஇதுக்கு மேலேயும் மிரட்டுனா நான் அழுதுடுவேன்...
நீக்குத,ம,8
பதிலளிநீக்குநாம தான் நம்மள சுரண்டுற ஆளுங்களத்தேர்ந்தெடுத்து சுரண்டுறதையும் பார்த்துகிட்டே இருக்கோமே..இனி வந்துடும் பாதி ரயில் தனியாரிடம் போகப்போகுது சகோ...
ஏன் ? சுரண்டுறவங்களை தேர்ந்தெடுக்கனும் , ரயில் ஒன்னுதான் பாக்கி வரட்டும் ....
நீக்குஅருமையான பதிவு கில்லர் ஜி! பூனைக்கு யார் மணி கட்டுவது?! நீங்க வந்து மணி கட்டுறீங்களா? அப்படின்னா நாங்க money வாங்காம உங்களுக்கு ஓட்டு போடறோம். ஆனா வேட்டு வைக்க மாட்டோம்....எல்லோருமே விரும்புவது இதைத்தானே! மாற்ரம் வந்தால் இந்தியா சொர்கம்தான்.
பதிலளிநீக்குவருகைக்கும், எம்மை வரேவேற்பதற்க்கும் நன்றி, ஏன் ? நல்லவன் இதுவரை கிடைக்கவில்லையா ? கோடி கோடியா செலவு செய்யுறான் அப்ப வைக்கனும் அவனுக்கு ஆப்பு அடுத்து வர்றவன் கண்டிப்பாக நல்லவனே..... இவ்வளவுதான் நல்ல மனிதனை தேர்ந்தெடுக்கும் சூட்சுமம்.
பதிலளிநீக்குநியாயமான கேள்வியும் நம்பிக்கையான பேச்சும் உங்களிடத்திற் கண்டு மகிழ்கின்றேன்!
பதிலளிநீக்குதொங்கும் இரயில் இங்கும் - ஜேர்மனியில் சில நகரங்களில் மட்டும் உண்டு. அதிகப்படியான அயல் நகர சிறு இரயில் போன்ற ட்ராம் வண்டி நிலத்திற்குக் கீழாக ஓடுவன.
அங்கெல்லாம் இப்படி அமைப்பதற்கு முதலில் நம்பகத்தன்மை வேண்டும். தொங்கு ரயில் வண்டிகள் பாதியிலேயே தொங்கிடாமலும் அங்கிருந்து நேரே தரையைத் தொடாதிருக்கவுங் கூடியதாக அமைக்கப் படுதலும் அவசியமல்லவா?..
நல்ல சிந்தனை! வாழ்த்துக்கள் சகோ!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி, ஜெர்மனியில் தொங்கு ரயில்கள் நான் பார்த்தில்லையே .? தாங்கள் சொல்வதும் நல்ல கருத்து பாதியிலேயே நின்று விடக்கூடாது உண்மை.
நீக்குநமது திறமைசாலிகள் வெளிதேசங்களில் இருந்து தமது வாழ்வாதாரத்துக்காக, வேறுவழியின்றி அடகு வைக்கப்பட்ட ஆபரணங்களைப்போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநீங்க சொன்னது முற்றிலும் உண்மை. எல்லாம் செய்ய முடியும்.மனம் தான் இல்லை.
தொங்குரயிலை விட எனக்கு அங்கு பிடித்தது எந்த வருமானம் பெறுபவருக்கும், வேலையே பறிபோனவருக்கும் அரச மருத்துவ மனையில் கிடைக்கும் உயர்ந்த தர மருத்துவம், யாருமே படிக்க கூடிய உயர்உயர்ந்தத தரத்திலான அரசு பள்ளிகள்.
தாங்கள் சொல்வதும் சரி நமக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் இலவசமாக கொடுத்தால் போதுமே... நன்றி.
நீக்குஇருங்க இருங்க. இப்பத்தானே சுவிஸ் வங்கி கருப்பு பணக்காளர்களின் லிஸ்ட் வந்திருக்கு. இன்னும் 360 வருஷத்துக்குள்ள எல்லா பணத்தையும் கொண்டுவந்து தொங்கு ரயிலை ஓட்டிடுவோம். அதுவரைக்கும் இப்ப நேரா ஓடுற ரயிலை தலைகீழா நின்னு பாத்துக்கலாம்
பதிலளிநீக்கு360 வருஷமா ? அப்படீனா எத்தனையாவது தலைமுறைக்கு ?
நீக்குஉங்கள் ஆதங்கம் புரிகின்றது. என்ன செய்வது? நம்நாட்டு சூழ்நிலை மற்றும் அரசியல் இவ்வாறு அமைந்து விட்டது.
பதிலளிநீக்குஜி – உங்கள் பதிவில் Google Connect ஐ வைக்கவும்.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், தமிழ்மண வாக்கும்க்கும் நன்றி நண்பரே... Google Connect முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.
நீக்குத.ம.11
பதிலளிநீக்குபதிவும் அதற்கான பாடலை
பதிலளிநீக்குமிகச் சரியாக இணைத்ததும் அருமை
நம்பிக்கையூட்டும் அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும், வாழ்த்துக்கும், ஓட்டுக்கும் நன்றி கவிஞரே...
நீக்குtha.ma 12
பதிலளிநீக்குயாராக இருக்கும் என்று கேட்டுக்கொண்டே நாம் நழுவி விடுகிறோம்.
பதிலளிநீக்குநானும் தான்.
த.ம. 13
முதலில் நானும்தான் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குநண்பரே! தங்கள் ஆதங்கம் புரிகிறது! கிணற்று நீரில் நஞ்சு கலந்திருந்தால் நீரை அப்பறப் படுத்தி விடாலாம்! ஊற்றே நஞ்சானால் !!!!? இதுதான் நம் , நாட்டின் இன்றைய நிலை
பதிலளிநீக்குபுலவர் ஐயா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் முதற்க்கண் நன்றி, இந்தக்கேள்விக்கு யாருமே பதில் சொல்லமுடியாது ஐயா அந்த ஊற்றுக்குள் நானும் ஒரு துளியாய் இருப்பேனோ.... (ஐயப்பாட்டுடன்) என வெட்கித்தலை குனிகிறேன்.
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஉங்கள் வலைப்பக்கத்திற்கு முதன் முறையாக வருகிறேன் சகோ.. சமூகத்திற்குத் தேவையானப் பகிர்வு..சிந்திப்போம் செயல்படுவோம்..தொடர்வேன் நன்றி
பதிலளிநீக்குரேவதி அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறேன் தொடர்ந்தால் ? சந்தோஷமும், நன்றியும்.
நீக்குஅய்யோ வேண்டாம் நண்பரே. மக்கள் வரிப்பணம் பரணாகி விடும் அடுத்த ஆட்சியில்.
பதிலளிநீக்குஇப்ப மட்டும் நமக்கு கடன் இல்லையா ? நண்பரே....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகாலம் உகந்து பயிர்செய்வதை மறந்து விடுகிறார்கள்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 16வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பரின் வருகைக்கும், என்றும் 16 கருத்துக்கும் நன்றி.
நீக்கு